Notifications
Clear all

1974 - Thirumangalyam - Ulagam Namathu Veedendru  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 88
27/07/2020 5:38 pm  

பாடல் : உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்
பாடியவர்கள் : எல்.ஆர்.ஈஸ்வரி, சாய்பாபா, குழுவினர்
படம் : திருமாங்கல்யம்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1974

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது படம் வெளிவந்த போது மிகவும் பிரபலமான ஒரு பாடல். ஜெயலலிதாவின் 100 -வது படமான "திருமாங்கல்யம்" என்ற படத்திலிருந்து "உலகம் நமது வீடென்று சொல்லுங்கள்" என்ற பாடல் தான் அது. இது ஒரு சாதாரண "item" song தானே, இதிலென்ன அப்படி ஸ்பெஷல் ஆக உள்ளது அலசுவதற்கு என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மை தான், ஆனாலும் அதிலும் அந்த கதாபாத்திரத்தின் தன்மைகளை உணர்ந்து பல விஷயம் செய்துள்ளார் மன்னர் - காட்சியில், அவளது நடவடிக்கைகளில், வசனங்களில் வடிவமைத்து காட்டியதை மன்னர் தன் இசை வாயிலாக சொல்லாமல் சொல்லியுள்ளார்.

As usual, பாடலுக்குள் போகும் முன் பாடல் இடம்பெறும் வகையிலான படத்தின் கதை உங்களுக்காக : முத்துராமன், சிவகுமார் - அண்ணன்-தம்பிகள். பெரும் செல்வந்தர்கள், தாய்-தந்தையற்றவர்கள். முத்துராமன் தொழிலதிபர். சிவகுமார் காலேஜ் மாணவன். இவர்களது guardian செல்வந்தரான மேஜர் சுந்தர்ராஜன். மேஜரின் முதல் மனைவியின் குழந்தைகள் ஜெயலலிதா மற்றும் ஸ்ரீகாந்த். அவர்கள் சூழ்நிலையால் பிரிக்கப்பட்டு ஏழ்மையில் வாடுகிறார்கள். ஜெயலலிதா குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுத்து பிழைப்பு நடத்த, ஸ்ரீகாந்தோ போலீஸாரால் தேடப்படும் ஒரு குற்றவாளியாக திரிகிறான். மேஜரின் இரண்டாவது மனைவியின் (உயிருடன் இல்லை) குழந்தைகள் லக்ஷ்மி மற்றும் பேபி ஸ்ரீதேவி. முத்துராமன் மிகவும் பொறுப்பானவர். சிவகுமார் குழந்தை உள்ளம் படைத்தவர். பேபி ஸ்ரீதேவி வாய் பேச முடியாதவர். லக்ஷ்மி அடாவடிப்பேர்வழி. பண்பாடு, கலாச்சாரம், கட்டுப்பாடு இவற்றையெல்லாம் மதிக்காதவர். தன் விருப்பப்படி சுதந்திரமாக வாழ நினைப்பவர். குட்டை உடைகள் தரித்து வீட்டுக்குள்ளே நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கூத்தடிப்பவர். "Discotheque"யில் ஆடிப்பாடி மகிழ்பவர். இந்த குணம் படைத்தவரானாலும் மது பழக்கத்துக்கோ, கஞ்சா, ஹுக்கா, மற்றும் அது போன்ற போதைப்பொருட்களுக்கோ அடிமையாகாதவர். அவரது கொள்கை யாருடைய கட்டுப்பாட்டுக்கும் வழங்காமல் வாழ்க்கையை உல்லாசமாக அனுபவிக்கவேண்டும் என்பது தான். அப்படி அவர் "discotheque"வில் ஆடிப்பாடும் காட்சி தான் இந்த பாடல்.

அன்றைய காலகட்டத்தில் நிலவி வந்த "ஹிப்பி" culture பாடலில் பிரதிபலிக்கிறது. அவர்கள் வாழ்க்கையை மைய்யமாக வைத்து ஹிந்தியில் வெளிவந்த "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" படம் தான் இது போன்ற பாடல்களின் துவக்கம். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் அது போன்ற பாடல்கள் இடம் பெற்றன. அதில் இந்த பாடலும் ஒன்று. ஆனால் பத்தோடு பதினொன்று ஆகிவிடாமல் மன்னர் மிகவும் வித்தியாசமாக இந்த பாடலை வடிவமைத்துள்ளார். ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி இந்த பாடலில் அவர் சொல்லாமல் சொன்ன விஷயங்களை யாராவது புரிந்துகொண்டுள்ளார்களா என்பது சந்தேககமே. பாடல் காட்சியில் தோன்றும் பலரும் மது அருந்துகிறார்கள், ஹுக்கா பயன்படுத்துகிறார்கள், மேலும் சில போதை பொருள்களை பயன்படுத்துகிறார்கள். அந்த போதையில் பித்து பிடித்தது போல் ஆடுகிறார்கள். ஆனால் பாடலின் நாயகி லக்ஷ்மி இதற்க்கெல்லாம் விதிவிலக்கு - அவர் இந்த போதை பொருட்களை பயன்படுத்துவதில்லை. அவரது ஆடலும் மற்றவர்களின் ஆட்டத்திலிருந்து மாறுபட்டு நிற்கிறது. If you put it in another way – she stands alone in the crowd. She is restrained, doesn’t go overboard. இதை நன்கு புரிந்து கொண்டு மன்னர் அதற்க்கேற்றாற்போல் இரண்டு விதமாக வடிவமைத்துள்ளார் இந்த பாடலை - அதாவது லக்ஷ்மி பாடும் பகுதிக்கு அதிகம் அலட்டல் இல்லாத இசையும், bgm பகுதிக்கு ஆர்ப்பாட்டமான இசையும் என வடிவமைத்துள்ளார். மேலும், போதை பொருளை அருந்தி பலவிதமாக ஆடுகிறார்கள், தலை ஆட்டுகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா, பாடலுக்கான flow இதையும் மனதில் கொண்டு வடிவமைத்துள்ளார். மன்னர் மனதில் கண்டு வடிவமைத்த பாடலை திறம்படவே இயக்குனர் execute செய்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

பாடல் அமர்க்களமான prelude-டுடன் ஆரம்பமாகிறது. The prelude starts with heavy chord strumming in guitar along with Accordion. A “tup” “tup” sound has been infused at regular interval to indicate the opening of “liquor” bottles. The prelude ends with a small piece in Electric Guitar. And then the pallavi starts in the voice of L.R.Eswari. She repeats the pallavi twice and ends with the capture lines of “ஆனந்தம் ப்ரஹ்மானந்தம், அடி ஆனந்தம் ப்ரஹ்மானந்தம்". பல்லவியின் முதல் பகுதிக்கு ஒரு பாணியும், capture line ஆன "ஆனந்தம் ப்ரஹ்மானந்தம் ....." பகுதிக்கு வேறுவிதமாகவும் rhythm அமைத்துள்ளார். He has used Drums, Congos or Tumba for the first four lines and for the capture lines he has used Dholak. The whole song is ably backed up with Bass Guitar. Pallavi’s first four lines are embellished with beautiful interludes in Accordion. And for the capture portion he has embellished with “Triangle” and “Cabasa”. Look at the way she prounces “ஆனந்தம் … தம் ….” – indicating the place is filled with தம் அடிப்பவர்கள். ஹிப்பிகள் கடவுளை அடைய ஒரு தப்பான கொள்கையை கடைபிடித்தவர்கள் - போதை பொருளை அருந்தி அதன் மயக்கத்தில் கடவுளை அடையலாம் என்று கருதியவர்கள். அவர்கள் பயன்படுத்திய capture lines "ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா". இங்கு கவிஞர் "ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா"வுக்கு பதிலாக "ஆனந்தம் ப்ரஹ்மானந்தம்" என்று எழுதியுள்ளார். அதனால் தான் பாடலில் ஆங்காங்கே "பக்தி" touch-ச்சும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு போதை பொருள் அருந்தியவர்கள் மெதுவாக தலை அசைக்கும் விதத்தை சுட்டிக்காட்டும் விதமாக தாளத்தை வடிவமைத்துள்ளார்.

Then starts the first bgm. This portion is heavy in orchestration – because the dancers are dancing wildly. It starts either with Synthesizer or Accordion with heavy strokes in Drums, Congos & Tumba too must have been used, and is taken over by Trombone and Trumpet/Saxaphone, which is followed by a long piece in Electric Guitar. Then follows the humming “ஜிங்கிலாரா, ஜிங்கிலாரா ....". Here the lead singer hums in one note and the chorus hums in contrast note – again to indicate that she is a standalone amongst the crowd. For the “ஜிங்கிலாரா, ஜிங்கிலாரா ...." humming portion Director has kept the heroine off the screen and only her voice is heard – thereby registering that she is not one amongst the crowd. The bgm is finished by a cute piece in Santoor. Then starts the first charanam. Every three lines of the Charanam is embellished by a male humming. The charanam ends with "ஆனந்தம் ப்ரஹ்மானந்தம் ....." and the pallavi is sung once. Here, a nice interlude in Flute has been placed (whereas when she first sings the Pallavi it has been embellished with interludes in Accordion). In the charanam he has used Bongos, Congos and Drums for தாளம்.

Then the second bgm starts. Here again it turns into fast. The bgm begins with Trumpet (or is it Trambone) and Sax and a fast roll in Guitar and is taken over by the lead singer humming "லாப ரூப ரூப ரூப ...." with a contrast humming by the chorus (again to show that she is separate from the crowd) which is followed by a piece in Sax and taken over by Lead Guitar and Santoor to pass it on to the male lead singer to croon the second charanam. Here the charanam is embellished with a beautiful interlude in Metal Flute, I suppose. This charanam is finished in a different way – the female lead singer taking it from the male singer to croon "ஆனந்தம் ப்ரஹ்மானந்தம் ....." with a peculiar stress to the word “தம் .....".

Then continues the third bgm. He has improvised this bgm too. It starts with a piece in Accordion, I suppose, or is it Synthesizer? This portion is heavily backed with heavy beats on Drums. Then follows the Sax and Trumpet/Trombone in relay style and “ஜிங்கிலாரா, ஜிங்கிலாரா ...." is played in Electric guitar and note in some other instrument is following this piece and passed on to the lead female singer to start the third charanam. This charanam is embellished with a beautiful male humming combined with Flute. This charanam does not repeat the "ஆனந்தம் ப்ரஹ்மானந்தம் ....." portion unlike the other two charanams and straightaway starts the pallavi. This pallavi portion is embellished with a contrast “ha…ha…ha…” humming by the chorus in off-beat and beautiful short piece in flute. The song ends with repeatedly singing"ஆனந்தம் ப்ரஹ்மானந்தம் .....", emphasizing the word “தம்”.

Altogether a really foot-tapping number, bearing the stamp of MSV and his musical depiction of the character. Though the viewers and listeners enjoyed the song, the concept of the song was not understood by anybody till date.

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெறுவது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே. டி.

https://youtu.be/GhNAJcTxAL4


Quote
Share: