Notifications
Clear all

1975 - Avanthaan Manithan - Complete Re-recording  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 66
01/01/2020 6:07 am  

Wish You All A Very Happy New Year!!!!!

 

Re-recording of “Avanthaan Manithan”

Year : 1975

 

அனைவருக்கும் வணக்கம்.

 

சினிமாவை பொறுத்தவரை ஓர் படத்தின் வெற்றி தோல்வியை ஓரளவு வரை நிர்ணயிப்பது அந்த படத்தின் பாடல்கள் என்ற ஓர் கருத்து இன்று வரை நிலவி வருகிறது.  அது உண்மை என்றும் சொல்லலாம், தவறு  என்றும் சொல்லலாம்.  சில படங்களை பொறுத்தவரை அது உண்மை என்று ஒத்துக்கொள்ள நேர்ந்தாலும், பெரும்பாலான படங்களை பொறுத்த வரை அந்த கருத்தை ஒத்துக்கொள்ள முடியாதபடி தடை போடுகிறன்றன,  ஏனென்றால், பாடல்கள் வெற்றி பெற்ற பல படங்கள் படு தோல்வியை தழுவியுள்ளது என்பதால். ஆனால், எல்லோராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட நிதரிசனமான ஓர் உண்மை உண்டு - அது தான் படத்தின் Re-recording என சொல்லப்படும் பின்னணி இசை.  ஓர் படத்தை தூக்கி நிறுத்தி எங்கோ கொண்டு செல்வதும், அதள பாதாளத்திற்கு கொண்டு செல்வதும் re-recording தான்.  படத்தின் முதுகெலும்பு என்பதே இந்த re-recording தான்.  படத்தின் கதை, நடிப்பு, பாடங்கள், மற்ற விஷயங்கள் எல்லாமே மெச்சும்படியாக அமைந்தும் re-recording சொதப்பிவிட்டால் பார்வையாளர்களால் படத்துடன் ஒன்றமுடியாமலே போய்விடும்.  அப்படிப்பட்ட உன்னதமான re-recording -ங்கை தான் நாம் இன்று பார்க்க போகிறோம்.

அதற்க்காக நான் எடுத்துக்கொண்டுள்ள படம் "அவன்தான் மனிதன்".  இந்த படம் 1st January, 1975 அன்று திரையிடப்பட்டது.  அதாவது 45 வருடங்களை தாண்டி இன்று  46-வது வருடத்தில் காலெடுத்து வைக்கிறது.  இப்படத்தின் பின்னணி இசையை ஆராய்ந்து, கட்டுரை வடிவத்தில் வழங்கி, அதை உலகறிய செய்யவேண்டும் என்பது என் நெடுநாளைய ஆசை.  அதை இன்றைய தினத்தில் நிறைவேற்றிக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த படத்தை பற்றி நாம் அறிந்த சில தகவல்கள் :  நடிகர் திலகத்தின்  175-ஆவது படம். படத்தின் சில பகுதிகள் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருந்தது. நடிகர் திலகத்தின் சற்றும் மிகைப்படுத்தாத யதார்த்தமான நடிப்பு.  5 பாடல்கள் - ஐந்துமே மிகவும் வெற்றி பெற்ற பாடல்கள்.  "அன்பு நடமாடும் கலைக்கூடமே" மற்றும் "ஆட்டுவித்தார் யாரொருவர்" என்ற பாடல்கள் உருவான கதைகள் நாம் எல்லோரும் அறிந்ததே.  அதே போல் பாடலின் டேப் வராததால் வரிகளை நினைவில் வைத்துக்கொண்டு மட்டும் "மனிதன் நினைப்பதுண்டு" என்ற பாடல் படமாக்கப்பட்டதும் நாம் அறிந்ததே. 

என்னைப்பொறுத்தவரை இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சம், படத்தின் “Re-recording”.  ஆனால் இதுவரை யாரும் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை.  அதை “highlight” செய்வது தான் என் முயற்சி.

சாதாரணமாக ஒரு படத்தின் அனைத்து பாடல்களும்  அமோக வெற்றி பெற்றால் அந்த படத்தை "Musical Blockbuster" என்று சொல்வதுண்டு.  ஆனால் இந்த படத்தை அப்படி யாரும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. அது போல், "நினைத்தாலே இனிக்கும்" போன்ற படங்களை "Musical Journey" என்று குறிப்பிடுவார்கள்.  இந்த படம் "நினைத்தாலே இனிக்கும்" பாணி படம் அல்ல என்றாலும், இந்த படத்தின் Re-recording -ங்கில் மன்னர் நிகழ்த்தியிருக்கும் experiment / சாதனையை பார்க்கும் போது, I would like to term this movie as a “Musical Journey”.  Before explaining the complete re-recording step by step, I would like to brief here as to why I came to the conclusion of terming this movie as a “Musical Journey”.

சிவாஜி-மஞ்சுளாவிற்கு ஒரு தனி theme.  அவர்கள் ரொமான்ஸுக்கு ஆர்பாட்டமான / அட்டகாசமான இசைக்கோர்வை.  முத்துராமனுக்கு தனி theme.  ஜெயலலிதாவிற்கு தனி theme.  சிவாஜி ஜெயலலிதாவை மௌனமாக காதலிக்கும் போது அதற்க்கு ஒரு theme. ஜெயலலிதா தன்னை விரும்பவில்லை, முத்துராமனை தான் விரும்புகிறார் என்று தெரிந்ததும் மீண்டும் தொற்றிக்கொள்ளும் சிவாஜி-மஞ்சுளா theme. அந்த theme , அதாவது சிவாஜி-மஞ்சுளா theme , சிவாஜி அவரது பங்களாவை விட்டு அவுட்ஹவுஸுக்கு குடியேறியதும் மறைந்து விடுகிறது, முத்துராமன்-ஜெயலலிதா திருமணத்திற்கு பிறகு சிவாஜிக்கு அடிக்கு மேல் அடி ஏற்ப்பட்டு ஒவ்வொன்றாக இழக்கும் போது இசையும் அதன் பிரம்மாண்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறது.  அதாவாதது ஆரம்பத்தில்  50 அல்லது 100 -க்கு மேல் என இருந்த இசைக்கருவிகள், படிப்படியாக குறைந்து படத்தின் இறுதி கட்டத்தை அடையும் போது 3 அல்லது 5 என சுருங்கி விடுகிறது. இப்படி Re-recording-ங்கில் ஒரு புரட்சியே ஏற்படுத்தியுள்ளார் மன்னர் இந்த படத்தில்.  அதாவது செல்வச்செழிப்பில் வாழும்  ஓர் மனிதனின் வாலிப பருவத்தில் தொடங்கி அவனது நடுத்தர வயதில் இந்த உலகத்தை விட்டே செல்லும் வரையில்  அவனுடனேயே பயணிக்கிறது  Re-recording.  செல்வச்செழிப்பில் வாழும் ஓர் இளைஞன்.  தொட்டதல்லாம் பொன்னாக்கும் அவனது ராசி.  கிடைத்ததெல்லாம் தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் தேவைப்படுவோருக்கு வாரி வழங்கும் அவனது வள்ளல் குணம்.  அவனது காதல், திருமணம், பிறகு ஓர் குழந்தைக்கு தகப்பன் என பயணிக்கும் அவனது வாழ்க்கை திசை மாறி இழப்பை படிப்படியாக சந்திக்கின்றன.  முதலில் மனைவி, பிறகு குழந்தை, அதன் பிறகு வெளிநாட்டில் உள்ள தனது சொத்துக்களை எல்லாம் அங்குள்ளவர்களுக்கே அளித்து சொந்த நாட்டுக்கு திரும்புதல், அதன் பிறகு மீண்டும் காதல், ஆனால் அவைளையும் மற்றொருவனுக்கு தாரைவார்த்து கொடுத்தல், பிறகு தொழிலில் தொடர்ந்து சரிவு, அதன் பிறகு அரண்மனை போன்ற வீட்டை விட்டே வெளியேறுதல், கடைசியில் குடிசையில் வாழ்ந்து ஒருவேளை சோற்றுக்குக்கூட வழியில்லாமல் பரிதாபமாக இந்த உலகை விட்டே பயணித்தல் என மேலிருந்து கீழே பயணிக்கும் அவனது வாழ்க்கையில் இசையும் தன் பிரம்மாண்டத்தை படிப்படியாக  இழந்து அவனோடு பயணிக்கிறது  (in a sense it’s a life journey of a man, which travels from his teenage to middle age)  - அதனால் தான் என்னைப்பொறுத்த வரை இந்த படத்தின் Re-recording ஒரு “Musical Journey” என்று சொன்னேன். Surprisingly, to my knowledge, I don’t think anybody has analysed these aspects so far.

மற்றுமொரு விஷயத்தை கூட சிலாகித்து சொல்லவேண்டும் - பின்னணி இசை ஒரு போதும் வசனங்களை முழுங்கடிக்க செய்யவில்லை, மறித்து it enhances the dialogues as well as the scene  (இந்த கருத்து MSV இசை அமைத்த அத்தனை படங்களுக்கும் பொருந்தும்).

Title Music-க்கில் ஆரம்பித்து, கிளைமாக்ஸ் வரையிலான இசை தொகுப்பை (பாடல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன) 43 Audio Clippings ஆக வெட்டியெடுத்துள்ளேன் (நகைச்சுவை காட்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன - ஏனென்றால் அந்த பகுதியில் பெருபாலும் இசை தவிர்க்கப்பட்டுள்ளது என்பதால்).  அவைகளை  கீழே பட்டியலிட்டு ஒவ்வொரு clipping-ங்கிலும்  சேர்க்கப்பட்டுள்ள பின்னணி இசையின் விளக்கங்களுடன். 

சிவாஜி-மஞ்சுளாவிற்கு ஓர் theme music வருகிறதென்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா.  அது அவர்கள் காதலிக்கும் போது வருவதில்லை.  அந்த theme மஞ்சுளா இறந்த பிறகு தான் வருகிறது.  மேலும் படத்தின் theme music கூட அதுவே.  சிவாஜிக்கு மஞ்சுளா நினைவு வரும்போதெல்லாம் அந்த theme music ஒலிக்கிறது (அவர்கள் ரொமான்ஸுக்கு முற்றிலும் மாறுபட்ட grand இசைக்கோர்வை சேர்க்கப்பட்டுள்ளது – keeping in mind that it has been filmed at Singapore) படத்தின் Title Music -க்கிலும் அந்த theme இடம் பெற்றுள்ளது.

1)  Title Music

2)  Intro of Muthuraman and Jayalalitha – As the scene is filmed in the office, normal music in sync with the scene is played – “theme music” for those characters are avoided.

3)  Breakfast for Muthurman and JJ – Here too “theme music” for those characters is avoided.

4)  Muthal Mariyaathai for NT at Temple Festival – music in relation to the festival. 

5)  Manjula’s death anniversary celebration – இந்த பகுதியின் ஆரம்பத்தில் Santoor பயன்படுத்தியுள்ளார் மன்னர்.  ஆனால் இதே Santoor முத்துராமனுக்கு theme music ஆகவும் பயன்படுத்தியுள்ளார். அது, முத்துராமன் கேரக்டர் சற்று சஞ்சலமான கேரக்டர் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக பயன்படுத்தியுள்ளார் என நினைக்கிறேன்.  யோசித்துப்பார்த்ததில் சிவாஜி தோன்றும் இந்த சந்தர்பத்திற்கும்  Santoor  ஏன் பயன்படுத்தியுள்ளார் என்றால் அது பணத்தை அவர் தண்ணீர் போல் வாரி இறைக்கிறார் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக இருக்கலாம்.  But, if you hear it minutely, he has differentiated the way it has been played!!!!!  The end portion leads to the flashback.

6)  Flashback – NT’s visit to Singapore, his meeting with Manjula and the subsequent chase.  இந்த இசைக்கோர்வை "ஊஞ்சலுக்கு பூச்சூட்டி" பாடலுக்கு முன்பும் பின்பும் இடம்பெற்றவை.  பாடலை நீக்கி பின்னணி இசையை மட்டும் ஒன்று சேர்த்து வழங்கியுள்ளேன்.  சிங்கப்பூரை நம் கண்முன்னே கொண்டு நிறுத்தும் இசை.  அதில் ரொமான்ஸும் பின்னிப்பிணைந்து மெருகு சேர்க்கிறது.  At the end NT’s breaks his leg.

7)  Bedridden NT and Manjula’s nursing.  Listen to the music when Manjula discloses her identity as a tamil girl.

8)  NT-Manjula at Buddhist Temple, their romance, Manjula’s pregnancy, their outing during rainy season, delivery and Manjula’s death as well as drowning of the baby. 

இந்த பகுதியில் தான் படத்தின் theme music ஆரம்பமாகிறது.  குறிப்பாக 05.03 minute -டில் கவனமாக கேளுங்கள் - அங்கு தான் அந்த theme முதலில் ஒலிக்கிறது.  What a way to inform the audience that something is going to happen to Manjula through this haunting music with a pinch of romance.  Later, it becomes the haunting tune for NT.  The same theme appears from 10.23 minutes till end of this clipping – through Violins and Trumpet – where NT loses the child too.

Small piece of information on this “Theme Music” : interestingly the same tune was used for “Liril” Bath soap’s first ever advertisement released around the same period when this movie was released – “Laa Lalalala Laa…..”.  MSV himself used the theme in “Raajaveedhi Bhavani Enbathu” – viz., at the end of the song as a humming by P.Susheela.

9)  Farewell to Singapore – NT leaves Singapore.  The same theme music plays in the background and the flashback ends. 

This Theme Music takes a back seat temporarily from here onwards, and a fresh theme appears for NT as he starts loving JJ silently.

10)  NT offers a trip to abroad, which Muthuraman rejects.

11)  NT rescues Baby Sumathi from drowning.

12)  NT’s entry into Muthuraman’s house.  Please listen to the theme played for Muthuraman in Santoor – it indicates that Muthuraman has a delicate and wavering mind. 

13)  Baby Sumathi at NT’s Bungalow – Please listen to the Santoor piece played at the end of this audio – again to show that NT is “கொடை வள்ளல்".  Please also notice the difference in the way it has been played for NT and Muthuraman.

14)  Baby Sumathi receives parcel thru post.  பார்சலில் வருவது அம்மாவாக நடிக்க வரும் ஜெயலலிதா.  இங்கிருந்து தான் NT -க்கு JJ மேல் காதல் பிறக்கிறது.  Listen to the “Flute theme” played for JJ which conveys NT’s love for her.

15)  Muthuraman’s return from abroad – Sumathi introduces JJ to Muthuraman as her mother.  Please note that “Santoor” for Muthuraman is avoided here, as he is at NT’s place.  But, the “Flute theme” plays in the background – indicating JJ’s presence and NT’s love for her.

16)  JJ at Muthuraman’s house – Pl listen to the subtle “Santoor” piece when Sumathi forces her to drape her mother’s saree – Mannar hints the audience that JJ is going to marry Muthuraman!!!!!

17)  NT waiting for JJ at his bungalow -  listen to the Theme Music in Guitar here for NT – Flute has been avoided as JJ is not in the screen.

18)  JJ at Muthuraman’s house – continues – Listen to the “Santoor Theme” in the background!

19)  NT thinking of JJ – the theme starts with Guitar.  But, see how it changes to “Flute” when Major Sunderrajan starts discussing about JJ – “Flute” is used because Major reads NT’s mind that he is in love with JJ !!!!!

20)  JJ’s night stay at Muthuraman’s house – “Santoor Theme” appears in this scene too.

21)  NT thinking of JJ – Here only “Guitar Theme” is played and “Flute” is avoided though JJ’s name is mentioned, காரணம் JJ ஏன் இன்னும் வரவில்லை என்பதின் காரணத்தை மட்டும் தான் பேசிக்கொள்கிறார்கள்!

22)  JJ’s night stay at Muthuraman’s house continues.

23)  NT waiting for JJ and starts writing a letter, expressing his love.  “Guitar Theme” starts and continues till 2.0 minutes.  Please listen carefully from 1.40 minutes till 2.0 minutes – here Mannar cleverly infuses “Flute” too alongwith Guitar, as NT starts writing letter to JJ!!!!!

24)  JJ and Muthuraman together at Muthuraman’s house – “Santoor Theme” appears.

25)  NT and Muthuraman at Office.

26)  NT awaiting for JJ’s arrival – JJ discloses her desire to marry Muthuraman.  Listen the opening music in this clipping, which is the last “rich” music for NT.  Listen the subtle use of “Flute” till JJ disclose her desire to marry Muthuraman.  Flute and NT’s “Guitar Theme” disappears once JJ disclose her desire to marry Muthuraman.

27)  JJ-Muthuraman’s marriage.  NT presents his hereditary Ring to Muthuraman. 

28)  NT’s decline begins.  Listen minutely from 1.23 minutes – MSV smartly re-introduces the earlier “Theme Music”, viz., the one used for NT and NT-Manjula sequence from the beginning till he starts loving JJ.

29)  NT’s decline continues.

30)  NT visits Muthuraman’s new factory and house.  Listen to the Muthuraman’s “Santoor Theme”.

31)  Manjula’s death anniversary – Note the disappearance of “rich” music.  At the beginning only Sitar is played in the background – which indicates the pathetic condition of NT - ஆடம்பர வாழ்க்கை அஸ்தமித்துவிட்டது என்பதை மன்னர் எவ்வளவு நாசூக்காக உணர்த்துகிறார். Following the Sitar piece “Theme Music” appears.

32)  Cho and co-worker visits Muthuraman’s house requesting him to help NT. Listen to the “Theme music in Santoor” for Muthuraman.

33)  JJ delivers a baby boy.  Listen to the “Santoor + Flute Theme” from 2.15 minutes : JJ + Muthuraman குழந்தை என்பதை இசை வாயிலாக எவ்வளவு சாமர்த்தியமாக உணர்த்துகிறார் மன்னர்!!!!!  Please note the difference in the way “Flute” has been played from that of being played when JJ was loved by NT.

34)  NT refuses Muthuraman’s help.

35)  Fire accident at NT’s factory.

36)  NT’s bungalow’s auction + Muthuraman buys the Bungalow + NT leaving the bungalow.  “Theme Music” (in Violins) appears in the middle as well as at the end of this clipping.  It disappears from rest of the remaining parts of the movie until it resurfaces at the last minute of the movie.

37)  NT shifts to Outhouse.  The music too declines considerably.  All the glory / richness are gone.  In the background “Veenai” plays the sad notes.

38)  Muthuraman and JJ at the Bungalow.

39)  NT remembering the grand way in which Krishna Jayanthi was celebrated by him in the past.

40)  Muthuraman’s celebration on becoming the Mayor.

41)  Muthuraman insults NT.

42)  Baby Sumathi’s accident + NT meets Muthuraman + Sumathi’s death.

43)  Climax – Music declines further more.  Following the Mandolin follow on of the “Manithan Ninaippathundu” song, Flute is played, which is taken over by Violins.  Shehnai appears upon NT’s death and at the last few seconds the movie’s “Theme Music” appears.

இந்த “Musical Journey” Re-recording- ங்கில் மட்டுமல்ல, பாடல்களிலும் நிகழ்த்திக்காட்டியுள்ளார் மன்னர் - அதாவது ஆரம்பத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு   100-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தி, பிறகு வரும் பாடல்களுக்கு மிகக்குறைந்த இசைக்கருவிகள் மட்டுமே பயன்படுத்தி இசை அமைத்துள்ளார்.  இவை தவிர ஒவ்வொரு பாடலுக்கும்  ஒவ்வொரு பரிமாணம் வேறு.  "ஊஞ்சலுக்கு பூச்சூட்டி" பாடலில் காதல், இளமையின் கொந்தளிப்பு ஓங்கி நிற்கிறதென்றால், "அன்பு நடமாடும்" பாடலில் மென்மையான காதல், குடும்பப்பாங்கு, குறும்பு, அன்பு, undercurrent ஆக இழையோடும் சோகம், என பல bhaavangal , "எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது" பாடலில் தாயின் பாசம், அன்பு, மரியாதை, இத்தியாதி, "ஆட்டுவித்தால் யாரொருவர்" பாடலில் இழையோடும் சோகம், "மனிதன் நினைப்பதுண்டு" பாடலில் இழையோடும் சோகம் மற்றும் வெறுமை,பற்றுதல் இல்லாய்மை.  "ஊஞ்சலுக்கு பூச்சூட்டி" மற்றும் "அன்பு நடமாடும்" பாடல்களில் இருக்கும் பிரம்மாண்டம் "எங்கிருந்தோ ஒரு குரல்" பாடல் வரும் போது சற்று குறைந்துள்ளதை கவனிக்கவும்.  அதுவே "ஆட்டுவித்தால் யார் ஒருவர்" பாடல் வரும்போது வெகுவாக குறைந்து விடுவதையும் கவனிக்கவும். மேலும், கடைசியாக வரும் "மனிதன் நினைப்பதுண்டு" பாடலில் அதற்க்கும் கீழிறங்கி விரல்விட்டு எண்ணக்கூடிய இசைக்கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்கவும்.

இவற்றுக்கெல்லாம் நடுவில் முத்துராமன் மேயர் ஆனதை கொண்டாடும் போது மட்டும் ஓர் Music Piece வடிவில் பிரம்மாண்டம் எட்டிப்பார்க்கிறது.

இப்போது சொல்லுங்கள் நான் இந்த படத்தை "Musical Journey" என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை தானே?

மீண்டும் உங்களை சந்திக்கும் வரையில் உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

Following is the Link for the complete audio clippings :

https://app.box.com/s/q081y5qxp6ykhkoqjbrbxn4ivvd2g6fp  


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 67
01/01/2020 10:14 am  

அன்பு நண்பருக்கு 

இதை விட சிறந்த பரிசு ஆரம்பம் இந்த புதுவருட திற்கு அளிக்க முடியாது. உங்களைப் போன்றவர்கள் ஆய்ந்து அறிந்ததை என் போன்றவர்கள் எளிதில் அடைந்து விடுகிறார்கள்.

இன்னும் ஆடியோ கேட்க வில்லை. கேட்ட உடனே திரும்பவும் வருவேன் 

நன்றி 

This post was modified 8 months ago by P.G.S. MANIAN
This post was modified 7 months ago by MMFA

best Regards
vk


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 66
01/01/2020 4:13 pm  

மிக்க நன்றி VK அவர்களே. உங்களை போன்ற ரசிகர்கள் தானே எண்களைப்போன்றவர்களுக்கு பலமே. நீங்கள் இன்றி நாங்கள் இல்லை. ஓர் முயற்சி பலரை சென்றடையும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தியை வார்த்தைகளில் அடக்க முடியாது.

வாழ்க மன்னர் புகழ்.


ReplyQuote
Share: