சிவந்த மண் படத்திலி...
 
Notifications

சிவந்த மண் படத்திலிருந்து ஒரு காட்சியின் BGM நான் ரசித்தது  

  RSS

Nagai V Kannan
(@nagai-v-kannan)
Active Member
Joined: 1 month ago
Posts: 6
01/03/2020 1:41 pm  

MGR மற்றும் சிவாஜி படத்தின் பாடல்களில்
எது சூப்பர் என்ற சண்டை, இல்லை வாக்குவாதம்,
இல்லை விவாதம், இல்லை....எதோ ஒண்ணு அந்த
காலத்தில் சம்பந்தப்பட்டவர்களின் ரசிகர்களிடையே
நடந்துவந்தது உண்மைதான்....!

ஆனால் இந்த வாதம் அல்ல விவாதம்....
எனது இசை நண்பர்களிடையே, அவற்றில்
மூத்தோர்களிடையேயும் நடந்தது...! அதில்
வியப்பு என்னவென்றால்....அவர்கள் எல்லோரும்
"இசை தெய்வத்தின்" ரசிகர்களே.....!

அந்த விவாதத்தையும், அதன் முடிவையும் விட்டுவிடுவோம்!

இது புதுசு ...! நம்மவர் இசை அமைத்த "நடிகர் திலகம்"
அவர்களின் படங்களிலேயே இந்தப் படத்தின் பாடல்கள்
உங்களுக்கு மிகவும் பிடித்தது....இந்தப் படத்தின் பின்னணி
இசை மிகவும் பிடித்தது என்று கேட்டால் நீங்கள்
என்ன படத்தை சொல்வீர்கள்....?

அதை கமெண்டில் சொல்லுங்கள்...அந்தப் பாடல் மற்றும்
பின்னணி இசையையும் சொல்லுங்களேன்!

ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இந்த கேள்விக்கு
பதில் யோசிக்காமல் சொல்லும் படம்......
"சிவந்த மண்" (1969)
பாடல்....."பார்வை யுவராணி பொன்னோவியம்"
பின்னணி இசை இதே பாடலுக்கு முன்பாக
வரும் ஒரு 07:06 நிமிடங்களுக்கு வரும் இசை....!

இந்த இசைக்க கோர்வை முடியும் கடைசி 10
நொடிகளில் வரும் இசையை கேட்ட உடனே
இந்தப் பாடலை மூளைக்கு ஐஸ் கத்தியைக்
கொண்டு அந்தப் பாடலை இறக்கி விடுவார்!

MGR படங்களின் வெற்றிக்கு அவரது படங்களுக்கு
அமைந்த பாடல்கள் மற்றும் பாடல் வரிகள் நிச்சயம்
பெரும் பங்கு வகிக்கிறது!

ஆனால் "தெய்வம்" ....இப்போ உள்ள slang ல சொல்லனும்னா
நடிகர் திலகத்தின் படத்திற்கு அமைத்தது மாதிரியான
ஒரு இசையமைப்போ பாடலோ அவருக்கு கொடுத்ததில்லை
என்று கூறுவேன்.....!

அதற்கு உதாரணம் இந்தப் பாடலும் அதற்கு முன்பு வரும்
அந்த "fanfare" type இசையுமே !

எனவே இரண்டையுமே தனித்தனியே ஆடியோவாக
இங்கே அளிக்கிறேன்.....!

Enjoy the special treat !

https://m.soundcloud.com/user235343433/sivantha-mann-1969-instrumental-before-parvai-yuvarani?fbclid=IwAR2vdYzwb9VE3arJRrc17wxrteDFCGJhcajYivlOnAJXTUmZIQaVgpCFQUg

 

https://m.soundcloud.com/.../sivantha-mann-1969-ship-scene-bgm


Quote
Share: