1975 - Idhayakkani ...
 
Notifications
Clear all

1975 - Idhayakkani - Inbame Undhan Per  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 66
23/11/2019 2:12 pm  

பாடல் : இன்பமே உந்தன் பேர்

படம் : இதயக்கனி

பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா

பாடலாசிரியர் : புலமைப்பித்தன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1975

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைக்கு நான் அலச எடுத்துக்கொண்ட பாடல்  "property (props)"- யை  அதாவது அசையும் / அசையா பொருளை (பொருட்களை) நேரடியாகவோ, மறைமுகமாகவோ அடிப்படையாக கொண்ட பாடல்.  பல பாடல்களில் பல பொருட்கள் ஓர் சில நொடிகளோ, பாதி பாடல் வரையிலோ திரையில் தோன்றி மறையும்.  அதுவே, சில பாடல்களில் பாடல் முழுதும் இடம்பெறுவதாகவும் இருக்கக்கூடும்.  அந்த வகையில், இந்த வாரம் நான் எடுத்துக்கொண்ட பாடலில் அவை பாடல் முழுதும் இடம் பெறும் பாடலாகவே தேர்ந்தெடுத்துள்ளேன்.

சரி, இன்றைய பாடலில் "property"-யாக இடம் பெறுவது எது தெரியுமா - நமது தமிழ் நாட்டை வளமாக்கும் "காவிரி நதி" தான்.  வேடிக்கை என்னவென்றால் இந்த பாடல் "காவிரி"-யின் அருமை பெருமைகளை பறைசாற்றும் பாடல் அல்ல.  "காவிரி" என்ற வார்த்தை கூட பாடலில் இடம்பெறுவதில்லை.  மறித்து இது ஓர் காதல் பாடல். அப்படியிருந்தும் ஏன் "காவிரியை" "property"-யாக தேர்ந்தெடுத்தேன் என்று கேட்ப்பீர்கள்.  காரணம் உள்ளது. பாடல் நெடுக "காவிரி" ஆறு இடம்பெற்றுள்ளது, அதன் நீர்வீழ்ச்சி உட்பட.  பாடல் அமைந்த காட்சியோ  கட்டுக்கடங்கா காதலின் உணர்ச்சி பிரவாகம்.  Accordingly to me, the song has been “shaped” based on the journey of River Cauvery – right from the origin viz., Talacauveri.  அதாவது காவிரி நதி குடகில் ஒரு சிறு நீரூற்றாக உடலெடுத்து, அது அங்கு ஓர் குளமாக மாறி, அதன் பின் பூமிக்கடியில் பயணித்து பிறகு சற்று தொலைதூரத்தில் ஆறாக உருவெடுத்து, அங்கிருந்து மாண்டியா வழி பயணித்து, ஸ்ரீரங்கப்பட்டினத்தில் "திரிவேணி சங்கமமாக" மாறி, பிறகு "சிவசமுத்திரத்தில்" பெரும் நீர்வீழ்ச்சியாக உருமாறி, அங்கிருந்து மீண்டும் ஆறாக உருமாறி தமிழக எல்லையில் மீண்டும் "ஹொகனேக்கல்" நீர்வீழ்ச்சியாக உருமாறி, மீண்டும் ஆறாக மாறி தமிழகத்தில் வலம் வருகிறதல்லவா - அந்த ஜோடிகளின் "காதல் பெருக்கை" காவிரியோடு ஒப்பிட்டு பாடலுக்கு வடிவம் கொடுத்துள்ளார் மன்னர்.  அதாவது தம்பதியரின் காதல் உணர்ச்சியை காவிரியின் பலபரிமாணங்களாக பாவித்து மெட்டமைத்துள்ளார்.  இதற்க்கு முக்கிய காரணம் பாடல் படமாக்கப்பட்டிருக்கும் இடம் "சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி" என்பதால்!!!!!  See how wild his imagination runs. Unmatchable and unbelievable!

MGR பட பாடல்களில் அப்படி என்ன பெரிதாக ஆராய உள்ளது என்பது பலருடைய பொதுவான எண்ணம்.  ஆனால், அவர் பாடல்களிலும் பல விஷயங்களை நான் சொல்லியுள்ளேன் அய்யா, அதை நீங்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும் என்று MSV சொல்லாமல் சொல்லியிருப்பது, உன்னிப்பாக கவனித்து ஆராயும் பொழுது புலப்படுகிறது.

Now a brief peek to the story till the today’s POK song situation.  குடகில் அமைந்துள்ள பல ஏக்கர் காப்பித்தோட்டங்களுக்கு முதலாளி MGR .அவரது விதவை தாய் பண்டரிபாய்.  ஓர் நாள் MGR தோட்டம் வழியாக பயணிக்கும் பொழுது கதாநாயகி ராதா சலூஜாவை சிலர் துரத்திக்கொண்டு வர, அவரை அந்த கும்பலிடமிருந்து MGR காப்பாற்றி, அவரது cottage -ஜிலேயே தங்க அனுமதிக்கிறார்.  ஆனால் ஊரார் இதை வேறுவிதமாக பழித்து பேச அந்த பெண்ணின் மானத்தை காப்பாத்த அவளை மணந்து கொள்கிறார்.  அவளுடன் வீடு திரும்ப, அன்னை அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்க்கிறார்.  ஆனால், நடந்துகொண்டிருப்பது ஆடி மாதம் என்பதால் மேற்கொண்டு நடக்கவேண்டியது ஒத்திப்போடாடுகிறது.  புதுமண தம்பதியர் இருவரும் ஒன்று சேர தவிக்கிறார்கள்.  அப்படியிருக்க ஓர் மாதம் கழித்து ஒன்று சேரும் அந்த நாளும் வந்து சேர்க்கிறது.  அப்போது இருவரும் குடகை நோக்கி பயணிக்கிறார்கள் "ஹானிமூன்"ணை கொண்டாடுவதற்காக.  அப்போது "சிவசமுத்திரம்"-த்தின் பின்னணியில் பாடப்படும் பாடல்தான் இந்த பாடல்.  காதல் ஊற்றெடுத்து நதியாக உருவெடுத்து, நீர்வீழ்ச்சியாக உருமாறி, பிறகு மீண்டும் ஆறாக உருமாகி வெற்றி நடை போடுகிறது பாடலில்.

Now over to the song :-

The song begins with a beautiful prelude which is full of vigour.  Though the song directly shows the pair’s long waiting to unite, the boundless happiness and ecstasy, I am rather trying to explore the hidden factor i.e., the way MSV has connected the emotions to the River Cauvery.  The prelude begins with a small piece in Mandolin, which is counter supported by Bass Guitar.  It has been embellished by Claves.  Fast rhythm is played in Congos.  Mandolin piece is overtaken by a small piece in Trumpet.  Which is then passed on to Violins.  Then again the Mandolin piece is played with the support of Bass Guitar, Claves, etc.  Again the same is overtaken by a small piece in Trumpet and then passed on to the Violins, which is concluded by a run in violin – from top notes to descending note. Uptil this portion - ஓர் இடத்தில் ஊற்று தென்படுகிறது என்றால் அது பூமிக்கடியிலிருந்து தானே தோன்றவேண்டும்.  பூமிக்கடியிலிருந்து படு வேகமாக தண்ணீர் மேல் நோக்கி தன் பயணத்தை தொடங்கி, தரையை பிளர்ந்து கொண்டு ஊற்றாக உருவெடுத்து, பிறகு குளமாக மாறுகிறது.  A lengthy flute piece is played once the violin run ends.  The prelude ends with a display on Violins and a strike on Bass Drum and a hit on the Snare.  This flute piece + violin runs – The Flute used conveys that the location is a hill station.  ஊற்று குளமாகி மாறியதும் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்குமே அதை சுட்டிக்காட்டுகிறது.  அந்த Violin bits - தண்ணீரை காற்று மெதுவாக தழுவும் போது அதில் சிறு அலைகள் (ripples) தோன்றி ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளுமே அதை சுட்டிக்காட்டுகிறது.

Pallavi – TMS begins the pallavi with the first two lines (or is it one line?) whereby he stretches the first word “இன்பமே........” and repeats the same.  Throughout the song, “இன்பமே” is sung in a stretched manner by both the singers. And then sings the next two lines, which has commas – this portion is sung in a hopping fashion.  Then PS sings her portion.  Her portion is also devised in the same manner.  She finishes the pallavi by singing her portion’s first line – whereby the last word too is sung in a stretched fashion.  டிஎம்எஸ் அவர்கள் முதல் வார்த்தையான "இன்பமே" என்ற வார்த்தையை இழுத்து முடிக்கும் போது தான் ரிதம் ஆரம்பிக்கின்றன – which starts with the roll on the Congos.  vocal-லுக்கு contrast ஆக காங்கோஸில் ரிதம் பாஸ்ட் ஆக வாசிக்கப்பட்டுள்ளது.  கூடவே rhythm கிட்டார் (அதாவது chords), Duggi Tarang, Combo Organ இவைகளும் வாசிக்கப்பட்டுள்ளன.  அனுபல்லவியான "என் இதயக்கனி" என்று துவங்கும் வரியிலிருந்து rhythm pattern மாறுபடுகிறது.  இங்கு percussion காங்கோஸோடு Drums-ஸும் சேர்ந்து கொள்கிறது. பிறகு சுசீலா பாடும் போதும் இதே rhythm  pattern follow செய்யப்படுகிறது.  This portion indirectly conveys : குளத்திலிருந்து பூமிக்கடியில் போன காவிரி நதி, சற்று தூரம் சென்று மீண்டும் பூமியில் தோன்றுகிறதே, அப்படி அங்கு தோன்றி நதியாகி பரிணமித்து சற்று தூரம் சென்ற பிறகு தடையணைகள், நீர்வீழிகளில் தாவி தாவி பிரமிக்கவைக்கும் நீர்வீழியான "சிவசமுத்திரம்" வந்தடைகிறது. 

First BGM - முதலாவதாக Trumpet, Trombone இவைகள் highpitch-ச்சில் ஒலிக்கிறது. அது முடியும் போது, அதை overlap செய்து Guitar Chords மற்றும் Mandolin சேர்ந்து ஒலிக்கிறது.  அதை தழுவி மீண்டும் Trumpet, Trombone இவைகள் மீண்டும் ஒலிக்கிறது.  பிறகு அதை தழுவி மீண்டும் Guitar Chords மற்றும் Mandolin சேர்ந்து ஒலிக்கிறது.  இதை தொடர்ந்து Violin மற்றும் Cello-வில் ஓர் நீண்ட piece.  இவற்றோடு Guitar Chords-ஸும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு தாளத்துக்கு Drums மற்றும் Congos வாசிக்கப்பட்டுள்ளது.  Violin / Cello பகுதியில் Congos தவிர்க்கப்பட்டு Drums மட்டும் ஒவ்வொரு beat-டுக்கு மட்டும் வாசிக்கப்பட்டுள்ளது – as a roll.  இந்த பகுதி "சிவசமுத்திரம்" பகுதியில் காவிரியின் ஓட்டத்தை சுட்டிக்காட்டுகிறது.  Trumpet / Trombone / Mandolin portion : உயர்ந்த மலையிலிருந்து கீழே பாறையில் பதித்து, அங்கிருந்து மீண்டும் கீழே பதித்து தரையை வந்தடைகிறது.  The Mandolin pieces convey the “நுரை".  The Violin/Cello portion : இதுவும் தண்ணீர் மேலிருந்து கீழே ஒரு பாறை  மீது விழுந்து அதிலிருந்து அடுத்த பாறைக்கு தாவுவதை குறிக்கிறது.  அங்கு வாசிக்கப்பட்டிருக்கும் Drums Roll தண்ணீர் பாறை மீது பட்டு தெறிக்குமே அதை குறிக்கிறது.

First Charanam :  All the charanams have three different type of rhythm patterns.  Susheela begins this charanam.  She sings two lines of the charanam and repeats the same.  When she repeats the lines it has been sung with a slight variations.  Then she sings the next two lines.  முதல் இரண்டு வரிகளுக்கும், அடுத்த இரண்டு வரிகளுக்கும் வேறு வேறு விதமான rhythm வாசிக்கப்பட்டுள்ளதை கவனிக்கவும்.  The next four lines have been sung by TMS.  Here, again the rhythm changes.  The rhythm is played faster here.  For the charanam portion MSV introduces his favourite percussion Tabla.  First two lines have a  follow on by Lead Guitar in free style.  Full charanam is embellished by muted Tambourine.  TMS’s portion has been backed up by counter melody in Violin.  When TMS finishes the charanam, MSV infuses and Interlude by way of beautiful Flute piece.  TMS finishes this charanam by singing the first two lines of the Pallavi. MSV’s way of connecting this portion to flow of Cauvery : First two lines = தண்ணீர் தரையை அடைந்துவிட்டாலும் பயணிக்கும் பாதை சீரானதல்ல, ஆங்காங்கே பாறைகள் நிறைந்துள்ளன.  அதனால் flow சீராக இல்லாமல் பாறைகளில் மோதி சற்று வளைந்து வளைந்து போகின்றன நதி.  The next two lines = இங்கு சற்று தடங்கல்கள் நீங்கப்பெற்றுள்ளதால் அதன் ஓட்டம் (flow) லேசாக அதிகரிக்கிறது.  The last couple of lines sung by TMS = இங்கு தடைகள் ஏதும் இல்லை, மேலும் பரப்பளவும் அதிகரித்துள்ளதால் நதி குதூகலத்தில் படு வேகமாக பயணிக்கிறது.  The interlude in Flute = அங்கு ஏதோ "நீர்ச்சுழி" (whirlpool) உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.

Second BGM – it begins with a piece in Mandolin and Flute combined together.  அதை தொடர்ந்து Violin piece ஒலிக்கிறது.  The BGM ends again with a piece in Mandolin and Flute combined together, this time in a different style.  MSV’s way of connecting this with the river : Again there is a waterfall, smaller than Sivasamudram. The jumping of Mandolin/Flute piece indicates that the distance between one rock to another is shorter.  The Violin piece – தரையை அடைத்துவிட்டு நதி தன் ஓட்டத்தை மீண்டும் தொடங்குகிறது. ஆனால் ஓட்டத்துக்கு ஆங்காங்கே சிறு தடங்கல்கள் (இதை வேறு விதமாக வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ளலாம் - அங்கு துள்ளிக்குதிக்கும் மீன்களை சுட்டிக்காட்டுகிறது என்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்).  Violin நதியின் ஓட்டத்தை குறிப்பிடுகிறது என்றால் the “roll” per beat on Drums shows the obstruction.  The ending Mandolin/Flute piece – again there is a small waterfall.  Main percussions used for this portion are Congos and Drums.  Violin portion has been backed up by counter section in Cello and Violins.  The last Mandolin/Flute piece has been backed up by guitar chords and notes in Lead Guitar.

Second Charanam – In fact all the three charanams are in the same pattern, but has been slightly modified here and there by way of orchestration and singing style.  Here, TMS sings his portion exactly the same way like PS’s portion in the first Charanam.  And, PS sings her portion exactly the way like TMS’s portion in the first Charanam.  Modification : When TMS sings the first two lines the follow on in Lead Guitar is played too subtly, whereas in the first charanam (where PS sings the first two lines) the follow on can be clearly heard.  There was a beautiful interlude in Flute when TMS finishes the first charanam, here when PS finishes the charanam that interlude is missing.  Since all the charanams are in the same style, the explanation given for first charanam is applicable for all charanams.

Third BGM – this BGM is exactly like first BGM.

Third Charanam – though the tune is similar, it has been modified in the order of singing.  PS sings the first two lines and repeats the same.  Then the next two lines are sung by TMS.  The next two lines are sung by PS and the following next two lines are sung by TMS.  The song is finished by singing the Pallavi’s first portion in full by TMS and PS singing only the two lines of her portion.

As you all know it’s a love duet - அதனால் நேரடியாக இந்த பாடல் (பலவிதமான) காதல் உணர்ச்சிகளை உணர்த்துகிறது - அடிவயிற்றில் ஓர் சிறு உருண்டை உருவாகி, அது கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி எழுந்து தொண்டையை வந்து சேரும் வரையிலான அந்த உணர்ச்சி பரிமாணங்கள், தொண்டையில் வந்து சேர்ந்த பிறகு ஏற்படும் அந்த ஓர் ecstasy.  சின்ன சின்ன காதல் குறும்புகள், அதில் ஏற்படக்கூடிய சந்தோஷங்கள், இப்படி காதல் கேளிக்கையின் பல வண்ணங்கள்.

பாடல் அந்த காலத்தில் super duper hit என்பது எல்லோரும் அறிந்த  விஷயமே.

மீண்டும் ஓர் வித்தியாசமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=Y8XFiW-jeHQ


Quote
Share: