Notifications
Clear all

1973 - Rajapart Rangadurai - Inquilab Zindabad  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 115
09/09/2020 5:45 pm  

Unusual Situation Songs

பாடல் : இன்கிலாப் ஜிந்தாபாத்
படம் : ராஜபார்ட் ரங்கதுரை
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், குழுவினர்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1973

அனைவருக்கும் வணக்கம்.

Unusual என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. சினிமாவுக்குள் சினிமா-வை மைய்யமாக கொண்ட பல படங்கள் உள்ளன. ஆனால் நாடக கலைஞனை / நாடகத்தை மைய்யமாக கொண்ட திரைப்படங்கள் மிகக்குறைவே. அப்படியே இருந்தாலும் அப்படங்களில் "நாடக காட்சிகள்" பெயருக்கு ஒன்றிரண்டு அமைக்கப்பட்டிருந்தனவே தவிர நாடகத்தின் பல காட்சிகள் அமைந்த ஒரே ஒரு திரைப்படம் "ராஜபார்ட் ரங்கதுரை"-யாக தான் இருக்கக்கூடும். அத்திரைப்படத்தில் ஒரு காட்சி - சுதந்திர போராட்ட வீரர் அமரர் பகத் சிங்கின் போராட்டத்தை நாட்டிய நாடகமாக சித்தரித்த பாடல். அவரது வீரத்தையும்,போராட்டத்தையும், அஞ்சா நெஞ்சத்தையும், தேசப்பற்று, எழுச்சி மிகும் கொள்கைகளையும் நாடகமாக போடும் போது வசனங்கள் வாயிலாக எளிதாக வெளிப்படுத்திவிடலாம். ஆனால் அதை பாடலில் வடிவமைப்பது அவ்வளவு எளிதல்ல. காரணம் - இது அவரது வாழ்க்கை வரலாற்று படமல்ல, அல்லது பல காட்சிகள் இடம்பெறும் வகையிலான நாடக காட்சியுமல்ல. 4.75 நிமிடங்கள் மட்டுமே கொண்ட பாடல் காட்சி. இந்த குறுகிய நேரத்தில் அன்னாரது ஒட்டுமொத்த bhaavangalaiyum கொண்டுவந்தாகவேண்டும். சற்று இங்கே அங்கே போனாலும் அடி சறுக்கி விடும். ஆனால் மன்னர் வெகு நேர்த்தியாக அதை கையாண்டு வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். அந்த வகையில் இந்த பாடலை ஒரு வித்தியாசமான பாடல் என்றே சொல்லலாம்.

Prelude - எழுச்சி, வீரம், போலீசாரின் துன்புறுத்தல் இவைகளை வெளிப்படுத்தும் விதமான ஆரம்ப இசை. Trombone-னில் ஒரு piece அதை அடுத்து Snare Drums-ஸில் ஒரு display - இது relay போல் நான்கு முறை வாசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பின்னணியில் Trombone + Snare Drums per beat ஒலித்துக்கொண்டிருக்க (7 முறை) முன்னணியில் வயலின் வாசிக்கப்பட்டுள்ளது - போலீசாரின் அடிபட்டு அன்னார் தவிப்பதை சுட்டிக்காட்டும் வண்ணத்தில். எட்டாவது முறை வரும் பொழுது Trombone + வயலின் sustained ஆக ஒலிக்க அங்கு Harp-பில் ஒரு roll. இதை தழுவி பல்லவி ஆரம்பிக்கிறது.

பல்லவி ஆரம்பிக்கும் போதே நம்மையும் அறியாமல் மெய்சிலிர்ப்பு ஏற்படுகிறது (என்னைப்பொறுத்த வரையில்). இந்த மெய்சிலிர்த்து, உணர்ச்சிப்பெருக்கில் திக்குமுட்டாடல் பாடல் முடியும் வரை தொடர்கிறது. அதற்க்கு காரணம் entire team-முடைய உழைப்பு.

Pallavi - எழுச்சி பொங்கும் பாணியில் "இன்கிலாப் ஜிந்தாபாத்" - "ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்" என்று முதல் இரண்டு வரிகளை பாடுகிறார் - அதற்க்கு ஒவ்வொரு வரி முடிந்ததும் புல்லாங்குழலில் சிறு interlude - உண்மையாக பார்க்கப்போனால் இந்த interlude "Trumpet" / "Trombone" அல்லது அது போன்ற வேறு ஏதாவதொரு "heavy "instrument-டில் "எழுச்சி"யின் உணர்வை தூண்டும் வண்ணம் "strong" ஆக செய்திருக்கவேண்டும். ஆனால் மன்னரோ தவிர்த்து மென்மையான புல்லாங்குழலை பயன்படுத்தியுள்ளார். இதற்க்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும்? அடிப்படையில் பகத் சிங் மென்மையானவன் என்பதை உணர்த்தவா, அல்லது அவனது எழுச்சி பொங்கும் கூக்குரல் "மென்மையாக காற்றில் கலந்து மக்களிடம் சென்றடைந்து அவர்களுக்குள் எழுச்சி உணர்வை தூண்டுகிறது" என்பதை உணர்த்தவா? அதை தழுவி கோரஸ் அந்த வரிகளை பாடுகிறது - அதற்கும் இதே புல்லாங்குழல் interlude சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து TMS பல்லவியின் நான்கு வரிகளை எழுச்சி போங்க பாடுகிறார். அதற்க்கு Trumpet /Trombone /வயலினில் ஒரு interlude. தொடர்ந்து அதே வரிகள் repeat செய்யப்படுகிறது. இந்த முறை கோரஸ் humming அவருக்கு heavy harmony ஆக சேர்க்கப்பட்டுள்ளது. இது முடிந்ததும் மீண்டும் அதே interlude. தொடர்ந்து அடுத்த நான்கு வரிகளை பாடுகிறார். அங்கும் இதே கருவிகளில் ஒரு interlude - இப்போது சற்று மாறுபட்டு ஒலிக்கிறது. பல்லவி இப்படியே நிறைவு செய்யப்படுகிறது.

பல்லவி முழுதும் தாளத்துக்கு Snare Drums மற்றும் தபலா (அது வாசித்திருப்பது போல் தெரியாமலேயே வாசிக்கப்பட்டுள்ளது) பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் Guitar chords சேர்க்கப்பட்டுள்ளது.

First BGM – மிக சிறிய BGM தான் இது. Guitar chords rhythm ஆக ஒலிக்க , அதோடு சேர்ந்து வயலினும் ஒலிக்கிறது. இதற்க்கு விட்டு விட்டு Trumpet / Trombone pieces வாசிக்கப்பட்டுள்ளது. மேலும் Snare Drums off beat-டில் வாசிக்கப்பட்டுள்ளது.

First Charanam – வசனம் பேசுவது போல் நான்கு வரிகள் பேசப்பட்டு இந்த சரணம் ஆரம்பிக்கிறது. இங்கு பின்னணியில் புல்லாங்குழல் notes ஒரு தனி பாணியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. தாளமாக இங்கு Guitar chords வாசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரி முடிந்ததும் அந்த வரிகளில் இருக்கும் "எழுச்சி"-யை தூக்கி நிறுத்துவது போல் Snare Drums-ஸில் ஒரு roll வாசிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதே வரிகள் தாளத்தோடு மெட்டு சேர்த்து பாடப்படுகிறது. இங்கு தாளமாக Snare Drums, தபலா மற்றும் Guitar chords வாசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரி முடிந்ததும் Muted Trumpet-டில் ஒரு சிறு interlude. தொடர்ந்து அடுத்த நான்கு வரிகளை பாடுகிறார் - இங்கு மெட்டு சற்று மாறுபடுகிறது. "எங்கள் பொன்னாடு எப்போதும் எம்மோடு" என்ற வரிகளில் அன்னாருக்கு தேசத்தின் மீதுள்ள பாசம் வெளிப்படுகிறது. இந்த சரணத்தை நிறைவு செய்வது கோரஸின் "இன்கிலாப் ஜிந்தாபாத், ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்" என்கிற slogan. இங்கு தாளம் மாறுபடுகிறது. Interlude ஆக புல்லாங்குழல் சேர்க்கப்பட்டுள்ளது.

Second BGM – It’s a mixture of Chorus humming in different style and pitches, Violin runs, Trumpet / Trombone pieces. Snare Drum is played in different style for half of the portion and for the next half percussion has been avoided. This BGM ends with a stroking of Guitar Chords and a few notes on Harp.

Second Charanam – This charanam has been slightly modified. Here TMS first sings 6 lines divided into 3 each lines. One tune for first three lines and another tune for the next three lines. "எல்லோர்க்கும் வாழ்வென்னும், கர்மவீரர் பின்னாலே" என்ற வரிகளில் வாஞ்சை / அக்கரை / அன்பு தொனிக்கிறது. தொடர்ந்து வருவது நான்கு வரிகள் கொண்ட வீர வசனம். அதை தழுவி அதே வரிகளை மெட்டோடு பாடுகிறார். அதை தொடர்ந்து வேறு மெட்டில் அடுத்த நான்கு வரிகளை பாடுகிறார். இங்கெல்லாம் வீரம், ஆவேசம், வெறுப்பு, உறுதி என பலவிதமான bhaavangal மின்னி மறைகின்றன. சரணத்தின் முதல் பகுதியில் தாளத்துக்கு தபலா மற்றும் Guitar chords வாசிக்கப்பட்டுள்ளது. வசனம் பேசும் பகுதியில் Snare Drums தாளமாக ஒலிக்கிறது. அந்த பகுதிக்கு பலம் சேர்க்க பின்னணியில் கோரஸ் ஹம்மிங் harmony ஆக சேர்க்கப்பட்டுள்ளது. அதற்க்கு பிறகு மெட்டில் பாடும் பகுதிக்கு தாளமாக Snare Drums + தபலா + Guitar chords வாசிக்கப்பட்டுள்ளது. இந்த சரணத்தையும் நிறைவு செய்வது கோரஸின் "இன்கிலாப் ஜிந்தாபாத், ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்" என்கிற slogan.

Third BGM – Second BGM is repeated here.

Third Charanam – Structurewise charanam too is exactly like second charanam, but has been modified slightly. Here the first four lines have been enriched by Chorus humming. "முன்னூறு துப்பாக்கி, சுட்டாலும் ......." என்கிற வரிகளில் அன்னாரின் மன உறுதி வெளிப்படுகிறது. What a contrast expression from the same portion "எல்லோர்க்கும் வாழ்வென்னும், கர்மவீரர் பின்னாலே" in the second charanam! This charanam too is finished in the same manner like earlier charanams – viz., Slogans by Chorus. Then TMS continues by singing the Pallavi in whole viz., till “Inquilab Zindabad, Hindustan Zindabad”.

Postlude – Here some conversation takes place between the British person and Bhagat Singh, followed by slogan shouting by Bhagat Singh till he is hanged. A shriek is followed by the audience. Following that the slogan is reflected through the audience.

The rhythm used is “Waltz”. ஆனால் அதை எத்தனை விதமான பாணியின் வாசித்துள்ளார்!!!!! Chorus "இன்கிலாப் ஜிந்தாபாத், ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்" என்று சொல்லும் போது rhythm மாறுபடுவது போல் தோன்றினாலும் (அதாவது வேறு pattern-னில் வாசித்துள்ளார்), அதுவும் Waltz meter-றிலிருந்து மாறுபடுவதில்லை - 1,2,3 1,2,3 என்ற அதே meter-றில் தான் அமைந்துள்ளது.

பாடலை Progressive Chords பாணியில் வடிவமைத்துள்ளார்.

Patriotic song set in Waltz Rhythm! That itself is eye rising – because normally patriotic songs are set in military rhythm (march fast) or in some other rhythms. Because, normally Waltz rhythm is used for romantic numbers and at some times for pathos soaked numbers. As patriotic songs involve high voltage emotional Music Directors avoid this rhythm. As far as I know, there is only one old hindi movie song “Saare Jahaan Se achha Hindustan Hamaara” (Bhai Behen) set in Waltz Rhythm – though its a patriotic song, it has been sung in a mellifluous style. நரம்பு புடைக்கும் உணர்ச்சியோடு Waltz rhythm-திலும் பாடல் அமைக்க முடியும் என்று வித்தியாசமாக சிந்தித்து செயல்பட்ட மன்னரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

Link for the Video >>

https://app.box.com/s/bisb8yy8wqg8l3xhomzz6hx2j3b65kyy

Those who are not able to get the above video, please click here >>

https://youtu.be/GkxRC8ikSc4

This topic was modified 11 months ago by K.T.RAMANAN

Quote
Share: