1977 - Avargal - Ka...
 
Notifications
Clear all

1977 - Avargal - Kaattrukkenna Veli  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 66
27/07/2020 5:32 pm  

பாடல் : காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி
படம் : அவர்கள்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1977

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது பெண்மையை கொண்டாடும் / போற்றும் ஓர் உன்னதமான படைப்பு. பாடலின் வரிகளாகட்டும், படமாக்கப்பட்ட விதமாகட்டும், பாடியவரின் திறமையாகட்டும், இசையாகட்டும் எல்லாமே உயரத்தில் வைத்து கொண்டாட வேண்டிய ஓர் பாடல்.

மன்னரின் எண்ணற்ற பாடல்களை நாம் சரிவர உணரவேண்டுமென்றால் / ரசிக்க வேண்டுமென்றால் படத்தின் கதை, கதாபாத்திரங்கள், அவற்றை ஏற்று நடிக்கும் நடிக / நடிகையர்கள், பாடல் அமையப்பெற்ற காட்சி / இடம், இப்படி பலவற்றை நாம் அறிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் உண்டென்று நான் பல முறை கூறியுள்ளேன். மேலும் சில பாடல்களில் அவர் தன்னை மிகவும் அடக்கியே வாசித்து பாடலின் வரிகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து அமைத்திருப்பார். அந்த ரக பாடல்களை ரசிப்பதற்கு மேலே கூறிய விஷயங்கள் அவ்வளவாக தேவைப்படாது. மேலும் சில பாடல்களில் வரிகளோடு சேர்ந்து தன்னையும் வெளிப்படுத்தியிருப்பார் - அதாவது வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தன் மெல்லிசையால் அழகு படுத்தியிருப்பார். அந்த பாடல்களையும் நாம் அப்படியே ரசிக்கலாம். மேலும் சொல்லப்போனால் அவர் மெல்லிசையை / வாத்தியக்கருவிகளை கையாண்ட விதத்தை குறித்து ஆராயலாம், மகிழலாம். சில பாடல்களை அவர் முழுக்க முழுக்க கர்நாடக / ஹிந்துஸ்தானி ராகங்களை அடிப்படையாக கொண்டு அமைத்திருப்பார். அந்த பாடல்களை சாதாரண ரசிகர்கள் அப்படியே ரசிக்கலாம் என்றாலும், கிளாசிக்கல் இசை ஓரளவு தெரிந்தவர்கள் அவற்றை ரசிப்பதோடு வியப்போடும் பார்ப்பதுண்டு - காரணம், மேடைக்கச்சேரி செய்யும் பிரபலங்களே கையாளாத பல இசை பிரயோகங்களை அவர் அந்த பாடல்களில் நிகழ்த்தியுள்ளார் என்பதால்.

இவற்றிலிருந்தெல்லாம் மாறுபட்டு நிற்க்கும் பல பாடல்களும் உள்ளன மன்னர் இசையில் - அவற்றை நாம் முழுவதுமாக ரசிக்க / புரிந்து கொள்ள முதலில் கூறிய எல்லா காரணங்களையும் அறிந்து கொள்ளவேண்டும், பாடல்களின் வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும், காட்சி அமைப்பிலும் புதுமை இருக்கும், மன்னரும் விஸ்ரூபமெடுத்து விளையாடியுமிருப்பார் - இசையில் பல புதுமைகளை செய்திருப்பார், பல பரிமாணங்களை காட்டியிருப்பார் / தொட்டிருப்பார். எந்த கோணத்தில் பார்த்தாலும் நம்மை பிரமிக்கவைத்துவிடும் அந்த பாடல்கள். இன்றைய பாடல் இந்த ரகத்தை சேர்ந்தது.

இந்த பாடல் வழக்கமாக வரும் பாடல் காட்சிகளிலிருந்து சற்று மாறுபட்டு நிற்க்கிறது. இயக்குனர் அவரது கைவண்ணத்தை காட்சி அமைப்பதில் காண்பித்திருந்தாலும், இது மன்னருக்கு ஒரு சவாலாக அமைந்திருக்கும் என்று எண்ணக்கூடிய பாடல். ஏனென்றால், பாடலை அந்த கதாபாத்திரம் பாடப்போவதில்லை, அசரீரியாக தான் ஒலிக்கப்போகிறது என்று இயக்குனர் மன்னரிடம் முன்னதாகவே சொல்லியிருக்கவேண்டும். ஒன்றல்ல, இரண்டல்ல அவளது குணங்கள், எண்ணங்கள், சிந்தனைகள். இவை எல்லாம் இசை வாயிலாக தான் உணர்த்த வேண்டும் (சிலவற்றை காட்சி அமைப்பிலும் காண்பிப்பார் என்ற போதிலும், இசையும் அதற்க்கு ஒத்துப்போகக்கூடியதாக தானே இருக்க வேண்டும்). அதை மன்னர் இயக்குனர் எண்ணியத்தைவிட பல மடங்கு அதிகமாகவே செய்து காண்பித்துள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.

இன்று நாம் அலச இருப்பது கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ஓர் வித்தியாசமான படத்திலிருந்து வித்தியாசமாக அமைந்த பாடல். முக்கோண காதல் கதைகளில் பெரும்பாலானவை எப்படி அமைந்திருக்கும் - நாயகன்-நாயகி உயிருக்குயிராய் காதலிப்பார்கள். ஆனால் ஏதோ ஓர் காரணத்தால் அவர்கள் பிரியக்கூடும். நாயகி ஓர் கொடுமைக்காரனுக்கு வாக்கப்பட்டு போவாள். நாயகன் அவளை பிரிந்த ஏக்கத்தில் தாடி வளர்த்து (ஓர் சிலர் போதைக்கும் அடிமையாகி விடுவார்கள்) பித்துப்பிடித்தது போல் அலைவான். சில வருடங்கள் கழித்து இருவரும் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும். அப்போது இருவரும் தங்களின் நிலைமையை பரிமாறிக்கொள்வார்கள். அப்போது அவர்கள் காதலர்களாக இருந்த பொழுது பாடப்பட்ட ஒரு பாடல் சோகவடிவில் பாடப்படும், அல்லது புதிதாக ஒரு சோக பாடல் பாடப்படும். ஆனால் இந்த படத்தின் கதையே வேறு மாதிரி. நாயகி ஒருவனை உயிருக்குயிராய் காதலிக்கிறாள். அவள் பரதநாட்டியத்தில் தேர்ச்சி பெற்றவள். அவன் புல்லாங்குழல் வித்வான். அவளை விரும்பும் மற்றொருவன் மற்றும் காதலனின் தங்கச்சி செய்யும் சூழ்ச்சியால் அவர்கள் பிரிய நேரிடுகிறது. சந்தர்பம் அவளை சதி செய்தவனுக்கு மனைவியாக்குகிறது. அவன் ஓர் sadist. அவளை பலவிதமாக சித்திரவதை செய்கிறான். ஓர் குழந்தைக்கு தாயாகும் அவள், ஓர் கட்டத்தில் அவனை விட்டு வெளியேறிவிடுகிறாள். படித்தவள் என்பதால் பிழைப்புக்காக வேலையில் சேர்கிறாள். அவள் பணிபுரியும் அலுவலகத்தில் பணிபுரியும் மனைவியை இழந்த ஓர் சக ஊழியர் அவளுக்கு ஒத்தாசையாக இருக்கிறார் - ஒரு தலையாக அவளை காதலிக்கவும் செய்கிறார். சூழ்நிலை பிரிந்த காதலர்களை மீண்டும் சந்திக்க வைக்கிறது. இருவரும் மனம்விட்டு பேசிக்கொள்கிறார்கள். அவளை இந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள அவன் தயாராக நிற்க்கிறான். விட்டுப்போன காதல் மீண்டும் துளிர்விடுகிறது. அவளிடமிருந்து பறிபோன அந்த பழைய குறும்பு, குசும்பு, உற்சாகம், சந்தோஷம், துள்ளல் எல்லாம் அவளை மீண்டும் தொற்றிக்கொள்கின்றன. வானில் மிதக்கிறாள், மயிலாக மாறி ஆடுகிறாள், பச்சைப்பிள்ளை போல் குறும்புகள் செய்கிறாள், கட்டவிழ்ந்த கன்றுக்குட்டி போல் ஓடுகிறாள். இந்த சூழ்நிலையில் அமைந்த பாடல் தான் இன்றைய பாடல்.

நமது பாரத நாட்டில் ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றும் எழுதப்பட்ட சில விதிமுறைகள் உண்டு, எழுதப்படாததும் கூட. அதாவது இவர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று - பண்பாட்டை பின்பற்றி, பண்பாட்டை காப்பாற்றி, சமுதாயத்தை சீர்குலைக்காமல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கோட்டை தாண்டாமல் தான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று புராணங்களும், இலக்கியங்களும் சொல்கின்றன. ஆண்கள் இதை பின்பற்றி வாழ்கிறார்களா என்று யாரும் அவ்வளவு கவலைப்பட்டது கிடையாது. ஆனால் ஒரு பெண்ணின் நடவடிக்கைகளை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கவனித்து வருவார்கள் எல்லோரும் - அல்லது கவனித்து வந்தார்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை. பெண்ணிற்க்கென்று தனி உணர்வுகள் கூடாது, உணர்ச்சிகள் கூடாது, அவளுக்கென்று தனி ஆசாபாசங்கள் கூடாது, அப்படி இருந்தாலும் அதெல்லாம் அவளோடு கூட இருப்பவர்களை சான்றே இருக்க வேண்டும் என்ற எழுதியும் எழுதாததுமான சில விதி முறைகள். பருவம் அடைந்த பிறகு வாய் விட்டு சிரிக்க கூடாது, வயதுக்கு வந்த பிறகு ஆண்களுடன் பழக்கம் வைத்துக்கொள்ள கூடாது, சிறு பிள்ளை போல் ஓடி ஆடி விளையாட கூடாது, அடக்கம் ஒடுக்கமாக, குடும்பத்து பெண் போல் நடக்கவேண்டும், வேலைக்கு போகக்கூடாது - அப்படியே ஒருவேளை வேலைக்கு போனாலும் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு போய் வேலை பார்க்கக்கூடாது, இப்படி பல. இதையெல்லாம் மீறி அவள் நடந்து விட்டால் தான்தோன்றி, அடங்காபிடாரி, ராங்கிக்காரி, நடத்தை கெட்டவள் என்றெல்லாம் பட்டப்பெயர்கள் வந்து சேர்ந்து விடும். அதற்க்கு பிறகு அவள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடும் - திருமணம் நடப்பதில் சிக்கல், அப்படியே நடந்தாலும் கணவனின் சந்தேகத்திற்குள்ளாவது, புகுந்த வீட்டில் பிரச்சினை இப்படி சிக்கல்கள் ஏராளம். 90-ஸின் துடக்கம் வரை இது தொடர்ந்தது. அதற்க்கு பிறகு வெகுவாகவே மாறிவிட்டது நிலைமை - அதற்க்கு பெரும் காரணம் பெருளாதார ரீதியாக பெண்களுக்கு கிடைத்த மாற்றம். அந்த காலத்து பல படங்களிலும் பெரும்பாலும் பெண்களின் கதாபாத்திரங்கள் பண்பாட்டை, கலாச்சாரத்தை மறக்காத, தாண்டாத கதாபாத்திரங்களாகத்தான் இருந்தன. பாலசந்தர் அவர்கள் தான் இதை உடைத்தெறிந்து பெண்களுடைய உணர்வுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்கள் எடுத்து அதில் பெரும் வெற்றியும் கண்டவர். அந்த வரிசையில் அவர் கைவண்ணத்தில் வெளிவந்த படம் தான் "அவர்கள்". "அவர்கள்" படம் வெளி வரும் போதும் சமுதாயத்தின் நிலைமை மாற்றமடையாமல் தான் இருந்தது என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன்.

இப்போது இந்த படத்தின் கதையை சற்று பார்ப்போம். கதாநாயகி "அனு" தனித்துவம் வாய்ந்தவள். எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் அவள் அழமாட்டாள். அவள் புதுமை பெண் தான், ஆனால் கட்டுப்பாட்டை உடைத்தெறிய விருப்பமில்லாதவள். பிறர் உணர்வுகளுக்கு, எண்ணங்களுக்கு மதிப்பு கொடுப்பவள், அதே நேரத்தில் தன்மானத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மனமில்லாதவள். கடவுள் பக்தியுள்ளவள். சிறு குழந்தைகள் போல் சின்ன சின்ன அத்துமீறல்கள் செய்து அதில் மகிழ்ச்சி அடைபவர். ஆனால் பிறருக்கு ஒரு போதும் தீங்கு நினைக்காதவள். She is witty / humorous. ஒருவனை ஆழமாக காதலித்து மற்றொருவன் சதியால் காதலனை மணக்கமுடியாமல் கயவனை திருமணம் செய்துகொள்கிறாள். ஒரு குழந்தைக்கு தாயுமாகிறாள். கணவனின் சித்திரவதை தாங்கமுடியாமல் அவனை விட்டு வெளியேறுகிறாள் (கவனிக்கவும் "விவாகரத்து" பெறாமல் தான் வெளியேறுகிறாள்), படித்தவள் ஆகையால் ஒரு வேலையும் தேடிக்கொள்கிறாள். வேலை பார்க்கும் அலுவலகத்தில் அவருடன் பணி புரியும் ஒரு சக ஊழியன் அவள் மேல் அனுதாபப்பட்டு அவளை ஏற்றுக்கொள்ள முன்வருகிறான். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள அவள் மனம் இடம் கொடுக்கவில்லை, ஏனென்றால் "அனுதாபம்" அவளுக்கு தேவையில்லை. சதியால் பிரிந்த காதலர்கள் ஒரு கட்டத்தில் சந்தித்துக்கொள்ள பழைய காதல் மீண்டும் மலர்கிறது, காதலனும் அவளை ஏற்றுக்கொள்ள தயாராகிறான். ஆனால் அப்போதும் "கணவன்" என்றவன் வந்து தந்திரமாக அதை முறியடித்து விடுகிறான். அவளுக்கு ஆறுதலாக இருப்பது கணவனின் தாயார் தான், ஆனால் அது கணவனின் தாயார் தான் என்பதே அவளுக்கு கடைசியில் தான் தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் அவள் உடல் நிலை சரியில்லாமல் தவிக்கும் போது, அதாவது கணவனை விட்டு கைக்குழந்தையுடன் தனியாக வாழும் பொழுது, அவளுக்கு பணிவிடை செய்கிறான் கணவன். அதை பார்த்து சரி அவன் திருந்திவிட்டானே, அவனிடமே சென்றுவிடலாம் என்று நினைக்க, விதி மீண்டும் விளையாடுகிறது - அவனுடைய "வடநாட்டு மனைவி" வாயிலாக. மனம் உடைந்த அவள் மற்றும் மகனுடன் அந்த ஊரை விட்டே போகிறாள் - அவளோடு மாமியாரும் தொற்றிக்கொள்கிறாள்.

இந்த பாடல் பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்தித்த பிறகு வருகிறது. காட்சியில் கதாநாயகி பாட்டுக்கு நடனமாடவில்லை, மறித்து இயற்கையும், இசையும் தான் நடனமாடுகிறது. இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால் கதாநாயகி பரதநாட்டியம் கற்றவள் என்று ஒரு காட்சியில் வருகிறது. இருந்தும் அவளை ஆடவிடாமல் இயற்கையை ஆட விட்ட இயக்குனரின் கற்பனையை என்னவென்று சொல்ல. "அனு" சின்ன சின்ன அத்துமீறல்களில் சந்தோஷம் கொள்பவள் என்றாலும் பண்பாட்டை மறந்தவள் அல்ல, முறியடிக்க நினைப்பவள் அல்ல என்பதை பாடல் காட்சியில் மிக அழகாக பாலசந்தர் அவர்கள் காண்பித்துள்ளார். எல்லைகளை மீறாமல், பண்பாடு தவறாமல், பாரம்பரியத்தை கடைபிடித்து வாழ்பவள் போல் சித்தரித்த "பாகப்பிரிவினை" சரோஜாதேவி கதாபாத்திரம் பாடிய "தங்கத்தில் ஒரு குறை இருந்தாலும்" பாடலை எழுதிய அதே கவியரசர் தான் புதுமைப்பெண்ணுக்கான "காற்றுக்கென்ன வேலி" பாடலையும் எழுதியுள்ளார். பொதுவாகவே, ஒரு பெண்ணின் உணர்வுகளை, உணர்ச்சிகளை ஒரு பெண்ணால் தான் எழுத முடியும், அது இயல்பு. ஆனால், அதையே ஒரு ஆண் எழுதுவதென்றால் அது அவ்வளவு எளிதல்ல. அவர் தன்னை ஒரு பெண்ணாகவே பாவித்து கொண்டு (உடல் ரீதியாக அல்ல, மன ரீதியாக) எழுதினால் தான் அது சாத்தியமாகும். கவியரசருக்கு இந்த கூடு விட்டு கூடு பாயும் விதை கை வந்த கலை என்று தோன்றுகிறது. வேதனையில் வாழும் அவளுக்கு, வருடங்கள் கழித்து காதலனை கண்டதும் பழைய சந்தோஷமும், உற்சாகமும், சிரிப்பும், கேலியும், கும்மாளமும் தொற்றிக்கொள்கிறது. அதை சித்தரிப்பது தான் இந்த பாடல். மனம் துள்ளாட்டம் போடுகிறது. எல்லைக்கோடுகள் இல்லாத வாழ்க்கைக்கு ஆசைப்படுபவள் என்பதால் "காற்றுக்கென்ன வேலி, கடலுக்கென்ன மூடி, கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது, மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் எது". Who else can pen down such indepth lyrics that too in the simplest manner other than Kannadasan. ஆசைகளுக்கு எல்லை கிடையாது என்று சொல்வதுண்டல்லவா, like “sky is the limit” if you say in other words - நெஞ்சம், ஆசைகள் எல்லாம் எனக்கு சொந்தமானது. யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காதது, எவர் குடியையும் கெடுக்க நினைக்காதது. அப்படியிருக்கும் போது இந்த சமுதாயம் யார் அதற்க்கு விலங்குகள் போட? அதனால் அவள் ஆசைகள் வானையே அடைந்து விடுகிறது "நான் மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று" என்ற வரியில். அது போல் மயில் எப்போது தோகை விரித்தாடும்? மேகங்கள் திரண்டு வரும் போது தானே? அல்லது தன் இணையை attract செய்வதற்காக இல்லையா. இரண்டுமே மிக அரிதான காட்சிகள். அவ்வளவு எளிதில் காணக்கிடைக்காத ஒன்று. அதனால் "நான் தோகை போல் பூமியில் ஆடுவேன் ஆடல் ஒன்று", because now she has met her ex-flame and is with him. அடுத்து "கன்றுக்குட்டி துள்ளும் போது காலில் என்ன கட்டுப்பாடு, காலம் என்னை வாழ்த்தும்போது ஆசைக்கென்ன தட்டுப்பாடு" என்ற வரிகள் - அட காலமே என்னை கனிந்து வாழ்த்துகிறது, அப்புறம் என்ன கட்டுப்பாடு, என் ஆசைக்கு தான் ஏது தட்டுப்பாடு?

இரண்டாவது பல்லவியில் கவியரசர் புகுந்து விளையாடியுள்ளார். "தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னை கண்டேன், சீர் கொண்டு வா சொந்தமே, இன்று நான் பெண்மை கொண்டேன், பிள்ளை பெற்றும் பிள்ளை யானேன், பேசி பேசி கிள்ளையானேன், கோவில் விட்டு கோவில் போவேன், குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன்". "தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னை கண்டேன்” - இதற்க்கு இரண்டு விதமாக interpretation செய்யலாம் (1) அவளுக்கு பிடித்தவன், அவளை நன்கு அறிந்தவன் மீண்டும் வந்துவிட்டான் - இத்தனை நாள் அனுபவித்த துன்பத்தின் காரணத்தால் தான் யார் என்பதையே மறந்து போனவள், தனது ஒவ்வொரு அசைவுகளையும் அறிந்தவனை மீண்டும் கண்டுகொண்டவுடன் தான் யார் என்பதை உணர்ந்துகொள்கிறாள் - அவளது தனித்தன்மை மீண்டும் தலை தூக்குகிறது. அவனை மறுமணம் செய்துகொள்ளவும் தீருமானிதாகிவிட்டது. இந்நிலையில் ஜானவாசத்திற்கு தேரையே அழைத்து வரச்சொல்கிறாள். அதில் தன் நாயகனை இருத்தி ஊர்வலமாக அழைத்து செல்ல. (2) பெண்களை "தேர்"-ரோடு உவமிப்பதுண்டு. அதனால் அவள் தன்னை தேராக நினைத்துக்கொள்கிறாள். அதில் தன் நாயகனை குடியிருத்தி ஊர்வலமாக சென்றுவர. தேர் தனியாக நிற்கும் போது அதற்க்கு அழகேது. ஜோடனை செய்து அதில் உத்சவ மூர்த்தியை வைக்கும் போது தானே அதற்க்கென்று ஓர் அழகும், மதிப்பும் வருகிறது. அடுத்து வரும் வரிகள் சீர் கொண்டு வா சொந்தமே, இன்று நான் பெண்மை கொண்டேன், பிள்ளை பெற்றும் பிள்ளை யானேன், பேசி பேசி கிள்ளையானேன், கோவில் விட்டு கோவில் போவேன், குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன்" - அவளது திருமணம் எந்த வித ஆர்பாட்டவும் இல்லாமல் மிக எளிமையாக நடந்து விடுகிறது - தோழிகள் யாரும் இல்லை, சீர் செனத்தி செய்ய யாரும் இல்லை, செய்ய முடியாத சூழ்நிலை, மருமகளே வா என்று கொண்டாட கணவனின் பெற்றோர்கள் இல்லை (must be remembered that mother-in-law character is introduced much later in the movie, that too she comes to know that the maid servant is none other than her mother-in-law at the fag end of the movie). அவளது விருப்பத்துக்கு மாறாக அமைந்த திருமணம், வாய்த்த கணவனோ கொடுமைக்காரன். ஒரு தாங்குக்குக்கூட யாரும் இல்லை. அடி பட்டு அடி பட்டு நடமாடும் ஜடம் போல் ஆகியிருந்தது அவள் வாழ்க்கை. பழைய காதலனை பார்த்ததும் அவளுக்கு ஒரு புது தெம்பு வருகிறது, தான் விரும்பிய வாழ்க்கை அமைந்து விடும் என்ற நம்பிக்கை. தன் எண்ணங்களை, உணர்வுகளை, பெண்மையை மிகவும் ரசித்த / மதித்தவனை மீண்டும் சந்தித்த போது அவளது பெண்மை மீண்டும் மலர்கிறது. இதை "தேர் கொண்டுவா தென்றலே இன்று நான் என்னை கண்டேன், சீர் கொண்டு வா சொந்தமே, இன்று நான் பெண்மை கொண்டேன், பிள்ளை பெற்றும் பிள்ளை யானேன், பேசி பேசி கிள்ளையானேன்" என்ற வரிகள் சொல்லிவிடுகிறது. கடைசி வரியில் தான் ஒரு போடு போடுகிறார் கவியரசர்.- "கோவில் விட்டு கோவில் போவேன், குற்றம் என்ன ஏற்றுக்கொள்வேன்". இதை மேலோட்டமாக பார்த்தால் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்து கோவில் கோவிலாக போய் பிரார்த்தனை செய்து குற்றங்களை ஏற்றுக்கொண்டு மன்னித்து விடுமாறு கேட்டுக்கொள்வேன் என்று பொருள் வரும். ஆனால் கவியரசர் நினைத்திருப்பது அதுவாக இருக்கக்கூடும் என்று சொல்லிவிட முடியாது. கதைப்படி அவள் காதலனை மீண்டும் சந்திக்கும் போது கணவனிடமிருந்து சட்டப்படி விவாகரத்து பெறவில்லை. இருந்தும் அவனுடன் இணைய விரும்புகிறாள். ஒரு பெண்ணுக்கு திருமணமான பின்பு கணவனது வீடு தானே "கோவில்" என்று சொல்லப்படுகிறது. கணவன் என்ற அந்த கோவிலிலிருந்து காதலன் என்ற இந்த கோவிலுக்கு சென்றுவிடுவேன், அது குற்றம் என்று யாரேனும் நினைத்தால் அதை ஏற்றுக்கொள்ள தயார் என்பதை தான் கவியரசர் அந்த வரியில் கூறியுள்ளார் என்று தான் நான் நினைக்கிறேன்.

திரும்ப திரும்ப கேட்ட பிறகு கவியரசர் மற்றுமொரு விஷயத்தை கூட மிக நாசூக்காக சொல்லியிருப்பதாக எனக்கு படுகிறது (I might be wrong in my perception, in that case, I beg all of you to pardon me) - அதாவது ரொம்பவே cool ஆக பஞ்சபூதங்களை (நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் மற்றும் பூமி) இந்த பாடலில் இணைத்துள்ளார். நீர் : கடல் / கங்கை, நிலம் : பூமி, நெருப்பு : இதை நேரடியாக குறிப்பிடாமல் "கோவில்" என்று குறிப்பிட்டுள்ளார். "தீபம்" என்று ஒன்றில்லாமல் கோவில் இல்லை. அங்கு ஏற்றப்பட்டிருக்கும் "தீப"-த்தை (aka நெருப்பு) மறைமுகமாக குறிப்பிடுகிறார் (என் கணிப்பு தவறு என்றால் மன்னிக்கவும்), ஆகாயம் : வானம் and பூமி : பூமி. Is he indirectly conveying something? நமது ஆன்மீகத்தில் இந்த பஞ்சபூதங்களை "ஐம்புலன்க"லோடு ஒப்பிட்டுள்ளார்கள் - அதாவது கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் சருமம். இந்த ஐம்புலன்கள் வாயிலாக என்னவெல்லாம் அனுபவிக்கமுடியுமோ அவற்றையெல்லாம் திகட்ட திகட்ட அவள் அனுபவிக்க ஆசைப்படுகிறாள், அல்லது அனுபவிக்கிறாள் என்றா? அல்லது இந்த ஐம்புலன்களை அடக்கி (thereby conquering the பஞ்சபூதங்கள்) மனிதன் எட்ட முடியாத ஓர் உன்னதமான இடத்தை எட்டி நிற்கிறாள் / நிற்க ஆசைப்படுகிறாள் என்றா? It seems to be a subject for a good debate.

Now coming to music. பாடலாசிரியர் அந்த கேரக்டர் ஆக மாறி அவரது கற்பனையை கொட்டிவிட்டார். இப்போது அதற்க்கு உயிரூட்டவேண்டியவர் இசை அமைப்பாளர். கவிஞருக்கு என்னவோ ஒரே ஒரு முறை தான் உருமாறவேண்டியதாயிருந்தது. ஆனால், மன்னர் நிலைமை அப்படியல்லவே. கவிஞரது கற்பனைக்கு உயிரூட்ட, ஒவ்வொரு வார்த்தைக்கும் / வரிக்கும் ஏற்றாற்போல் எப்படியெல்லாம் உருமாறி இந்த பாடலுக்கு இசை அமைக்க நேர்ந்திருக்கும்? அந்த பெண் கதாபாத்திரமாக, காற்றாக, கடலாக, கங்கையாக, மேகமாக, மயிலாக / தோகையாக, தேராக, கன்றுக்குட்டியாக, பெண்மையின் நளினமாக, அப்பப்பா இப்படி எத்தனை உருமாற்றங்கள் நடத்தியிருப்பார் - அதுவும் கண் இமைக்கின்ற நொடியில். எண்ணிப்பார்த்தால், இவற்றையெல்லாம் நாம் உணர முடியும் அல்லது கற்பனை செய்து பார்க்க முடியும் என்று சொல்லலாம். ஆனால் பாருங்கள், சூரிய ஒளி பட்டு நதியின் சிறு அலைகளில் ஏற்படும் அந்த "பளபளப்புக்கு" உயிரூட்ட முடியுமா? முடியும் என்று நிரூபித்துள்ளார் இவர்!!!!! காட்சியை நாம் பார்க்கவில்லையென்றாலும் மெல்லிய காற்றில் சலசலக்கும் நதியின் சிறு அலைகளில் தோன்றும் அந்த பளபளப்பை பாடலை கேட்க்கும் போது கூட உணரமுடிகிறதே. இவற்றோடு சேர்ந்து இயக்குனரின் கற்பனைக்கும் இசை வாயிலாக உயிரூட்ட வேண்டும். இத்தனை சவால்களை ஒருங்கே சமாளித்து பாடலுக்கு எப்படி அவர் உயிரூட்டியுள்ளார்.

அவளது மனம், ஆசைகள் தான் சிறகடித்து பறக்கிறது, பாடுகிறது, ஆடுகிறது, அவளல்ல. Hence, KB has avoided lip sync and filmed as a background voice (in other words her mind voice). அவளது ஆசைகள், விருப்பங்கள், உணர்ச்சிகள் யாருக்கும் கெடுதல் நினைக்காதது / பண்ணாதது. மேலும் சற்று விரிவாக சொல்லவேண்டும் என்றால் புனிதமானது. அதை எப்படி இசையில் கொண்டு வருவது, அதுவும் காட்சியில் அவள் ஆடவில்லை இயற்க்கை மற்றும் இசை தான் ஆடவேண்டும்? அதற்க்கு மேற்கத்திய இசை சரிப்பட்டு வராது, because she is very much Indian. அங்கு தான் மன்னரின் சாதுர்யம் வெளிப்படுகிறது. புனிதமாகவும் இருக்கவேண்டும், அதே நேரத்தில் மேகங்கள், கடல், கங்கை, காற்று இவற்றின் சீற்றம், ஆர்ப்பரிப்பு, மென்மை, நளினம் எல்லாவற்றையும் காண்பிக்கவேண்டும். So he carefully chose traditional instruments like Madhalam (which is one of the instruments used in Panchavadyam and used for the classical arts Kadhakali and Krishnanaattam), Mridangam, Pakhawaj, Pullanguzhal, etc to convey all these elements and topped it with excellent chorus, which gives the song a celestial feeling. இருந்தாலும் அவள் ஓர் புதுமைப்பெண்ணும் கூட. Hence, he used Guitar too!!!!!

As mentioned above, “Madhalam, Mridangam/Pakhawaj” are the main percussions used in this song – note that Mannar’s most favourite percussion “Tabla” has been carefully/cautiously avoided. What would be the reason? என் கணிப்புப்படி “Madhalam, Mridangam/Pakhawaj” இவைகளை மட்டும் தேர்தெடுப்பதற்கான காரணம் : இந்த கருவிகளுக்கு ஓர் "தெய்வீக" தன்மை உண்டு என்பதால். "தெய்வீகம்' என்னும் பொழுது "புனித"-மும் அதனோடு சேர்ந்துவிடுகிறது தானே? கதைப்படி நாயகியை எப்படி சித்தரித்திருக்கிறார்கள் - "புனிதமானவள்" என்று தானே? அதை இசைவாயிலாக சுட்டிக்காட்டவே தான் இந்த கருவிகளை அவர் தேர்ந்தெடுக்கக்கூடும். மேலும், “Madhalam, Mridangam/Pakhawaj” இவைகளை உருவாக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது "பலா மரத்தின்" தடியை தான். பலாப்பழத்தின் தன்மை என்ன - "வெளியே பார்த்தால் ஒரே முற்களாக இருக்கும், ஆனால் உள்ளே அதன் சுளைகள் எத்தனை மென்மையானவை / இனிப்பானவை". So , இதுவும் indirectly கதாநாயகியின் குணத்தோடு ஒத்துப்போகிறது - வெளியே முரண்பாடாக தோன்றினாலும், மனதளவில் அவள் மிகவும் மென்மையானவள் / இனிப்பானவள்.

The prelude begins with a lengthy humming session in a relay fashion – first by the Chorus and then followed by the lead singer S.Janaki. The Chorus humming is set in slow – this portion is backed up by Madhalam in a typical nadai in contrast to the humming. The chorus portion can be matched with the heroine’s walking – she is shown as walking leisurely in a library. The percussions depict her boundless joy - அவளது எண்ணங்கள், சிந்தனைகள், சந்தோஷம் கடல் அலைகள் போல் பொங்கி எழுவதை சுட்டிக்காட்டுகிறது. அதை தொடர்ந்து எஸ்.ஜானகியின் குரலில் படு வேகமாக ஒலிக்கும் ஹம்மிங். இதற்க்கு பக்கபலமாக மிருதங்கம் அல்லது Pakhawaj அல்லது இரண்டும் சேர்ந்து அதைவிட வேகமாக வாசிக்கப்பட்டுள்ளது. ஜானகியின் ஹம்மிங் - திரையில் நாயகி தன் மாஜி காதலனுடன் வேகமாக ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருக்கிறாள் என்பதை justify செய்கிறது. அதற்க்கு contrast ஆக ஒலிக்கும் percussions அவளது மனநிலையை பிரதிபலிக்கிறது. அதை தழுவி மீண்டும் கோரஸ் சற்று slow ஆக ஒலிக்கிறது. இங்கு பக்கபலமாக Madhalam-த்தோடு சேர்ந்து மிகவும் சன்னமாக தபலா தரங்கும் வாசிக்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன் (இந்த இடத்தில மட்டுமே தபலா தரங் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தோன்றுகிறது – Normally Tabla Tarang is used to create a “celestial” / “serene” feeling). தொடர்ந்து மீண்டும் ஜானகியின் ஹம்மிங். அவரிடமிருந்து மீண்டும் கோரஸுக்கு கைமாறுகிறது ஹம்மிங். இப்போது கோரஸ் ஹம்மிங்கும் வேகமாக ஒலிக்கிறது. இத்தோடு prelude நிறைவு பெறுகிறது. இந்த பகுதிக்கு முழுவதும் மிருதங்கம் மற்றும் pakhawaj மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுல beauty என்னவென்றால், ஹம்மிங் slow and fast ஆக அமையப்பெற்றிருந்தாலும், அந்த மாற்றம் நிகழும் போது சற்றும் தொய்வு ஏற்படுவதில்லை, மறித்து ஒரே சீராக போய்க்கொண்டிருப்பது போன்ற ஓர் பிரமை ஏற்படுத்துகிறது. மன்னர் எப்படிப்பட்ட வித்தகர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. இந்த prelude நிறைவு பெறும் போது கோரஸ் ஹம்மிங்கை sustained ஆக ஒலிக்க செய்துள்ளார் மன்னர், அந்த கோரஸ் ஒலி முடியும் போது வயலினோடு சேர்ந்து Vibraphone-ணில் என நினைக்கிறேன் ஒரு broken chord வாசிக்கப்பட்டுள்ளது (இதை மிகவும் உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்) - இல்லையென்றால் abrupt ஆக நிறுத்தியது போலவும், அங்கு சில நொடிகளுக்கு இடைவெளி இருப்பது போலவும் தோன்றும் என்பதால். மேலும், இதன் வாயிலாக மற்றொன்றையும் அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். ஒருவர் ஓடிக்கொண்டிருக்கும் போது அந்த ஓட்டத்தை சட்டென்று நிறுத்தமுடியாது. மறித்து ஓட்டத்தை சற்று கட்டுப்படுத்தி, சற்று மெதுவாக ஓடி தான் ஓட்டத்தை நிறுத்துவார். இங்கே ஓடுவது அவளது எண்ணங்கள் / மகிழ்ச்சி. அதுவும் அவ்வண்ணமே - ஓடிய பிறகு மெதுவாக தன் ஓட்டத்தை நிறுத்துகிறது. இதை தான் அவர் கோடிட்டு காட்டுகிறார். இதை தொடர்ந்து ஜானகி குரலில் பல்லவி ஆரம்பமாகிறது. இங்கும் மன்னர் தன் வித்தையை காண்பித்துள்ளார். அதாவது, ஒருவர் ஓடிவிட்டு பிறகு ஓரிடத்தில் வந்து நிற்கும் போது அவர்க்கு மூச்சிரைக்கும் அல்லவா. ஆனாலும் அவருக்கு பாடவேண்டும் என்ற எண்ணம் எழுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது மூச்சிரைப்பின் காரணம் அவர் உச்சஸ்தாயியில் பாட நினைத்தாலோ, அல்லது வேகமாக பாட நினைத்தாலோ அது practically சாத்தியமாகாது ஒன்று. அவரிருக்கும் நிலைக்கு மெதுவாக, husky voice-ஸில் தான் பாட முடியும். இதை தான் பாடப்பட்ட விதத்தில் அவர் செய்து காட்டியுள்ளார். பல்லவியின் முதல் வரியை husky voice -ஸில் ஆரம்பிக்கிறார் ஜானகி. இந்த வரிக்கு எந்தவொரு இசைக்கோர்வையும் சேர்க்கப்படவில்லை. இந்த வரி முடிந்ததும் அதற்க்கு ஓர் interlude – if I am not wrong it has been played in Metallic Flute - இதை காற்றை சுட்டிக்காட்டுகிறது, அத்தோடு காற்றில் சலசலக்கும் சிறு அலைகளில் பிரதிபலிக்கும் சூரிய ஒளியின் பளபளப்பையும் உணர்த்துகிறது. Here, the rhythm is played in Guitar chords and has been backed up with excellent Bass Guitar. Claves or Castanet too has been played to add more charm to it. அதை தொடர்ந்து ஜானகி அதே husky voice-ஸில் அடுத்த வரியை பாடுகிறார். Rhythm pattern and other instruments are the same. Then the same interlude is repeated. Then SJ sings the next two lines without any interludes, but with “commas” in singing. Here too the same rhythm pattern continues and when she sings the last two words of each line Castanet / Claves have been added. அதை தழுவி மீண்டும் ஓர் நீளமான interlude – Here the rhythm starts in Maddalam (which is also a part of “Panchavaadyam” and also played for Kathakali) and Mridangam/Pakhawaj. Tambourine is played in semi-muted fashion in off-beat. The lead melody instrument seems to be Vibraphone – it has been played in two different style – one as a chord and other as notes, which sounds like “ட்ரனங்”, “ட்ரனங்”, “ட்ரனங்”…. (I may be wrong in identifying this instrument). After two Bars the Chorus join by humming for one Bar. This music conveys their bountless joy, கடலின் ஆர்ப்பரிப்பு, இயற்கையின் ஆனந்தம், அவர்களின் ecstacy. Then SJ sings the whole pallavi without any interludes. Singing portion-னை எப்படி வடிவமைத்துள்ளார் என்றால் - ரொம்பவே innocent ஆன ஓர் பெண் சில கேள்விகளை கேட்க்கிறாள் - காற்றுக்கு வேலி கிடையாது, கடலுக்கு முடியும் கிடையாது, கங்கையையும் சங்குக்குள்ளே அடக்கிவிடமுடியாது, அப்படியிருக்க ஓர் பெண்ணின் மனதுக்கு மட்டும் ஏன் விலங்கு போடவேண்டும் என்று இந்த சமுதாயம் அடம்பிடிக்கிறது? Note the difference in the way when she sings for the first time and then on the second time the line “மங்கை நெஞ்சம் பொங்கும் போது, விலங்குகள் ஏது?" முதலில் பாடும் போது ஓர் அறியா குழந்தை லேசாக அழுது கொண்டு "என்னப்பா இது அநியாயம்" என்று கேட்பது போலவும் (சிணுங்குவது போல்), இரண்டாவது முறை பாடும் போது "கெஞ்சுவது" போலவும் பாட வைத்துள்ளார்.

First BGM and First Charanam – This BGM has three difference sections – First Section : It begins with a lengthy Violin session - இதை எப்படி அமைச்சிருக்கார் என்று பார்த்தீங்கன்னா - சுழல்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும் படியாக வடிவமைத்துள்ளார் - அதாவது அவள் மனம் சந்தோஷக்களிப்பில் சுழல்வது போல். இதை நாம் இப்படியும் நினைத்துப்பார்க்கலாம் - அலைகள் ஆர்ப்பரிக்கிறது / கரையை நோக்கி நகர்ந்து வருகிறது - அதாவது ஆரம்பத்திலேயே கூறியது போல் அவள் ஆடுவது போல் படமாக்கப்படவில்லை, அவளது மனம் சந்தோஷத்தில் ஆர்ப்பரிப்பது போலத்தான் படமாக்கியுள்ளார் என்றும், மேலும் இயற்கையை ஆடவிட்டு அவளது மனநிலையை பிரதிபலிக்க செய்துள்ளார் என்றும். மேலும், வாத்துக்கூட்டம் நதியில் சுற்றித்திரிவது போலவும் படமாக்கியுள்ளார். கதாநாயகியின் மனது ராட்டினம் போல் சுழல்கிறது என்பதை சித்தரிக்க அவள் ராட்டினத்தில் அமர்ந்து சுழல்வது போலவும் படமாக்கியுள்ளார். இங்கு ரிதம் இதற்க்கு நேர் எதிராக வாசிக்கப்பட்டுள்ளது - அதாவது ஊஞ்சலாடுவது போல் - இதை சுட்டிக்காட்ட நாயகி விளையாட்டு குதிரை மீது அமர்ந்து ஆடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது. This can be interpreted in another way too : அதாவது அவளது இந்த சந்தோஷம் அதிக நாள் நீடித்து நிற்கப்போவதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது என்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம். Violin பகுதிக்கு தாளத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது "Madhalam". This portion ends with a small roll on the Pakhawaj. Then MSV infuses a small pause/silence. ஏனென்றால் ராட்டினம் போன்றவற்றில் சிறிது நேரம் சுற்றும் போது தலை லேசாக சுற்றுவது போல் இருக்கும். அப்போது சுழல்வதை நிறுத்தி அந்த "தலை சுற்றல்"லிலிருந்து மீள்வதற்கு ஓர் சிறு இடைவெளி தேவைப்படும் -- அதைத்தான் இந்த silence சுட்டிக்காட்டுகிறது. Silence-சை தொடர்வது Second Section : which is dedicated for humming – this section begins with a humming by Chorus. அதற்க்கு Vibraphone-ணில் ஓர் interlude. பிறகு Chorus ஹம்மிங் continue ஆக ஒலித்துக்கொண்டிருக்க, அதை overlap செய்து ஜானகியின் குரலில் ஹம்மிங் ஒலிக்கிறது. அங்கும் நடுவில் Vibraphone-ணில் interlude. நடு நடுவே Bells-ஸும் ஒலிக்க செய்துள்ளார். இந்த பகுதிக்கு தோல்கருவியும், தாளவும் மாறுபடுகிறது. இங்கு "Pakhawaj"-ஜை கொண்டுவந்துவிடுகிறார். கோரஸ் பகுதி அவர்கள் எதோ திவ்யமான சூழலில் மிதப்பதை சுட்டிக்காட்டுகிறது. பிறகு ஜானகியின் ஹம்மிங் - இது மேல்ஸ்தாயியிலிருந்து கீழிறங்கி வருவது போல் பாடவைத்துள்ளார். காரணம் எதோ ஓர் மயக்கத்தில் இருக்கும் அவர்கள் மெதுவாக கீழிறங்கி வருகிறார்கள் என்பதை சுட்டிக்காட்ட!!!!! What a way of imagination : அதாவது வார்த்தைகளால் வர்ணனை செய்யமுடியாத எதோ ஓர் இன்ப லோகத்தில் அவர்கள் பயணிப்பதை அந்த "Chorus" ஹம்மிங் கோடிட்டு காட்டுகிறது. அந்த இன்ப லோகத்திலிருந்து அவர்கள் படிப்படியாக கீழிறங்கி பயணிக்கிறார்கள் என்பதை கோடிட்டு காட்ட "Chorus" ஹம்மிங்கை தொடரவிட்டு அதில் மேலிருந்து கீழிறங்கி வருவது போல் ஜானகி குரலில் ஹம்மிங் பாடவைத்து overlap செய்திருப்பதை என்னவென்று சொல்லி மாளுவது. Third Section : This portion shows her restlessness. என்ன செய்வதென்று தவிக்கிற அவளது தவிப்பு, மாஜி காதலனிடம் சொல்வதற்கு எத்தனையோ விஷயங்கள் உள்ளன, எதை சொல்வது, எதை விட்டுவிடுவது என்ற தவிப்பு/குழப்பம், etc. இதுவரை அவள் புனிதமானவள் என்ற வகையில் இசைக்கோர்வை சேர்க்கப்பட்டுவிட்டது. இனி அவள் "புதுமைப்பெண்" கூட என்பதையும் இசைவாயிலாக சொல்லியாக வேண்டுமே – So this section is dominated by “Guitar” – Guitar-றில் chords ஒழிக்க, அதோடு Lead Guitar pieces மற்றும் Bass Guitar ஒலிக்கிறது. அவளது restlessness -ஸை குறிப்பது போல் Guitar பகுதி jumping பாணியில் வாசிக்கப்பட்டுள்ளது. தாளத்துக்கு "மிருதங்கம் / Pakhawaj". மெருகூட்ட Claves அல்லது Castanet பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்வது முதல் சரணம் : SJ முதல் இரண்டு வரிகளை பாடுகிறார், அதற்க்கு வயலினில் ஓர் interlude. அவர் பாடுகிறார் "நான்... வானிலே மேகமாய், பாடுவேன் பாடல் ஒன்று" அவள் வானத்தில் சென்று பாடுவேன் என்கிறாள். அவளது மனம் ராக்கெட் வேகத்தில் பிறக்கவில்லை, மறித்து பறவை போல் சிறக்காது தான் வானத்துக்கு செல்கிறாள் என்பதை காண்பிக்க பறவைகள் சிறகடித்து வானை நோக்கி பயணிப்பது போல் ஒவ்வொரு வார்த்தையையும் நீட்டி, அதை sustain செய்து பாடவைத்துள்ளார்!!!!! அதற்க்கு interlude ஆக வரும் வயலின் பீஸ் ascending notes-ஸில் வாசிக்கப்பட்டு sustain ஆக நிறுத்தப்பட்டுள்ளது - ஏனென்றால் வானை நோக்கி பயணிக்கிறாள் என்பதை சொல்லியாகவேண்டும் அல்லவா. அங்கு எட்டிவிட்டாள் என்பதை காணிக்கை sustain ஆக நிறுத்துகிறார்! இதை தொடர்ந்து Vibraphone -ணில் என நினைக்கிறேன் ஒரு சிறு swirl - அதாவது "U Turn" அடிப்பது போல் - ஏன் என்று புரிகிறதா? அடுத்து வரும் இரு வரிகளை முன்கூட்டியே சுட்டிக்காட்டுகிறார் - அடுத்து வரும் வரிகள் "நான் பூமியில் தோகைபோல், ஆடுவேன் ஆடல் ஒன்று" - அதாவது ஆகாயத்தில் இருந்து அவள் பூமிக்கு வருகிறாள் ஆடுவதற்காக. இதை தான் அவர் அந்த Vibraphone swirl வாயிலாக நமக்கு உணர்த்துகிறார். இந்த இரண்டு வரிகளுக்கு பிறகும் வருகிறது வயலினில் ஓர் interlude - அது எப்படி என்கிறீர்கள் - மேல்ஸ்தாயியிலிருந்து கீழிறங்கி வருவது போல் - ஏனென்றால் அவள் வானிலிருந்து பூமியை நோக்கி இறங்குகிறான் அல்லவா!!!!! இதற்க்கு follow on போல் Vibraphone swirl கிடையாது, ஏனென்றால் அடுத்து இதே வரிகள் தான் பாடப்படுகிறது என்பதால். இரண்டாவது முறை பாடப்படும் போது அங்கு அவர் அதை சற்று improvise செய்துள்ளார் - இரண்டு வரிகளுக்கு பிறகு வரும் வயலின் interlude -டிற்கு பதிலாக "Chorus ஹம்மிங்" சேர்த்துள்ளார் interlude ஆக. இதுவரை "மிருதங்கம் / Pakhawaj"--ஜில் ஓர் பாணியில் தாளநடை போய்க்கொண்டிருக்கிறது. அந்த Chorus ஹம்மிங் interlude முடியும் போது அதை அப்படியே overlap செய்து தாளநடை மாறுபடுகிறது - காரணம் அடுத்து வரும் நான்கு வரிகள் அப்படி - "கன்றுக்குட்டி துள்ளும் போது, காலில் என்ன கட்டுப்பாடு, காலம் என்னை வாழ்த்தும் போது, ஆசைக்கென்ன தட்டுப்பாடு" - கன்றுக்குட்டி துள்ளும் போது என்று வருவதால் கன்றுக்குட்டி எப்படி துள்ளிக்குதித்து தாவி ஓடுமோ அதை நினைவுபடுத்துவது போல் தாள நடை அமைத்துள்ளார். மேலும், அந்த துள்ளும் உணர்வை பாடும் பாணியிலும் கொண்டுவந்துள்ளார். இங்கு ஒவ்வொரு வரி முடிந்த பிறகு Vibraphone-ணில் (அல்லது அந்த காலத்தில் திருவிழாக்களில் Xylophone வடிவில் பிளாஸ்டிக்கில் ஓர் Whistle கிடைக்கும், அதை வாயில் வைத்து Mouth Organ போல் வாசித்தால் ஓர் வித்தியாசமான ஒலி வரும், அந்த கருவியை பயன்படுத்தியிருக்கலாம் - காரணம் அவளது பல சேஷ்டைகள் சிறு பிள்ளைகள் செய்வது போன்றதை சுட்டிக்காட்ட) ஓர் சிறு interlude. இந்த சரணம் முடிக்கப்படுவது பல்லவி முழுவதுமாக பாடப்பட்டு.

Second BGM and Second Charanam – First Section : இந்த BGM ஆரம்பமாவது Chorus ஹம்மிங்கோடு. அதற்க்கு Vibraphone (அல்லது மேலே கூறியது போல் அந்த பிளாஸ்டிக் Xylophone வடிவில் உள்ள கருவியாக கூட இருக்கலாம் - உள்ளத்தில் அவள் பல சமயங்களில் அவள் சிறு பிள்ளை போல் என்பதை உணர்த்த)-ணில் ஓர் interlude . அதை தழுவி மீண்டும் Chorus ஹம்மிங். மீண்டும் அதே கருவியில் interlude. இங்கு சற்று உன்னிப்பாக காவித்தீர்களானால் ஒன்று புரியும் - முதல் ஹம்மிங் ஆரோஹணத்திலிருந்து அவரோகணம் போலவும், அடுத்த ஹம்மிங் நேர் எதிராக அவரோஹணத்திலிருந்து ஆரோகணம் போலவும் hum செய்யப்பட்டுள்ளது. இதற்க்கு நேர் எதிராக, முதல் interlude low pitch -சிலிருந்து high pitch போவது போலவும், இரண்டாவது interlude high pitch -சிலிருந்து low pitch போவது போலவும் வாசிக்கப்பட்டுள்ளது – again a musical way of conveying that - அவள் நினைப்பது ஒன்று ஆனால் நடக்கப்போவது ஒன்று என்பதை நினைவு படுத்துவது போல். இது வரை தாளக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது - பயன்படுத்தப்பட்ட கருவிகள் "Madhalam" மற்றும் "Pakhawaj". இந்த interlude முடியும் போது தாளக்கருவிகள் விடை வாங்குகிறது. Second Section : வயலினில் ஓர் பீஸ் ஒலிக்க, அதற்க்கு contrast ஆக Cello மற்றும் Viola-வில் மற்றுமொரு track ஒலிக்கிறது. அதை தழுவி அந்த Whistle போன்ற கருவியில் ஒரு interlude - இங்கும் undercurrent ஆக String section ஒலிக்கிறது. அதை தழுவி Chorus ஹம்மிங்கில் ஸ்வரங்கள். அதை தழுவி மீண்டும் அந்த Whistle கருவியில் interlude. Third Section : முதல் BGM -மை விட இது ரொம்ப சிறிது - Guitar Chords rhythm பாணியில் வாசிக்கப்பட்டுள்ளது. Second Charanam : இந்த சரணவும் முதல் சரணம் போல் தான் என்றாலும், சிறு மாறுதல் செய்துள்ளார் - அதாவது இங்கு repetition கிடையாது. மற்றபடி interludes எல்லாம் முதல் சரணத்தில் இருந்தது போல் தான்.

The song ends by singing the pallavi in whole without any repetition, which is followed by a postlude in Chorus humming, which has interludes in that Whistle like instrument. Towards the end the music slowly fades, where only the percussion instruments are played.

இந்த பாடல் எங்கேயோ வைத்து கொண்டாடப்படவேண்டிய ஓர் பாடல். ஏன் என்கிறீர்கள் தானே - அதாவது, பெண்களின் சுதந்திரம் / பெண் விடுதலை இவற்றைப்பற்றி ஓர் பெண் எழுத்தாளர், பேச்சாளர், பெண் இயக்குனர் போன்றோர் எளிதில் சொல்லிவிடலாம், சித்தரிக்கலாம். ஆனால், இதை ஆண்கள் சொல்வதென்பது, வடிவமைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. அந்த காரியத்தை மூன்று ஆடவர்கள் சேர்ந்து : இயக்குனர் கே.பாலசந்தர், கவிஞர் கண்ணதாசன் மற்றும் இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் - எவ்வளவு வெற்றிகரமாக செய்துகாட்டியுள்ளார்கள் இந்த படம் / பாடல்(கள்) வாயிலாக. அதனால் தான் இது ஓர் தனித்துவம் வாய்ந்த கொண்டாடப்படவேண்டிய பாடல் என்று.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://youtu.be/RSICeyfMSO0


Quote
Share: