S P B யின் ஞானாசிரி...
 
Notifications
Clear all

S P B யின் ஞானாசிரியன் MSV--திரு M S பெருமாள்  

  RSS

M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 2 years ago
Posts: 134
15/09/2020 10:27 am  

பாலுவின் ஞானாசிரியன் MSV
மெல்லிசை மன்னரின் பெருந்தன்மை திரு M S பெருமாள் -நன்றி கல்கி வார இதழ் (16/8/2020)

சில பேர்களின் மறைவுக்குப் பிறகு அவரது பார் போற்றும் செயல்கள் வெளிவரத் தொடங்கும் .அந்த சிலரில் ஒருவர் மெல்லிசை மன்னர் .
இதோ வானொலி தொலைக்காட்சி நிலைய நிர்வாகி (ஒய்வு)திரு M S பெருமாள் சொல்வதை கவனியுங்கள்
பாலுவின் ஆயிரம் நிலவே வா பாடலை கேட்டவுடன் நானே வலிய சென்று நட்பு பாராட்டினேன் .இயற்கை என்னும் பாடலை பாடச்சொல்லி அந்த பாலு தான் என உறுதிபடுத்திக் கொண்டேன் நட்புக்காக ஆடிஷன் வச்ச ஆள் நீதான் என்று இன்றும் கேலி செய்வார் பாலு
.நாங்கள் இருவரும் விரைவில் வாடா போடா நண்பர்கள் ஆனோம்,
தான் பாடப்போகும் பாடலின் உச்சரிப்பினை எனக்கு பாடல் ரெகார்டிங் முன் போட்டுக்காட்டி திருத்திக்கொள்வார் .
அப்படி ஒருநாள் நான் சிவாஜி சாருக்காகப் பாடப்போகிறேன் நீ வா என்றார்் ,பாடல் ஒத்திகைக்கும் பிறகு பதிவுக்கும் அலுவலக வேலை காரணமாக போக முடியவில்லை ஆனால் பாலு அதனை பதிவு செய்து வானொலி நிலயத்திற்கே வந்து போட்டுக் காட்டினார் .அதன் வெற்றியை கொண்டாட அன்று இரவு சினிமா போவதாக உத்தேசம் .
பாடலின் இனிமை பாடியவிதம் இசையமைப்பு ,அந்தப் பாடலை திரும்ப திரும்ப கேட்க வைத்தது .அப்படி கேட்டுக்கொண்டிருக்கும் போது நிலைய அதிகாரியும் வந்து கேட்க நேர்ந்தது .
இது எந்த கம்பெனி
ராம் குமார் பிலிம்ஸ்
படம் வீட்டில் பூச்சி (பின்னர் சு என் சு )
நம்மிடம் காண்ட்ராக்ட் இருக்கா
இருக்கு
இன்றே வானொலியில் ஒலி பரப்பி விடுங்கள் என்றார்
தயக்கத்தோடு கமிட்டி அனுமதி இல்லை என்றேன்
இந்தப் பாடலைக் கேட்பவர்கள் யாரும் தப்பு சொல்ல மாட்டார்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் போட்டுடு என்றார்
அன்றைய தேன்கிண்ணத்தில் முதல் பாடல் பொட்டு வாய்த்த முகமோ சிறப்பு அறிமுகத்துடன்
ஆகவே பதிவான அன்றே ஒலிபரப்பப்பட்ட பாடல் இதுவே .கேட்ட முதல் ரசிகனும் நானே
இரவு சினிமாவிற்கு போக பாலு வீட்டிற்கு போனால் ஆச்சரியத்துடன் கேட்டான் எப்படி இவ்வளவு சீக்கிரம் யார் கொண்டு வந்து கொடுத்தார்கள் , நீ கொடுத்தது தான் என்றேன்
தலைமேல் கைவைத்தபடி
நான் நீ கேட்க கொடுத்தால் இப்படி சிக்கலில் மாட்டிவிட்டாயே விஸ்வநாதன் SIR எந்த டேக் ஓகே பண்ணுவார்னு தெரியாது அதுக்குள்ளே அவசரப்பட்டுட்டியே .அவர் அனுமதி இல்லாமல் இது நடந்து தெரிந்தால் நான் விளம்பரத்திற்காக இதை செய்ததாக நினைத்தால் எப்படி அவரை சமாதானப் படுத்துவேன் எனக் கவலைப்பட ஆரம்பித்தான்
சட்டச்சிக்கல் வரவில்லை என்றாலும் இந்த எதிர்பாராத சிக்கல் அன்றைய தூக்கம் கெடுத்தது .

காலையில் எழுந்தவுடன் எம் எஸ் வி வீட்டிற்கு போய் விட்டேன் .அவரிடம் எனக்கு அறிமுகம் இல்லை
விவித் பாரதி யிலிருந்து வருகிறேன் என்று சொன்னவுடன் நானே உங்கள் ஆபீஸ் க்கு போன் பண்ணணும் நினைச்சேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அதான் அண்ணே அது விஷயமாக உங்களிடம் மன்னிப்பு கேட்கவும் ,பாலு எந்த தப்பும் பண்ண வில்லை என சொல்லவும் வந்தேன் என்றேன்.
அண்ணே மன்னிப்பா ஏன் விஸ்வநாதன் இன்னும் பிஸியா இருக்கான் காலை யில் பதிவு பண்ண பாடல் இரவே வருகிறது என்று உலகத்திற்கு நீங்க சொன்ன தற்கு நான் தான் நன்றி சொல்லணும் என்றார்
உட்கார சொன்னார் .காபி கொண்டு வரச்சொன்னார் .காபி இனிமை விட அவர் அவரின் அன்னைக்கும் மனைவிக்கும் என்னை அறிமுக படுத்தி வைத்த விதம் மிக இனிமை.
அம்மா நேற்று உன் மகன் ரெகார்ட் பண்ண பாட்டை நேற்றே ஒளிபரப்பின OFFICER இவர் .என்றார்
உடனே ரெகார்டிங் என்ஜினீர்க்கு போன் செய்தார் ராம்குமார் பிலிம்ஸ் பாலு பாடிய பாடலில் எந்த டேக் அவர் கிட்டே கொடுத்தீர்கள் என்றார் .டேக் 4 என்று பதில் வர அதையே பைனல் பண்ணிவிடுங்கள் என்று போனை வைத்தார் . அவர் செயல் வேகம் என்னை அசரவைத்தது
என்னிடம் அண்ணே
அந்த நான்காவது டேக்கில் மூன்றாவது சரணம் முடிந்தவுடன் வரும் சிதார் ஷார்ப் ஆக வரும் அதனால் ஒன் மோர் ஒன மோர் இன்னு சொல்லி 7 வது டேக் ஓகே ஆச்சு .அதைத்தான் மிஃஸ் செய்ய இருந்தேன்
இப்பொழுது 4 டேக் நீங்கள் ஒலிபரப்பி விட்டதால் அதே இருக்கட்டும் ,வருத்தப்படாதீர்கள் ரெகார்ட் சுட் பண்ணும்போது அது வர்ரது என்றார்
அடுத்து பாலு விற்கு போன் செய்தார் . நீ பாடினது ,அவர் கேட்டது அவர் பிடித்து போய் ஒலி பரப்பினது எல்லாம் சரி
ஆனால் ஒரு அரசு அதிகாரியை உனக்காக வந்து என்னிடம் வந்து வருத்தம் தெரிவிக்க வைத்தது தவறு .நாளை அவருடைய உதவி வளரும் உனக்கு தேவையாய் இருக்கும்

நான் இருவரும் அடிக்கடி சந்திக்கிறோம் ,இன்னுமும் அதிகம் சந்திப்போம் அப்பொழுது நீ என்னிடம் தெரிவித்து இருக்காலாம் .
சங்கீதம் தெரிந்த அளவிற்கு இங்கீதமும் தெரியணும் , இதையும் நான் தான் சொல்லி வளர்க்கணும்

அந்த இசை மேதையை இருகரம் கூப்பி வணங்கினேன்
பாலுவின் இசை திறனை கண்டறிந்து கௌரவிக்கவும் அவனின் வருங்காலத்தை வலமாக்கவும் ஞானசரியனாக அவதாரம் எடுத்தவர் விஸ்வநாதன் .அந்த மேதையை சந்திக்க வைத்தாய் பாடல்
பொட்டு வைத்த முகமோ See less

best Regards
vk


Quote
Share: