1976 - Lalitha - So...
 
Notifications

1976 - Lalitha - Sorgathile Mudivaanathu  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 54
26/09/2019 2:42 pm  

பாடல் : சொர்கத்திலே முடிவானது

படம் : லலிதா

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1976

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது "லலிதா" படத்தில் இடம் பெற்ற மிகவும் பிரபலமான "சொர்கத்திலே முடிவானது, சொந்தத்திலே நிலையானது" என்ற பாடல்.

ஜெயா பாதுரி, விஜய் ஆனந்த் நடிப்பில் ஹிந்தியில் "கோரா காகஸ்"  என்ற பெயரில் வெளியாகி சக்கை போடு போட்ட படத்தின் தமிழ் வடிவம் தான் "லலிதா" (அந்த படம் மலையாளத்திலும் "அர்ச்சனா டீச்சர்" என்ற பெயரில் வெளிவந்தது).  ஹிந்தி படமே வங்காள மொழியில் வந்த படத்தின் தழுவல் தான். 

பெரிய பணக்கார வீட்டு பெண் சுஜாதா ஓர் கல்லூரி மாணவி.  ஆனால் அதற்குரிய கர்வம் அவரிடம் எள்ளளவும் கிடையாது.  மிகவும் இளகிய மனம் கொண்டவர்.  நமது பண்பாட்டை மதித்து அதன்படி வாழ்பவர்.  அவரது தாய்-தந்தையர் : சுகுமாரி - ப்ரொபஸர் என்.விஸ்வநாதன்.  சுகுமாரி சரியான ராங்கிக்காரி/வறட்டு கௌரவக்காரி.  சுஜாதாவுடைய சகோதரர் கமல்ஹாசன். அவர் முற்போக்கு சிந்தனை உடையவர்.  இந்த கலாச்சாரம், பண்பாடு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர். மேலும் ஒரு தங்கை அவருக்கு.  ஜெமினி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.  ஓர் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர்.  சுஜாதாவும் ஜெமினியும் ஓர் சந்தர்ப்பத்தில் அறிமுகமாகிறார்கள்.  அறிமுகம் காதலாகி திருமணத்தில் முடிகிறது.  தாய் சுகுமாரிக்கு இந்த திருமணத்தில் சற்றும் உடன்பாடில்லை.  இந்த திருமணத்தை தடுக்க முயற்சித்து தோத்துப்போகிறார்.  ஆனாலும் அவர் விடுவதாயில்லை.  மகளை எப்படியும் ஜெமினியிடமிருந்து பிரித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அதற்கான வேலைகளை செய்கிறார்.  சுஜாதா இதை தடுக்க முயற்சித்து தோத்துப்போகிறார். சுகுமாரியின்  குத்தலும், நக்கலுமான பேச்சாலும் செய்கைகளாலும் கூனிக்குறுகும் ஜெமினி கொஞ்சம் கொஞ்சமாக சுஜாதாவை வெறுக்கிறார்.  அந்த நேரத்தில் சுகுமாரி-விஸ்வநாதன் தம்பதியினரின் 25 -ஐந்தாவது திருமண நாள் வருகிறது.  அப்போது ஜெமினியுடன் வராமல் தனியாக வருகிறார் சுஜாதா.  வரும் பொழுது தாய் தன் கணவரை குறித்து இழிவாக பேசிக்கொண்டிருப்பதை கேட்க நேரிடுகிறது.  கூடியிருக்கும் அவையோர்களில் சிலர் சுஜாதா-ஜெமினிக்கு இடையே இருக்கும் விரிசலை கிண்டலும் கேலியுமாக பேசுகிறார்கள்.  இவற்றையெல்லாம் கேட்டு மனமொடிந்து போகிறார் சுஜாதா.  அந்த நேரத்தில் தம்பி கமல்ஹாஸன் அவருக்கு புது ஆடைகளை கொடுத்து உடுத்தி வருமாறு வற்புறுத்துகிறார்.  வேண்டாவெறுப்புடன் உடைமாற்றி வருகிறார் சுஜாதா.  அப்போது வரும் பாடல் தான் இது.

பாடலை அலசுவதற்கு முன் மன்னர் இந்த பாடலில்  என்ன விஷயங்கள் செய்துள்ளார் என்பதை பார்ப்போமா. 

(1) பெற்றோர்களது 25 -ஆவது திருமண நாள் விழா என்பது பிள்ளைகளுக்கு ஓர் மகிழ்ச்சியான நாள்.  இத்தனை வருடங்கள் அவர்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளார்கள் என பெருமைப்படவேண்டிய நாள்.  ஆனால் நாயகியின் நிலை என்ன?  திருமணமாகி சில நாட்களே ஆகிறது.  அதற்க்குள் கணவன் அவளை வெறுத்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருக்கிறான்.  அதற்க்கு காரணமாகி நிற்பவள் பெற்ற தாய். ஜோடியாக வந்து கொண்டாடவேண்டிய தருணத்தில் தனியாக வரவேண்டிய சூழ்நிலை.  வந்த இடத்திலும் வரவேற்பு சரியில்லை.முள் மேல் நிற்பது போன்ற நிலை.  இந்த நிலையில் சந்தோஷமாக இருப்பதே கடினம்.  அப்படியிருக்கும் போது பாட வற்புறுத்தினால் அவளால் சந்தோஷமாக பாட முடியுமா?  ஆனால் இதுவோ மகிழ்ச்சியான தருணம்.  அதனால் அங்கு ஒப்பாரி தான் வெக்கமுடியுமா?  அவளது நிலைமையையும் பூடகமாக சொல்லவேண்டும், ஆனால் அழவும் கூடாது.  இதை தான் செய்து காட்டியுள்ளார் மன்னர்.  அவள் தன் நிலைமையை மென்மையாக வெளிப்படுத்துகிறாள் - அவளது சோகத்தை தூக்கலாக அல்லாமல் under current ஆக உலாவ விட்டுள்ளார்.  அழுகை வெடித்துவிடும் என்ற நிலைக்கு வந்து அதிலிருந்து சாதுர்யமாக நழுவி மகிழிச்சிக்கு தாவ வைத்துவிடுகிறார்.  இதை படிக்கும் போது அதுவென்னவோ ரொம்ப easy என்று நினைத்து விடக்கூடும்.  ஆனால் சோகமான bhaavathudan பாடி சட்டென்று அதிலிருந்து சந்தோஷமான bhaavathukku மாறுவது என்பது எவ்வளவு கடினம் என்று பாடுபவர்களுக்கு தான் தெரியும்.

(2)  அக்காளோ நமது பண்பாடு, கலாச்சாரத்தில் ஊறியவள்.  ஆனால் தம்பியோ நேர் எதிர் - ஓர் முற்போக்கு வாதி.  இந்த வித்தியாசத்தை தாளத்தில் கோடிட்டு காட்டுகிறார் மன்னர்.  கமல் பாடும் போது அதற்க்கு மேற்கத்திப்பாணி தாளவும், சுஜாதா பாடும் போது desi ஸ்டைல் தாளவும் வாசித்துள்ளார்.  அதே போல் அவர்கள் பாடும் விதத்திலும் அந்த வித்தியாசத்தை கோடிட்டு காட்டுகிறார் - சுஜாதா பாடும் போது carnatic + மெல்லிசை பாணியிலும், கமல் பாடும் போது மேற்கத்தி பாணியிலும் பாடவைத்துள்ளார்.

இனி பாடலை பார்ப்போமா.

மன்னர் வடிவமைத்த பல பியானோ based பாடல்களில் இதுவும் ஒன்று.  பியானோவை மிகவும் திறமையாக பயன்படுத்தியுள்ளார் என்று சொல்லவும் வேண்டுமா என்ன.

The song begins with a small but excellent Piano piece.  This piece doesn’t have any percussion accompaniment.  அதை தழுவி SPB பல்லவியை ஆரம்பிக்கிறார்.  பல்லவியின் முதல் நான்கு வரிகளை அவர் பாடுகிறார்.  முதல் வரி முடியும் போது rhythm ஆரம்பமாகிறது - Brush style Drums மற்றும் Duggi Tarang-ங்கில்.  Chords in guitar too is added for embellishment.  An interlude is infused in Piano after each line.  Then SPB repeats the same lines.  Then he sings the next four lines of the pallavi without any interludes.  SPB finishes the pallavi by repeating the first four lines. 

First BGM – this BGM is very small.  Only Piano is used for this BGM with accompaniment of Brush style Drums, Duggi Tarang, chords in Guitar. 

Then begins the first charanam.  Vani Jayaram starts the charanam.  Here MSV shifts the tune from Western to conventional Indian style.  Vani sings the four lines of the charanam and repeats it.  Here MSV jumps to his favourite percussion Tabla for rhythm.  Chords in guitar is played to add weightage.  Then Vani sings the next four lines of the charanam.  Here the pitch increases. MSV slightly modifies the rhythm too.  After the fourth line the rhythm is stopped.  The mood too slightly changes to sad.  Here Vani sings the next two lines of the charanam in thogaiyara fashion with a slight shivering.  MSV quickly changes the mood with a chord in Piano.  So does the style – it jumps to Western from conventional.  Vani sings the last four lines of the charanam.  After this MSV breaks the rhythm and lifts the song with a note on Bass Guitar followed by a chord in Piano.  Then Vani sings the first four lines of the pallavi in Western style.  For this portion rhythm is played in Brush Style Drums and Duggi Tarang.

Now second BGM – It begins with a lengthy Piano piece.  There is no percussion instruments used for this portion (or is it that I could not identify them?).  Alongwith Piano MSV adds his another favourite i.e, “Claps” to add more charm and to create a dancing mood.  At the end of the piece a roll on Drums overlaps and the rhythm starts in Drums and Congos.  Chords in guitar and notes in Bass Guitar adds more weightage.  Alongwith the rhythm the lengthy piece in Trumpet begins.  In the middle MSV changes the scale – reminding us that status of Sujatha.  Alongwith the Trumpet Piano also accompanies.  This BGM is finished by a piece in Violin.  Counter melody is added either in Violins or Cello. 

Then begins the second charanam.  The whole charanam is sung by SPB.  He sings the eight lines first.  First four lines are sung in one tune and the next four lines are sung in a slightly different tune – the rhythm remains the same.  At the end of the eighth line the rhythm stops and he repeats the last two lines in a thogaiyara fashion whereby after each line a small filler is infused by way of Piano.  Then he sings the next four lines of the charanam, which is same like the last four lines of the first charanam.  MSV ends this charanam without repeating the pallavi.  The percussions used for this charanam are Brush Style Drums and Duggi Tarang.

The third BGM – It begins with a lengthy piece in Piano and Violin combined.  To create the dancing mood he has added “Claps”.  Of course chords in Guitar too is used.  Again for this piece he has avoided rhythm.  MSV has applied the “progressive chord” pattern whereby the pitch increases step by step, so also the change in mood.  The pitch step by step goes up and then declines at the end of the piece.  Then begins the piece in Flute and Piano combined together.  Here the rhythm begins.  Following that a small piece in Violin and Flute combined together is played.  The BGM is finished by Violin run played thrice and chords in Guitar twice.  For the three times Violin runs counter melody is added. 

Then begins the third charanam.  Vani begins the charanam by singing the four lines the way she sung the first charanam.  Then SPB joins by singing the next four lines in a slightly higher pitch – exactly the way VJ sang in the first charanam.  Tabla and chords in Guitar used for rhythm for these portions – the rhythm is modified when SPB sings.  After the fourth line they rhythm stops and SPB repeats the last two lines in thogaiyara fashion with interludes in Piano.  Then SPB continues with the next two lines and Vani joins in by singing the next two lines. 

The song is finished by singing the whole pallavi by both the singers.  Here alongwith the rhythm “Claps” too is added.  After each line interlude is played in Trumpet. 

One may wonder in the last portion of the first charanam where VJ jumps to Western Style from Conventional Style as well as in the last charanam where one portion SPB sings in conventional style instead of Western Style, when MSV could have easily managed with the same style – True he could have very well managed it.  By changing the style, what I mean that he is trying to indicate that they are trying to step into each other’s shoes - அதாவது தாத்காலிகமாக   (just for that occasion) சுஜாதா நமது பண்பாட்டை விட்டு மேல்நாட்டு பண்பாட்டுக்கும், அது போல் கமல் மேல்நாட்டு பண்பாட்டை விட்டு நமது பண்பாட்டுக்கும் மாறுவதாக.

A classic song with lot of variations.  சும்மா கேட்டோம், enjoy பண்ணினோம் என்றில்லாமல், கேட்டு, சிந்தித்து, பல விஷயங்களை ஆராய்ந்து அறிந்துகொள்ளவேண்டிய பாடல்.

இந்த பாடலில் என்னை கவர்ந்த வரிகள் :

(1) எல்லாமும் கோயில், எல்லாமும் தீபம், எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம், எரியாத தீபம் சிலர் செய்த பாவம்.

(2) இருவரின் கண்களை சந்திக்க வைப்பது இறைவனின் நாடக லீலை, இடையினில் வருகின்ற நன்மையும் தீமையும் மனிதர்கள் செய்கின்ற வேலை

(3) தேர் கொண்டு வந்தேன் சிலை மட்டும் இல்லை, சீர் தந்த வீட்டில் துணை மட்டும் இல்லை - விளக்கம் :- ஓர் தேருக்கு அழகு மற்றும் அந்தஸ்து / மதிப்பு ஏறுவது அதற்க்கு ஜோடனை செய்து அதில் உத்சவ மூர்த்தியை (சிலை) வைத்து ஊர்வலமாக இழுத்து வரும் போது தான்.  மற்றபடி, ஜோடனை செய்யாமல், உத்சவ மூர்த்தியையும் வைக்காமல் வெறும் body -யாக நிற்கும் போது அதற்க்கு அழகோ மதிப்போ கிடையாது. இங்கு அவள் தேர், அவள் கணவன் உத்சவ மூர்த்தி.  கணவனின் துணையில்லாமல் அவள் தனியாக வந்துள்ளார்.  திருமணமான பின் ஓர் பெண் துணையில்லாமல் தனியே வந்தால் அவளுக்கு பிறந்த வீட்டில் மதிப்பு கிடையாது, ஊராரும் சற்று சந்தேகமாகவே தான் பார்ப்பார்கள்.  இதை தான் இந்த வரிகள் சொல்கின்றன. 

(4) வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான் இத்தனை காவியம் உண்டு, வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால்தான் வெள்ளி விழாக்களும் உண்டு

Waiting for your valuable feedback.

மீண்டுமொரு அரிய பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://www.youtube.com/watch?v=TJKUWnsEb6Q


Quote
Share: