Notifications
Clear all

1983 - Yaamirukka Bayamen - Anbe Puthukkavithaigal Pala Padikkiren


K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

பாடல் : அன்பே, புதுக்கவிதைகள் பல படிக்கிறேன்

படம் : யாமிருக்க பயமேன்

பாடியவர்கள் : வாணி ஜெயராம்

பாடலாசிரியர் : வாலி

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1983

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது "மேற்கத்திய" பாணியில் அமைந்த ஒரு சூப்பர் "sensuous" song.  வியக்கத்தக்க பல விஷயங்கள் இந்த பாடலில் ஒளிந்துள்ளது.  அன்று வரை காணாத (அன்று வரை என்ன, அதற்க்கு பிறகும் இப்படியோர்  முயற்சி யாரும் எடுத்ததாக தெரியவில்லை) ஓர் புதிய "வாணி ஜெயராம்"-மை இந்த பாடல் அடையாளம் காட்டுகிறது.  மேற்கத்திய பாணியில் இது போன்ற ஓர் பாடல் இதற்க்கு முன்பும் இதற்க்கு பிறகும் அமைந்துள்ளதா என்பது சந்தேகமே.  புதுவிதமான ரிதம்.  சரணங்களின் முடிவில் "Opera" பாணியில் பாடுவது போன்ற அமைப்பு.  பல்லவி முழுதும் husky voice -சிலும், சரணங்கள் high pitch -ச்சிலும் அமையப்பெற்றுள்ளது.  Sensuousness oozes through the singer’s voice as well as through the music.  The song has been picturized quite decently. 

80 -துகளில் இது போன்ற பாடல்களுக்கு ஓர் புதிய இலக்கணம் வகுத்துவிட்டார்கள் - உபயம் : "சகலகலா வல்லவன்" மற்றும் "முந்தானை முடிச்சு" பாடல்கள்.  அதாவது மக்கள் கவனத்தை கவரவேண்டும் என்பதற்காக பாடல்களில் ஆங்காங்கே "முக்கல் / முனகல் / shrieking (to convey reaching ecstasy)” போன்றவற்றை சேர்க்கத்தொடங்கிவிட்டார்கள்.  But, Mannar being Mannar refrained from that.  He always maintained his dignity.    இவையெல்லாம் இல்லாமலேயே பாடலை மிகவும் கவர்ச்சியாக / seductive ஆக எப்படி வடிமைக்கமுடியும் என்பது எனக்கு தெரியும் என்று நிரூபித்து காண்பித்தும் இருக்கார்.  அதை 70 -துகளின் கடைசியிலே செய்து காட்டிவிட்டார் - "சித்திர செவ்வானம்" படத்தில் இடம் பெற்ற "எங்கே உன்னை கண்டால் கூட" என்ற பாடல் வாயிலாக.  இருவர் கூடும் போது ஏற்படும் "ecstasy"-யை வெளிப்படுத்த "shrieking" தேவையில்லை அதை வேறு விதத்தில் அதுவும் இசையின் ஒரு பாணி வழியாக வெளிப்படுத்த முடியும் என்பதை இந்த பாடலில் செய்து காட்டியுள்ளார்.  அதற்க்கு அவருக்கு உதவியிருப்பது ஓர் குறிப்பிட்ட மேற்கத்திய பாணி "crooning".  அதை தான் முதல் para -வில் சொல்லியுள்ளேன்.  அந்த பாணியை பயன்படுத்தி சரணங்களை அவர் முடித்திருக்கும் விதத்தை பாருங்கள் - இசை வாயிலாக "ecstasy"-யை வெளிப்படுத்தியிருப்பது கண்கூடாக தெரிகிறது அல்லவா  (நாகரீகம் தவறாமல் அதை எப்படி படமாக்கியுள்ளார்கள் என்பதையும் பாருங்கள்).  இதைவிட நாகரீகமாக இந்த "உணர்வை" பாடலில் வெளிக்கொணர முடியுமா?  மன்னருக்கு நிகர் மன்னரே என்பதை நிரூபிக்கிறதல்லவா இந்த பாடலும்? 

தமிழில் அறிமுகமான சூட்டோடு வாணி ஜெயராம் மலையாளத்திலும் அறிமுகமாகிவிட்டார்.  அறிமுகமாகி ஓரிரு வருடங்களிலேயே மலையாளத்தில் சில seductive பாடல்கள் அவர் பாடியுள்ளார்.  தமிழில் 70 -துகளின் கடைசி வரை ஓர் சில காபரே  பாடல்கள் (80 -துகளில் அத்தகைய நிறைய பாடல்கள் பாடியுள்ளார்) அவர் பாடியுள்ளார் (குறிப்பாக விஜயபாஸ்கர் இசையில்) என்றாலும் அவற்றில் seduction என்பது பெயரளவில் தான் இருந்தது.  விரசம் / ஆபாசம் சற்றும் கலக்காமல் பாடல் முழுவதும் மிகவும் decent ஆக seduction-னை சுமந்த  பாடல் இதுவே என்று சொல்லலாம்.  In fact, I would say that this song is Vani Jayaram’s sensuous best. 

Please bear with the poor audio quality of the video. 

Before entering to the song, a brief description about the story.  இது ஒரு பக்தி முலாம் பூசப்பட்ட படம் - அதாவது "திருவிளையாடல்", "திருமால்ப்பெருமை", "திருவருட்ச்செல்வர்", "கந்தன் கருணை" போன்ற முழுக்க முழுக்க புராணத்தை அடிப்படையாக கொண்ட பக்தி படம் அல்ல, மறித்து சமூக படத்தில் "பக்தி" புகுத்தி எடுக்கப்பட்ட படம்.  குடும்ப கதைகள், ஆக்ஷன் படங்கள் இயக்கி வந்த "கே.சங்கர்" தடம் மாறி "பக்தி முலாம்" பூசப்பட்ட படங்கள் இயக்க துவங்கிய பிறகு வந்த படம். 

படத்தின் கதை மூன்று பெண்களை சுற்றி நகர்கிறது - சரிதா, சுலக்ஷணா மற்றும் விஜி.  இவர்கள் மூவரும் மூன்றுவிதமான கொள்கைகளை கொண்டவர்கள் - சரிதா, ஆண்டவனுக்கு நாம் செய்யும் ஆறுகால பூஜை தான் நமக்கு செல்வத்தையும் சிறப்பையும் கொடுக்கும், ஆச்சாரமான பக்தி தான் நம்ம வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கும் என்ற கொள்கையை கொண்டவர் - சதா பூஜை புனஸ்காரம், நாளொன்றுக்கு ஒரு விரதம் என்று பக்தியிலேயே மூழ்கிக்கிடப்பவர்.  சுலக்ஷணா, ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது இறைவனை மனசார நினைச்சாலே போதும் நம்ம வாழ்க்கை பலமடையும் என்ற கொள்கையை கொண்டவர்.  விஜியோ, ஓர் யுக்திவாதி - நம்ம வாழ்க்கை நம் கையில் தான் இருக்கு, நம்ம முயற்சி தான் நமக்கு வெற்றியை கொடுக்கும் என்ற கொள்கையை கொண்டவர்.  இவர்கள் ஓர் தைப்பூச திருநாளில் ஓர் மேடையில் சந்திக்கின்றனர், அவரவர் கொள்கை தான் பெரிசு என்று வாதாடுகின்றனர்.  கடைசியில் ஓர் தீருமானத்திற்க்கு வருகின்றனர் - அடுத்த வருடம் இதே தைப்பூச திருநாளில் மூவரும் சிந்திப்போம், அப்போது யார் வாழக்கை சிறப்பாக இருக்குதோ அவர்கள் வெற்றி பெற்றதாக எடுத்துக்கொண்டு வெற்றி பெற்றவரின் கொள்கையை பின்பற்றுவோம் என்று.  அதற்க்கு பிறகு இந்த மூவரின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்வுகள் தான் மீதி கதை. 

இப்போது நேராக இந்த பாடல் நிகழும் பின்னணிக்கு செல்வோம்.  சரிதா பெரும் செல்வந்தர். அவரது கணவர் விஜயகுமார்.  சரிதாவிற்கு சொந்தமான கம்பெனியை நிர்வாகம் செய்ப்பவர் அவர் தான்.  சரிதாவோ மேலே கூறியது போல் சதா பூஜை, விரதம் என்று காலத்தை கழிப்பவர். அவர் ஊராருக்கு அருள்வாக்கு வழங்குபவரும் கூட. கணவனை கவனிக்க அவருக்கும் சிறிதளவும் நேரம் இல்லை. இதனால் விஜயகுமார் வெறுப்படைகிறார். ஓர் நாள் இருவரும் இதை சொல்லி  வழக்கிடும் போது விஜயகுமார் ஓர் உண்மையை சொல்கிறார் - அதாவது சரிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்து அது காணாமல் போய்விடுகிறது. ஆனால் சரிதாவிடம் குழந்தை இறந்து விட்டது என்று அப்போது பொய் சொல்லியிருக்கிறார் விஜயகுமார்.  இதை அறிந்ததும் சரிதா தன் குழந்தையை தேடி அலைய ஆரம்பிக்கிறார்.  இதனால் மேலும் கடுப்பாகும் விஜயகுமார், மலேசியாவிற்கு போய் அங்கு ஓர் பெண்ணுடன் தொடர்ப்பு வைத்துக்கொள்கிறார்.  சரிதாவை விவாகரத்து செய்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.  அப்போது வரும் பாடல் தான் இந்த பாடல்.

பாடல் நெடுக Bass Guitar, Lead Guitar, Congos / Thumba இவற்றின் விளையாட்டு தான்.  ஆங்காங்கே பியானோவும் விளையாடியுள்ளது.  But, as I mentioned above, since the audio is not upto the mark, சில வாத்தியக்கருவிகளின் பெயர்கள் ஓர் அனுமானத்தின் தான் சொல்லியுள்ளேன்.

பாடல் ஆரம்பத்தில் ஒரு இருபது வினாடிகள் வெளிப்புறத்திலும், பிறகு பல்லவி முடியும் வரை விசாலமான ஓர் ஹோட்டலிலும் அதற்க்கு பிறகு பாடல் முடியும் வரை வெளிப்புறத்திலும் படமாக்கப்பட்டுள்ளது.  பாடல் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது என்பதால் மேற்கத்திய இசையை திறம்பட கையாண்டுள்ளார் மன்னர்.  The song begins with a prelude which is mainly played on Bass Guitar, Lead Guitar, Drums in a peculiar style and violins.  This piece sets the mood of the song, which has been ably retained throughout the song.  It doesn’t deviate even for an inch.  மறித்து முன்னேற முன்னேற மேலும்  சூடு பிடிக்கிறது. Prelude ends with a “Tyung” sound, which is probably created in lead guitar and with “shhhhhhhh….” sound.  Then the pallavi begins in a highly sensual manner.  VJ starts the pallavi in husky voice, with super sensuous modulation on certain words.  When the pallavi begins Mannar introduces Congos (it could be Thumba also).  Listen carefully to the complicated rhythm pattern played on it.  He has played the Congos (Thumba) very subtly during the singing portion and places the roll on it when each second line ends. As I said above, it’s purely Bass Guitar and Lead Guitar which rules the song.  She sings four lines of the pallavi and repeats it again.  She then sings the next four lines and then repeats the first four lines of the pallavi and finishes the pallavi. 

பாடலில் இவ்வளவு "sensuousness" வழிந்தோடுவதன் காரணம் - பக்திப்பிழம்பான நாட்டுக்கட்டை சரிதாவிடமிருந்து விஜயகுமாருக்கு போதிய சுகம் கிடைப்பதில்லை.  அதனால் அந்த சுகத்தை மற்றொரு  பெண்ணிடம் நாடுகிறான்.  அதை நாடும் பெண் எப்படி இருக்கவேண்டும்?  She must be highly passionate and sensuous - அப்படி இருந்தால் தானே ஓர் ஆடவன் மனதை (குறிப்பாக அதற்க்கென்றே ஏங்கிக்கொண்டிருக்கும் ஒருவனின்) கவர முடியும்?  அதனால் தான் பாடலில் இவ்வளவு "போதை" வழிந்தோடுகிறது.

Now begins the first BGM – Congos (Thumba) beat starts in peculiar style.  After half bar lead guitar and violin rolls joins.  After one bar Piano is played for half bar and the BGM ends there.  To enable to pick up the charanam, quick notes are played on Piano.  Inclusion of Piano for such a song is an innovation. VJ begins this charanam in high pitch.  Charanams are structured very stylishly and peculiarly.  She sings the first four lines of the charanam and ends it by slightly stretching the last alphabet of the last word and then quickly jumps to the next four lines in the same fashion.  But the main attraction / magic / beauty of the song lies at the finishing of the charanam – here he has adopted a totally different style – as I mentioned above he has infused the “Opera” kind of singing only for that portion.  She finishes the charanam in “falsetto” – viz., high-pitched / shrill / piercing tone.  But the beauty is its not at all jarring.  Also, listen carefully to the extra sangathis on some lines.  VJ’s full skill is exploited in this song.  The whole portion is heavily backed up with Bass Guitar and counter melody in violin.  Rhythm is played fast which is in contrast to the singing.  This contrast in singing and rhythm pattern, we can assume like this : she is not at all in a hurry in her this act, but he is in a hurry in his act. Once she finishes the charanam, a small pause is placed – you will know the reason when you watch the video.  Then she sings the first four lines of the pallavi and finishes the charanam. Please listen to the cute free style lead guitar piece after the second line.   

Time for second BGM – it begins with a romantic piece in Lead Guitar for half bar.  Saxophone takes over from that.  Sax is played so sensuously for one bar mixed with Violin runs.  This BGM ends with a quick run on Congos and the second charanam begins.  This charanam is shorter than the first charanam.  This charanam has only four lines and the last line ends exactly same like the ending of the first charanam, viz., in falsetto high-pitch.  Then the pallavi is sung in fully.  The rhythm is played here fast.  This portion MSV has made some more improvisation.  After each line lead guitar is played in free style. 

I have mentioned “free style” playing of guitar - இதைக்குறித்து எனது குருவிடமிருந்து நான் அறிந்த ஓர் விஷயத்தை இங்கே குறிப்பிடுகிறேன், which according to him has been the practice in Bollywood.  “Free style” ஆக வாசிக்கப்படும் pieces-ஸின் notes பெரும்பாலும் இசை அமைப்பாளர்களால் வாசிக்கப்படும் கலைஞர்களுக்கு வழங்கப்படுவதில்லை.  மறித்து, இந்த இந்த பகுதிகளில் நீங்கள் அந்த வரிகளுக்கு follow on போல் வாசிக்க வேண்டும் என்று மட்டும் கூறுவார்கள்.  அதற்க்கு ஏற்றாற்போல் Lead Guitar வாசிப்பவர்கள் தங்கள் கற்பனையை தீட்டி வாசிப்பார்கள்.  அது இசை அமைப்பாளர்களுக்கு பிடித்தால் அதை வைத்துக்கொள்வார்கள் இல்லையேல் அவர் மனதில் என்ன கற்பனை செய்துவைத்திருப்பார்களோ அதற்க்கு ஏற்றாற்போல் மாற்றி வாசிக்க சொல்லி கேட்ப்பார்கள்.  பிறகு அவர்கள் தேவையை பூர்த்தி செய்யும் படி அமையும் pieces-சை ஓகே செய்வார்கள்.  இப்படி நோட்ஸ் இல்லாமல் வாசிக்கப்படும் பகுதிக்கு தனி ரேட் உண்டு.  அதாவது அவர்களுக்கு பேசிய தொகையை விட கூடுதல்.  இது பாலிவுடை பொறுத்த வரை.  தமிழகத்தில் எப்படி என்று தெரியவில்லை.  If those notes too had been given by Mannar, அவரை மஹான் என்று சொல்லாமல் வேறென்ன  சொல்ல.

இவ்வளவு புதுமைகள் கொண்ட, மிகவும் வித்தியாசமான முறையில் கையாளப்பட்ட, வாணி ஜெயராமிற்குள் புதருண்டு கிடந்த அபார திறமையை வெளிக்கொணர்ந்த இந்த பாடல் ஏனோ யாரும் கண்டுகொள்ளாமலேயே புதைந்து விட்டது. 

இனிமேலாவது இந்த பாடலுக்கு உகந்த மரியாதை கிடைக்குமா?

மீண்டும் ஓர் அரிய பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=IQAWqeojsU0

 


Quote
Share: