Notifications

1969 -KANNE PAAPA MUTHURAMAN KRV MEETING SCENES  

  RSS

M.R.Vijayakrishnan
(@v-k)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 81
15/03/2020 8:24 am  

தேர்வு மற்றும் கருத்து V ராகவேந்திரன் (வீயார்) & பார்த்தவி படம் – கண்ணே பாப்பா இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காட்சி – நாயகன் நாயகி காதல் வளர்ந்து நாயகி கருவுறுதல் வரை தன்னுடைய பின்னணி இசையால், உணர்வுகளை தட்டி எழுப்பி நெஞ்செல்லாம் நெகிழ வைக்கும் ஆற்றல் படைத்தவர் மெல்லிசை மன்னர். ஒவ்வொரு படத்திற்கும் ஒரு தீம் மியூஸிக்கையும் உருவாக்குவார். சில படங்களில் அது படம் முழுதும் ஆங்காங்கே இடம் பெறலாம். சில படங்கள் ஓரிரு காட்சிகளில் வரலாம். சிலவற்றில் டைட்டிலோடு நின்று விடலாம். ஆனால் கண்ணே பாப்பா படத்தைப் பொறுத்தமட்டில் குறிப்பிட்டு ஒரு இசைக்கோர்வை என உருவாக்காமல், படத்தின் கதைக்களத்திற்கேற்ப உருவாக்கியிருக்கிறார். காரணம் படம் ஒரே உணர்வில் பயணிக்கவில்லை. தாயாரின் பரிதவிப்பு, குழந்தையின் மேல் பாசம், தன் வாழ்க்கையை மீண்டும் சீர்படுத்த கணவன் வருவானா என்கிற ஏக்கம், இவையெல்லாவற்றையும் தனக்குள் வைத்து அல்லல் படும் தாயாரின் உணர்வுகள் இன்னொரு புறம் யாருமில்லா அனாதையாக ஊர்விட்டு ஊர்வந்து கஷ்டப்படும் குழந்தையின் பரிதாப நிலைமை, இன்னொரு பக்கம் இந்த கவலை ஏதுமின்றி உள்லாசமாக இருக்கும் கணவன் – இவர்களை சுற்றி கதை பயணிக்கிறது. இதில் குழந்தைக்கு பரிசுச்சீட்டில் பணம் விழுந்து அதைப் பறிக்க அலையும் ஒரு கும்பல்.. இப்படி பலவிதமான திசைகளில் பயணம் செய்து இறுதியில் சுபமாக முடிகிறது. நாயகன் பாஸ்கர் நாயகி கல்யாணியை காதலித்து அவளை கர்ப்பமாக்கி விட்டு போய் விடுகிறான். எப்போது அவனை மீண்டும் பார்ப்போம் என்று ஏங்கும் நிலைமையில் அவளுடைய பரிதவிப்பிலுருந்து படம் ஆரம்பமாகிறது. ஓவ்வொரு நாளும் ரயிலில் பெட்டி பெட்டியாய் ஏறி அவனைத் தேடுவதும், ஸ்டேஷன் மாஸ்டர் இன்னும் கிடைக்கவில்லையா என கேட்பதும், அவள் இல்லை என ஏமாற்றமடைவதும், கரு வளர்ந்து குழந்தை பெற்றவுடன், டைட்டில் ஆரம்பிக்கிறது. முடியும் போது குழந்தை நன்கு வளர்ந்திருக்கிறது. சுட்டித்தனமான குழந்தை ரயில் தண்டவாளத்தில் ரயில் விளையாட்டு விளையாட, ஸ்டேஷன் மாஸ்டர், ரயில் நிலைய ஊழியர்கள், என எல்லோரும் பங்கு கொள்ள, தாயாரையும் அழைக்கிறாள் குழந்தை. எல்லோரும் வற்புறுத்த அவளும் மனசில்லாமல் கூட சேருகிறாள். அப்போது அவளுக்கு தன் காதலன் நினைவு மலர்கிறது. தான் குற்றாலத்தில் குளித்து வரும் போது அவனைப் பார்த்தது, காதல் கொண்டது, அவனுடன் பழகியது, அவன் தன்னை விட்டு பிரியாவிடை பெற்றது, தான் கருவுற்றது என யாவும் அவள் மனதில் நிழலாடுகின்றன. அவ்வாறு அவன் பிரியாவிடை பெறும் போது நடக்கும் உரையாடல் மிகமிக அழகாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வரியும் கேள்வியிலேயே, அதுவும் மா என்ற எழுத்தில் முடியுமாறு பாலமுருகன் எழுதியிருப்பது சிறப்பு. இந்தக் காட்சியில் அவர்களுடைய ரொமான்ஸ் மன்னரின் இசையில் அவ்வளவு சிறப்பாக அமைந்திருக்கிறது. பாஸ்கர் – கல்யாணி, டிரெயினுக்கு நேரமாச்சு, நான் வரட்டுமா கல்யாணி – நீங்க போகணுமா பாஸ்கர் – ஒன் பக்கத்திலேயே இருந்துரட்டுமா கல்யாணி – அதை நான் சொல்லணுமா பாஸ்கர் – இதை நீ சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா கல்யாணி – தெரிஞ்சும் ஏன் போணுமா பாஸ்கர் – நாம கணவன் மனைவியா வாழ வேணாமா கல்யாணி – அதுக்கு பிரிஞ்சி தான் ஆகணுமா பாஸ்கர் – கொஞ்ச நாள் பிரிவுக்கு இவ்வளவு கலங்கணுமா கல்யாணி – கொஞ்ச நேரம் பிரிஞ்சிருக்க என்னாலே முடியுமா பாஸ்கர் – பிரிவிலேயும் ஒரு இன்பம் இருக்கு தெரியுமா கல்யாணி – அதை புரிஞ்சிருந்தா எம் மனசு துடிக்குமா பாஸ்கர் – போனதம் திரும்பிடறேன் போதுமா கல்யாணி – சத்தியமா பாஸ்கர் – சத்தியமா, ... நான் வரட்டுமா அந்த காட்சியின் மெய்ம்மறக்க வைக்கும் பின்னணி இசையே இன்று இத்தொடரில் இடம் பெறுகிறது. இதை முழுமையாக உணர்வதற்காக, படத்தின் டைட்டில் காட்சியும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது. இணைக்கப்பட்டிருக்கும் டைட்டில் கார்டில் 1.45லிருந்து ஒலிப்பது படத்தின் கருவிசை. இது படத்தில் திரும்ப இடம் பெறவில்லை. மாறாக சற்றே வேக தாளத்திலோ அல்லது வேறு உணர்விலோ ஓரிரு இடங்களில் ஒலிக்கிறது. மயக்க வைக்கும் மன்னரின் இன்னொரு அற்புதமான பின்னிசைக் கோர்வையுடன் மீண்டும் சந்திப்போம்.

https://youtu.be/uuhshCQiF0M

best Regards
vk


Quote
Share: