Notifications
Clear all

1980 - Avan Aval Athu - Aathoram Kodi Veedu


K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

பாடல் : ஆத்தோரம் கொடிவீடு

படம் : அவன் அவள் அது

பாடியவர்கள் : வாணி ஜெயராம், ஸ்டேட் பேங்க் எஸ்.கிருஷ்ணன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1980

அனைவருக்கும் வணக்கம்.  இது இந்த குழுமத்தில் நான் பதிவிடும் முதல் கட்டுரை - அதாவது தனி topic ஆக (இதற்க்கு முன் "Parthivi" அவர்கள் பதிவிட்ட "காதல் ராஜ்ஜியம் எனது" பாடல் topic -கில் எனது பதிலை பதிவு செய்துள்ளேன்).

கவிஞர் கண்ணதாசன் + மன்னர் காம்பினேஷனில் பல கண்ணன் பாடல்கள் வனித்துள்ளன, தனி ஆல்பம் உட்பட, எல்லாமே அற்புதமான படைப்புகள்.  ஆனால் கண்ணன் ஆடிய "ராஸலீலா"வை அடிப்படையாக கொண்ட பாடல்கள் அவ்வளவாக இல்லை என்றே சொல்லவேண்டும்.  இன்று அலசுவதற்காக நான் எடுத்துக்கொண்ட பாடல் "ராஸலீலா"வை அடிப்படையாக கொண்ட ஓர் அற்புதமான மற்றும் அரிய பாடல்.  அரிய என்று சொன்னதற்கு காரணம் - இந்த பாடல் அவ்வளவாக பிரபலம் அடையவில்லை, மேலும் MSV ரசிகர்களில் பெரும்பாலோனோர் கூட கேட்டிராத அல்லது கேட்டு மறந்த பாடல்.

இந்த பாடல் என்னை யோசிக்க வைத்த அளவுக்கு அவரது மற்ற பாடல்கள் யோசிக்க வைத்ததா என்றால் இல்லை என்று சொல்வேன்.  அவ்வளவு பாடாய் படுத்திவிட்டது இந்த பாடல்.  I could find out only half of the justification to the song after hearing and watching it.  அதற்குண்டான முக்கிய காரணம் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள சமஸ்க்ருத ஸ்லோகங்கள்.  அதற்குண்டான காரணங்களும், அர்த்தவும் புரியவேயில்லை.  சமஸ்க்ருதம் கற்றுக்கொள்ளவில்லையே என்ற வருத்தம் அப்போது தான் வந்தது.  தேடி தேடி பார்த்தும் எங்கும் அதற்க்கு விளக்கம் கிடைக்கவில்லை.  கடைசியில் ஒரு வருடத்திற்கு முன்பு தான்  ஒருவழியாக ஒரு விளக்கம் கிடைத்தது.  அது இந்த பாடலுக்கான விளக்கம் என்று தவறாக நினைக்க வேண்டாம்.  அந்த சமஸ்க்ருத ஸ்லோகத்துக்கான ஒரு justification - ஆன்மீக முறையில்.  அந்த விளக்கம் இந்த பாடலுடன் இணைக்க எனக்கு போதுமானதாக பட்டது.

கிட்டத்தட்ட ஐந்து - ஆறு வருடங்களுக்கு முன்பு வரை இந்த படத்தில் இப்படி ஒரு பாடல் இருப்பதே எனக்கு தெரியாது, பாடலை அது வரை கேட்டதுமில்லை.  "இல்லம் சங்கீதம்" மற்றும் "மார்கழி பூக்களே" மட்டும் தான் எனக்கு பரிச்சயமான பாடல்கள் இந்த படத்தின்.  ஐந்தாறு வருஷங்களுக்கு முன் இந்த படத்தின் வீடியோ கிடைக்கப்பெற்ற போது தான் முதன் முதலாக இந்த பாட்டை கேட்க நேர்ந்தது.  கேட்ட மாத்திரையிலேயே மனதை அள்ளிவிட்டது பாடல்.  ஆனால் என்ன பரிதாபம் பாருங்கள், அன்று வரை நான் இந்த பாடலை வானொலியிலும் கேட்டதில்லை, தொலைக்காட்சியிலும் பார்த்ததில்லை.  வெற்றி பெறவேண்டிய அத்தனை அம்சங்கள் இருந்தும் இந்த பாடல் ஏன் கேட்ப்பாரற்று போனது என்பது தான் விளங்கவில்லை.  அதுவும் இந்த பாடல் படத்துக்கு மிக்க பக்கபலமாக இருந்திருக்க வேண்டிய பாடல், ஏனென்றால் படத்தின் மொத்த கதையையும் இந்த பாடலினூடே சொல்லப்பட்டுள்ளது.  Is it because no one understood the meaning of the song and just treated it as just a “filler”?  ஏனென்றால் படத்தில் இந்த பாடல் ஒரு இடைச்சொருகலாக வருவது போல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது - அதாவது கதாநாயகிக்கு இரண்டாம் நாயகியை அறிமுகப்படுத்துவது போல் வருகின்ற பாடல்.  உண்மை அதுவல்ல.  The director has handled the scene / song very cleverly by indirectly telling the story of the movie, though at first glance it may seem just like an item song. 

பாடலுக்குள் புகுவதற்கு முன் இந்த படத்தின் கதையை சற்று பார்ப்போமா, ஏனென்றால் இந்த பாடலினுள்ளே படத்தின் கதை அடங்கியுள்ளது என்பதால். பாடலை முழுவதுமாக புரிந்து கொள்ளவும், அனுபவித்து ரசிக்கவும் படத்தின் கதையை தெரிந்திருப்பது அவசியம் - "மன்னரின்" பெரும்பாலான பாடல்களை அனுபவித்து ரசிக்கவேண்டும் என்றால் படத்தின் கதை உட்பட பல விஷயங்களை தெரிந்திருக்கவேண்டியது அவசியம்.  "சிவசங்கரி" அவர்களின் குறுநாவலான "ஒரு சிங்கம் முயலாகிறது" என்ற கதையின் திரை வடிவம் தான் "அவன் அவள் அது".  மிகவும் அந்நியோன்யமான தம்பதிகள் சிவகுமார்-லட்சுமி.  மணமாகி சில வருடங்கள் ஆகியும் பிள்ளை பாக்கியம் கிடைக்காதவர்கள்.  கருப்பையில் ஏற்பட்ட கட்டி காரணமாக கருப்பையை  இழந்துவிடுகிறார் லட்சுமி.  தாய்மை அடையமுடியவில்லையே என்ற ஏக்கம், வருத்தம்.  குழந்தையை தத்தெடுக்கலாம் என்ற கணவனின் யோசனையை மறுத்துவிடுகிறார்.  அத்தருணம் பால்க்காரனிடமிருந்து கால்நடைகளுக்கு, குறிப்பாக பசுவிற்கு, செயற்கை முறையில் கருத்தரிப்பிக்கும்  முறை தெரியவருகிறது.  அவருடைய நெருங்கிய தோழியான மகப்பேறு மருத்துவரிடம் இதை மனிதர்களிலும் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு முடியும் என்ற பதில் கிடைக்க அந்த முறையை பின்பற்றி வாடகை பெண்மணி வாயிலாக குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்கிறார்.  முதலில் கணவன் இதற்க்கு மறுப்பு தெரிவித்தாலும் பின்பு ஒத்துக்கொள்கிறேன்.  அப்படி வாடகைக்கு கர்ப்பம் சுமக்க வருபவள் ஸ்ரீப்ரியா.  கர்ப்பம் தரித்த பின் அவளுக்கு சிவகுமாரின் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது.  இவரும் சிவகுமாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவோ பேசிக்கொள்ளவோ கூடாது, இருவருக்கும் எந்த விதமான தொடர்பும் இருக்கக்கூடாது போன்ற கட்டளைகளை முறியடித்து இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள், have physical contact too.  பிரசவ சமயத்தில் சிக்கல் ஏற்பட உண்மைகள் வெளிப்படுகிறது.  லட்சுமி கோபித்துக்கொண்டு வெளியேறுகிறாள்.  வாடகை தாயோ பிள்ளையை பெற்றுத்தந்து உயிரை விடுகிறாள்.  கடைசியில் லட்சுமி கணவருடன் சேர்கிறார்.

இந்த மைய்யக்கருத்தை சொல்வதற்கு பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது "கண்ணன்-ராதை-கோபியர்" நிகழ்த்திய ராஸலீலை.  இந்த ராஸலீலையை ஸ்லோகங்கள் வாயிலாக சொன்னது "ஜெயதேவர்"ரின் "அஷ்டபதி".  அஷ்டபதி பாடல்களை ஜெயதேவர் பாடி அதற்க்கு அவர் துணைவியார் பத்மாவதி அபிநயம் பிடித்ததாக ஆன்மிகம் சொல்கிறது.  The picturization is done based on that – a saint is chanting the slokas and the second heroine is dancing.  ஆனா அதையும் வித்தியாசமாக காட்டியுள்ளார்கள்.  கதைப்படி ஒருவனது கர்ப்பத்தை அவனுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ளாமல், அவனை சந்திக்காமல் ஒருவள் சுமக்கிறாள்.  கர்ப்பம் தரித்த பின்பு அவளுக்கு அவனை பார்க்கவேண்டும், அவனது அன்பும் அரவணைப்பும் வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.  ஆனால் கதைப்படி நாயகனும் வாடகை தாயும் ஆரம்பத்தில் சந்திக்கொள்ளவில்லை என்பதால் முனிவரையும் இரண்டாம் நாயகியையும் ஒரே frame -மில் கொண்டுவராமல் தனித்தனியாகவே காண்பித்துள்ளார்கள்.  அவளும் நாயகனும் ரகசியமாக தொடர்பு கொள்கிறார்கள் என்பதை அவள் பாடும் பாட்டின் வரிகளில் புகுத்தியுள்ளார்கள்.  அஷ்டபதியை முழுமையாக பாடுவதற்கு - அல்லது வழங்குவதற்கு ஒரு முறையை பின்பற்றுகிறார்கள்.  அதாவது அஷ்டபதியின் பூர்வ ஸ்லோகமான "vaacha pallava Yathyumaapathidhara" என்பதை பாடுவதற்கு முன் "POORNA ASHTAPADI PADDHATHI" (இது ராம நாம, ஹரி நாராயண என்ற பாடல், தோடய மங்கலம் மற்றும் குரு கீர்த்தனம் என்பன ஆவும்) மற்றும் மூன்று பூர்வ ஸ்லோகங்களான Yadgopi Vadanendu Mandanam Aboodu ", Raadha Manorama Ramaavara Raasaleela ..."  "Sree Gopaala Vilaasini Valayasadrathnaadi..." என்பதை பாடி அதை தொடர்ந்து ஜெயதேவரின் வாழ்க்கையை கூறும் "பத்மாவதி ரமணம் - ஜெயதேவ கவி ராஜ" என்பதையும் பாடியாகவேண்டும்.   அதனால் தான் முனிவர் மூன்று பிரார்த்தனை ஸ்லோகங்கள் (முதலில் வருகின்ற "கஸ்தூரி திலகம்" ஜெயதேவர் இயற்றியதல்ல.  அது "பில்வ மங்கல ஸ்வாமிகள்" இயற்றியது.  ஆயினும் அது கண்ணன் அழகை வர்ணிப்பது என்பதால் முதலில் அதை வைத்துள்ளார்கள்) பாடுவது போலவும், அஷ்டபதியின் essence-சை மற்றவர் (இரண்டாம் நாயகி) பாடும் பாடலிலும் அமைத்துள்ளார்கள்.  அஷ்டபதி வர்ணிப்பது கண்ணன் கோபியருடன் நடத்திய ராஸலீலை குறித்து, குறிப்பாக கண்ணனுக்கும் ராதைக்கும் இருந்த நெருக்கத்தை குறித்து.  படத்தில் கண்ணன்-ராதை சிவகுமார்-லட்சுமி என்றால், கோபியரில் ஒருவராக ஸ்ரீப்ரியா.  கண்ணன் ராதைக்கு தெரியாமல் தன் மீது எவ்வளவு அளவு கடந்த காதல் கொண்டுள்ளான்  என்பதை குறிக்கிறது அவள் பாடும் பாடல்.  The line “"கண்ணன் என் கையில் பொருளல்லவோ, ஆஹா ராதாவும் அறியாமலே ...... என் மேலாடை அவன் கையிலே" clearly says it all.  அப்படியிருந்தும், அவள் அவனுடன் வாழ்ந்த காலங்கள் கொஞ்சமே - அதாவது கர்ப்பம் தரித்து ஓரிரண்டு மாதங்கள் கழித்து குழந்தையை பிரசவித்த பிறகு இறந்து போகும் வரையிலான ஆறு-ஏழு மாதங்கள் மட்டுமே - என்பதையும் பூடகமாக சொல்கிறது இரண்டாவது சரணம் "என்னை கண்ணன் கொஞ்சிய காலங்கள், காதல் பொங்கிய நேரங்கள், எந்தன் கன்னம் காட்டிய கோலங்கள், இன்னும் கேட்டன எண்ணங்கள், ஆனந்த இரவல்லவோ, அன்று அவன் தந்த உறவல்லவோ, ஆஹா பெண்ணாக நான் வந்ததே, என் கண்ணா உன் துணை கொள்ளவே".  In a nut shell complete story of the move is told through this song.

இப்போது மன்னர் பங்களிப்புக்கு வருவோமா.  இவ்வளவு யோசித்து தயார் செய்த ஒரு situation -னுக்கு மன்னர் சும்மா புகுந்து விளையாட மாட்டார்?  அப்படிதான் புகுந்து விளையாடியுள்ளார் மன்னர்.  கதைப்படி நாயகனும் வாடகை தாயும் ஆரம்பத்தில் சந்தித்துக்கொள்வதே இல்லை என்பதை பாடல்  காட்சியில் வரும் இருவரும் ஒரே frame -மில் வராமல் இயக்குனர் பார்த்துக்கொண்டார் என்றால் மன்னர் இசையில் அவர்களை பிரித்து வைத்துள்ளார்.  எப்படி என்கிறீர்களா.  He has set two patterns for the two characters.  He has not joined the two patterns by way of music, instead he has given a small pause to each one’s session, which is not the case in other ways in his music.  There will never be a break or pause (unless and until the situation demands) in his songs, it will always have a continuous flow.  But he has done it here as the situation highly demands the same.  ஸ்லோகத்துக்கு பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்ட பிறகு தான் பாடலின் இசை துவங்குகிறது, which is maintained after every chanting.  ஸ்லோகத்துக்கு பக்கபலமாக சுருதிப்பெட்டியின் மெல்லிய சுருதி மற்றும் தம்புராவின் ஒலி மட்டுமே.  பாடும் இடம்  திறந்த வெளி / நீர்வீழ்ச்சி என்பதால்  மெல்லிய எதிரொலி சேர்க்கப்பட்டுள்ளது.  ஸ்லோகத்தை தொடர்ந்து வரும் பாடலை பற்றி ஆராய்வோமா.  பாடலுக்காக எடுத்துக்கொண்ட தீம் அஷ்டபதி என்பதால் பக்தி ரசத்தோடு அதில் சிருங்கார ராசவும் மேலோங்கி நிற்கவேண்டும்.  அதற்குரிய ராகங்கள் சில உண்டென்றாலும் அவர் அதற்க்கு தேர்ந்தெடுத்த ராகம் "புன்னாகவராளி" (அது அவர் அறிந்தோ அறியாமலோ கூட நிகழ்ந்ததாக இருக்கலாம்) (if I am not wrong).  அஷ்டபதியில் ஒரு ஸ்லோகத்துக்கு புன்னாகவராளி ராகம் பயன்படுத்துவார்கள் என்றாலும், பெரும்பாலும் கண்ணன் பாடல்களில் இந்த ராகத்தை யாரும் பயன்படுத்த மாட்டார்கள்.  புன்னாகவராளி ராகம் பெரும்பாலும் snake dance மற்றும் சிவன் பாடல்களில் தான் பயன்படுத்துவது வழக்கம்.  இருந்தும் அவர் ஏன் இந்த ராகத்தை பயன்படுத்தினார்?  அங்கு தான் அவர் அடிக்கடி கூறுகின்ற ஒரு சங்கதியை பின்பற்றியது என்பது தெரிய வருகிறது.  அவர் அடிக்கடி கூறுவது "ஒரு பாடலுக்கான மெட்டு போட அவ்வளவு ஒன்றும் கஷ்டம் இல்லை, அது அந்த பாடலின் வார்த்தைகளிலேயே - வரிகளையே உள்ளது அதை கண்டு கொண்டாலே மெட்டு தானாக பிறந்து விடும்" என்று.  அவர் என்னவோ அதொன்றும் பெரிய காரியம் இல்லை என்பது போல் சொன்னாலும், அந்த ஒளிந்து கிடக்கின்ற மெட்டை கண்டு பிடிப்பது என்பது என்ன அவ்வளவு லேசு பட்ட காரியமா / எல்லோராலும் தான் கண்டு பிடிக்க முடியுமா.  இந்த பாடலுக்கும் அவர் இதன் வார்த்தைகளை / வரிகளை வைத்துதான் மெட்டு போட்டுள்ளார் என்பது என்ன கணிப்பு.  பாடலின் பல்லவி "ஆத்தோரம்  கொடிவீடு, அதன் மேலே  கோபாலன், அவனோடு நான் ஆடுவேன், ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு அழகாக விளையாடுவேன்".  கண்ணன் என்பவன் மாடு மேய்ப்பவன் தானே.  வயலில் பயிரிட்ட பயிர்களை பட்சிகள் / விலங்குகளிடமிருந்து பாதுகாக்க  வயலில் அல்லது அதை ஒட்டிய ஓரிடத்தில்  பெரிய  மூங்கிலால் நான்கு கால்கள் நாட்டி அதன் மீது ஒரு சிறிய வீடு போல் கட்டி அதன் மீதமர்ந்து கண்காணிப்பார்கள்.  அது  பெரும்பாலும் ஒருவர் மட்டுமே அமர்ந்து கொள்ளக்கூடியதாக தான் இருக்கும். அப்படியே அதில் இருவர் அமர்ந்து கொள்ள  நேர்ந்தாலும் மிகவும் நெருக்கமாகத்தான் அமர்ந்து கொள்ள முடியும்.  மாடு மேய்ப்பவர்களும் அவ்வாறு செய்வதுண்டு - பக்கத்திலிருக்கும் குன்றின் மேலிருந்து அல்லது ஆத்துப்பக்கம் இருக்கும் மரத்தின் கிளை மீது செடிகொடிகளால் ஆன ஒரு சிறு இருப்பிடம் செய்து கொண்டு அதில் அமர்ந்து மாடுகளை கண்காணிப்பார்கள்.  இதுவும் மற்றது  போல் தான் - பெரும்பாலும் ஒருவர் அமர்ந்து கொள்ளக்கூடியதாக தான் இருக்கும்.  அப்படி இருவர் அமர்ந்தாலும் மேலே கூறியது போல் மிகவும் நெருக்கமாக தான் அமர்ந்து கொள்ள வேண்டும்.  பாடலின் பல்லவியில் அவள் கூறுவது - கோபாலனோடு கொடிவீட்டில் (இந்த வார்த்தைக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்றதால், நான் மேலே கூறியதாகத்தான் இருக்க கூடும் என்ற நம்பிக்கையில் விளக்கியுள்ளேன்) அமர்ந்து ஆடுவேன், ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு அழகாக விளையாடுவேன்.  இருவர் உட்காருவதே கஷ்டமான காரியம் என்னும்போது, அவனுடன் கொஞ்சி குலாவி ஆடவும் வேண்டுமென்றால் அவர்கள் எத்தனை நெருக்கமாக இருந்து கொண்டு அதை செய்யவேண்டும்.  இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் இணை சேரும் பாம்புகள் போல் பின்னிப்பிணைந்து இருந்தால் தான் அது சாத்தியம்.  பாம்புகளை மசிய / மயங்க வைக்கும் ராகம் எது - "புன்னாகவராளி" தானே, அதனால் தான் அவர் கண்ணன் பாடலாயினும் புன்னாகவராளி ராகத்தை பயன்படுத்தியுள்ளார்.  மேலும், கண்ணனின் குழல் என்ற மகுடிக்கு கோபியர்கள் மயங்கியதாக தானே சொல்லப்பட்டுள்ளது.  இந்த தெய்வீகமான ராகத்தில் சிருங்கார ரசத்தையும் புகுத்தி ஒரு புரட்சியே செய்துள்ளார் மன்னர்.  

நாகம் இணை சேரும் போது படமெடுத்து அதன் இணையை உசுப்பேற்ற உஸ் உஸ் என்ற ஒலியோடு கொத்துவது போல் பாவலா செய்யும்.  இந்த ஒலியை ஸ்லோகம் முடிந்து ஆரம்பிக்கும் இசையில் புகுத்தியுள்ளார்.  எந்த கருவியை இசைத்து அந்த ஒலியை எழுப்பினாரோ, சாஷ்டாங்க நமஸ்காரம் தான் செய்யணும் அவருக்கு.  பாடலுக்கு சேர்க்கப்பட்டிருக்கும் இசையில், குறிப்பாக inter-connecting இசையில், ஒரு மர்மமான சூழ்நிலை கொண்டுவந்துள்ளார்.  அதற்க்கு காரணம் நாயகனும், இரண்டாம் கதாநாயகியும் யாருக்கும் தெரியாமல் உறவு கொள்கிறார் என்பதை சுட்டிக்காட்ட.  கண்ணன் பாடல்களில் பெரும்பாலும் "உடுக்கை" பயன்படுத்தமாட்டார்கள்.  ஆனால் கேரளாவில் கோவில்களில் அஷ்டபதி பாடும் போது "இடக்கை (Idakka)" என்றொரு தோல் வாத்தியம் பயன்படுத்துவார்கள்.  அதன் ஒலி கிட்டத்தட்ட உடுக்கையின் ஒலி போல் தான் இருக்கும்.  இங்கு அவர் உடுக்கை பயன்படுத்தியதன் காரணம் அவர்கள் காதலின் தீவிரத்தை சுட்டிக்காட்ட தான் – step by step the intensity of their love is increasing.  கண்ணன் பாடல் என்பதால் ரம்மியமான புல்லாங்குழல் இசை சேர்க்கப்பட்டுள்ளது.  கண்ணனும் கோபியர்களும் "கோலாட்டம்" ஆடினார்கள் என்பதை சுட்டிப்பாட்ட சன்னமான ஒலியில் கோலாட்டம் ஒலி சேர்க்கப்பட்டுள்ளது.  Just couldn’t identity few of the percussion instruments, don’t know whether it is drums or tumba or congos. மேலும் வட மாநிலங்களில் சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் "Nagada (Nagara) என்ற தொலைக்கருவியையும் பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது. He has embellished the tune with side instruments, mainly with “Jaalra” to add divine touch.  புல்லாங்குழலின் இசை இந்த பாடல் படமாக்கப்பட்ட இடம் நதியோரம், நீர்வீழ்ச்சி, தடுப்பு அணை, மற்றும் மலைகள் சூழ்ந்த இடம் என்று சொல்கிறது.  நெஞ்சை அள்ளுகிறது புல்லாங்குழலின் இசை.  தன்னை விட்டால் இந்த பாடலை  வேறு யாராலும் இவ்வளவு பிரமாதமாய் பாட முடியாது என்று நிரூபித்துள்ளார் வாணி ஜெயராம், அதுவும் அந்த "ஆஹா ராதாவும் அறியாமலே........" "ஆஹா பெண்ணாக நான் வந்ததே......." என்று இழைத்து பாடும் அந்த இடம் இருக்கே, நம்மை வேறெங்கோ கொண்டு சென்று விடுகிறது.  புன்னாகவராளி விஸ்வரூபம் எடுத்து நிற்பதும் அங்கு தான்.

பாடலுக்கு நடனம் அவ்வளவு பெரிய movements ஒன்றும் கிடையாது.  அதற்க்கு இரண்டு காரணங்கள் கூறலாம் - ஒன்று படமாக்கப்பட்ட இடம் – one cannot obviously do fast movements at those places.  இரண்டாவது - அவள் பாடலிலேயே உள்ளது  - "ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு அழகாக விளையாடுவேன்" - வேறு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

இவ்வளவு உழைத்து உருவாக்கிய இந்த அழகான பாடல் கண்டுகொள்ளப்படாமல் போனது பற்றி வியப்பதா? வேதனைப்படுவதா?

உங்கள் பின்னூட்டங்கள் என் பதிவிற்கு ஊக்கமளிக்கும் "டோனிக்".

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 


Quote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

Forgot to attach the youtube link of the song.  Here is the song >>

https://www.youtube.com/watch?v=mPRVohFkOCc


ReplyQuote
Muralidharan M
(@muralidharan-m)
New Member
Joined: 2 years ago
Posts: 1
 

ஐயா ரமணன் அவர்களே, வணக்கங்கள் பல.

'அவன் அவள் அது' திரைப்படம் நான் பார்க்காத மன்னர் படங்களுள் ஒன்று. கடந்த 39 வருடங்களில் இந்த பாடலை கேட்டதில்லை.

ஆகா.. எவ்வளவு அருமையான பாடல். எளிமையான, நளினமான அழகான இசையமைப்பு.

பாடகர்களை தேர்வு செய்வதில் மன்னருக்கு நிகராக இங்கு எவருமில்லை. பாடல் வேலைகளை முடித்து விட்டு பாடகரை தேட மாட்டார் என எண்ணுகிறேன். கதை கரு, காட்சி பிண்ணனி, பாடலுக்கு வாயசைக்கும் நடிகர்கள் முதலானவற்றை உள் வாங்கியதும், அவர் மனதில் எழும் இசை வடிவங்களோடு பாடகர் தேர்வும் அதேவேளையில் நடக்கும் என்று நினைக்கிறேன். வாணி ஜெயராம் குரலில் பாடல் தேனென இனிக்கின்றது.

பாடலைப்போலவே ரசனையுடன் கூடிய தங்கள் இசையுரையும் இனிமை.

என்றென்றும் நன்றியுடன் 

புவனகிரி முரளிதரன் 


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

மட்டற்ற மகிழ்ச்சி அய்யா.


ReplyQuote
Share: