பாடல் பற்றிய விவாதங...
 
Notifications

பாடல் பற்றிய விவாதங்களுக்கு நெறிமுறை  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
20/05/2019 10:42 am  
  1. திரைப்படப் பிரிவு

திரைப்படப் பாடல்களை – குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை மட்டும் விவாதிக்கும் பதிவுகளுக்கான பிரிவு. மெல்லிசை மன்னரின் ஆயிரக்கணக்கான பாடல்களை விவாதிக்க முனையும் போது, அவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட்ட குறிப்பிட்ட பாடலைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொண்டு தொடர்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் சிரமமின்றி அதைக் கண்டறியவும் எளிமையான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

     மெல்லிசை மன்னர் இசையமைத்த தமிழ்த்திரைப்படங்கள் தசாப்த வாரியாக முதலில் பிரிக்கப்பட்டுள்ளன – அவை 1950கள், 1960கள், 1970கள், 1980கள், 1990கள் மற்றும் அவற்றிற்கப்பால் – என பகுக்கப்பட்டுள்ளன.

     இதிலிருந்து ஒவ்வொரு பகுப்பிலும் அந்தந்த தசாப்தங்களின் ஆண்டுகளுக்குத் தனித்தனியான உட்பகுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 1960கள் என்றால், 1960, 1961, 1962, 1963, 1964, 1965, 1966, 1967, 1968, 1969 என பத்து ஆண்டுகள்.  தாங்கள் விவாதிக்க விரும்பும் பாடல் புதிய பறவையில் இடம் பெற்ற பாடல் என்றால், அத்திரைப்படம் எந்த ஆண்டு வெளியானது என்பதைக் குறித்துக்கொள்க. அதாவது 1964ம் ஆண்டு வெளியானது புதியபறவை. தாங்கள் 1964ம் ஆண்டிற்கான இணைப்பினைப் பயன்படுத்தி தங்கள் தலைப்பை அல்லது கருத்துரையைப் பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கெனவே தாங்கள் தேர்ந்தெடுத்த பாடலைப் பற்றிய கருத்துரைத் தலைப்பு இருந்தால் அதிலேயே தாங்கள் தொடர்ந்து பதிவிடலாம். அவ்வாறு அப்பாடலைப் பற்றிய கருத்துரை இல்லையென்றால் Add Topic தலைப்பை சேர்க்கும் வசதியைப் பயன்படுத்தி அப்பாடலைப் பற்றிய கருத்துரைகளைத் துவக்கலாம்.

            இன்னுமொரு முக்கியமான நெறிமுறை. Filmography தலைப்பில் விவாதங்கள் வேண்டாம். படங்களும் பாடல்களும் பற்றிய பட்டியலுக்காக மட்டுமே இத்தலைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.


Quote
Share: