Notifications
Clear all

1986 - Kanne Kaniyamuthe - Ninnaiye Rathi Endru  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 115
08/11/2020 4:29 pm  

நாட்டிய (கிளாசிக்கல்) பாடல்கள்

பாடல் : நின்னையே ரதி என்று
படம் : கண்ணே கணியமுதே
பாடியவர்கள் : கே.ஜெ.யேசுதாஸ், பி.எஸ்.சசிரேகா, நரசிம்மாச்சாரி
பாடலாசிரியர் : மகாகவி பாரதியார்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1986

அனைவருக்கும் வணக்கம்.

நாயகன் ரகுமான் ஒரு நாட்டிய கலைக்கூடம் நடத்துபவர். சிறுவயதிலேயே தாய் அவரை விட்டு தனியே போய்விடுகிறார். ஒரு கட்டத்தில் அவர் தந்தையையும் பிரிந்து தனியே வாழ்கிறார். அந்நேரம் அவரிடம் வேலை தேடி நாயகி அமலா வருகிறார். தனது அலுவலகத்தில் அவருக்கு டைப்பிஸ்ட் ஆக அவருக்கு ரகுமான் வேலை தருகிறார். அவர் ஒரு சிறந்த நாட்டிய கலைஞர், ஆனால் அவர் அதை வெளிக்காட்டாமல் இருக்கிறார். மன உளைச்சல் காரணமாகவும், அதன் நிமித்தம் உடம்பு சரியில்லாமல் போவதாலும் ரகுமானால் கலைக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க முடியாமல் போகிறது. இதை கவனிக்கும் அமலா, ஓரிரு நாட்களுக்கு பிறகு அவருக்கு பதிலாக மாணவ-மாணவிகளுக்கு நாட்டியம் சொல்லிக்கொடுக்கிறார். அதை பார்க்க நேரிடும் ரகுமான் அதிர்ச்சிக்குள்ளாகிறார்.

அமலா மாணவ-மாணவிகளுக்கு நடனம் கற்றுக்கொடுக்கும் போது பாடப்படும் பாடல் தான் இந்த பாடல். "கல்யாணவசந்தம்" ராகத்தை அடிப்படையாக கொண்ட பாடல் (மன்னரது இசையில் வந்த "காஞ்சிப்பட்டுடுத்தி" பாடலும் இந்த ராகத்தை அடிப்படையாக கொண்ட பாடல் தான்). இந்த ராகத்தின் சிறப்பு என்னவென்றால் பக்தி + காதல் + சோகம் மூன்றையும் வெகு சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியது என்பது தான்.

இந்த பாடலுக்கு பிறகு ரகுமான் அமலாவிடம் எப்படி நடந்துகொள்கிறார்? அவர்களுக்குள் காதல் மிளிர்கிறதா? அப்படி காதல் மிளிர்ந்தாள் அது கைகூடுகிறதா? ரகுமானின் தாய்-தந்தை பிரிந்து போவதற்கு காரணம் என்ன? தந்தையிடம் வளரும் ரகுமான் ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து ஏன் பிரிந்து போகிறார்? ரகுமான் அவரது தாய்-தந்தையருடன் இணைகிறாரா? போன்ற கேள்விகளுக்கு விடை படத்தின் மீதி கதை அளிக்கிறது.

இந்த பாடலில் அவர் கொடுத்திருக்கும் effect - பாடல் நெடுக ஒரு "floating" feel கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய காரணங்கள் :- ஒன்று : இந்த பாடல் நடக்கும் இடமான கலைக்கூடம் கடற்கரையை ஒட்டியுள்ளது என்பதால். இரண்டாவது : சாதாரண டைப்பிஸ்ட் ஆக வேலை பார்க்கும் பெண், தனது மாணவர்களுக்கு அற்புதமாக நடனம் கற்றுக்கொடுப்பதை பார்க்கும் நாயகனுக்கு இன்ப அதிர்ச்சி - இது கனவா அல்லது நினைவா என்ற confusion. மூன்றாவது : அவனுக்கு அவள் மீது காதல் ஏற்பட்டு கற்பனையில் மிதக்கிறான்.

இதை தவிர மன்னர் சேர்த்திருக்கும் ஜாலங்கள் : ஆரம்ப இசையான Prelude -டில் புல்லாங்குழல் இசை சொல்லும் இரண்டு விஷயங்கள் - ஒன்று : காலைவேளை என்பதை. இரண்டாவது : அவனது சோகமான சூழ்நிலை. மூன்றாவது : குழம்பிப்போன அவனது மனதுக்கு ஆறுதல் கூறும் வண்ணமாகமும் அமைந்துள்ளது. இதே புல்லாங்குழல் BGM -ம்மில் ஒலிக்கும் போது (ஜேசுதாஸ் "நின்னையே ரதி என்று" பல்லவியை பாடி முடித்த பிறகு வரும் இசை) சோகத்தை சற்றே அடக்கி, காதலை பிரதிபலிக்கும் வண்ணம் ஒலிக்கிறது.

சசிரேகா பல்லவியை பாடுகையில், அவரது குரலில் ஒருவிதமான பக்தியும், காதலும் சேர்ந்து ஒலிக்கிறது.

அதுவே ஜேசுதாஸ் பாடுகையில் முதலில் காதல் ரசமும், பிறகு அவர் ஆலாபனைக்கு தாவும் போது அது அப்படியே பக்தியாகவும் மாறுகிறது. சரணம் பாடுகையில் மீண்டும் காதல் மேலோங்கி நிற்கிறது.

பரதநாட்டியத்திற்குரிய "ஜதி" பாடல் ஆரம்பத்திலும், சசிரேகா பாடி முடித்த பிறகும் சேர்க்கப்பட்டுள்ளது.

சலங்கை ஒலி பாடல் நெடுக சேர்க்கப்பட்டுள்ளது – with so many variations.

Prelude ஜதி பகுதிக்கு தாளமாக நட்டுவானார் ஒரு கட்டையில் குச்சியால் எழுப்பும் ஒலி மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. அதன் பிறகு வரும் "Synthesizer Xylophone" இசைக்கு அந்த percussion-னோடு சேர்ந்து Pakhawaj-ஜும் ஒலிக்கிறது. இந்த "Xylophone" காட்சியில் "water base" இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

சசிரேகா பாடும் போது தாளத்துக்கு Pakhawaj மட்டுமே வாசிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியை Xylophone Chord புல்லாங்குழலில் ஒரு சிறிய interlude சேர்த்து அழகு படுத்தியுள்ளார்.

ஜேசுதாஸ் "நின்னையே ரதி என்று" பாடி தொடங்கும் போது அங்கு தபலாவில் ஒரு roll சேர்த்து அழகு படுத்தியுள்ளார். பிறகு தாளம் Pakhawaj-ஜுக்கு தாவி விடுகிறது. பிறகு அவர் ஆலாபனை செய்து முடிக்கும் போது மீண்டும் தபலாவில் ஒரு roll. தொடர்ந்து அவர் பாடும் போது தாளமாக தபலா புகுந்து கொள்கிறது.

ஜேசுதாஸ் பல்லவியை பாடி முடித்து வரும் இசையில் முதல் பகுதிக்கு, அதாவது புல்லாங்குழல் பகுதிக்கு Pakhawaj-ஜும், அடுத்த பகுதியான வீணை பகுதிக்கு தபலாவும் வாசிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு பிறகு வரும் மூன்றாவது பகுதியான Synthesizer பகுதிக்கு தபலா தரங்கும் வாசிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு வரும் சரணத்தில் சேர்க்கப்பட்டுள்ள interlude - இது Synthesizer-றில் சேர்க்கப்பட்டுள்ளது - அதாவது "மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ" - இது ஒருவிதமான "illusion" effect சேர்க்கிறது.

Pakhawaj-ஜும், தபலாவும் ஜாலம் புரிந்துள்ளது.

மனதை நெகிழ வைக்கும் பாடல். நான்கே நிமிட பாடலில் "கல்யாண வசந்தம்" ராகத்தின் அத்தனை பரிமாணங்களையும் தொட்டுக்காட்டுகிறார்.

இந்த பாடலும் எங்கோ வைத்து கொண்டாடப்படவேண்டிய பாடல். ஆனால், படம் தோல்வியை தழுவியதால் ரசிகர்கள் மனதில் சில காலம் மட்டுமே இடம் பிடித்து காணாமல் போய்விட்டது.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://youtu.be/PF_g8n2OUvA


Quote
Share: