ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 13  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 132
16/05/2019 1:08 am  

அன்பர்களே                           

                                                       "'சொன்னது நீ தானா"

                                       ஒளிப்பதிவில் ஒரு புதிய பரிமாணம்

                                                      வின்சென்ட் - சுந்தரம்   

நான் முன்னரே தெரிவித்திருந்த படி இந்தப்பகுதியை சற்று விரிவாக பார்க்க வேண்டும் என தோன்றுகிறது.   மீண்டும் ஒருமுறை யு tube ல் படத்தின் பாடல் காட்சியை பார்த்தபின் சில மேலோங்கிய அணுகுமுறைகள் பளிச்சிடுகின்றன. ஆம் ஒளிப்பதிவின் அடிப்படை லைட்டிங் எனப்படும் ஒளி அமைப்பு சார்ந்ததாகும்.  இவ்வகை நுணுக்கத்தில் ஸ்ரீதருக்கும் வின்சென்ட்க்கும் அமைந்திருந்த புரிதல் அலாதியானது. வின்சென்ட் -சுந்தரம் கருப்பு வெள்ளையில் எட்டிய உயரங்கள் உண்மையிலேயே வியப்பையும் பிரமிப்பையும் தரவல்லது. ஏன் என்கிறீர்களா . அந்த கால கட்டத்தின் பல நெருக்கடிகள் எந்த சாதனையாளனுக்கும் சவால்கள் எனில் முற்றிலும் உண்மை.   சவால் 1

நடிக- நடிகையரின் நிறங்களும் , 'மேக்- அப் ' கிட்டதட்ட balance ஆக வேண்டும் . அதை உறுதிசெய்த்துக்கொள்ளாவிடில் படப்பதிவில் ஒரு ஜீவ-மரண போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்

Balancing  to grey  என்பது ஒளிப்பதிவாளருக்கு மிக மிக இக்கட்டான சோதனை. எண்ணற்ற கணக்குகளும், காட்சியின் போக்குக்கு ஏற்ற வகையில் அடுத்தடுத்து வர இருக்கும் முக பாவங்களை பதிவு செய்ய முன்கூட்டியே அரங்கில்  

 துல்லியமாக டாப் லைட், லேட்டரல்ஸ் மற்றும் ஓபல் [Diffuser ] தயார் நிலையில் அமைப்பதுடன், bllinding  அல்லது boosting அவ்வப்போது படம் பதிவிடும் போது சமிஞை மூலம் கட்டுப்படுத்துதல் [ ஒரு தேர்ந்த இசை அமைப்பாளரை போல்]

சவால் -2

அன்றைய low ASA  கருப்பு வெள்ளை  பிலிமில் சரியான gamma ratio வரும்படி காட்சிகளை பதிவிடுதல் -ஒரு உன்னத கலை.

சவால்-3

இயக்குனருடன் தெளிவாக விவாதித்ததை செயல் வடிவில் கொணர்தல்

சவால் -4

லைட்டிங் தரும் ஒளியை சீராக்க வல்ல Filter உபயோகித்தல். இவை அனைத்திலும் வின்சென்ட்- சுந்தரம்  அந்த கால முன்னோடிகள்;.

இந்த பாடல் காட்சி ஒரு சிறிய [Diffuser ] தயார் நிலையில் அமைப்பதுடன், bllinding  அல்லது boosting அவ்வப்போது படம் பதிவிடும் போது சமிஞை மூலம் கட்டுப்படுத்துதல் [ ஒரு தேர்ந்த இசை அமைப்பாளரை போல்]

சவால் -2

அன்றைய low ASA  கருப்பு வெள்ளை  பிலிமில் சரியான gamma ratio வரும்படி காட்சிகளை பதிவிடுதல் -ஒரு உன்னத கலை.

சவால்-3

இயக்குனருடன் தெளிவாக விவாதித்ததை செயல் வடிவில் கொணர்தல்

சவால் -4

லைட்டிங் தரும் ஒளியை சீராக்க வல்ல Filter உபயோகித்தல். இவை அனைத்திலும் வின்சென்ட்- சுந்தரம்  அந்த கால முன்னோடிகள்;.

இந்த பாடல் காட்சி ஒரு சிறிய அறைக்குள் படமாக்க பட்டிருக்கிறது. துல்லியமான ஒரே சீரான ஒளி அமைப்பு பாடல் முழுவதும். முற்றிலும் diffuse  லைட்டிங்கில் பாடலும் காட்சியும் சோகத்தின் நிஜமும் நிழலுமாக பின்னிப்பின்னி வலம் வருகின்றன, சொன்னது நீ தானா என துவங்கியவுடன் கேமரா தன் புனித பயணத்தை துவங்குகிறது. பாடல் முழுதும் சளைக்காமல் உலவும் கேமரா கோணங்கள் இக்கலை பயில விரும்புவோர்க்கு ஒரு டெமோ என்றே சொல்லலாம்

மெல்ல நகரத்தொடங்கி விரைவில் தேவிகாவின் முகபாவத்தின் மாற்றங்களையும் கை விரல்கள் சித்தாரின் மீது படர்ந்து துடிப்பதையும் கூட காலை நயத்துடன் பதிவிட்டுள்ளனர்.

 'மங்கல மாலை குங்குமம் யாவும்' என்ற சரணத்தில் கேமரா நூதன மாக கட்டிலின் கீழே பயணித்து நேரடியாக நாயகியை மட்டும் ஆக்கிரமித்திருப்பது அன்றைய புதுமை. சிலர் கட்டில் மேலே உயர்த்தப்பட்டு கேமரா கீழே பயணித்தது போன்ற தோற்றம் ஏற்படுத்த பட்டதாக கூறுவர்.

பின்னர் வரும் பகுதியில், 'என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீ தானே”  என்ற இடத்தில் நிஜ உருவமாக தேவிகா வையும், கண்ணாடியில் நிழல் உருவாக முத்துராமனை யம் ஒரே ஷாட் டில் பதிந்திருப்பதும் மிகவும் சிறப்பான ஒளிப்பதிவு கோணங்கள்.

இது போன்ற கலைஞர்கள் கால வெள்ளத்தில் மறைந்துவிட்டார்கள். எனினும் காலத்தால் அழியாத முத்திரைகளை பதித்துள்ளனர்.

இப்படத்தில் பணியற்றவர்களி திரு, கோபு நீங்கலாக எவருமே நம்மிடையே இல்லை என்பது

ஒரு நீண்ட பெரு மூச்சை வரவழைக்கிறது.

கனத்த இதயத்துடன்  விடை பெறும்

அன்பன்   நன்றியுடன்    ராமன்

 

 

 


Quote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 1 year ago
Posts: 41
16/05/2019 1:32 am  

சார்

அபாரம்

நன்றி.


ReplyQuote
Share: