1975 - Vairanenjam ...
 
Notifications
Clear all

1975 - Vairanenjam - Amman Magan Enge Avan  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 66
27/07/2020 5:41 pm  

பாடல் : அம்மான் மகன் எங்கே அவன்
படம் : வைரநெஞ்சம்
பாடியவர்கள் : எல்.ஆர்.ஈஸ்வரி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1975

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பாடல், துப்பறிவாளனான கதாநாயகனுக்கு உதவுவதற்காக கதாநாயகி வில்லனின் ஹோட்டலில் கவர்ச்சி நடனம் ஆடுவது போல் அமையப்பெற்ற பாடல். பல படங்களில் வழக்கமாக பார்த்தது தானே, இதில் என்ன புதுமை, வித்தியாசம் என கேட்ப்பீர்கள். நியாயம் தான். ஆனால் பாடல் அமைத்த விதத்தில், அணுகுமுறையில், படமாக்கிய விதத்தில் நிறையவே வித்தியாசத்தை கண்டிப்பாக காண்பித்துள்ளார்கள். இது போல் அமையப்பெற்ற பெரும்பாலான பாடல்கள் எப்படி அமைந்திருக்கும் - ஏகப்பட்ட வாத்தியக்கருவிகளை பயன்படுத்தி ஆர்ப்பாட்டமான இசையோடு படுவேகமாக பாடப்பட்ட பாடலாக இருக்கும். ஆட்டமும் அது போல் படு கவர்ச்சியாக, படு வேகமாக ஆடப்பட்டிருக்கும். சரிதானே? ஆனால் இந்த பாடல் அப்படி அமைந்தது அல்ல. மிக குறைவான இசை கருவிகள் மட்டும் பயன்படுத்தப்பட்டு, slow ஆக பாடப்பட்டு, அதற்க்கு ஏற்றாற்போன்று மெதுவாகவே ஆடப்பட்டு, கவர்ச்சியையும் தூக்கலாக காட்டப்படாமல் படமாக்கப்பட்ட பாடல். இன்னும் சொல்லப்போனால் "மெலடி"-க்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்ட பாடல் என்றே சொல்லவேண்டும்.

This song leads to the climax. பாடலை அலசுவதற்கு முன், படத்தின் கதை சில வரிகளில் :

முத்துராமனின் தந்தை ஓர் வங்கி அதிகாரி. அவரது வங்கியை கொள்ளையடித்து, பிறகு அவரையும் கொன்றுவிடுகிறது ஓர் கொள்ளைக்கூட்டம். பிறகு அந்த கொள்ளைக்கூட்டத்தின் தலைவனின் சதியால் முத்துராமனும் அந்த கூட்டத்தில் சேர்ந்துவிடுகிறார். அவரது தங்கை பத்மப்ரியா. இந்த கூட்டத்தை கண்டுபிடிப்பதற்காகவே நியமிக்கப்பட்ட CID அதிகாரி சிவாஜி. ஓர் கட்டத்தில் தான் சேர்ந்திருக்கும் கூட்டம் தான் தன் தந்தையை கொலை செய்தது என்பது முத்துராமனுக்கு தெரியவருகிறது. அதற்க்கு பழி தீர்க்க அவர் தலைவனை தேடி போக, அவனோ அவரை பிணைக்கைதியாக்கி விடுகிறான். பிறகு சிவாஜியை தொலைபேசி வாயிலாக தாக்கீது செய்கிறான் - நீ இப்போது ஈடுபட்டிருக்கும் துப்பறியும் வேலையை இத்தோடு நிறுத்திக்கொள்ளாவிட்டால் உன் ஆருயிர் நண்பனை கொன்று விடுவேன் என்று. ஆனால் சிவாஜி அவன் அறியாமல் ஓர் திட்டம் தீட்டுகிறார் - அவன் நடத்தும் ஹோட்டலில் பத்மப்ரியா நடனம் ஆடி அங்கு ஊழியராக, viz., as a Dancer, சேர முயற்சிக்கவேண்டும். சிவாஜி அங்கு மாறு வேடத்தில் சென்று அவரை follow செய்து அந்த கூட்டத்தை அடைந்து, அவர்களுடன் மோதி, தோற்கடித்து அவர்களை கைது செய்யவேண்டும் இது திட்டம். அப்போது ஆடப்படும் நடனம் தான் இது.

பத்மப்ரியா அறிமுகமான படம் இது. ஆனால் படப்பிடிப்பு சில காலம் இழுத்தடித்ததால் அதற்குள் "காரோட்டி கண்ணன்" முந்திக்கொண்டு அதுவே அவரது முதல் படமாக கருதப்பட்டது.

As mentioned above, what could be the reason in making this song a “melodious cabaret” number rather than making it in the usual “extravaganza” style? - அதாவது வழக்கமாக நாம் கேட்டுவந்த "அதிசய உலகம்", "மின்மினி பூச்சிகள்", "சொல்லாதே சொல்லாதே", "நீ என்னை விட்டு போகாதே", போன்ற பாடல்களை போல் smooth ஆக அல்லாமல் இப்படி தான் இருக்கும் என்று யூகிக்க முடியாத பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (If you remember even the other “seduction/cabaret” number “Neeraada Neram Nalla Neram” too was designed in a “classic” manner). May be because the movie was announced as a “stylized” movie.

இங்கு நாயகி யாருடைய நிர்பந்தத்திற்கும் உட்பட்டு ஆடவில்லை / பிழைக்க வழி தெரியாமல் ஆடவில்லை. மறித்து, அண்ணனின் உயிர் காக்கவும், போலீசிற்கு உதவும் விதத்திலும் ஆடுகிறாள் - வற்புறுத்தியல்ல - வேண்டுகோளிற்கிணங்கி சந்தோஷத்துடன் தான் ஆடுகிறாள். அதனால் பாடலில் சோகம் இல்லை. அவளுக்கு அங்கு வேலை கிடைக்கவேண்டும் என்பதால் சற்று கவர்ச்சியாக ஆடுகிறாள் / பாடுகிறாள் - பார்ப்போரையும் ஹோட்டல் நிர்வாகிகளையும் கவரவேண்டும் அல்லவா. ஆனால் ஆபாசத்தை தவிர்க்கிறாள்.

இந்த காரணத்திற்காகவும் பாடலை இப்படி வித்தியாசமாக "மெலடி" தூக்கலாக இருக்கும் படி வடிவமைத்திருக்கலாம். I believe MSV has adopted the Latin American style of music – viz., “Tango”. இதே தாளத்தின் meter-றில் மன்னர் அமைத்த வேறு சில பாடல்கள் : “வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ”, “காற்று வந்தால் தலை சாயும்”, “என்னை தெரியுமா”, etc . தாளத்தின் meter ஒன்றாக இருந்தாலும் அந்த பாடல்கள் எல்லாம் "monotonous" ஆகாமல் ஒவ்வொன்றும் வித்தியாசமா இருக்க வேண்டும் என்று அந்த தாளத்தை ஒவ்வொரு பாடலிலும் எவ்வளவு மாறுபட்டு வாசித்துள்ளார். That shows his dedication, passion, brilliance, creativeness, etc.

OK, now we will enter into the song. The song begins with a small and sweet intoxicating prelude. It starts with the claps combined with humming of LRE. Following the claps LRE first hums “Hmmmmhumhumhum…..” Then she hums “Lalalalala” three times and at the fourth time hums “Oh..ho..ho.ho.” No percussion has been used in this portion. After each humming Guitar chord is strummed in Arpeggio fashion. Then for one bar Lead Guitar is played in sliding fashion. Alongwith this Accordion (I feel) and Violin are played in contrast. This piece ends with a roll on the Drums. Following this Flute is played in fluttering style. Alongwith this Combo Organ is played at regular gap. Drums is played in brush style for rhythm. To make it more interesting Guitar Chords are played and one more percussion instrument is also played per beat. Then begins the pallavi. When the pallavi begins Drums is played only once – just as a “Theka”. Then throughout the pallavi only Congos is used for rhythm. LRE sings the first two lines. An interlude is placed here through Combo Organ. The pallavi is embellished by Beaded Maracas. Then LRE repeats the same line. Here again an interlude is placed. This time its thru Violin. Alongwith Violin he has mixed Combo Organ too. Then LRE continues with the rest of the lines. Here, each line is sung in a different style / modulation. From here onwards, Violin is added as counter melody. After fifth and six lines interlude is infused through Violins. She sings the next three lines without any interludes. Here the rhythm stops. Then she sings the last portion of the pallavi, which is sung word by word. After each word a chord in Guitar is played as interlude. And when she finishes the last word Combo Organ is played as a follow on and following that four cuts are played on Congos and closed with a chord in Guitar. Then LRE sings the whole pallavi. Here till the last portion no interludes are played. When she sings the last portion – i.e., word by word after each word Guitar chords are played as interlude and follow on by Combo Organ.

First BGM - இது எப்படி இருக்குன்னா, சரணத்தின் முதல் நான்கு வரிகளின் அதே மெட்டிலேயே உள்ளது. முதல் இரண்டு bars-ஸுக்கு Saxaphone போதையில் வாசிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு bar-றுக்கு பிறகும், இரண்டாவது bar-றுக்கு பிறகும் interlude ஆக Combo Organ வாசிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு டிரம்ஸ், Beats on Cymbals, Claves, Congos, மற்றும் கிட்டார் chords பக்கபலமாக ஒலிக்கிறது. அதை தொடர்ந்து மீண்டும் Combo Organ ஒலிக்கிறது – in different style. அதை தழுவி வயலின் ஒலிக்கிறது. பிறகு மீண்டும் Combo Organ ஒலிக்கிறது. கடைசியாக குச்சியால் ட்ரம்ஸில் தட்டும் ஒலி ஒலிக்கிறது. தொடர்வது முதல் சரணம். ஒரு குறிப்பிட்ட பாணியில் (BGM -மில் sax ஒலித்ததே அந்த பாணியில்) இரண்டு இரண்டு வரிகளாக 8 வரிகள் பாடப்படுகின்றன. முதல் இரண்டு செட்டுக்கு broken கிட்டார் chords ஐந்து முறை interlude ஆக சேர்க்கப்பட்டுள்ளது. அதற்க்கு பிறகு வரும் இரண்டு வரிகளுக்கு பின் interlude ஆக வருவது Flute. அதற்க்கு பிறகு வரும் இரண்டு வரிகளுக்கு பிறகு interlude ஏதும் இல்லை. பதிலாக கடைசி வார்த்தை முடிந்த பிறகு அதை இழுப்பது போல் "ஹா..ஹா..ஹா..ஹா..." என்ற ஹம்மிங் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு காங்கோஸ், கிட்டார் chords , Beaded Maracas இவை பக்கபலம் சேர்ந்துள்ளன. ஹம்மிங் முடிந்ததும் இசை நின்றுவிடுகிறது. அதை தொடர்ந்து ஒரு சிறு silence. பிறகு பாடப்படும் பகுதி ஒவ்வொரு வார்த்தைகளாக பாடப்படுகிறது. இந்த பகுதிக்கு rhythm சற்று மாறுபட்டு வாசிக்கப்பட்டுள்ளது. இதை இரண்டு பகுதியாக பிரிக்கலாம். முதல் பகுதியான "மஞ்சமே, தித்திக்க, மன்னவா வா, என் அங்கம் துள்ள" என்கிற பாகம் வரை டிரம்ஸ் brush style-லில் வாசிக்கப்பட்டுள்ளது - காங்கோஸ் கழட்டிவிடப்பட்டுள்ளதை கவனிக்கவும். இத்தோடு சேர்ந்து கிட்டார் chords-ஸும் வாசிக்கப்பட்டுள்ளது. இந்த ரிதம் இத்தோடு நின்றுவிடுகிறது. ரிதம் நின்ற உடனே கிட்டார் chord ஒன்று வாசிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து இரண்டாவது பகுதியை பாடுகிறார் - இந்த பகுதிக்கு ரிதம் கிடையாது - ."மெல்லவா, அள்ளவா, கொண்டு வா, வா ராஜா...." இங்கு ஒவ்வொரு வார்த்தைக்கு பிறகும் interlude ஆக கிட்டார் chord சேர்க்கப்பட்டுள்ளது. கடைசி வார்த்தைக்கு பிறகு follow on போல் Combo Organ ஒலிக்கிறது. தொடர்ந்து பல்லவியின் முதல் இரண்டு வரிகள் பாடப்பட்டு இந்த சரணம் முடிகிறது. பல்லவி பாடும் போது ரிதம் மீண்டும் ஆரம்பிக்கிறது. பல்லவியின் வரி முடிக்கப்பட்டதும் புல்லாங்குழலில் ஓர் அழகான follow on.

Second BGM – though this BGM too is same like first BGM, MSV has made some improvisations here. Here two or three Saxophones are played in contrast to one another, which adds more beauty as well as more “kick” the song. Rest everything is same like first BGM. The second charanam too is exactly like the first one. After this charanam LRE sings the whole pallavi once and ends it with a humming in high pitch. When she sings the pallavi counter melody is added in Violin.

Altogether a differently structured number, well-orchestrated and ably sung by LRE. MSV’s one of the experimental number far from the conventional (?) cabaret format. Though the song caught the attention of the listeners could not make it to the top.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

கே.டி.ரமணன்.

https://youtu.be/G-9aeeZV-YU


Quote
Share: