"சிப்பியிருக்குது ம...
 
Notifications
Clear all

"சிப்பியிருக்குது முத்துமிருக்குது// "வறுமையின் நிறம் சிவப்பு " 1980


kothai
(@kothai)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 73
Topic starter  

ஜானகியம்மா பாடல்கள் என் ரசனையில் .. ...... 19.

"தந்தன தத்தன தய்ய்ன தத்தன தனன தத்தன தான தய்யன தந்தானா..."
''சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி..'

முதலில் இப்பாடல் இசைஞானியவர்கள் இசையமைப்பு என்றே நினைத்திருந்தேன் . பிறகுதான் இது மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்கள் இசையமைப்பு எனது தெரிந்துகொண்டேன் . திரைப்படம் "வறுமையின் நிறம் சிவப்பு " என் மனத்தைக் கவரவில்லை .ஆனால்...இந்தப் பாடல் , ஸ்ரீ தேவி , கமலஹாசன் நடிப்பில் அழகுற இனிய சுவையோடு மனத்தைக் கவர்ந்தது .

ஜானகியம்மா அவர்கள் சந்தங்கள் எடுத்துக் கொடுக்க அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வரியாக எஸ் பி பி அவர்கள் அந்தந்த உணர்ச்சி பாவங்களோடு பாடுவதுபோல் இசையமைப்பு செல்லும் . தனித்த எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையமை ப்பில் இதுவும் இன்னொரு மைல் கல் என்றே அறிகிறேன் .

"தந்தன தத்தன தய்ய்ன தத்தன தனன தத்தன தான தய்யன தந்தானா..."
''சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி..'
லலலலலல லலலலலல லாலலால லாலாலாலா லாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி'

இருவரும் அறிமுகமான நல்ல நண்பர்கள் என்றளவில் தொடங்கும் பாடல் இருவருக்குமிடையே வளர்ந்துள்ள காதலை உணர்த்தி முடிகிறது .

"தனனா.."
சந்தங்கள்..
"நனனா.. "
நீயானால்
"ரீசரி.. "
சங்கீதம்
"ஹ்ம்ஹ்ம்.."
நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்... இதுபோல் ஜானகியம்மா சந்தங்கள் மட்டுமே எடுத்துக் கொடுத்து ஒரு உற்சாக வேகத்தில் அந்த பாவத்தில் வருவார் .
எஸ் பி பி யும் அதை ஒரு இசைக்க கலைஞனுக்கே உள்ள ரசனை பாவத்தோடு எதிர்கொள்வார் .
இசையமைப்பில் சிறு சிறு வசனமும் , குறுகிய விசில் ஒன்றும் நேர்தியாகப் புகுத்தப் பட்டிருக்கும் .

"நனனானானா.."
சிரிக்கும் சொர்க்கம்
தனனானனானானா..
தங்கத்தட்டு எனக்கு மட்டும்
தானைதானைதானா..
தேவை பாவை பார்வை..
தத்தனதன்னா..
நினைக்க வைத்து
நனனானானா..
நெஞ்சில் நின்று நெருங்கி வந்து...'
கமலஹாசன் யோசித்து யோசித்து வரி வடிவம் கொடுக்குமிடத்து நமது கவியரசர் கண்ணதாசன் நிமிர்ந்து தெரிகிறார் . எம் எஸ் வி அவர்கள் இசையமைப்பில் கண்ணதாசன் அவர்கள் இசையமைப்பாளருக்கு ஏற்றபடி வரிவடிவம் தருவார். அதனாலேயே எம் எஸ் வி & கண்ணதாசன் இணைவு தொடர் வெற்றியைப் பெற்றதும் உண்மை எனலாம் .

"நனனனானானா..' தனானா' .... லலாலலா ..' நனானா..'
beautiful ..என எஸ் பி பி வியந்து சொல்லிக் கொள்ளும் அழகே அழகு .

மயக்கம் தந்தது யார்
தமிழோ.. அமுதோ... கவியோ"
கவியோ எனுமிடத்தில் கமல் தன்னை சுட்டி காண்பிப்பார் . காட்சியமைப்பில் நுணுக்கம்

"தனனானா தனனானானா..'
மழையும் வெயிலும் என்ன
"தன்னானா நானா நானா"
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
"தனனான தனனான தானா"
அம்மாடியோவ்.... சொல்லுமிடம் அருமை .
"தனனான தனனான தானா"
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
"சபாஷ்.."
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கெஞ்சும்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..

இப்படியாக தனது காதலை உணர்த்தி விடுவார் அவரையும் அறியாமல் சந்தங்கள் விழுந்த வேகத்தில் .
"சிப்பியிருக்குது முத்துமிருக்குது
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது ...
சிந் தையுமிருக்குது சந்தமுமிருக்குது
கவிதை பாட நேரம் வந்தது இப்போது "
என வரிகள் மாறி விழுந்து கைகள் கோர்த்திட ... காதலும் வசமாகிறது .

பாடலையும் வரிகளையும் ரசித்த பழகும் எனது மனம் அவ்வப்போது இதுபோன்ற பாடல்களில் இசையமைப்பில் நுணுக்கத்தையும் புரிந்து நின்று வியப்பதுண்டு .

கோதை தனபாலன்
https://www.youtube.com/watch?v=5JS0fPN3_hA

1980


Quote
Share: