புலனத்தைப் பயன்படுத...
 
Notifications
Clear all

புலனத்தைப் பயன்படுத்தும் வழிமுறைகள்  

  RSS

MMFA
 MMFA
(@mmfa)
Admin Admin
Joined: 2 years ago
Posts: 58
17/05/2019 10:17 pm  

மெல்லிசை மன்னர் – கருத்துரைப் புலனம்

 

தலைப்புகள் பகிர்ந்தாய்வு – விவரங்கள்

 

     நண்பர்களே, மெல்லிசை மன்னர் என்ற மாமேதையின் இசையை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போது எதை எடுப்பது எதை விடுப்பது எனத் திக்கித் திணறி நமக்கு தேவையான நாம் விரும்பும் பொருளில் கருத்துரைகளை நம்முடைய இப்புலனத்தில் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வாறு இங்கே வரும் போது நம் கருத்துக்கள் எந்தப் பகுதியில் வரும் எதில் நாம் பதிவிட வேண்டும் என்பன போன்ற ஐயங்கள் எழலாம். அதைத் தங்களுக்கு விளக்கும் பொருட்டே இக்குறிப்பேடு.

 

இப்புலனத்தில் ஐந்து பெரும் தலைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

பிரதான பிரிவு – Main Forum

திரைப்படங்கள் – Films

திரைப்படங்களல்லாதவை – Non-Films

பின்னிசை, முகப்பிசை, கருவிசை மற்றும் இசைக்கருவிகள் மேலாண்மை – BGM, Title Music, Theme Music, Orchestration

பனோரமா – Panorama

 

  1. பிரதான பிரிவு – இதில்

 

  • இப்புலனத்தின் அடிப்படை கருத்துரைப் பகுதி இடம் பெறும். உறுப்பினர்களை வரவேற்றல், அறிமுகப்படுத்துதல், அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் போன்றவை.
  • புலனத்தில் கருத்துரைகளைப் பகிர்ந்து கொள்வதற்கான நடைமுறைகள், மற்றும் புலன நிர்வாகியின் வழிகாட்டுதல் போன்றவை இடம் பெறும்.
  • மெல்லிசை மன்னரைப் பற்றி உலகெங்கும் அவ்வப்போது நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள், அவை பற்றிய விவரங்கள் இடம் பெறும்.
  • இப்புலனம் மற்றும் மெல்லிசை மன்னர் இணையதளம் ஆகியவற்றை நடத்தும் மெல்லிசை மன்னர் ரசிகர்கள் அமைப்பு பற்றிய தகவல்கள் அறிவிப்புகள் போன்றவை இதில் இடம் பெறும்.

 

  1. திரைப்படப் பிரிவு

 

திரைப்படப் பாடல்களை – குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை மட்டும் விவாதிக்கும் பதிவுகளுக்கான பிரிவு. மெல்லிசை மன்னரின் ஆயிரக்கணக்கான பாடல்களை விவாதிக்க முனையும் போது, அவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட்ட குறிப்பிட்ட பாடலைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொண்டு தொடர்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் சிரமமின்றி அதைக் கண்டறியவும் எளிமையான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

     மெல்லிசை மன்னர் இசையமைத்த தமிழ்த்திரைப்படங்கள் தசாப்த வாரியாக முதலில் பிரிக்கப்பட்டுள்ளன – அவை 1950கள், 1960கள், 1970கள், 1980கள், 1990கள் மற்றும் அவற்றிற்கப்பால் – என பகுக்கப்பட்டுள்ளன.

     இதிலிருந்து ஒரு பகுப்பிலும் அந்தந்த தசாப்தங்களின் ஆண்டுகளுக்குத் தனித்தனியான உட்பகுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 1960கள் என்றால், 1960, 1961, 1962, 1963, 1964, 1965, 1966, 1967, 1968, 1969 என பத்து ஆண்டுகள்.  தாங்கள் விவாதிக்க விரும்பும் பாடல் புதிய பறவையில் இடம் பெற்ற பாடல் என்றால், அத்திரைப்படம் எந்த ஆண்டு வெளியானது என்பதைக் குறித்துக்கொள்க. அதாவது 1964ம் ஆண்டு வெளியானது புதியபறவை. தாங்கள் 1964ம் ஆண்டிற்கான இணைப்பினைப் பயன்படுத்தி தங்கள் தலைப்பை அல்லது கருத்துரையைப் பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கெனவே தாங்கள் தேர்ந்தெடுத்த பாடலைப் பற்றிய கருத்துரைத் தலைப்பு இருந்தால் அதிலேயே தாங்கள் தொடர்ந்து பதிவிடலாம். அவ்வாறு அப்பாடலைப் பற்றிய கருத்துரை இல்லையென்றால் Add Topic தலைப்பை சேர்க்கும் வசதியைப் பயன்படுத்தி அப்பாடலைப் பற்றிய கருத்துரைகளைத் துவக்கலாம்.

 

  1. திரைப்படங்களல்லாத பிரிவு

 

மெல்லிசை மன்னர் இசையமைப்பில் திரைப்படங்களல்லாத இசைக்கோப்புகள், பாடல்கள் போன்றவை இரு பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  இறை நம்பிக்கை சார்ந்தவை மதப் பிரிவுகளாகவும், சமூகம் மற்றும் இதர வகைகளைச் சார்ந்தவை சமூகம் என்ற பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. தாங்கள் விவாதிக்க விரும்பும் படைப்பு இவற்றுள் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை சரியாக தீர்மானித்து அவற்றுள் தலைப்பைத்தேர்ந்தெடுத்து அல்லது துவக்கி கருத்துரைகளைப் பரிமாறிக்கொள்ளலாம்.

 

  1. பின்னிசை, முகப்பிசை, கருவிசை, மற்றும் இசைக்கருவிகள் மேலாண்மை.

 

மெல்லிசை மன்னரின் படைப்புகளில் பாடல்களிலோ பாடல்கள் அல்லாத காட்சிகளிலோ இடம் பெற்றிருக்கும் பின்னிசை, மற்றும் அப்படத்தின் முகப்பிசை, மற்றும் அப்படத்திற்கென பிரத்யேகமாக அவர் ஒரு இசைக்கோர்வையை உருவாக்கி படம் முழுதும் ஆங்காங்கே இடம் பெறச் செய்திருக்கக் கூடிய  கருவிசை, மற்றும் அவருடைய இசைக்கருவிகளை அவர் எவ்வாறு அமைக்கிறார், தேர்ந்தெடுக்கிறார் போன்றவற்றைப் பற்றிய மேலாண்மை இவையெல்லாம் இந்தப் பிரிவில் இடம் பெறும். இதில் தாங்கள் விரும்பும் தலைப்பில் தங்கள் தொடர்பதிவுகளை பகிரந்து கொள்ளலாம் அல்லது புதியதாக துவங்கலாம்.

 

பனோரமா –

 

தலைமுறைகளைத் தாண்டி இன்னும் பல காலங்களுக்கு மெல்லிசை மன்னரின் இசை வாழ்ந்து வருகிறது. இன்னும் அவரைப் பற்றிய கட்டுரைகள், ஆய்வுகள் போன்றவை மட்டுமின்றி பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் ஆண்டு முழுதும் நடைபெற்று வருகின்றன. அது போன்று ஊடகங்களில் இடம் பெறுவன இப்பிரிவில் இடம் பெறும். இதிலேயே Blogs என்ற பிரிவில், சமூக வலைத்தளங்களில் இடம் பெறக்கூடிய கருத்துரைகள், கட்டுரைகள், விவாதங்கள் போன்றவை மீள்பதிவுகளாகவோ இணைப்புக்களாகவோ இடம் பெறும்.

 

     நண்பர்களே மேற்காணும் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளில் தங்களுக்கு ஏதேனும் ஐயமிருந்தால் புலனத்தலைவர் திரு விஜயகிருஷ்ணன், குழு நடத்துனர்கள் பேராசிரியர் திரு ராமன் மற்றும் திரு ராகவேந்திரன் ஆகியோரிடம் கேட்கலாம்.

 

     இவ்வழிகாட்டு நெறிமுறை தங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.  தங்களுடைய கருத்துக்களையும் ஆலோசனைகளையும்  தவறாமல் தெரிவிக்கவும்.

 

     இது மெல்லிசை மன்னரைத் தொழும் ஆலயமாக எண்ணி இதன் புனிதத்தைக் காத்து தொடர்பற்ற எவ்விவாதமும் கருத்துரையும் இடம் பெறாமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.

 

     நன்றி.


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 2 years ago
Posts: 135
18/05/2019 2:43 am  

Excellent description .A clear note on how to proceed .I am sure the new comers would go through this first and proceed .

On request Is it possible to translate in English for the benefit Non -Tamils and for Tamils (who cannot read Tamil ?)but still want to participate 

thanks for your consideration 

 

best Regards
vk


ReplyQuote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 111
18/05/2019 5:41 am  

Already there VK under the caption Pertinent Postings:

http://mellisaimannar.in/community/general-guidelines-and-instructions/posting-in-pertinent-forum/#post-173


ReplyQuote
Share: