Notifications
Clear all

1979 - Porter Ponnusamy - Coimbatore Kolunthu Vethalai  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 82
10/09/2020 5:49 pm  

நாட்டுப்புற பாடல்கள்

பாடல் : கோயம்புத்தூரு கொழுந்து வெத்தலை
படம் : போர்ட்டர் பொன்னுசாமி
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.ஜானகி
பாடலாசிரியர் : சைதை இளங்காளி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1979

அனைவருக்கும் வணக்கம்.

இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். நான்கும் அந்த காலத்தில் ஓரளவு வெற்றி பெற்ற பாடல்களே. TMS-ஸும், ஜானகியும் சும்மா புகுந்து விளையாடியுள்ளனர். குறும்பும், கும்மாளமும் நிறைந்த குதூகலமான பாடல்.

தேங்காய் சீனிவாசன் கதாநாயகனாக நடிக்க, வடிவுக்கரசி அவருக்கு ஜோடியாக நடித்த படம். இந்த படத்தை இது வரை நான் பார்த்ததில்லை. அதனால் கதை என்னவென்று தெரியாது. சாதாரணமாக நான் தேர்வு செய்யும் பாடல்கள் எல்லாமே ஒன்று நான் பார்த்த படங்களில் இடம்பெற்ற பாடல்களாக இருக்கக்கூடும், அல்லது குறைந்த பட்சம் படத்தின் கதைக்கரு என்னவென்றாவது தெரிந்திருக்கும். ஏனென்றால் படத்தோடு ஒட்டியுள்ள, படத்தின் கதையை சொல்லக்கூடிய, கதாபாத்திரங்களின் தன்மையை/நிலைமையை எடுத்துக்காட்டும் பாடல்களை தான் தேர்வு செய்து வழங்குவது வழக்கம். அதனால் எப்படிப்பட்ட பாடல்களாக இருந்தாலும் படத்தை பார்க்கவில்லை என்றாலோ, அல்லது கதை தெரியாது என்றாலோ அந்த பாடல்களை தேர்ந்தெடுக்க சற்று தயங்குவேன். ஆனால் இந்த பாடல் அதற்க்கு விதிவிலக்கு, மேலும் சொல்லப்போனால் முதல் முதலாக அப்படிப்பட்ட ஒரு பாடலை தேர்வு செய்துள்ளேன். அதற்க்கு காரணம் ஒன்றே ஒன்று தான் - படத்தில் இது முக்கிய கதாபாத்திரங்கள் பாடும் பாடல் அல்ல. பாடல் வாயிலாக படத்தின் எந்தவொரு விஷயமும் சொல்லப்படவில்லை. பூடகமாக எந்தவொரு நிகழ்ச்சியையும் பாடல் வாயிலாக சொல்லப்படவில்லை. காட்சியில் பாடலை பாடி நடித்திருப்பவர் - குணச்சித்திர / நகைச்சுவை கதாபாத்திரங்கள். Filler அல்லது பொழுது போக்கிற்காக சேர்க்கப்பட்ட பாடல். எடுத்துக்கொண்ட theme-மிற்கு பயனுள்ளதாக தோன்றியதால் மட்டுமே இந்த பாடல் தேர்வுசெய்யப்பட்டது.

Prelude - முதலில் வயலினில் ஒரு piece, அதற்க்கு counter கொடுப்பது போல் Mandolin-னில் ஒரு piece. இந்த relay ஒரு முறை கூட ஒலிக்கிறது .வயலின் piece-ஸுக்கு தாளம் ஏதுமில்லை - counter melody சேர்க்கப்பட்டுள்ளது. Mandolin பகுதிக்கு தபலா மற்றும் டோலக் வாசிக்கப்பட்டுள்ளது. கூடவே சலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வயலினில் ஒரு நீண்ட piece - இது தாவும் / தளுக்கும்-குலுக்கும் பாணியில் அமையப்பெற்றுள்ளது. இங்கு தாளத்துக்கு தபலா+டோலக் வாசிக்கப்பட்டுள்ளது. தாள நடை மாறுபடுகிறது. தொடர்வது மீண்டும் ஒரு நீண்ட piece - Shehnai + புல்லாங்குழல் ஒலிக்கிறது. இங்கு தாளத்துக்கு தவிலும் சேர்ந்து கொள்கிறது - கூடவே மற்றுமொரு சிறு கருவியும் வாசிக்கப்பட்டுள்ளது - comic effect வரும்படியான கருவி. இந்த BGM -ம்மை நிறைவு செய்வது வயலினில் ஒரு piece - இதற்க்கு Cello-வில் counter effect சேர்க்கப்பட்டுள்ளது.

Pallavi - TMS-ஸின் குரலில் பல்லவி ஆரம்பமாகிறது. பல்லவியின் ஐந்து வரிகளை அவர் பாடி, அதன் கடைசி வரியை repeat செய்கிறார். அதற்க்கு Shehnai + புல்லாங்குழலில் ஒரு interlude. பிறகு அதே வரிகளை மீண்டும் பாடுகிறார். அதற்கும் அதே interlude. தொடர்ந்து அனுசரணத்தை ஜானகி பாடுகிறார். முதலில் நான்கு வரிகளை பாடி கடைசி வரும் போது அதை அப்படியே இழுத்து நிறுத்துகிறார். தொடர்ந்து அதே வரிகளை மீண்டும் பாடி, அடுத்த மூன்று வரிகளை பாடி மூன்றாவது வரியை repeat செய்கிறார். தொடர்ந்து TMS பல்லவியை முழுவதுமாக பாடி பல்லவி நிறைவு பெறுகிறது. இந்த பகுதிக்கு காலமாக தபலா மற்றும் டோலக் பயன்படுத்தப்பட்டுள்ளது. பலம் சேர்க்க சலங்கை ஒலி . தாள நடைகள் மாறுவதும், தபலா/டோலக்கின் உருட்டல்களும் கவனிக்கப்பட வேண்டியவை.

First BGM - முதலில் Shehnai + புல்லாங்குழலில் ஒரு நீண்ட piece. தொடர்ந்து Mandolin-னில் ஒரு piece ஒலித்து BGM-ம்மை நிறைவு செய்கிறது. இங்கு தாளத்துக்கு தவில் மற்றும் comic effect தரக்கூடிய ஒரு சிறு கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. அழகு சேர்க்க சலங்கை (Tambourine) வாசிக்கப்பட்டுள்ளது.

First Charanam – TMS ஆரம்பிக்கிறார். சரணத்தின் மூன்று வரிகளை - with commas - அவர் பாடுகிறார். கடைசி வரியை அப்படியே நீட்டி ஆலாபனை செய்கிறார். தொடர்ந்து அதே வரிகளை மறுபடியும் பாடுகிறார். அப்படியே அடுத்த வரிகளையும் பாடி, அதை மறுபடியும் பாடுகிறார் - அவரது modulations கவனிக்கப்படவேண்டியவை. அடுத்து அனுசரணத்தை பாடிக்கொண்டு ஜானகி வருகிறார். மூன்று வரிகளை பாடி அதை மீண்டும் பாடுகிறார். தொடர்ந்து அடுத்த வரிகளை பாடுகிறார் - இப்போது மெட்டு மாறுகிறது. இந்த வரிகளையும் மீண்டும் ஒரு முறை பாடுகிறார் - மறுபடி பாடுகையில் "இந்த வயசுல" என்று பாடும் போது வயதானவர் என்பதை சுட்டிக்காட்டுவது போல் "கிழவி" பாடுவது போல் பாடுகிறார் - இங்கு குறும்பு/குசும்பு வெளிப்படுகிறது. ஜானகியின் modulations-ஸும் கவனிக்கப்படவேண்டியவை. தொடர்ந்து பல்லவியின் முழு வரிகளை TMS பாடி சரணத்தை நிறைவு செய்கிறார். தாளத்துக்கு தபலா மற்றும் டோலக் பயன்படுத்தப்பட்டுள்ளது. அழகு சேர்க்க Tambourine வாசிக்கப்பட்டுள்ளது.

Secong BGM - முதலில் Mandolin -னில் ஒரு piece. தொடர்ந்து அதே மெட்டு வயலினில் வாசிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து Shehnai + புல்லாங்குழலில் ஒரு நீண்ட piece - இது BGM -ம்மை நிறைவு செய்கிறது. வயலின் பகுதி வரை Congos வாசிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன். அடுத்த பகுதிக்கு தவில், தபலா மற்றும் டோலக் வாசிக்கப்பட்டுள்ளது. வயலின் பகுதியில் counter melody சேர்த்துள்ளதை கவனிக்கவும். Tambourine முழு BGM-ம்முக்கும் வாசிக்கப்பட்டுள்ளது.

Second Charanam - இங்கு சிறு மாறுதல் செய்துள்ளார். TMS அவரது வரிகளை ஒரு முறை தான் பாடுகிறார். அது முடிந்ததும் ஜானகி அனுசரணத்தை ஆரம்பிக்கிறார். அனுசரணத்தின் மெட்டும் முதல் சரணத்திலிருந்து லேசாக மாறுபட்டுள்ளது - சிறு மாற்றங்கள் தான் - ஆனால் பாடலுக்கு அது எவ்வளவு அழகு சேர்க்கிறது - இது மன்னரின் speciality (மன்னரது மட்டுமே என்று எடுத்துக்கொள்ளவேண்டும்). அவர் பாடும் போது சில வரிகள் repeat ஆகிறது. தொடர்ந்து TMS பல்லவியின் முழு வரிகளை பாடுகிறார்.
Postlude - இருவரும் சேர்ந்த ஹம்மிங் ஆக அமைந்துள்ளது. பொதுவாக ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்து அதை பாடலாசிரியரும் பாடி காண்பிக்கும் போது இசை அமைப்பாளர் ஒன்று "தத்தகாரத்தில்" பாடி காண்பிப்பார் அல்லது "ந ந நன்னா நனன" என்று பாடி காண்பிப்பார். இந்த பாடலை தத்தகாரத்தில் பாடினால் எப்படி இருக்குமோ அது போல் அமைந்துள்ளது postlude. ஜானகி தத்தகாரத்தில் பல்லவியின் மெட்டை பாட அதற்க்கு TMS "ம்க்கும்" என counter effect கொடுக்கிறார்.

பாடலை கேட்க்கும் போதே புரிந்து விடும் இந்த பாடலுக்கு ஜானகியை ஏன் மன்னர் தேர்ந்தெடுத்தார் என்று. அவருக்கே உரிய சங்கதிகள், சேஷ்டைகள், வார்த்தை விளையாடல்கள்.

தாளம் போட்டு ரசிக்க வைக்கும் அருமையான நாட்டுப்புற மெட்டுப்பாடல் . எப்படி மறக்கப்பட்டுவிட்டது?

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://youtu.be/oaPkmdlK4L8


Quote
Share: