1977 - Aaru Pushpan...
 
Notifications

1977 - Aaru Pushpangal - Yendi Muthamma  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 54
07/09/2019 5:00 pm  

பாடல் : ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை

படம் : ஆறு புஷ்பங்கள்

பாடியவர்கள் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1977

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது ஒரு "property" based பாடல்.  இன்றைய பாடலில் "property"-யாக வருவது "மாட்டுவண்டி".

மன்னரை பொறுத்தவரை நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன், ஒரு பாடலை வடிவமைக்கும் பொழுது பல விஷயங்களை கேட்டு மனதில் வாங்கிக்கொண்டு தான் அந்த பாடலை வடிவமைப்பார் என்று.  மேலும், கேட்டு அறிந்ததை விட பல மடங்கு கற்பனை செய்து பல விஷயங்களையும் அவர் புகுத்திவிடுவார் என்றும்.  அப்படி அவர் செய்த விஷயங்களை அவர் ஒரு பொழுதும் வெளிப்படையாக சொன்னதில்லை (ஓர் சில பாடல்களை தவிர).  அப்படி அவர் பாடலில் புகுத்திய விஷயங்களை நாம் தான் கண்டறியவேண்டியுள்ளது. 

இன்றைய பாடலில் "property"-யாக வருவது "மாட்டுவண்டி" என்று சொன்னேன் அல்லவா.  மன்னர் இயக்குனரிடம் கேட்டு அறிந்திருக்க கூடிய விஷயங்கள் :>> மாட்டு வண்டி பாடலில் எப்போதிருந்து வருகிறது, பாடல் முழுதும் வருகிறதா இல்லை சிறு portion -னுக்கு மட்டும் தான் வருகிறதா, இல்லை நடு நடுவே வருகிறதா, அந்த வண்டி பயணிக்கும் பாதை என்ன, ஏதெல்லாம் வழியாக பயணிக்கின்றன, போகும் வழியில் தோன்றும் காட்சிகள் என்ன, ஆறு-குளம்-நதி-மேடு-பள்ளம்-மலை-வயல் என ஏதாவது தோன்றுமா, ஒரே ஒரு வண்டி மட்டும் தானா அல்லது பல வண்டிகள் ஓடுவதாக படமாக்கப்படுமா, வண்டி ஊர்ந்து செல்வது போல் மெதுவாக நகருமா அல்லது வேகமாக ஓடுமா, யார் பாடுவதாக சித்தரிக்கப்போகிறீர்கள், வண்டிக்காரன் சேஷ்டைகள் / எழுப்பும் ஒலி என ஏதாவது இடம்பெற வேண்டுமா, வண்டியில் எங்கெல்லாம் சலங்கைகள் பொருத்தப்பட்டிருக்கும்  - இப்படி பல விஷயங்களை அவர் கேட்டு கிரஹித்துக்கொண்டிருக்கக்கூடும் என நினைக்கிறேன். 

இந்த பாடலை பார்த்தீர்களானால் பல மாட்டுவண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக நகர்வதுபோல் தான் படமாக்கப்பட்டுள்ளது.  வண்டிகள் பயணிக்கும்  பாதையோ கரடு முரடான நாட்டுப்பாதை - ஆங்காங்கே மேடு பள்ளங்கள் நிறைந்த மண் பாதை.  சுற்றும் புல்மேடுகள், சிறு குன்றுகள், மலை, தோப்பு, வயல் என இயற்க்கை எழில் கொஞ்சும் காட்சி.  பாடல் நெடுக வண்டிகள் மெதுவாக தான் நகர்கின்றன.  காளைமாட்டுக்கு மற்றும் வண்டிகளில் சலங்கைகள் / மணிகள் பூட்டப்பட்டுள்ளன.  பாடலை பாடுவது முக்கிய வேடத்தில் நடிப்பவர்கள் யாருமல்ல, மறித்து ஆடு/மாடு மேய்ப்பவன் ஒருவன் சிறு குன்றின் மேலிருந்து பாடுகிறான்.  இந்த விஷயங்களை மனதில் வைத்து பாடலை மிக தத்ரூபமாக வடிவமைத்துள்ளார் மன்னர்.

Throughout the song he has used different types of Salangai, making different sounds, and “Bells” (மணிகள்).  வண்டிகள் பயணிக்கும் பாதைக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் and cuts / jumps -ஸுடன் பாடலை வடிமைத்துள்ளார் – singing as well rhythm.  இயற்க்கை எழில் கொஞ்சும் பாதை என்பதால் அதற்க்கு ஏற்றாற்போன்ற இசைக்கோர்வை with rustic feeling.  சலங்கை / மணியின் ஒலி பாடலின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரைக்கும் ஒலித்துக்கொண்டிருக்குது என்பதை குறிப்பாக எடுத்து சொல்லவேண்டும்.  ஒரு கணம் கூட continuity விட்டுப்போகாமல் மிக கவனமாக செயல்பட்டுள்ளார். 

பாடுபவன் ஆடுமேய்க்கும் ஓர் பட்டிக்காட்டான் என்பதால் பாடுபவர் குரலில் அந்த rustic feel -லை முழுமையாக கொண்டுவந்துள்ளார்.  இப்படி பாடுபவர்கள் பெருபாலும் உரத்த குரலில் தான் பாடுவார்கள் என்பதால் பாடல் முழுதும் highpitch -லேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.  Moreover, he is standing on a hill top and watching his cattle / goats.  Hence, his voice should reach them too.  இதை தவிர வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் feelings. 

It’s one of the best folk based songs composed by Mannar.

இப்போது பாடலை பார்ப்போமா.  இந்த பாடலை முழுவதுமாக உணர்ந்து கொள்ள படத்தின் கதையை அறிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை.  படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான இரு ஜோடிகள் தங்கள் காதலை மறைமுகமாக வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பமாக அமைந்த பாடல்.  அந்த காதலை வெளிப்படுத்தும் கருவாக மாடு மேய்ப்பவன் பயன்படுத்தப்பட்டுள்ளார்.

The song begins with a short but excellent prelude - Rabab -பில் notes play ஆகிறது.  அதோடு சேர்ந்து வித விதமான சலங்கை மற்றும் மணிகளில் ஒலி இழைந்தோடுகிறது.  It sounds according to the movement of the bullock carts – with variations.  இதன் முடிவில் Swarmandal / Harp வாசிக்கப்பட்டுள்ளது - இரண்டு முறை – which conveys the budding romance between the lead pairs.  Following that the pallavi starts.  The singer sings the first line of the pallavi.  Here mannar infuses a beautiful interlude by way of Flute.  Following that the singer sings the whole pallavi and repeats the last line.  For this portion Mannar has not used any percussion instruments except Congos.  Even that too he has used it on off-beat by playing on the rim side.  பல்லவியின் கடைசி வார்த்தை இழுத்து பாடும் போது rhythm enter ஆகிறது in தபலா with cuts – which indicates the rough road.  இப்போது பல்லவி ஒரு முறை கூட repeat ஆகிறது with rhythm.  பல்லவியின் கடைசி வரி repeat செய்யப்பட்டு பல்லவி முடிகிறது.

From Prelude till end of Pallavi - இது எப்படி அமைந்திருப்பது என்றால் காளைகள் மெதுவாக நடந்து சென்று வண்டிகளை எழுத்துச்செல்வது போல்.

அதற்க்கு பிறகு வரும் முதல் BGM - இங்கு காளைகள் மெதுவாக ஓடுவது போல் அமைந்துள்ளது.  பிறகு சரணம் ஆரம்பிக்கும் போது மீண்டும் காளைகள் மெதுவாக நடப்பது போன்ற பாணிக்கு மாறுகிறது.

First BGM – It begins with a small piece in Combo Organ – first a Chord and then few notes.  Following that a small piece in Flute.  This repeats one more time.   For this portions he plays the rhythm on Gada Singari (if I am not wrong) playing it on off-beat.  Following that a lengthy piece in Flute which ends with a small run in Rabab + Mandolin.  Please note that the sounds of Salangai and Bell accompanies throughout the song with so many variations.  Then begins the first charanam – First three lines are sung without any interludes.  The third line is stretched and an aalaapanai follows and then the fourth line is sung. Uptil here the bullock cart travels smoothly without any obstruction. இது வரை காளைகள் மெதுவாக நடந்து போவது போன்ற பாணியில் அமைந்துள்ளது. Afterwards, MSV slightly changes the tune – two two words are sung with “cuts” – total four sets (அதாவது "கட்டு சிட்டு, மொட்டு விட்டு, துள்ளும் வெள்ளம் பட்டு பட்டு" - இதற்க்கு பிறகு அவர் இதே வரிகளை repeat செய்வதற்கு முன்பு தபாலாவில் "டக்டக்டக்டக் " என்று ஒரு "cut " அல்லது "roll " வருகிறது  - இந்த பகுதியை மாட்டுவண்டியில் பயணத்தோடு எப்படி ஒப்பிட்டு பார்க்கலாம் என்றால் - வண்டி மூன்று  முறை சிறு சிறு குழிகளில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து மீண்டு வருவது போலவும், அதற்க்கு பிறகு நான்காவது முறை ஒரு சிறு கல்லின் மீது ஏறி இறங்கியதும் சிறிதாக ஒன்று குலுங்குமே அது போலவும் அமைந்துள்ளது - பிறகு இதே வரிகள் repeat செய்யப்படும் போது மீண்டும் மெதுவாக நடக்கும் பாணிக்கு தாவுகிறது) – here the rhythm is played per beat – then the singer repeats the same lines with continuous flow of rhythm.  Then the singer sings the last two lines of the charanam.  At the end of the last line a beautiful interlude is infused by way of Flute.  The charanam ends by repeating the whole pallavi – no lines are repeated. 

Second BGM – A lengthy Flute piece dominates this BGM.  The rhythm is played in Gada Singari (if I am not wrong) here again – but the style of playing is different this time – its played like an Udukkai.  Chords in guitar too can be heard prominently.  In fact chords in guitar accompanies throughout the song.  This BGM ends with an excellent piece in Rabab.  Then begins the second charanam.  This charanam too is sung same like the first charanam.  After that the pallavi is sung once exactly like the same sung in the beginning – except that here the complete rhythm is accompanied. 

The song ends with a sweet postlude - புல்லாங்குழல் தொடர்ந்து ஒலிக்க, Rabab, சலங்கைகள், மணிகள் பக்கபலமாக ஒலிக்க, தபலா மற்றும் கிட்டார் chords தாளமாக ஒலிக்கிறது.

பாடலில் பரவலாக ஒலிக்கும் புல்லாங்குழல் ரம்மியமான கிராமீய சூழலையும், அந்த பகுதியில் தவழும் தென்றலையும் பிரதிபலிக்கிறது.

மெட்டு, பாடிய விதம் எல்லாம் மிக மிக அருமை என்ற போதிலும், இந்த பாடலை நாம் அளவு கடந்து நேசிப்பதற்கு முக்கிய காரணம் - பாடகரின் குரலில் ஒளிந்திருக்கும் அந்த இனம் புரியாத சோகம் தான்.  No doubt, it’s a happy / love song.  But, the inbuilt sad tone in the singer’s voice is the highlight of this song alongwith the continuity of Salangai / Bells.

Rabab is a folk instrument mainly seen in Afghanistan and in our country at Kashmir Valley.  Its mainly used by the Shepherds.  ஆடு மாடுகள் மேய்க்கும் போது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு  இந்த கருவியை வாசித்துக்கொண்டே அவர்கள் பாடுவார்கள்.  இந்த கருவியை பல பாடல்களில் மன்னர் பயன்படுத்தியுள்ளார் என்பது வியக்கத்தக்கது.  Mainly because it creates the “rustic” feeling in a song.  இந்த பாடலும் பாருங்கள் - ஆடு மாடு மேய்ப்பவன் பாடுவது போல் அமைந்த பாடல்.  அதனால் இந்த கருவியை மிக நேர்த்தியாக பயன்படுத்தியுள்ளார் / கையாண்டுள்ளார் இந்த பாடலில்.

மாட்டுவண்டி + சலங்கை / மணி ஓசை காம்பினேஷனில் மன்னர் கொடுத்திருக்கும் பிரமிக்கவைக்கும் variation -னை "ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி (பாசம்)", "வள்ளிமலை மான்குட்டி எங்கே போறே (அன்பளிப்பு)", "ஜில் ஜில் ஜில் என்றது காளைக்கன்னு (புண்ணிய பூமி)", "ஆகாயத்தில் தொட்டில் காட்டும் மங்கை உன்னை கண்டால் (துணிவே துணை)", "பச்சைவயல் பக்கத்திலே பட்டமரம் வெச்சானடி (எங்க ஊரு கண்ணகி)", மேலும் பல - பாடல்களை கேட்டுப்பார்த்தால் உணர முடியும்.

மீண்டுமொரு வித்தியாசமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://www.youtube.com/watch?v=NGL3IMNnBOw


Quote
Share: