1976/ வீணை பேசும் அ...
 
Notifications

1976/ வீணை பேசும் அது மீட்டும் // வாழ்வு என் பக்கம்  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 33
16/03/2020 4:45 pm  

1976/ வீணை பேசும் அது மீட்டும் // வாழ்வு என் பக்கம்

பாடல் காட்சி , சூழ்நிலை ஒட்டிய பாடல் வரிகள் , கவியரசின் எழுத்துக்களில் இனிமை இன்னும் நயத்துடன் பொருள் ஆழம் குறையாத அளவில் , யேசுதாஸ் அவர்களின் மென்மையான குரலில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் பண்பட்ட ஒரு இசையோடு கலந்து ... மிதமான தென்றல் சுகத்தோடு கேட்க மனதில் அப்படி ஒரு சுகம் . இப்படி தமிழ் ரசனைதான் பாடல்கள் மூலம் என்னுள் வளர்ந்துள்ளது ?

வாய் பேசாத ஊமை தலைவி ( லட்சுமி ) தலைவனாக முத்துராமன் அவர்கள் ... வாழ்வு என் பக்கம் திரையில் . இருவரின் பங்கும் அருமையானது . புதுமானத் தம்பதியாக இருக்க .ஒரு பாடல் .. ஊமை எப்படி பதிலிருப்பாள் ? கணவனே அவள் மனம் கோணாமல் , அவளது கண் அசைவு , முகபாவங்களில் நின்றே அவளால் தனது மனவோட்டத்தோடு பேச முடியும் என ஒரு ஆறுதல் அவளுக்கு அளிக்க , அந்த வகையில் கவியரசரிடமிருந்து பாடல் பிறந்து வருகிறது .

"வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக் கண்டு ..
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று .."
என்ன ஒரு அழகிய தமிழில் சிந்தனை ஓட்டம் . பிரியாத இரண்டு செயல்பாட்டை வைத்து உணர்வுகள் பரிமாறப்ப படும் அழகு . பாடும் அழகும் ... நிறுத்தி நிதானமாக ... மனதை வருடிச்செல்லும் .

"நாணம் ஒரு வகை கலையின் சுகம் ...
மௌனம் ஒரு வகை மொழியின் பதம் .."
தன்மையான விளக்கம் அழகுடன் மிளிர

"ம்ம்.. ம்ம்.. ம்ம்.." எனும் சசிரேகா அவர்கள் குரலில் ஒரு மிதமான ஹம்மிங் ...லட்சுமியின் நாணத்தோடு புன்னகை தவழும் முகம் ... யாரும் ரசிக்காமல் இருக்க முடியாது .

"தீபம் எப்போது பேசும் கண்ணே ,
தோன்றும் தெய்வத்தின் முன்னே ..
தெய்வம் சொல்லாத வார்த்தைகளெல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே .."...
ஒரு உன்னத சிந்தனை ...தெய்வமும் தீபமும் இணையுமிடம்

அடுத்து ..காதலின் நேசம் வெளிப்படுதல் ..

"காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதைக்கு காலை ..... "
""ம்ம் ..ம்ம்ம்... சற்று ஏறிய தொனியில் தொடர

"வார்த்தை இல்லாத சரசம் கண்ணே ''...
அற்புதமான சொல்லாடல் ..தெளிவாக
"வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு ....
பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே ..."
தாம்பத்தியத்திற்கும் ஒரு கண்ணியமான நேசம் வெளிப்படும் தன்மை .. வரிகளில் புதைந்துள்ள பொருளில் ... இனிமையோடு ஒரு உ ண்மை தத்துவமும் விரிவு பெறுகிறது .

நிம்மதிப்பட்ட மனம் இசைக்கும் மௌனராகம் ...இந்த ஹம்மிங் , இரு குரலிலும் ..
ம்ம்ம்....மஹூஹூம்ம்ம் .... ஆஹ்....அஹாஹா...

மெல்லிசை மன்னரின் மென்மையான இசைக்கோர்வையில் வெளிவந்த பல பாடல்களில் ஒரு சிறப்பான பாடல் .. இன்றும் மனதை அசை போடவைக்கிறது. தமிழுக்கே அந்த வகைப் பாடல்கள் ஒரு தனியிடத்தைப் பெற்றுத் தந்துள்ளது என்றால் மிகை இல்லை .

கோதை தனபாலன்

https://www.youtube.com/watch?v=5sliTjKfPEo


Quote
Share: