Notifications
Clear all

1974 - Thaai Piranthaal - Ponnoonjal Katti Vaithu  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 82
26/08/2019 2:51 pm  

பாடல் : பொன்னூஞ்சல் கட்டி வைத்து

படம் : தாய் பிறந்தாள்

பாடியவர்கள் : எஸ். ஜானகி

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1974

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நான் எடுத்துக்கொண்டுவந்திருக்கும் பாடல் "தாய் பிறந்தாள்" படத்திலிருந்து எஸ்.ஜானகி பாடிய "பொன்னூஞ்சல் கட்டி வைத்து" என்ற பாடல்.  இந்த பாடலை அந்த காலத்தில் நான் ஒரு நாள் கூட கேட்டதாக ஞாபகம் இல்லை.  இன்னும் சொல்லப்போனால் இப்படி ஓர் படம் வந்தது  கூட தெரியாது.  ஓர் சில வருடங்களுக்கு முன் இந்த படம் என் கலெக்ஷனுக்கு வந்து அதை பார்த்த போது தான் முதன்முதலாக கேட்கவே செய்தேன்.  கேட்ட மாத்திரத்திலேயே மிகவும் பிடித்து விட்டது.  And it became one of my fav too.  ஆமாம் அப்படி என்ன இருக்கிறது இந்த பாடலில் என்று கேட்க்கிறீர்கள் தானே?  Situation படி இது ஒரு முதல் இரவு பாடல்.  ஆனால் அத்தகைய காட்சியில் நாம் வழக்கமாக பார்க்கும் விதத்தில் அல்ல இந்த பாடல் அமையப்பெற்றுள்ளது.  Most of the time it would be sensuous OR teasing kind OR highly sentimental.  But in this song you can’t find these elements, though you could sense the undercurrent emotion (pathos).   The song is structured in a peculiar style – filled with devotion, yearning and sacrifice - இவற்றோடு நளினவும் சேர்க்கப்பட்டுள்ளது. 

The song is structured in an unexpected fashion.  Its quite difficult to sing this song.  No wonder he chose S.Janaki to sing this one.    Before entering into the song – a brief description about the story and situation :

நாயகன் முத்துராமன் செல்வந்தர்களான  அசோகன்-பானுமதி தம்பதியினரின் ஒரே மகன்.  அவரது மாமன் மகள் சாரதா.  தாய்-தந்தையர்களை இழந்தவர் என்பதால் இவர்கள் வீட்டிலேயே வளர்கிறாள்.  சாரதா முத்துராமனை ஒரு தலையாக காதலிக்கிறார், அவரை தன் கண்கண்ட தெய்வமாகவே பார்க்கிறார்.  முத்துராமனுக்கு வேளாவேளைக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்கிறார்.  பானுமதிக்கு சாரதாவை முத்துராமனுக்கு கெட்டிவைக்க ஆசையில்லை.  மறித்து அவருக்கு செல்வச்செழிப்பில் வாழும் ஒரு பெண்ணை மணமுடிக்க வேண்டும் என்றும், பேரப்பிள்ளைகளை சீக்கிரமே கொஞ்சவேண்டும் என்று ஆசை.  அதன் படி செல்வந்தரான சி.ஐ.டி.சகுந்தலாவை முத்துராமனுக்கு மணமுடித்து வைக்கிறார்.  அதில் சாரதாவிற்கு பெரும் அதிர்ச்சி.

சகுந்தலாவிற்கு பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசையில்லை. மிகவும் ராங்கிக்காரியும் கூட.  மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பிள்ளை பெறும் பாக்கியமும் இல்லை என தெரியவர பானுமதி சாரதாவை முத்துராமனுக்கு இரண்டாம் தாரமாக கட்டிவைக்க முடிவெடுக்கிறார் - அவரால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும் என்று உறுதியாக தெரிந்த பின். 

இதை அறிந்த சகுந்தலா சாரதாவிடமிருந்து ஓர் சத்தியம் வாங்கிக்கொள்கிறார் - அதாவது ஓர் குழந்தை வேண்டுமென்பதற்காக மட்டுமே (குடும்பத்திற்கு ஓர் வாரிசு தேவை என்பதால்) இந்த திருமணம் நடக்கிறது என்பதால் (not because of that Muthuraman doesn’t love Sakunthala or he has an eye on Saradha), குழந்தை பிறந்து அதற்க்கு பெயர் சூட்டும் விழா நடந்து முடிந்த அன்றே சாரதா அந்த வீட்டை விட்டே போய் விட வேண்டும் என்றும், அந்த வீட்டில் மருமகளாக தான் மட்டும் தான் வாழவேண்டும் என்று. எல்லோரது நலம் கருதி  சாரதாவும் அதற்க்கு ஒப்புக்கொள்கிறார்.  திருமணம் நடக்கிறது.  பிறகு முதல் இரவு - அப்போது பாடப்படும் பாடல் தான் இது.

Now you can understand the plight of Sharada so also the song - முத்துராமன் அவளை மனைவி என்றே எண்ணிய போதிலும், சகுந்தலாவிற்கு  செய்து கொடுக்கப்பட்டிருக்கும் சத்தியத்தின் காரணத்தால் அவள்  அவருக்கு ஓர் குழந்தை பெற்றுக்கொடுக்கும் கருவி மட்டும் தான் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த  உண்மை.  ஓர் மனைவியின் சுதந்திரம் அவளுக்கு எடுத்துக்கொள்ள முடியாது.  அதே நேரம், அவள் அவனை அவ்வளது நேசித்திருக்கிறாள், மனதளவில் அவனோடு வாழ்க்கை நடத்தியிருக்கிறாள், அவனை கடவுளாகவே நினைத்து மனதில் பூஜை செய்திருக்கிறாள்.  இவ்வளவும் இந்த பாடலில் வெளிப்படுகிறது.  Lyrics : excellently penned by Alangudi Somu.

The song starts with a short and sweet but small prelude.  Guitar, Sitar, Flute are played in mixed fashion. Duggi Tarang and muted tambourine are played for rhythm.  The pallavi itself is shaped in different scales – Devotion, yearning, sacrifice எல்லாம் இந்த பல்லவியிலேயே புகுத்தி விடுகிறார் மன்னர்.  For the pallavi Tabla is used as percussion.

First BGM – can divide in two parts : first part – Clarinet and Flute played together. Second part – Santoor.  One should notice the different pattern in Tabla.  First charanam – conveys that she has decided to supress her love.  Notice the various emotions and the drastic scale changes. 

Second BGM – again divided into two portions : first one Hawaiian Guitar and Sitar played together.  Second part – Flute – My god it simply pinches your heart.  And at the end a small piece in Sitar combined with Santoor. 

The fast paced Tabla rhythm in contrast to the singing (during charanams) conveys the inner turmoil of the character played by Saradha. 

இரண்டு சரணங்களும் முடிவது "தொகையறா" பாணியில்.  அங்கு இசைக்கருவிகள் ஏதும் ஒலிப்பதில்லை.  Those portions convey her deep love for him.  பாடலின் இறுதியில் பல்லவி ஒரு முறை பாடப்பட்டு முடிவடைகிறது.

சரணங்களை பார்த்தீர்களானால் இரண்டு இரண்டு வரிகளாக பிரித்து மொத்தம் எட்டு வரிகள்.  ஒவ்வொரு இரண்டு வரிகளுக்கும் ஒவ்வொரு "bhaavam"!!!!!  எந்த இசை அமைப்பாளர் தான் இவ்வளவு சிந்தித்து செயல்படுவார் சொல்லுங்கள், மன்னரை தவிர?

பெரும்பாலான மன்னர் பாடல்களில் highlight என்பதே பாடல் நெடுக ஆங்காங்கே வரும் அந்த interludes தான் என்பதில் இரு கருத்தேதும் இருக்காது என்றே சொல்வேன்.  ஆனால் என்ன ஆச்சர்யம், இந்த பாடலில் பல்லவியில் ஆகட்டும், சரணங்களில் ஆகட்டும் பெயருக்கு கூட ஓர் interlude கிடையாது.  What could be the reason?  குறிக்கோள் ஒன்றே ஒன்று தான் என்பதால் deviations வேண்டாம் என்று தவிர்த்திருப்பாரோ? 

பாடப்பட்ட விதத்திலும், இசையிலும் "ஊஞ்சல்/தொட்டில்" ஆடுவது போன்ற ஓர் உணர்வு எப்படுகிறது அல்லவா - அதற்குரிய காரணங்கள் :  

(ஒன்று) பாடல் ஆரம்பிப்பதே "பொன்னூஞ்சல்" என்ற வார்த்தையுடன்   

(இரண்டு) அவளது வாழ்க்கை இப்போது ஊஞ்சலாடுகிறது

(மூன்று) இந்த திருமணம் நடத்தப்பட்டிருப்பதே ஒரே ஒரு குறிக்கோளுடன் தான் - அதாவது ஓர் குழந்தை பெற்றுக்கொடுப்பதற்காக மட்டுமே - குழந்தையை தொட்டிலில் போட்டு தானே  ஆட்டுவார்கள்.  So indirectly indicates the purpose of the marriage through cradling rhythm. அதுவும் இல்லாமல் அவர்களது ஒப்பந்தப்படி சாரதாவிற்கு பிறக்கும் குழந்தை மீதான  உரிமை  தொட்டில் போடும் வைபவம் முடிவடையும் மட்டும் தானே. ஆக, ஒரு குழந்தை தான் குறிக்கோள் என்பதை "symbolic" ஆக தொட்டில் ஆட்டும் பாணி மெட்டில் கொண்டு வந்ததிலேயே முடிஞ்சு போச்சு அவரது வேலை.  ஜானகி குரலில் இருக்கும் இன்ன பிற சங்கதிகளெல்லாமே "bonus" என்று தான் சொல்லவேண்டும். மன்னரின் கற்பனை திறனை என்னவென்று மெச்ச.

Prelude -டில் ஆரம்பித்து முதல் சரணம் வரை தொட்டிலை மெதுவாக ஆட்டுவது போலவும், இரண்டாவது BGM -மில் சற்றே வேகமாக ஆட்டுவது போலவும், மீண்டும் இரண்டாவது சரணம் முதல் பாடலின் கடைசி வரை மெதுவாக ஆட்டுவது போலவும் வடிவமைத்துள்ளார்.

It can be counted as one of the best of S.Janaki sung for Mannar.  But unfortunately the song went unnoticed, as the film could not make any ripples in the box office. 

வரிக்கு வரி எத்தனை "bhaavangal" மின்னி மறைகின்றது அல்லவா?  மன்னர் எஸ்.ஜானகிக்கு கொடுத்த பெரும்பாலான பாடல்களில் இந்த ஜாலத்தை பார்க்கலாம்.

உங்கள் பின்னூட்டங்கள் எங்களுக்கு டானிக்.

நன்றி / வணக்கம்.

 

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=V_GnMTw5gqE

 


Quote
Share: