Notifications
Clear all

1973 - Ganga Gowri - Azhagiya Megangal Vaanathil  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 115
08/11/2020 2:29 pm  

பாடல் : அழகிய மேகங்கள் வானத்தில் திரள
படம் : கங்கா கௌரி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, குழுவினர்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1973

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது நம் மனதை மட்டுமல்ல இந்த பூமியையும் குளிரவைக்கக்கூடிய ராகத்தில் அமையப்பெற்ற ஓர் அற்புதமான பாடல். அதென்ன ராகம் என்கிறீர்களா - "அமிர்தவர்ஷிணி" ராகம் தான் அது. இந்த ராகத்தின் தன்மை என்னவென்றால் - இந்த ராகத்தை சரியான முறையில் பாடினால் வானம் மழை பொழியும் என்று சொல்லப்படுகிறது.

அது உண்மையா இல்லையா என்பது ஒருபுறமிருக்கட்டும். உண்மைதான் என்பது போல் இந்த பாடலை பாடிய எஸ்.ஜானகி அவர்கள் வாழ்க்கையில் ஓர் நிகழ்வு ஒன்று நிகழ்ந்ததை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் (ஆனால் எனோ அதற்க்கு பிறகு அவர் இதைக்குறித்து மீண்டும் கூறியதாக தெரியவில்லை). அதாவது சில வருடங்களுக்கு முன் கோடைக்காலமொன்றில் அவர் சென்னைக்கு வெளியே ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தாராம். மதியம் கொளுத்தும் வெயிலில் சென்னையை நெருங்கிக்கொண்டிருந்த நேரம். அப்போது கொளுத்தும் வெயிலால் அவதிப்பட்ட அவர், மனதில் நினைத்துக்கொண்டாராம் - இப்போது மழை பெய்தால் எப்படியிருக்கும் என்று. அப்படி நினைத்துக்கொண்டே அவரையும் அறியாமல் அவர் மன்னருக்காக பாடிய "அழகிய மேகங்கள் வானத்தில் திரள" என்ற பாடலை முணுமுணுக்க தொடங்கினாராம். என்ன ஆச்சர்யம், கார் சற்று தூரம் சென்றதும் லேசாக மழை தூர ஆரம்பித்து அவர் மேல் மழை துளிகள் பதித்ததாம். என்னே அந்த ராகத்தினுடைய மஹிமை என்று பூரிப்புடன் நினைவு கூர்ந்தார்.

Again, இந்த ராகத்தில் அமையப்பெற்ற திரை இசை பாடல்களை குறித்து பலரும் குறிப்பிடும் போது பல இசை அமைப்பாளர்கள் இசையில் வெளிவந்த சில பல பாடல்களை குறித்து சொல்வார்களேயன்றி மன்னர் இசை இசையில் இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை குறித்து யாரும் குறிப்பிடுவதே இல்லை - இன்று அலசப்படவிருக்கும் பாடலையும் சேர்த்து. ஏன் இந்த ஓரவஞ்சனை என்று தெரியவில்லை.

வழக்கம் போல் பாடலுக்குள் புகுவதற்கு முன் படத்தின் கதை சில வரிகளில் - படத்தின் தலைப்பை பார்த்தே புரிந்து கொண்டிருப்பீர்கள் இது ஓர் புராண படம் என்று. கைலாயத்தில் பார்வதிக்கும் (கௌரி) கங்கைக்கும் சக்களத்தி போர் நடக்கிறது. நான் தான் சிவ பெருமானுக்கு மிகவும் நெருங்கியவள் என்று இருவரும் சண்டை போட்டுக்கொள்கிறார். சிவ பெருமான் எவ்வளவு எடுத்துக்கூறியும் இருவரும் சமரசத்திற்கு வராததால் சிவ பெருமான் இருவரையும் சபிக்கிறார் - இருவரும் பூவுலகில் மானுடர்களாக பிறந்து தங்கள் தவறுகளை உணர்ந்து என்று திருந்துகிறார்களோ அப்போது தான் இருவரையும் தன்னுடன் மீண்டும் சேர்த்துக்கொள்வேன் என்று. அதன் படி கௌரி ஓர் அந்தணர் வீட்டிலும், கங்கை ஓர் மீனவ குடும்பத்திலும் பிறக்கிறார்கள். இருவரும் நண்பர்களாகின்றனர். அந்த ஊரில் மழை பொய்த்துவிட்டதால் கங்கைக்கு பூஜை செய்து அவளை மனம்குளிரவைத்தால் மழை பெய்யும் என்று அறிந்து கௌரியும் தோழிகளும் கங்கைக்கு பூஜை செய்து பாடும் பாடல் தான் இந்த பாடல்.

மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த பாடல். பாடுவதற்கு அவ்வளவு எளிதல்ல இந்த பாடல். பக்தி, கெஞ்சல், வருத்தம், expectation, anxiety என்று பல bhaavangal இழையோடுகிறது இந்த பாடலில். Chorus portion has been handled so differently in this song. It adds a peculiar charm to the song. பாடலின் ஆரம்ப இசையே மனதை அப்படியே அள்ளுகிறது. Listen to each word carefully to find out how expressively MSV has made the singer to sing the whole song. Sitar, Flute and Violin - இவைகள் எவ்வளவு அழகாக / அற்புதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்கவும்.

The song begins with an expressive prelude – it starts with Sitar, then passed on to Flute – in between comes a “bang” on the Swarmandal. Then passed on to Violin – this portion is divided into two portions – first with one or two violins and then the scale changes, where more violins are added. While the Sitar creates the serene / divine atmosphere, Flute indicates the gentle breeze OR the வளைந்து, நெளிந்து, குழைந்து ஓடும் நதி and the Violin portion creates the anxiety – as to whether it will rain or not. Right from the beginning Tabla supports ably the whole portion. And when the Violin session starts Tabla Tarang too joins in to add more beauty. Then begins the pallavi. SJ starts the pallavi by singing two lines of the pallavi. The chorus takes over from her by singing “Ganga Thaaye” and repeats the lines sung by SJ. SJ joins in by singing the next two lines which is repeated by the chorus. SJ then joins again and sings the last two lines. The chorus takes over again by singing the first two lines of the pallavi and finishes by singing “Ganga Thaaye”, where SJ too joins. The pallavi ends there. The pallavi has an excellent counter melody. Side instrument “Triangle” is also played alongside per beat – it has been made to sound like “anklet” aka “வெள்ளிக்கொலுசு” to indicate that the girls are wearing “வெள்ளிக்கொலுசு”. என்னே மன்னரது கற்பனை.

பல்லவியில் வரும் "ஆடு மாடுகளும், காடு மேடுகளும்" என்ற வார்த்தைகளை / வரியை பாடப்பட்ட விதத்தை கவனியுங்கள் - ஆடு சிறிது, மாடு ஆட்டை விட பெரியது - இந்த வித்தியாசத்தை உச்சரிப்பிலேயே காண்பிக்கிறார் மன்னர். அது போல் : காடு படர்ந்து விரிந்து கிடக்கின்ற ஒன்று, மேடு என்பது உயர்ந்து இருக்கும் - இதையும் உச்சரிப்பிலேயே உணர்த்திவிடுகிறார்.

Then begins the first bgm – Sitar is played for two bars. கங்கை மனம் மயங்கி மெதுவாக நகர்வது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது - திரையில் முக்குவப்பெண்ணான "கங்கா" மனம் மயங்கி தன்னையும் அறியாமல் ஆட துடங்குகிறாள். Then for one bar a display on Violin. Then the same notes are continued on Santoor. It is taken over by Flute – which conveys the joy of the girls. This bgm ends with a fluttering piece in Flute. Please give an ear to the excellent change of patterns in Tabla and Tabla Tarang. Then begins the first charanam. The charanams are structured in two parts / styles – first like a relay by the lead singer and the chorus & vice versa and the second portion only by the lead singer. SJ sings the first four lines one by one and when each line ends the chorus repeats the last word of the line in a different scale. And immediately after singing the forth line’s last word, the chorus repeats the same four lines sung by SJ and here SJ repeats the last word of each line. Upon finishing by singing the fourth line’s last word SJ immediately starts the next four lines. Here the tune takes a “U”turn. இங்கு கங்கையை பூமிக்கு வருமாறு வாஞ்சையுடன் வேண்டுகிறாள் கௌரி. இந்த நான்கு வரிகள் பாடிய பிறகு புல்லாங்குழலில் ஒரு அழகான interlude புகுத்தப்பட்டுள்ளது. பிறகு அதே நான்கு வரிகள் மீதும் பாடப்படுகின்றன. Here, once again the tune takes another “U” turn. SJ sings another four lines and the chorus repeats the last line. அதை தழுவி தபலா தரங்கில் ஒரு roll வருகிறது. இந்த பகுதி கங்கையிடம் கெஞ்சுவது போல் அமையப்பெற்றுள்ளது. And the Tabla Tarang roll indicates as if River Ganges is rolling. Following this SJ repeats the same lines and without a pause jumps to the last four lines, இந்த பகுதியில் மெட்டு மீண்டும் மாறுகிறது. நாங்கள் அழைத்து நீ வராமல் இருப்பாயா என்பது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. அதை தொடர்ந்து கோரஸ் பல்லவியின் முதல் நான்கு வரிகளை பாட, கடைசி வரியை ஜானகி பாட (இங்கு கவலையுடன் கூடிய கெஞ்சல் வெளிப்படுகிறது) முதல் சரணம் முடிகிறது.

தொடர்வது இரண்டாவது BGM - Tabla Tarang-ங்கில் தாளம் தொடர, அதற்க்கு off -beat ஆக வயலின் ஒலிக்கிறது. நடுவே புல்லாங்குழலில் ஒரு roll. அதற்க்கு பிறகு சந்தூருடன் சேர்ந்து மீண்டும் புல்லாங்குழலில் ஒரு roll. Here, the rhythm changes. Beautiful display of Flute is introduced here for two bars. The piece ends with fluttering notes on the Flute. MSV has modified this charanam a lot. The first four lines are sung in the same fashion like first charanam. Thereafter it is structured totally different with lots of twists and turns. "ஆடும் இரு காலும், இசை பாடும் குரலாலும்" என்ற வரிகளில் tune மாறுபடுகிறது. அடுத்து வரும் "கூடும் குலமாதர் மனம் உருகிட, தேடும் வழி வெள்ளம் புவி பெருகிட" என்ற வரிகளில் மீண்டும் மெட்டு மாறுகிறது. அடுத்து வரும் வரிகளில் மீண்டும் twist - "நிலத்தில் விழுந்து, நடந்து, தவழ்ந்து, வளத்தை கொடுத்து, சுகத்தை வழங்கு" - யப்பா ஒரு சரித்திரமே படைத்துள்ளார் இந்த வரிகளில்அதாவது உச்சியிலிருந்து நீர் வீழும் போது அது பாறைகளில் அல்லது நிலத்தில் பதித்ததும் மீண்டும் மேலே bounce ஆகும். அப்படி bounce ஆகி அந்த வெள்ளம் மீண்டும் தரையில் விழுந்து பிறகு சுதாரித்துக்கொண்டு தரையில் மெதுவாக நடக்க (ஊர்ந்து செல்ல) ஆரம்பிக்கும், பிறகு தவழ்ந்து, வளைந்து நெளிந்து ஓட ஆரம்பிக்கும். இந்த ஓர் உணர்வை இந்த பகுதியில் வடிவமைத்து நமக்கு புரியவைத்துள்ளார். அபார திறமை இருந்தால் மட்டுமே இப்படியோர் உணர்வை பாடல் வாயிலாக உணர்த்த முடியும். பாடல் வாயிலாக இப்போது பூஜை உச்சகட்டத்தை அடைந்து விட்டது. Hence, he has again modified the ending portion. He has totally avoided the pallavi here. Instead உச்சஸ்தாயியில் குழுவினரும், ஜானகியும் மாறி மாறி "கங்கா....... கங்கா...." என கங்கையிடம் மனமிரங்கி மழைக்காக மன்றாடுகிறார்கள். இங்கு வாத்தியக்கருவிகளும் அவர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு உருளுகிறது. Here MSV has infused a mystery kind of sound.

In the record the ends here. But, in the video I have added the further portion also with extended music and a few dialogues by JJ followed by the effect of rain for all of you to enjoy it thoroughly.

வழக்கம் போல் "அமிர்தவர்ஷிணி" ராகத்தை அலசுபவர்கள் மற்ற பல இசை அமைப்பாளர்கள் பாடல்களை மட்டுமே குறிப்பிடுகிறார்கள். இந்த ராகத்தின் முழு குணங்களுடன் அமைந்த இந்த பாடலை ஏன் தான் மறக்கிறார்களோ.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

கே.டி.ரமணன்.

https://www.youtube.com/watch?v=rkcZqEnQ398


Quote
Share: