1977 - Avan Oru Sar...
 
Notifications

1977 - Avan Oru Sarithiram - Vanakkam Palamurai Sonnen  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 54
01/10/2019 2:22 pm  

பாடல் : வணக்கம் பலமுறை சொன்னேன்

படம் : அவன் ஒரு சரித்திரம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, குழுவினர்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருஷம் : 1977

 

அனைவருக்கும் வணக்கம்.

உலகின் முதல் மொழி தமிழ் மொழி என்று கருதப்படுகிறது. தமிழின் / தமிழனின் / தமிழ் பண்பாட்டை / கலாச்சாரத்தை / பெருமையை பறைசாற்றும் வண்ணம் மன்னரின் இசையிலேயே பல பாடல்கள் உள்ளன - அவற்றில் சட்டென்று சொல்லக்கூடியவை "தமிழுக்கும் அமுதென்று பேர்" மற்றும் "உலகின் முதல் இசை தமிழிசையே".  இவற்றுக்கெல்லாம் மேலாக "தமிழ் தாய் வாழ்த்து" பாடலுக்கு இசை அமைத்தவரும் நமது மன்னர் தானே.  இன்று நாம் ஆராய இருப்பது தமிழ் பண்பாட்டை / கலாச்சாரத்தை பறைசாற்றும் ஓர் உன்னதமான பாடல்.  மிக பெரிய வெற்றி பெற்ற இந்த பாடலை நாம் எத்தனை முறை கேட்டிருப்போம் என்பதற்கு கணக்கே இருக்காது.  எல்லோரையும் மகிழ வைக்கும் அப்படிப்பட்ட பாடலை இன்று சற்று மாறுபட்ட கோணத்தில் பார்ப்போமா - அதாவது மன்னர் எப்படியெல்லாம் யோசிச்சு இந்த பாடலை வடிவமைத்திருப்பார் என்பதை.

பாடல் இடம்பெறும்வரையிலான படத்தின் கதை - டி.கே.பகவதி மற்றும் பண்டரிபாய் தம்பதிகளின் பிள்ளைகள் சிவாஜி, ஸ்ரீகாந்த் மற்றும் எம்.பானுமதி.  சிவாஜியின் மாமன் மகள் மஞ்சுளா.  மஞ்சுளா சிறுவயதிலிருந்தே சிவாஜியை மனமார விரும்புகிறார்.  சிவாஜி மஞ்சுளா மீதுள்ள காதலை வெளியே சொல்லாமல் மனதுக்குள்ளேயே வைத்திருக்கிறார்.  சிவாஜியின் ஒன்றுவிட்ட மாமன் வி.கே.ராமசாமி.  அவர் அந்த ஊரிலேயே பெரிய செல்வந்தர். அவரது இரண்டாம் தாரம் மனோரமா. வீகேஆரின் பிள்ளைகள் சோ மற்றும் காஞ்சனா.

சிவாஜி IAS தேறி அவர் பிறந்த ஊரிலேயே சப்-கலக்டராக பதவி ஏற்கிறார்.  சிவாஜியின் தங்கை பானுமதி சோவை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். காஞ்சனா அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து தாய்நாடு திரும்புகிறார்.   அவரை பாராட்டி வரவேற்கும் நிகழ்ச்சியில் தான் இந்த பாடல் இடம் பெறுகிறது.

சரி, பாடலை கவனிப்போமா -

The song begins with a lengthy prelude.  This portion is structured in western style.  காரணம், மேல்நாட்டில் படிப்பை முடித்து வரும் மகள் அந்த நாட்டு கலாச்சாரத்தில் ஊறி மிகவும் மாடர்ன் ஆக வருவாள், தமிழே தெரியாது என்பது போல் ஆங்கிலத்தில் தான் பேசுவாள் என்றெல்லாம் கணக்கு போட்டு தகப்பன் ஏற்பாடு செய்த படாடோப வரவேற்பை அது சுட்டிக்காட்டுகிறது.  மேலும் அரண்மனை போன்ற அந்த மாளிகையின் பிரம்மாண்டத்தையும் சுட்டிக்காட்டுகிறது.  Prelude ஆரம்பிப்பது Chorus-ஸின் high pitched humming-ங்கோடு.  அதற்க்கு support ஆக guitar chords சேர்க்கப்பட்டுள்ளது.  அதை தழுவி Bass Guitar note ஒழிக்க, அதோடு சேர்ந்து  Guitar Chords rhythm பாணியில் ஒலிக்கிறது.  தொரடர்ந்து Drums-ஸில் ஒரு சிறு roll.  The rhythm in Drums too starts from there.  Following the Drums roll starts the lengthy Brass section – Trumpet / Sax / Trombone.  இங்கு rhythm-துக்கு டிரம்ஸ் மற்றும் காங்கோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.  கூடவே கிட்டார் chords-ஸும் சேர்க்கப்பட்டுள்ளது.  This portion is embellished with Beaded Maracas.  அதை தழுவி மீண்டும் கோரஸ் ஒலிக்கிறது - இரண்டு பகுதியாக. முதல் பகுதி கோரஸ் : ஒலிப்பது "டுடுடு டுடு டுடுடு" -  இங்கு percussion தவிர்க்கப்பட்டுள்ளது.  மறித்து rhythm ஆக கிட்டார் chords ஒலிக்கிறது.  Chorus-ஸோடு சேர்ந்து Combo Organ-னும் ஒலிக்கிறது.  இரண்டாவது பகுதி கோரஸ் : ஒலிப்பது "ஆ......ஆ......." - இந்த கோரஸ் ஹம்மிங் முதல் பகுதி கோரஸ் முடிந்ததும் இடைவெளி இல்லாமல் தொடங்குகிறது.  இது வரை ஆர்பாட்டமாக ஒலித்துக்கொண்டிருந்த இசை இங்கு சற்று திசை மாறி சாந்தமாகிறது.  இந்த கோரஸ் ஹம்மிங்கிற்கு பக்கபலமாக கிட்டார் chords மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.  பாடலின் மெட்டும் "bhaavamum" மாறப்போகிறது என்பதை இங்கிருந்தே கோடிட்டு காட்டுகிறார் மன்னர்.  இந்த கோரஸ் ஹம்மிங் சற்றே fade out பாணியில் முடியும் போது சுசீலா பாடலுக்குள் என்ட்ரி ஆகிறார் - "ஆ...... " என்ற நீண்ட ஹம்மிங்கோடு.  அவரோடு தபலாவும் சேர்ந்து கொள்கிறது.  பக்கபலமாக சன்னமாக ஒலிக்கும் Tambourine மற்றும் கிட்டார் chords.  Western Style-லில் ஆர்பாட்டமாக போய்க்கொண்டிருக்கும் இசைக்கு நடுவில் இது யாருடா கிளாசிக்கல் ஸ்டைலில் ஹம்மிங்கோடு நுழைகிறார் என்ற எதிர்பார்ப்பு அவையோர் நடுவில்.  காரணம் அது வரை வரவேற்புக்குரியவரான காஞ்சனாவை frame-மில் காண்பிப்பதேயில்லை.  எல்லோர் கண்களும் ஹம்மிங் வரும் திசையை நோக்க, ஹம்மிங்கின் கடைசி பகுதியில் காஞ்சனா தோன்றுகிறார் - மாடிப்படி மீது - மிகவும் எளிதாக, அடக்கமாக.  கூடியிருப்பவர்கள் அனைவரும் கோட் / சூட்/ பட்டுச்சேலை / பளபளக்கும் உடைகள் / நாகரீக உடைகளில் / உடல் முழுதும் நகையோடு  வந்திருக்க அதற்க்கு மிகவும் நேர் எதிராக மிகவும் எளிதான சேலையோடு, கழுத்தில் ஒரு முத்துமாலையும், அதற்க்கு ஏற்றாப்போன்ற ஓர் காதணியோடும் தோன்றுகிறார் காஞ்சனா.  அவர் எப்படிப்பட்ட குணமுடையவர் என்பதை இது உணர்த்திவிடுகிறது.  ஹம்மிங் முடந்ததும் அடுத்த ஷாக் காத்திருக்கு அவளது குடும்பத்தாருக்கும், அவையோருக்கும் - காரணம் ஆங்கிலத்தில் பாட ஆரம்பிப்பார் என்று எதிருப்பார்த்துக்கொண்டிருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் / அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதம் "வணக்கம், வணக்கம், வணக்கம்" என்று தூய தமிழில் மூன்று முறை இனிதாக கூறி, கையெடுத்து கும்பிட்டு வரவேற்கிறார்.   இது எல்லோரும் யோசித்து முடிவெடுத்ததா?  அல்லது மீட்டருக்காக மூன்று முறை நிர்ணயிக்கப்பட்டதா?  அல்லது நம் பண்பாட்டை சுட்டிக்காட்டும் நோக்கத்தில் செய்யப்பட்டதா?  எது எப்படியோ நமது பண்பாட்டில் / சாஸ்திரத்தில் / பழக்கத்தில் இந்த "மூன்று"-க்கு ஒரு தனி விலை உண்டு.  எப்படி என்கிறீர்களா –

(1) ஒருவர் வீட்டு விஷேஷத்திற்கு அழைப்பை ஏற்று நாம் போகும் போது, அழைத்தவர்கள் வாசலிலேயே நின்று வருபவர்களை ஒவ்வொருவரையும் பார்த்து முகம் மலர, வாய் நிறைய புன்சிரிப்போடு "வாங்க, வாங்க, வாங்க" என்று ஒன்றுக்கு மூன்று முறை  சொல்லும் வழக்கம் பழக்கத்தில் உள்ளது அல்லவா.  அந்த மூன்று முறை "வாங்க" என்ற சொல்லே சொல்லிவிடும் அவர்கள் நம் மீது எவ்வளவு அன்பு, மதிப்பு, மரியாதை வைத்துள்ளார்கள் என்று.  அட, விசேஷத்தை விடுங்க, தெரிந்தவர் ஒருவர் அல்லது உறவினர்கள் வீட்டிற்கு முன் அறிவிப்பு ஏதுமின்றி நாம் போய் நிற்கும் போது, மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் பொங்க அவர்கள் "வாங்க, வாங்க, வாங்க" என்று ஒன்றுக்கு மூன்று முறை  சொல்லும் போதே புரிந்து விடாது அவர்கள் நம் மீது எவ்வளவு அன்பு, மதிப்பு, மரியாதை வைத்துள்ளார்கள் என்று. இது காலாகாலமாக பின்பற்றப்படுகின்ற ஓர் வழக்கம்.

(2) விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற ஸ்தோத்திரத்தில் ஓர் சில வரிகள் மூன்று முறை சொல்லவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதற்குரிய காரணங்களையும் சொல்லியுள்ளார்கள் - இதற்க்கு முந்தைய நமது மூன்று ஜென்மங்களில் நாம் செய்திருக்கக்கூடும் என்று நம்பக்கூடிய பாபங்களிலிருந்து நமக்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்பதற்க்கு என்று ஓர் சிலர் விளக்கம் கூறுவதுண்டு.    அதே போல் பித்ருக்களுக்காக செய்யும் தர்ப்பணங்களிலும் சில மந்திரங்களை மூன்று முறை சொல்வது வழக்கம்.  இவை நமது மூன்று தலைமுறைகளுக்கு செய்வதை குறிக்கிறது. அது போல் ஹோமம் வளர்த்து செய்யும் பல பூஜைகளிலும் பல மந்திரங்களை மூன்று முறை சொல்லி நெய்-யை ஹோமத்தில் சமர்ப்பிப்பது வழக்கம். சாந்தி மந்திரங்களும் அவ்வண்ணமே.

(3) சத்தியங்கள் எடுத்துக்கொள்ளும் போதும் மூன்று முறை எடுத்துக்கொள்வது தானே வழக்கம்.  ஆக, the “three” has got a certain value to it. 

அதனால் இதையெல்லாம் மனதில் வைத்துக்க்கொண்டு தானோ அப்படி வடிவமைத்துள்ளார்?  "வணக்கம்" சொல்லும் போது வாத்தியக்கருவிகள் அனைத்தும் நின்றுவிடுகின்றன.  அதை தொடர்ந்து பலத்த கரகோஷம்.  அதை தொடர்ந்து பல்லவி ஆரம்பிக்கிறது.  இங்கிருந்து பாடலின்  route மாறிவிடுகிறது - மேற்கத்திப்பாணியை முற்றிலும் தவிர்த்து எளிதான, கிளாசிக்கல் touch-ச்சோடு, மெல்லிசை பாதையில் பயணிக்கிறது பாடல்.  காரணம், மேல்நாட்டிலிருந்து வந்தாலும் she is not influenced by the Western culture மறித்து அவள் தமிழை, தமிழ் பண்பாட்டை மறக்காதவள், தமிழ் பண்பாட்டை / கலாச்சாரத்தை மிகவும் மதிப்பவள், தமிழ் பண்பாட்டை பின்பற்றி நடப்பவள் – viz., a true Tamilian in all aspects என்பதால் - "வணக்கம்" என்பதை மூன்று முறை கூறி தான் "தமிழச்சி" தான் என்று ஆணித்தரமாக அவையோருக்கு தெரியப்படுத்துகிறாள்.  இதைவிட இசையில் வேறெப்படி அதை சுட்டிக்காட்ட முடியும்?  Shouldn’t our Mannar deserve a big round of applause for this?  PS sings the first three lines of the pallavi.  அதை தழுவி புல்லாங்குழலில் ரம்மியமான ஓர் interlude.  பல்லவி ஆரம்பிக்கும் போது தபலாவோடு "தவில்"-லும் சேர்ந்துகொள்கிறது தாளத்துக்கு.  "தவில்" சேர்க்கப்பட்டதின் காரணம் : தமிழ் கலாச்சாரத்தோடு ஒன்றிவிட்ட ஓர் மங்களகரமான இசைக்கருவி "தவில்".  எப்படி யோசித்திருக்கிறார் மன்னர் அல்லவா?  The pallavi is embellished with muted Tambourine.  PS repeats the same lines again.  Here, again Flute interlude follows.  Then PS sings the last two lines of the pallavi - இந்த வரிகள் பாடும் போது அப்படியே மெய்சிலிர்க்கிறது.  Then PS repeats the first three lines of the pallavi and thus the pallavi is completed. 

First BGM – it can be divided into three parts – first part :  Notes followed by chords on 12 String Guitar (if I am not wrong) is played for one bar.  Alongwith that Bells are also played.  It has been supported by either Congos or Thumba.  This part is slightly slow compared to the other two parts.  Second part : Violins are played for one bar.  This portion is supported by Guitar chords and Congos.  Here the tempo is faster.  Third part : Flute is played for one bar.  Here, Congos leaves way to Tabla for rhythm.  Second and Third parts are embellished with Beaded Maracas.  This BGM is finished with notes on Bells and a small follow on by Violin, which gives clue to the singer to start the charanam.  PS starts the charanam.  She sings the first two lines of the charanam and without gap / interlude she repeats the same.  Then she sings the next two lines and repeats that lines too.  Then she sings the next line and the orchestra stops.  She then sings the last line without any accompaniment of instruments.  When she finishes the last line, rhythm in Tabla starts and Flute joins as a follow on.  Tabla is the main percussion used in this charanam.  It is embellished with Guitar Chords (played as rhythm) and muted Tambourine.  This charanam is finished by singing the first three lines of the pallavi. 

Susheela’s portions are structured slightly in low pitch – may be half octave or so, compared to that of TMS’s portions, the reason as assumed by me may be : eventhough Kanchana is educated in Overseas she is down to earth, simple, humble, level headed, not in awe of overseas countries’ developments / culture.  "மேலை நாடெங்கும் விஞ்ஞான கலைகள்" என்று ஆரம்பிக்கும் அவரது முதல் சரணத்தில் மேலை நாடுகள் என்னதான் வியக்கத்தக்க ரீதியில் முன்னேறியிருந்தாலும் அந்த வளர்ச்சியை அவர் மதித்தாலும் அவை தன்னை ஒரு போதும் வியப்பில் ஆழ்த்தவில்லை என்பதை பாடிய விதத்தில் உணர்த்திவிடுகிறார்.  அது போல் "அங்கு பெண் இல்லை, பேசும் கண் இல்லை, என்ன அலங்கோலமோ, என்ன புது மோகமோ" என்று பாடும் போது சிறிதாக நக்கல் கலர்ந்திருப்பதை கவனிக்கவும். அது போல் மூன்றாவது சரணத்தில் "அன்னை தாய்ப்பாலை பிள்ளைக்கு கொடுத்து....." என்று அவர் பாடும் போது தாய்மை கலர்ந்த பெருமிதம் தொனிப்பதை கவனிக்கவும். Reason for TMS’s portion structuring in slightly high pitch : ஓர் உயர்ந்த அரசாங்க அதிகாரிக்கே உரித்த மிடுக்கு / கம்பீரம் சிவாஜியிடம் உள்ளது என்பதை சுட்டிக்காட்ட (he is Sub-Collector in the movie). "நான் தமிழன்டா" என்று மார் தட்டி சொல்லும் பெருமிதம். மேலும், தன் உறவுக்காரியான காஞ்சனா மேல்நாட்டு சென்று படித்து வந்தாலும் "தமிழ் பெண்ணாகவே" திரும்பி வந்துள்ளார் என்ற பெருமிதம், உலகிலேயே சிறந்த மொழி தமிழ் / சிறந்த கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் என்று சொல்லிக்கொள்வதிலிருக்கும் கர்வம்.

இவர்களை ஆட்டிப்படைத்தவர் யார், "MSV " தானே?  எப்படியெல்லாம் மூளை வேலை பார்க்குது பாருங்கள்.

Second BGM – this BGM is quite short.  It starts with a small piece in Violin and ends with a Flute piece.  There is no clue thru Violin here like the first BGM, the Flute bit itself becomes the clue.  Even in the small piece of BGM MSV brings variations – For the Violin bit he plays Congos as rhythm and when it jumps to Flute he shifts that to Tabla!  Both the portions are embellished with Beaded Maracas.  This charanam is sung by TMS alone.  This charanam is sung exactly the same way like first charanam.  Orchestration too is the same.  Compared to first charanam, striking of Guitar Chords are heavy and can be heard prominently. 

Third BGM – this one is the repetition of first BGM but with a slight change, i.e., he has avoided the Violin session after the Guitar piece and straight away jumps to Flute session.  This charanam too structured in the same manner like the other two charanams – but with slight modifications – here TMS too joins PS at the end.  When PS sings 3/4 of the charanam and TMS joins in by singing the last two lines.  And together  they sing the whole pallavi once and repeats the first three lines to finish the song. At the end you can hear the heavy Guitar Chord. 

One more thing to be noticed that he has used “Thavil” only for the pallavi portions. 

மன்னர் இந்த பாடலில் செய்துள்ள ஜாலங்கள் :

1)  மேற்கத்திய பாணியில் ஆரம்பிக்கும் Prelude, விழா நாயகி தமிழில் பாட ஆரம்பித்தவுடன் அப்படியே தடம் புரள செய்து  முழுக்க முழுக்க Traditional பாணியில் அமைத்த சாதுர்யம்.

2)  காலாகாலமாக மக்களிடம் ஊறியிருக்கும் ஓர் வழக்கத்தை - அதாவது ஒரு வார்த்தையை மூன்று முறை சொல்வது - காஞ்சனாவின் கதாபாத்திரம் நான் "தமிழச்சி" தான் என்று நாசூக்காக  உறுதி மொழி எடுத்துக்கொள்வது போல் பயன்படுத்திய யுத்தி.

3)  காஞ்சனாவின் கதாபாத்திரம் தெள்ளளவும் கர்வம் இல்லாதவள், so restrained, அன்பு பண்பு நிறைந்தவள் என்பதை சுட்டிக்காட்ட சுசீலாவை subdued ஆக பாடவைத்த சாதுர்யம்.

4)  நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்தின் மிடுக்கு, என்னதான் மேல்நாட்டு சென்று படித்து வந்தாலும் தன் உறவுக்காரி திரும்பி வந்துள்ளது முழுக்க முழுக்க "தமிழச்சி"யாக தான் என்ற பெருமிதம், அவருக்கு தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் இருக்கும் பற்று மற்றும் கர்வம் இதை மிக அழகாக TMS குரலில் புகுத்தியிருக்கும் மிடுக்கு.

மீண்டும் ஓர் அரிய பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=-GkikaCQ-Rc


Quote
Share: