Notifications
Clear all

1973 - Manitharil Manickam - I Will Sing For You ... Aattamenna Sollu Nee  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 115
12/10/2019 6:10 pm  

பாடல் : I Will Sing For You ….  ஆட்டமென்ன சொல்லு நீ என் தோழி

படம் : மனிதரில் மாணிக்கம்  

பாடலாசிரியர் : கண்ணதாசன்    

பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1973

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது விசித்திரமான / வித்தியாசமான / வேடிக்கையான சூழ்நிலையில் அமைந்த ஓர்  பாடல்.  இது போன்ற விசித்திரமான பல சூழ்நிலைகளுக்கு பாடல் அமைப்பது மிகவும் சிரமமானது, அல்லது கத்தி மேல் நடப்பது போன்றது.  சற்று முன்னே பின்னே ஆனால் கூட சொல்ல வந்ததிலிருந்து விலகி விடும்.  இசை அமைப்பாளரின் திறமைக்கு சவால் விடும் சூழ்நிலைகள்.  அத்தகைய சூழ்நிலைகளுக்கு  எண்ணற்ற பாடல்கள் அமைத்துள்ளார் நமது மன்னர்.  அத்தகைய வாய்ப்புகள் தானாக அமைந்ததா, அல்லது இவரால் தான் இது போன்ற சந்தர்பங்களுக்கு பாடல் அமைக்க முடியும் என்று நம்பி  வந்தார்களா, அல்லது இவரை விட்டால் வேறு யாராலும் செய்யமுடியாது என்று உறுதியுடன் வந்தார்களா என்று தெரியவில்லை.  எது எப்படியோ, இவருக்கு அமைந்தது போன்ற இத்தகைய வாய்ப்புகள் மற்ற இசை அமைப்பாளர்களுக்கு அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். 

விசித்திரமானது / வித்தியாசமானது / வேடிக்கையானது என்றாலும், நடைமுறை வாழ்க்கையில் காணமுடியாதது / நடக்காதது என்று சொல்லமுடியாது.  பல விசித்திரமான / வித்தியாசமான  பாடல்களுக்கான situations-ஸும் நம் வாழ்க்கையிலே கூட நடந்திருக்கலாம் அல்லது பிறர் வாழக்கையில் நடத்திருக்கக்கூடும் அல்லது நமக்கு நன்கு பரிச்சயம் ஆன யாருக்காவது நடந்திருக்கலாம் அவை ஒன்று நாம் நேரில் பார்த்திருக்கக்கூடும் அல்லது அவர் சொல்லி நாம் அறிந்திருக்கக்கூடும்.  என்ன, நிஜ வாழ்க்கையில் யாரும் ஆடிப்பாடமாட்டார்கள்.  ஆனால் படங்களில் அப்படி அல்லவே.  சினிமா என்பதே கற்பனை கலர்ந்த பொழுது போக்கு தானே. அங்கு பாடல்களுக்கு என்று ஓர் தனி இடம் உள்ளதே.  அதுவும், இது போல வித்தியாசமான சூழ்நிலையில் அமையும் பாடல்கள் பெரும்பாலும் மக்கள் மனதை கவர்ந்து விடும்.

இன்று நாம் அலச இருப்பது மிகவும் வேடிக்கையான ஒரு situation -னில் அமைந்த ஓர் அற்புதமான பாடல்.  பாடவும் தெரியாத, ஆடவும் தெரியாத ஓர் மனிதரிடம் மனநிலை குன்றிய ஓர் பெண் கத்தியை காண்பித்து பாடு, பாடிக்கொண்டே ஆடு இல்லையேல் உன்னை கத்தியால் குத்திவிடுவேன் என்று பயமுறுத்தி பாடி-ஆடவைக்கிறாள்.  கொஞ்சம் imagine பண்ணிப்பாருங்க, இதுவே வேறு ஏதாவதொரு இசை அமைப்பாளரிடம் போயிருந்தால் இந்த பாடல் எப்படி அமைந்திருக்கும் என்று.  ஆனால், மன்னர் எவ்வளவு யோசித்து இந்த பாடலுக்கு மெட்டமைத்திருக்கிறார்.  அதனால் தான் காலங்கள் இத்தனை சென்றாலும் இந்த பாடல் எள்ளளவும் மவுசு குறையாமல் உயரத்தில் நிற்கிறது. 

பாடலை எப்படி வடிவமைத்திருக்கிறார் என்று பார்ப்பதற்கு முன், படத்தின் கதை சுருக்கமாக - பாடல் காட்சி இடம் பெறும்வரையிலானது.  நாயகன் ஏவிஎம் ராஜன் ஓர் கொள்ளைக்கூட்டத்தை சேர்ந்தவன்.  போலீசாரால் தேடப்படுபவர்.  நாயகி பிரமீளா ஓர் கழைக்கூத்தாடி.  ஓர் நாள் பிரமீளாவை சிலர் பலவந்தமாக அடைய நினைக்க அவரை அவர்களிடமிருந்து காப்பாத்துகிறார் ஏவிஎம் ராஜன். அவர் கொள்ளைக்காரன் என்று தெரிந்தும்  அவரை காதலிக்கிறார் பிரமீளா.  ஏவிஎம் ராஜனுக்கும் அவர் மேல் காதல் வருகிறது. அந்த ஊரில் இருக்கும் ஒரே மருத்துவர் சிவாஜி.  ஏதாவது ஆராய்ச்சி பண்ணிக்கொண்டே இருப்பவர்.  கொஞ்சம் eccentric character.  ஆனாலும் மிகவும் நல்லவர், பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர். 

ஓர் வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் ஏவிஎம் ராஜன், புறப்படுவதற்கு முன் விரைவிலேயே உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்று பிரமீளாவிடும் உறுதி கூறிவிட்டு செல்கிறார்.  அவர் போவது ஓர் ஊர் திருவிழாவிற்கு.  அங்கு போலீஸ் அதிகாரி ஒருவரின் குழந்தையை ஒருவன் கடத்தி செல்கிறான்.  அவனை துரத்தும் போலீசாரால் சுடப்பட்டு அவன் ஆற்றில் குழந்தையோடு விழுகிறான்.  அந்த குழந்தை பிழைத்துக்கொண்டு ஏவிஎம் ராஜனிடம் வந்து சேர்க்கிறது.  யாருடைய குழந்தை என்று தெரியாமலேயே, அதன் மேல் இரக்கப்பட்டு அந்த குழந்தையுடன் வீடு திரும்பும் அவர் மேல் சந்தேகப்படுகிறார் பிரமீளா. என்னை ஏமாற்றி விட்டாய் என்றும் சாடுகிறார். குழந்தைக்கு அடைக்கலம் கொடுக்க மறுப்பதால் குழந்தையுடன் வெளியேறுகிறார் ஏவிஎம் ராஜன்.  தனியாக வாழும் ஓர் வயோதிக குரங்காட்டி வீட்டில் அடைக்கலமாகிறார். 

தன்னை ஏமாற்றியவனை பழிவாங்கியே தீருவேன் என்று ஆவேசத்துடன் ஓடும் பிரமீளா வேகமாக வரும் ஓர் கார் மீது மோதி விழுகிறார்.  அந்த விபத்தில் அவரது மனநிலை பாதிக்கப்படுகிறது.  அவரை குணப்படுத்துவதற்காக அவரது தோழி மனோரமா அவரை சிவாஜியிடம் அழைத்து செல்கிறார்.  அவரை பரிசோதனை செய்யும் போது பிரமீளா சிவாஜியை தன் காதலனாக நினைத்து தன்னை ஏன் ஏமாற்றினாய், உன்னை சும்மா விடமாட்டேன் கொன்று விடுவேன் என்று மிரட்டி, பாடு, பாடிக்கொண்டே ஆடு, இல்லை கத்தியால் குத்திவிடுவேன் என்று மிரட்டுகிறார்.  அப்போது வரும் பாடல் தான் இது.

இந்த பாடல் வடிவமைப்பதற்கு மன்னர் கையாளப்பட்ட யுக்தி என்னவாயிருக்கும் என்றால் - வீட்டுல உறவினர்கள் எல்லோரும் கூடுகிறார்கள் / அல்லது நண்பர்கள் பலர் ஒன்றாக கூடுகின்றனர் / அல்லது உறவினர்கள்/நண்பர்கள் பலர் சேர்ந்து பிக்நிக் செல்கிறார்.  அப்போது சாதாரணமாக என்ன நடக்கும் - பாட தெரிந்தவர்கள் பாடுவார்கள், ஆட தெரிந்தவர்கள் ஆடுவார்கள்.  இவை தெரியாதவர்கள் சும்மா பார்த்துக்கொண்டிருப்பார்கள்.  அப்போது பார்த்து இவர்களை சிலர் சீண்டவேண்டுமென்பதற்காகவே பாட / ஆட வற்புறுத்துவார்கள்.  அல்லது சிறு குழந்தை பல போதும்  தனக்கு பிடித்தவரிடம் பாடு, ஆடு என்று வற்புறுத்திக்கொண்டே இருக்கும். இவர்களும் முதலில் மறுத்தாலும் பிறகு பாட / ஆட ஆரம்பிப்பார்கள்.  ஆரம்பத்தில் சிறு கூச்சம் இருந்தாலும், பிறகு அவர்களுக்குள் ஓர் உத்வேகம் பிறந்து விடும்.  தனக்கு தெரிகிறதோ / வருகிறதோ இல்லையோ பலவிதமான பாணியில் / மொழியில் பாடுவார்கள், அதற்க்கு ஏற்றாற்போல் தைய்ய தக்க என்று பலவித பாணி நடனம் நன்கு தெரியும் என்பது போல் பாவ்லா பண்ணுவார்கள்.  இந்த technique-கை தான் மன்னர் பயன்படுத்தியிருக்கவேண்டும்.  The song is devised in different style of singing and dancing – Western, Carnatic Classical, Kathakali, Ottanthullal, Bharathanatyam, Kuchippudi, Dappankuthu, etc. 

One will be amazed by the way he jumps / transforms from one form to another. 

இக்கட்டான ஓர் நிலையில் பாடல் ஆரம்பிக்கிறது என்பதால் பாடலுக்கு prelude கிடையாது.  நேரடியாக பல்லவி ஆரம்பிக்கிறது.  அவர் ஓர் மருத்துவர் அல்லவா.  மேலும் அவர் பேசும் போது வழக்கமாக நடு நடுவே ஆங்கிலத்திலும் பேசுவார்.  அதனால் பாடல் ஆரம்பிப்பது ஆங்கில வார்த்தைகளில்.  முதல் இரண்டு வரி கேள்வி கேட்பது போலவும், அதற்க்கு அவர் ஒத்துக்கொள்வது போலவும் பேசும் பாணியில் அமைத்துள்ளார். அடுத்து வரும் வரியில் மெட்டுக்குள் புகுந்துவிடுகிறார்.  The first two lines of the pallavi is in English.  TMS sings the first two lines and repeats the same.  The first line is sung without any accompaniment.  And when he sings the next line rhythm starts with chord strumming on the guitar.  And when he repeats the lines Brush Style Drums too joins for enhancement.  அதற்க்கு இன்னொரு காரணமும் கூட உள்ளது - முதல் வரிகளை இரண்டாவது முறை பாட ஆரம்பிக்கும் போது அவருக்கு உத்வேகம் வந்து விடுகிறது – which can be noticed in TMS’s modulation too!!!!!  This portion is set in western style. The beat/rhythm continues.  Then starts the pallavi’s tamil lines, which starts leaving a beat.  In fact அந்த beat-டை பிடித்து பாடுவது ரொம்ப கஷ்டம்.  (Actually the first line is borrowed from an old song “ஆட்டமென்ன சொல்லுவேன்" sung by C.S.Jayaraman for the movie “Krishna Bhakthi”.  That song was used for a comic situation in Poompuhar, where Nagesh sings few lines to impress Manorama.  Here, instead of “Solluven” it has been turned to “Sollu Nee”).  TMS sings four lines and then repeats the same.  When the tamil portion begins, Mridangam starts playing in off-beat.  Mridangam is introduced here as the portion is sung in Carnatic style!!!!!  But the western style rhythm too supports subtly in guitar chords / brush style drums.  The pallavi is ended by singing the English lines two times.  When he repeats the lines he sings the lines in classical style, hence Mridangam is continued.  But the guitar chords and brush style drums are played prominently.

Then begins the first BGM – Flute dominates this BGM.  For two bars Flute is played in Carnatic style.  இன்னும் விளக்கமாக சொன்னால் பரதநாட்டியத்திற்கு / குச்சிப்புடிக்கு வாசிப்பது போல் வாசிக்கப்பட்டுள்ளது.  Counter melody ஆக வயலின் வாசிக்கப்பட்டுள்ளது.  இங்கு மிருதங்கத்தோடு சேர்ந்து தபலாவும் வாசிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.  மெருகூட்ட மோர்சிங் சேர்க்கப்பட்டுள்ளது, which is a common feature in Carnatic style.  மேலும் நாட்டிய பாணியை கையாண்டுள்ளதால் ஜதி பாடுபவர்கள் ஓர் கட்டையை வைத்து சிறு குச்சியால் தட்டுவார்களே, அந்த effect-டும் சேர்க்கப்பட்டுள்ளது. Triangle and Jaalra too are played to embellish the portion. Then begins the first charanam.  TMS sings two lines of the charanam and then does an Aalaapanai.  இந்த பகுதியில் மன்னர் கெடந்து புகுந்து விளையாடியுள்ளார்.  Brush Style Drums rhythm ஓடிக்கொண்டிருக்க, மிருதங்கம், தபலா இவைகளையும் ஒலிக்க வைத்துள்ளார்.  கூடவே மோர்சிங்.  ஏன்னு பார்த்தா - TMS அங்கு பாடிக்கொண்டிருப்பது Carnatic style-லில்!!!!!  ஆலாபனை முடியும் போது இந்த மிருதங்கம், தபலா + மோர்சிங் நின்றுவிடுகிறது – with a roll.  ஏனென்றால், அடுத்து பாடப்படும் பகுதியில் TMS western பாணிக்கு மாறிவிடுகிறார்!!!!!  -

In fact, பாடல் முழுதும் இதே ஜாலம் தான் - Carnatic, பரதநாட்டியம், குச்சிப்புடி, கதகளி, ஓட்டந்துள்ளல், டப்பாங்குத்து என்று ஏகப்பட்ட பாணி கையாளப்பட்டிருந்தாலும், அவையெல்லாம் ஊறுகாய் போல் ஆங்காங்கே சில வினாடிகள் வந்து போகின்றது.  பாடல் முழுதும் base செய்திருப்பது western ஸ்டைல்.  அதனால் ஒவ்வொரு பாணி முடிந்ததும் சட்டென்று – (கவனிக்கவும்) - பாடலின் flow-வை கொஞ்சம் கூட கெடுக்காமல் வெகு லாகவமாக western பாணிக்கு தாவி விடுகிறார். –

First charanam continues – Now he repeats the same two lines and does a humming in western style.  அதர்க்கு follow on போல் Saxophone வாசிக்கப்பட்டுள்ளது.  அதை தொடர்ந்து மேலும் இரண்டு வரி பாடுகிறது.  அதையொட்டி ஸ்வரம் பாடுகிறார்.  அங்கிருந்து நேரே பல்லவியின் முதல் இரண்டு  வரிகளுக்கு  தாவிவிடுகிறார். இதை ரெண்டு முறை பாடுகிறார் -  in two different modulations.  இங்கு முதலில் பாடும் போது ஒவ்வொரு வரிக்கு பிறகும் பியானோ + கிட்டார் chord interlude ஆக வருகிறது.  Uptil this portion the rhythm pattern played is in western style. 

Second BGM – it starts with a roll on the Drums.  அதை தொடர்ந்து Trumpet -டில் ஒரு நீண்ட piece ஒலிக்கிறது - for two bars.  அதற்க்கு contrast ஆக பியானோவில் (if I am not wrong) chords சேர்க்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு bar முடிந்ததும் Flute -டில் ஒரு சிறு interlude.  Until this mainly Drums is played as rhythm.  Which is heavily backed up with guitar chords and some side instruments.  இது முடிந்ததும் இரண்டு bar-றுக்கு வீணை வாசிக்கப்பட்டுள்ளது.  வீணைக்கு தாவும் போது தாளவும், தாளக்கருவிகளும் மாறிவிடுகிறது. இங்கு தாளத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது மிருதங்கம்.  மெருகூட்ட ஜால்றா.   I believe he has not used Tabla for this Veenai portion.  At each beat a chord in guitar has been played.  Following this Flute is played for one bar.  For the Flute portion main percussion used is Tabla.  Embellishing instrument used is Jaalra.  Through the Flute portion he hints that he is going to introduce “Kathakali” in the coming portion!!!!!  Then TMS begins the second charanam by singing two lines – these are sung in western style – hence the rhythm used is Brush Style Drums.  Guitar chords too are played for more support.  After the second line the rhythm changes to folk style viz., Kathakali.  Chendai accompanied with Ilathaalam (bigger size of Jaalra) is played in typical Kathakali style.  Following that Sadan’s jabbering comes with the accompaniment of the folk style rhythm, for which the style used is “Ottanthullal”!!!!!  Following that TMS sings in dialogue style “எடா மிடுக்கா" and jumps to sing the next portion of the charanam – he starts with the first two lines and then goes to the next two lines and ends with a humming.  When TMS begins this portion MSV returns back to western style.  இதை தொடர்ந்து கிட்டாரில் ஒரு piece வாசிக்கப்பட்டுள்ளது - எப்படி தான் வாசித்தங்களோ!!!!!  Following that TMS sings the pallavi’s tamil portion’s first two lines and finishes this charanam.  When he sings the pallavi portion, alongwith the western rhythm which is played in Brush Style Drums and Guitar Chords, Mridangam too joins by playing in off-beat. 

Time for 3rd BGM – this one is quite short compared to the other two lengthy BGMs.  A small display in Mridangam + Morsing + Jaalra in Classical Dance format.  Through which MSV hits that he is going bring in the Classical Dance format in the coming charanam!!!!!  TMS begins the charanam by singing two lines.  Following that a jabbering is added (probably again in the voice of Sadan) as if in the form of chanting.  Following that TMS repeats the same line and then sings the next two lines.  Uptil here the rhythm is played in western style through Brush Style Drums and Guitar Chords (notice the heavy force by which it is stroked).  Then a small display of “Jathi” follows.  Here the western style stops and Mridangam is played.  Then when TMS starts singing the last four lines of the charanam, the rhythm returns back to western style!!!!!  And when TMS finishes it with a humming, like in the previous charanam, a piece in Guitar is played as interlude and TMS sings the English portion of the pallavi twice in two different style. 

Now the 4th and last BGM – the same second BGM is played here.  இந்த பகுதியில் "டப்பாங்குத்து" பாணியை புகுத்தவுள்ளேன் என்பதை BGM-மில் சொல்லாமல், சரணம் துவங்கும் போது தாளத்தின் வாயிலாக சொல்லியுள்ளார்.  TMS begins the charanam by singing two lines.  இங்கு தாளம் தபலாவில் டப்பாங்குத்து பாணியில் வாசிக்கப்பட்டுள்ளது.  அதை தொடர்ந்து ஒரு நீண்ட interlude - புல்லாங்குழலோடு சேர்ந்து Clarinet டப்பாங்குத்து பாணியில் ஒலிக்க (for two bars) பக்கபலமாக ஒலிப்பது தவில் – alongwith Tabla!!!!!  Its embellished with Jaalra.  The beat continues in folk style and TMS repeats the same line and jumps to the next two lines.  When he jumps to the third line, MSV smartly stops the folk beat and jumps to western rhythm.  Here, he has used a smart trick – when the switch over takes place, he plays only Guitar Chords for rhythm just for a quarter bar and then brings in the Brush Style Drums!!!!! My God,  என்னென்னு சொல்லப்பா நான் இவரை?  The next portion is sung exactly like other charanams. 

Now time for to finish the song.  TMS sings the two tamil lines and then sings the two English lines.  When he sings English lines, MSV avoids Mridangam and instead plays Tabla in off-beat – alongwith the Brush Style Drums, Guitar Chords, etc.  The tempo slowly increases.  TMS repeats the English lines three times, each time increasing the tempo and modulation.  In this portion MSV introduces Piano too.  After each line an interlude in Piano combined with Guitar Chords are infused.  The song ends with a short postlude – Drums, Mridangam, Tabla, Piano, Guitar Chords, Morsing and Claves are played together fast. 

It’s a blaster kind of a song.

Fusion என்றால் இது தாண்டா Fusion என்று பொட்டில் அறைந்தாற்போல் சொல்லியிருப்பது போல் உள்ளது.

The song was a rage during its time.  Experts say that the whole song is set in வடிகட்டின "கரஹரப்ரியா" ராகம், without even deviating a little bit. 

எப்படி வேணும்னா situation கொடுங்கப்பா, வெளுத்துக்கட்டிவிடுவோம் என்று இந்த பாடல் வாயிலாகவும் கூவாமல் கூவுகிறாரோ மன்னர்?

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=Ud02EDCsHeU


Quote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 2 years ago
Posts: 41
13/10/2019 11:12 am  

sir,

fabulous.

a small thing.

lyric writer valee.

 


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 115
13/10/2019 2:30 pm  

Is it?  Don't know how the error occurred, as normally I cross check many times to avoid mistakes.  

But, thank you so much for correcting.  I don't find any option for editing the topic. I feel only Admins / Moderators can do that job.  Admins / Moderators, please do the needful.

Thank you so much sir.


ReplyQuote
Share: