Notifications
Clear all

1980 - Megathukkum Dhaagamundu - Aadalaama Annanadai Pinni Vara


K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

பாடல் : ஆடலாமா அன்னநடை பின்னி வர

படம் : மேகத்துக்கும் தாகமுண்டு

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1980

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில், எஸ்.ஜெகதீசன் இயக்கத்தில் சரத்பாபு, ரஜினி சர்மா, சுருளிராஜன், எஸ்,என்.பார்வதி, வி.கே.ராமசாமி, வி.கோபாலகிருஷ்ணன், ஜி.ஸ்ரீனிவாசன், மற்றும் பலர் நடிப்பில் வெளி வந்த படமான "மேகத்துக்கும் தாகமுண்டு" என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற "ஆடலாமா அன்னநடை பின்னி வர" என்ற பாடல்.

முதலில் கதை என்னவென்பதை பார்ப்போமே :

பெரிய எஸ்டேட் முதலாளி வி.கே.ராமசாமி.  அவரது ஒரே மகள் ரஜினி சர்மா.  இளமை துடிப்புடன் வலம்வருபவள்.  எஸ்டேட் வேலைகளையெல்லாம் மேற்பார்வை செய்பவரும் அவரே.  அவளது ஆருயிர் தோழி ஒருவளை முன்னாள் காதலன் ஒருவன் (அவன் ஒரு பொம்பளை பொறுக்கி என தெரியவந்ததும் அவனிடமிருந்து விலகி விடுகிறாள்) பிளாக் மெயில் செய்வதை அறிந்து தோழிகளை சேர்த்துக்கொண்டு அவனை அவமானப்படுத்தி அனுப்புகிறாள். 

மற்றுமொரு எஸ்டேட் முதலாளியான வி.கோபாலகிருஷ்ணனின் ஒரே மகன் சரத்பாபு.  அவர் ஆடல், பாடல் மற்றும் ஓவியம் தீட்டுவதில் வல்லுநர்.  தந்தையின் அலுவலகத்தையும் கவனித்துக்கொள்கிறார்.  சரத்பாபுவும் ரஜினி சர்மாவும் காதலிக்கின்றனர்.  பிறகு பெற்றோரின் சம்மத்துடன் திருமணவும் செய்துகொள்கின்றனர்.  வாழ்க்கையை நன்கே அனுபவித்து நாட்கள் நகர்கின்றன.  அப்போது ஓர் நாள் சரத்பாபுவின் ஆருயிர் நண்பன் அவரை பார்க்க வருகிறான்.  அவன் வேறுயாருமல்ல, முன்னொரு நாள் ரஜினி சர்மா அவமானப்படுத்தி அனுப்பிய அந்த கயவன் தான்.  எதிர்பாராவிதமாக அவனை அங்கு கண்டதும் ரஜினி சர்மா அஞ்சுகிறாள்.  அவனோ, பேசுகையில், உன்னை அனுபவிக்காமல் விடமாட்டேன் என்று பொடிவைத்து பேசுகிறான்.  விடைபெற்றுக்கொள்ளும் போது புதிதாக திருமணமான உங்களுக்கு ஒரு விருந்து தர எண்ணுகிறேன், நாளை  இருவரும்  கட்டாயம்  வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு போகிறான். 

மறுநாள் அலுவலகத்திலிருந்து சீக்கிரம் கிளம்பிவருகிறார் சரத்பாபு.  கிளம்புவதற்கு முன் மனைவியிடம் ரெடியாக இரு, நாம் இருவரும் சேர்ந்து நண்பனின் பார்ட்டிக்கு போயாகவேண்டும்.  அங்கு இன்று பிரபல நாட்டியக்காரி ஒருவளில் கலக்கலான நடனம் வேறு உள்ளதாம்,  பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்று phone செய்து சொல்கிறார். சர்மாவுக்கு அங்கு செல்வதில் சற்றும் விருப்பமில்லை.  கணவனிடம் எதை சொல்லி அங்கு போவதை தவிர்ப்பது என்று கலங்குகிறாள்.  அதனால் தயாராவாமல் அப்படியே சிந்தனையில் அமர்ந்திருக்கிறார்.  அந்நேரம் சரத்பாபு வந்து ஏன் இன்னும் ரெடி ஆகவில்லை நேரமாகிவிட்டது சீக்கிரம் கிளம்பு என்று வற்புறுத்த, அவரோ ரூமுக்குள்ளே புகுந்து நடன மங்கை போல் வேடமணிந்து வந்து குத்தாட்டம் போட ஆரம்பிக்கிறார் - அதாவது இரண்டு எண்ணங்கள் (1) அந்த கயவனிடம் போவதை தடுத்தாக வேண்டும் (2) அந்த ஆட்டத்தை ஏன் பார்க்கவேண்டும், அவளைவிட பிரமாதமாக நான் ஆடுகிறேன் பாருங்கள்.  அப்போது வரும் பாடல் தான்  இந்த பாடல்.

(மீதி கதை : இந்த பாடல் முடியும் போது சரத்பாபு மூர்ச்சையாகி விழுந்துவிடுகிறார்.  அவருக்கு ஏற்பட்டது massive heart attack . மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு சிகித்சை அளித்தும் பயனில்லாமல் போகிறது.  மருத்துவர்கள் அவர் பிழைக்க வாய்ப்பில்லை என்று கை மலர்த்திவிடுகிறார்கள். அப்போது இவர்களுக்கு பரிச்சயமான குருஜி என அழைக்கப்படும் ஓர் இயற்க்கை மருத்துவர் அவர் பிழைக்க ஒரு வழியிருக்கிறது என்று சொல்கிறார்.  அது என்னவென்றால் அவரை சந்நியாசம் மேற்கொள்ள ரஜினி சர்மா தாரைவார்த்துக்கொடுத்தால் அவர் பிழைத்துவிடுவார் என்கிறார்.  முதலில் எல்லோரும் மறுத்தாலும் அவர் உயிருடன் இருந்தால் அதுவே போதும் என நினைத்து ரஜினி சர்மா சரத்பாபுவை சந்நியாசியாக தாரைவார்த்துக்கொடுக்கிறார்.  சரத்பாபு உயிருடன் இருக்கிறார் என்றாலும் அவர்  சுயநினைவை இழந்த நிலையில் உள்ளார் அப்போது - அதாவது அவர் யார் என்பதே தெரியாத நிலையில். 

ரஜினி சர்மாவை  சரத்பாபுவின் பிரிவு வாட்டி எடுக்குது.  அவர் மானசீகமாக சரத்பாபுவுடன் வாழ்க்கை நடத்த போதை பொருளை நாடுகிறார் (this she explains late as to why she started using narcotics).  ஆசிரமத்தில் வாழும் சரத்பாபு திடீரென ஓர் நாள் மூர்ச்சையாகி விழுகிறார்.  அப்போது ஆசிரம வாசிகள் ரஜினி சர்மா குடும்பத்திற்கு அவர் இறந்துவிட்டார் என்று தவறாக செய்தி அனுப்புகிறார்கள்.  ஆனால் குருஜி வந்து அவரை குணப்படுத்திறார்.  இந்த செய்தியை குருஜி ரஜினி சர்மாவுக்கு தெரிவிக்கலாம் என்று வரும் போது ரஜினி சர்மா போதைப்பொருளுக்கு அடிமையானதை கண்டு சொல்லாமலேயே போய்விடுகிறார். 

ரஜினி சர்மாவின் நிலை கண்டு வருந்தி அவரது தந்தை அவருக்கு மறுமணம் செய்துவைக்க தீருமானிக்கிறார்.  அதற்க்கு ரஜினி சர்மா ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.  அப்போது ஒரு நாள் அவர் தற்செயலாக சரத்பாபு போல் தோற்றமளிக்கும் ஓர் துறவியை சந்திக்கிறார். அவர் தன் கணவர் தான் என்று அவரிடம் சென்று பேசுகையில் அவர் இவரை அடையாளம் கண்டுகொள்ளாமல் போகிறார்.  அப்போது அங்கு வரும் குருஜி அவளை அழைத்து சொல்கிறார் - அது உன் கணவன் தான் ஆனால் அவனுக்கு இப்போது பழைய நினைவுகள் ஏதும் இல்லை, அவனை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடு அது தான் இருவருக்கும் நல்லது என்று.  அப்போது அவள் கேட்க்கிறாள், அவர் உயிருடன் உள்ளார் என்பதை ஏன் என்னிடமிருந்து மறைத்தீர்கள் என்று. அதற்க்கு அவர் சொல்கிறார் நான் சொல்லத்தான் வந்தேன் ஆனால் அப்போது நீ இருந்த கோலத்தைக்கண்டு சொல்லாமல் போய்விட்டேன் என்று.  மேலும், அவன் உயிருடன் இருக்கிறான் என்று தெரிந்தால் நீ அவனை சந்திக்க வருவாய், அவனிடம் உன் நிலைமை பற்றி கூறுவாய்.  அவனது இருதயம் மிகவும் பலவீனமாக உள்ளது.  எந்த ஒரு இன்ப துன்ப அதிர்ச்சியையும் அவனால் தாங்கிக்க முடியாது.  அப்படி ஏதாவது நேரிட்டால் அவனது உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று. 

அவள் இந்த விளக்கங்களை எல்லாம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.  அதனால் அவனை சந்திக்க ஓடுகிறாள்.  அவனிடம் தான் யாரென்று சொல்கிறாள்.  அவர்கள் இன்பமாக இருந்த தருணங்களை எடுத்து சொல்கிறாள்.  அவனுக்கு நினைவு மெல்ல மெல்ல திரும்புகிறது.  அப்போது இதே  பாடலை அவன் பாட ஆரம்பிக்கிறான் - அதாவது "ஆடலாமா அன்னநடை பின்னி வர" என்ற பாடலை.  அவளும் அவனோடு சேர்ந்து பாடுகிறாள்.  ஆனந்தத்தின் எல்லைக்கு இருவரும் செல்கின்றனர் - அப்போது அவனுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு அவன் இறந்து விடுகிறான். 

இது என்னப்பா கதை என்று என்னிடம் கேட்க்காதீர்கள் – The title says the movie is based on a real incidence.  இந்த கதைக்கு மன்னர் என்ன உழைத்திருக்கிறார் என்று பார்ப்போம்.)

As I said above, இந்த பாடல் அவர்கள் நண்பனின் பார்ட்டிக்கு அழைப்பு வந்த நாளில் அவர்கள் அங்கு போகாமல்  வீட்டிலேயே ஆடிப்பாடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது - ஆனால் imagination-னில் prelude  முடிந்து பல்லவியின் இரண்டு வரிகள் பாடப்பட்டு அதற்க்கு வயலினில் interlude வரும் பொழுதே outdoor -றுக்கு தாவிவிடுகிறார்கள்.

அவனது இதயம் மிகவும் பலவீனமானது எந்தவொரு இன்ப துன்ப அதிர்ச்சியையும் அவனால் தாங்கிக்கொள்ளமுடியாது, பாடலின் கடைசியில் அவன் மூர்ச்சையாகப்போகிறான் என்பதை மன்னர் எப்படி நமக்கு இசையால்  படிப்படியாக உணர்த்துகிறார் என்று பார்ப்போமா.

The seduction begins from the prelude’s humming.  His heart beat starts increasing with the runs in Violins.  The increasing of his heart beat / ecstasy is conveyed through the change in Tabla beats in first BGM as well as in the first charanam.  காதல் / ecstasy / இதயத்துடிப்பு மேலும் வளருவதை இரண்டாவது BGM -மில் வரும் Santoor / Flute / Violin runs / தபலா rolls சுட்டிக்காட்டுகிறது.  காதல் போதையில் அவனது தள்ளாட்டத்தை தத்ரூபமாக தபலா நடை சுட்டிக்காட்டுகிறது.  The fast beat in Tabla from the second half of the second charanam shows that he has triggered further.  The third BGM – which is a combined work on Sitar + Harp + Violins + Tabla indicates that he is now fully triggered up.  And this is endorsed when he starts the Aalaapanai.  The third charanam which is sung by him in high pitch and slightly faster and the orchestration where Pakhawaj too joins alongwith Tabla to show how much he is thrilled and excited.  The fourth BGM – which has the combined work of Sitar + Mandolin (I believe) + Santoor (I believe) + Flute + Violins and Tabla further establishes his excitement.  The fourth charanam – which is even faster – here MSV brings in Chendai – which indicates that he is entering the danger zone.  Her closeness increases triggers him more and he reaches to the peak of ecstasy whereby he bursts into laugh and finally collapses. 

சரி, இப்போது பாடலை பார்ப்போமா –

The song has four Charanams and four BGMs – believe me all the four charanams and BGMs are set in different tunes!!!!!

MSV increases the tempo step by step – alongwith the Hero we, the audience / listeners’ anxiety / ecstasy / heart-beat too increases step by step and reaches its peak at the end.

The song begins with aalaapanai by Vani Jayaram, which has two interludes in Violins.  Then begins the pallavi. VJ sings the two lines of the pallavi and then an interlude by way of Violins is infused - இந்த interlude ஆச்சர்யம் / சஸ்பென்ஸ் இதை சுட்டிக்காட்டுகிறது.  தபலாவின் அட்டகாசம் பல்லவியிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது.  VJ then repeats the same lines and sings the next two lines and repeats that lines too.  Pallavi ends there.  Pallavi is embellished by Tambourine.

First BGM – which is very short.  Mandolin (if I am not wrong) is played first and a small roll on Pakhawaj.  And again small piece in Mandolin. Pakhawaj is used as percussion for this BGM.  First Charanam is sung by VJ alone. She sings two two lines and repeats. Notice the change in the beats of Tabla and the Roll.  Then she repeats the whole pallavi and first charanam is finished.

Second BGM – this one is lengthy – A lengthy Santoor piece played first followed by  a lengthy piece in Flute – it can be divided into two parts. Flute pieces have interludes in Violin runs.  For the Santoor portion Pakhawaj is used as percussion. For the first part of Flute portion Tabla has been used and for the second part Pakhawaj has been used. Please note the change in rhythm pattern in the whole piece.  It has been embellished by Tambourine.  Second charanam -  This charanam too is sung by VJ alone.  She sings the four lines first and then repeats the same.  She then sings the next four lines.  This charanam too is finished by singing the whole pallavi by VJ.  Please notice the change in playing style of Tabla and also VJ’s singing.

Third BGM - முதலில் சந்தூர் ஒலிக்கிறது. தாளத்துக்கு pakhawaj . அதை தழுவி வயலின் run.  அதை தழுவி ஹார்ப் ஒலிக்கிறது. தொடர்ந்து pakhawaj ஒலித்துக்கொண்டிருக்க பியானோ / synthesizer -றில் chords change ஆகிக்கொண்டேயிருக்கிறது.  ஆங்காங்கே வயலின் runs மற்றும் subtle ஆக மாண்டலின் / சந்தூர்.  This BGM ends with a run on Violin.  Then begins the third charanam.  Now the hero is triggered and couldn’t control himself, hence starts singing in high pitch (unaware of the danger in store for him).  This charanam belongs to SPB.  He begins with a lengthy aalaapanai and finishes it in Hindustani style.  After that a display in Pakhawaj combined with Tambourine (indicating the Kolusu in heroine’s legs).  This charanam can be divided in two parts.  முதல் பகுதியின் 8 வரிகளை இரண்டு இரண்டு வரிகளாக பாடுகிறார்  - இங்கு பாடலும் மெட்டும் வேறு விதமாக உள்ளது.  பாடும் போது அதற்க்கு தாளமாக தபாலாவும், ஒவ்வொரு இரண்டு வரிக்கு பிறகு வரும் interludes -சுக்கு Pakhawaj -ஜூம் பயன்படுத்தப்பட்டுள்ளது.  மெருகூட்ட Tambourine.  அதன் பிறகு அடுத்த இரண்டு  வரிகளை பாடி அதை மீண்டும் பாடுகிறார்.  பிறகு அடுத்த இரண்டு வரிகளை பாடுகிறார் – Tabla has been used for this portion.  Please note SPB’s singing as well as the change in Tabla “Nadai”.  SPB finishes this charanam by singing the whole pallavi in his inimitable style – which suits Sarathbabu perfectly.

Fourth BGM – which again is in two parts – first by Santoor and second by Flute.  Violin too plays alongwith Flute.  Pakhawaj வெளுத்து வாங்குது இங்கும்.  நான்காவது சரணம் - இப்போது நாயகன் மெல்ல மெல்ல danger zone -ணுக்குள் enter ஆகிறான்.  அதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த சரணத்தின் pitch மெல்ல மெல்ல increase ஆகிறது. மேலும் interlude -டில் "செண்டை" மேளத்தை கொண்டுவந்துவிடுகிறார் மன்னர்.  This charanam is sung by both the singers.  The tune again changes in this charanam.  SPB begins this charanam.  SPB sings the first three lines – which has been sung in cut / comma style.  Then an interlude in Chendai.  VJ sings the next three lines.  Again an interlude in Chendai.  இது வரை மெட்டு ஒரு பாணியில் உள்ளது.  அடுத்த வரிகளில் மெட்டு மாறுகிறது.  SPB sings the next two lines.  Then an interlude in Chendai.  Then VJ sings the next two lines.  Again an interlude in Chendai.  Then SPB sings the next two lines.  Again an interlude in Chendai.  Then SPB repeats the same lines.  Now the hero has reached height of excitement / ecstasy.  (Uptil this for singing portion “Tabla” has been used as percussion).  Following that Chendai and Pakhawaj are jointly played with interlude in Violins.  This portion is played very fast.  Can hear Tambourine sounds too.  Alongwith this orchestration SPB sings aalaapanai.  இப்போது ஹீரோ அதிர்ச்சியின் / இன்பத்தின் உச்சியை எட்டிவிட்டார் – கூடவே “danger zone” -னையும்.  ஆலாபனைக்கு பிறகு சிரிக்க ஆரபிக்கிறார்.    சிரிக்க ஆரம்பிக்கும் போது "செண்டை" மறைந்து "Pakhawaj" மட்டும் படு வேகமாக வாசிக்கப்பட்டுள்ளது.    பிறகு "சிம்பல்"-லின் ஒலி.  அதை தொடர்ந்து "எக்கோ" முறையில் ஓர்சேஸ்ட்ரா ஒலிக்கிறது.  இறுதியாக Swarmandal என நினைக்கிறேன் அதில் ஓர் chord ஒலிக்க இசை fade out ஆகிறது.

இந்த பாடல் "பிருந்தாவனி சாரங்க" ராகத்தில் அமைந்துள்ளது என்று ராகா வல்லுநர்கள் சொல்கிறார்கள்..

படு அமர்க்களமான பாடல்.  அற்புதமான இசை.  SPB மற்றும் VJ ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பாடியுள்ளார்கள்.  ஆனால், பாடல் ஏனோ அந்த காலத்தில் அவ்வளவு பிரபலமாகவில்லை - இந்த படத்தின் மற்ற இரண்டு பாடல்கள் பிரபலமடைந்த அளவு : "மரகத மேகம் சிந்தும்" மற்றும் "யாரது மன்மதன்".

Awaiting your valuable feedback.

மீண்டுமொரு அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=okZSg8wlwRw


Quote
Share: