1972 - Thavapputhal...
 
Notifications

1972 - Thavapputhalvan - Isai Kettal Puvi Asainthaadum  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 9 months ago
Posts: 68
15/10/2019 3:05 pm  

பாடல் : இசை கேட்டால் புவி அசைந்தாடும்

படம் : தவப்புதல்வன்

பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1972

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது மிகவும் பிரபலமான Classical பாணியில்  ஒரு பாடல்.  இந்த பாடல் அமையப்பெற்ற ராகம் "கல்யாணி" என்று ராகா வல்லுநர்கள் கூறுகிறார்கள். மன்னர் ராகங்களை அடிப்படையாக வைத்து அதிலிருந்து சற்றும் விலகாமல் மெட்டமைத்து பாடல்கள் மிகவும் குறைவே - ஏனென்றால் திரைப்பாடல்கள் முழுக்க முழுக்க கர்நாடக பாணியிலேயே அமைந்துகொண்டிருந்த காலத்தில், அதை உடைத்து அதை மெல்லிசை பாணிக்கு திசை திரும்பியவர் அவர்.  அதனால், தேவை ஏற்படும் போது மட்டுமே அவர் முழுக்க முழுக்க கர்நாடக பாணியில் மெட்டமைத்தார்.  இந்த பாடலுக்கு அப்படியோர் சிறப்பு கூட உண்டு. ஆம் நண்பர்களே, இன்றைய பாடல் "தவப்புதல்வன்" படத்தில் இடம் பெற்ற "இசை கேட்டல் புவி அசைந்தாடும்" என்ற பாடல் தான்.  பாடலை அலசுவதற்கு முன் "கல்யாணி" ராகத்தின் தன்மை என்ன  என்பதை பார்ப்போம் (collected from internet sources) :

“Kalyani is said to be the queen of raga family.  In Hindustani, it is called “Yaman”.  In Mind, Body and Soul Chakra – Chakra 11 is the Face Chakra – a very special chakra that houses our ability to become what we wish to become.  We have the ability to shape our bodies, reshape the energies that each of us takes in. 

Raga Kalyani is an all-time rage but sounds very bright and pleasant in the veining on account of present of tivra (higher notes) swaras in this raga.  Kalyani is a major versatile and one of the “grand” ragas.  Kalyani encapsulates emotions or rasas namely, Bhakthi, Shringara and Vatsalya. 

It is believed that Kalyani dispels the darkness of fear.  It gives motherly comfort and increases confidence.  Kalyani means Mangalam.  Recited with faith and devotion, the raga is believed to clinch marriage alliances.  There are many authentic reports about the raga’s power to destroy fear which takes many forms – fear of poverty, of power of love, of ill health, of death and so on.” 

இப்போது படத்தின் கதை என்ன என்பதை பார்ப்போம்.  செல்வந்தரான பண்டரிபாயின் (விதவை) ஏக புத்திரன் சிவாஜி.  அவர் ஒரு பெரிய இசை மேதை, ஓர் சிறந்த பாடகர் மற்றும் அவருக்கு வாசிக்க தெரியாத இசைக்கருவிகளே கிடையாது.  இருந்தாலும் அவர் அதை விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை.  அவருக்கு மாலைக்கண் (night blindness) வியாதி - இரவில் கண் பார்வை மங்கிவிடும்.  இதை தன் தாயாரிடமிருந்து மறைக்கிறார் - காரணம் அவரது தந்தையும் இதே நோயால் அவதிப்பட்டு அதனால் நேர்ந்த ஓர் விபத்தில் இறந்து விட்டார் என்பதால் தன் தாயார் மிகவும் வருத்தப்படுவார் / பயப்படுவார் என்று பயந்து.  இது தெரியாமல் தாயாரோ தன் கணவனைப்போல் மகனுக்கும் இந்த வியாதி வந்துவிடக்கூடாது என்று கோயில் கோயிலாக சென்று பூஜை செய்கிறார், நாளொன்றுக்கு விரதமிருக்கிறார்.  சிவாஜி குடும்பத்தாரின் உதவியால் டாக்டர் ஆனவர் கதாநாயகி கே.ஆர்.விஜயா.  இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். 

சிவாஜியின் திறமை உலகம் முழுதும் பரவ வேண்டும் என்பது விஜயாவின் ஆசை.  விஜயாவை ஒரு மிகச்சிறந்த மருத்துவராக நாடறிய செய்யவேண்டும் என்பது சிவாஜியின் ஆசை.  இரவில் தனக்கு கண் பார்வை மங்கிவிடும் என்பதை தாயிடமிருந்து மறைப்பதற்காக சிவாஜி இரவு நேரத்தில் ஓர் ஹோட்டலில் தங்கி காலையில் வீடு திரும்புகிறார் - ஹோட்டலில் இசை சம்பந்தப்பட்ட வேலை பார்க்கிறேன் என்று பொய் சொல்லி.  சிவாஜியின் இந்த தகிடு தத்தம் வேலையை அறிய வரும் சி.ஐ.டி.சகுந்தலா மற்றும் எம்.ஆர்.ஆர்.வாசு அவரை பிளாக் மெயில் செய்கிறார்.  சிவாஜிக்கு கண் பார்வை சரியாகிறதா, அவர் சகுந்தலா - எம்.ஆர்.ஆர்.வாசு பிடியிலிருந்து விடுபடுகிறாரா, சிவாஜி-விஜயா இணைகிறாரா என்பது மீதி கதை.

இந்த பாடல் படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திலேயே இடம் பெறுகிறது.  சிவாஜியும்-விஜயாவும் உரையாடுகிறார்கள் : சிவாஜி உலகம் போற்றும் சிறந்த பாடகராக திகழவேண்டும் என்று விஜயா சொல்கிறார்.  விஜயா அந்த ஊரே போற்றும் சிறந்த மருத்துவராக வரவேண்டும் என்று சிவாஜி சொல்கிறார்.  வடநாட்டின் மிக சிறந்த பாடகரான அக்பர் கான் அந்த ஊருக்கு வருவதாகவும் அவருடன் போட்டி போட சிவாஜியின் பெயரை ரெஜிஸ்டர் செய்திருக்கிறேன் என்றும் விஜயா சொல்கிறார்.  நான் அவ்வளவு பெரிய மேதை இல்லை என்று சிவாஜி சொல்ல, உங்கள் திறமை மேல் உங்களை விட எனக்கு நம்பிக்கை இருக்கு, நீங்கள் போட்டியில் கண்டிப்பாக அக்பர் கானை வெல்வீர்கள் என்று விஜயா அடித்து சொல்கிறார். அப்படி வென்றால் ஒரே நாளில் நீங்கள் உலக புகழ் பெற்றுவிடுவீர்கள் என்றும் சொல்கிறார்.  மீண்டும் அவர் பேசுகையில் கூறுகிறார் - அந்த தான்ஸேனை கூட உங்களால் வெல்ல முடியும் என்று.  அப்போது சிவாஜி அவர் யார் என்று கேட்க, விஜயா தான்ஸேனை குறித்து சொல்கிறார் : அக்பர் சக்ரவர்த்தியின் சபையில் அவர் ஆஸ்தான பாடகராக இருந்தவர்  என்றும், ஓர் சமயம் அக்பரின் மகள் நோய்வாய்ப்பட்டு படுத்திருக்க, மருத்துவர்கள் அவர்களால் மகளை காப்பாற்ற இயலாது என்றும், தான்சேன் ஒரு குறிப்பிட்ட ராகத்தை பாடினால் அங்கு அணைந்து கிடைக்கும் தீபங்கள் எல்லாம் எறியக்கூடும் என்றும், மகளும் பிழைத்து விடுவார் என்றும் கூறினார்கள்.  அதன் படியே தான்சேன் பாடினார் (மகளும் பிழைத்துவிட்டாள்) – and then the song appears, wherein Vijaya imagines herself as Akbar’s daughter and Sivaji as Tansen.  (There are two different stories in circulation about this incident : one is that at first Tansen was reluctant to sing that particular raag viz., “Raag Deepak”, as upon reciting that raag the person who sings will be highly affected by heat and may cause heavy damage to body.  But, due to heavy pressure from Akbar he had to oblige by making an arrangement – that two girls called Tana-Riri would sing Megh Malhar once Tansen finishes reciting.  It is believed that by singing Megh Malhar it would rain and the heat which is created by the raag Deepak would be nullified and Tansen would be saved.  The other story is that Tansen recites that particular raag.  Though Akbar’s daughter is saved from death, Tansen is heavily affected by heat burns and to get cured from that he goes to one particular village where he seeks the help of two sisters Tana-Riri who are expert in singing Megh Malhar, which would cure the heat burns.  ஆனால் அவர் முழுவதுமாக குணமடையவில்லை என்றும், அவரால் அந்த சூட்டின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியாமல் உடல் நிலை குன்றி மரணமடைந்தார் என்றும் கூறுகிறது.)

தான்சேன் அன்று பாடிய ராகம் "தீபக்" என்று சொல்லப்படுகிறது.  அந்த ராகம் பாடிய பிறகு அதன் தாக்கத்தால் தான்சேன் மிகவும் அவதிக்குள்ளானார் என்பதால் அதற்க்கு பிறகு அந்த ராகத்தை யாரும் பாடவில்லை, அல்லது முயற்சிக்கவில்லை என்று ஏடுகள் கூறுகின்றன.  அதனால் அந்த ராகத்தினுடைய சரியான ஸ்வரங்கள், விஸ்தாரங்கள் இவைகள் சரிவர பாதுகாக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.  இப்போது அந்த ராகம் ஓரளவு புழக்கத்திலிருந்தாலும் அந்த ஸ்வரங்கள் அன்று பாடப்பட்ட ஸ்வரங்கள் தானா என்பதிலும் பலருக்கும் சந்தேகம் உள்ளன.  இந்த ராகத்தை பாடவேண்டும் என்றால் மிகவும் திறமை வாய்ந்த குருவிடமிருந்து கற்றபிறகு தான் பாடமுடியும் என்றும் சொல்லப்படுகிறது.  எது எப்படியோ, its almost on the verge of extinction. 

இப்போது பாடலை பார்ப்போம்.  தீபக் ராகத்தின் சாயல் உள்ளதாக பலர் நினைக்கக்கூடும் என்றாலும், காரணம் : பாடலின் கடைசியில் விளக்குகள் எரிவதால், பாடல் முழுவதும் அமைந்திருப்பது வடிகட்டின  "கல்யாணி" ராகத்தில்.  பாடல் ஆரம்பமாவது ஸ்வர்மண்டலின் ஒலியுடன் (Chord) – indicating that it’s a dream sequence. That is not the only reason for using Swarmandal in the beginning itself, there is a specific reason for it - பெரும்பாலான ஹிந்துஸ்தானி பாடகர்கள் மேடையில் பாடும் போது (record-டுக்காக பதிவு செய்யும் போதும்) ஸ்வர்மண்டலை மடியிலேயே வைத்திருப்பார்கள் - பாடல் ஆரம்பிக்கும் முன் ஸ்வர்மண்டலில் chord-டை மீட்டி (நமது பாடகர்கள் தான்புராவில் அல்லது சுருதிப்பெட்டியில் சுருதி மீட்டுவது போல்) அதிலிருந்து ஸ்வரத்தை பிடித்து தான் பாடுவார்கள்.  அது போல் ஒரு ராகத்திலிருந்து வேறு ராகத்திற்கு மாறும் போது இது போல் அந்தந்த ராகத்தினுடைய chord -டை மீட்டி சவ்ரத்தை பிடித்து அடுத்த ராகத்திற்கு தாவுவார்கள்.  இது மன்னருக்கு தெரியாதா என்ன, அதனால் தான் இங்கு ஸ்வர்மண்டல் பயன்படுத்தியுள்ளார். அதை தொடர்ந்து ஒலிப்பது டி.எம்.எஸ். அவர்களின் ஆலாபனை.  ஆலாபனையுடன் சேர்ந்து ஒலிப்பது தான்புரா.  பாடல் நிகழும் இடம் வட இந்தியாவில் என்பதால் பாடலுக்கு "ஹிந்துஸ்தானி" touch கொடுத்துள்ளார்.  ஆனால் முழுக்க முழுக்க ஹிந்துஸ்தானி பாணியில் அமைக்கவும் இல்லை. நமது கர்னாடிக் பாணியையும் சேர்த்துள்ளார்.  ஆனால் அந்த பாணியையும் முழுவதுமாக பயன்படுத்தவில்லை.  He has blended Hindustani and Carnatic style in such a way that it has formed an unique style of its own - அதை தான் பலரும் "விஸ்வராகம்" என்று கூறுகிறார்கள்.  ஆலாபனையை தொடர்ந்து Harp-பில் chord ஒலிக்கிறது.  தொடர்ந்து பல்லவியின் முதல் இரண்டு வரிகள் பாடுகிறார் டி.எம்.எஸ்.  தாளத்துக்கு தபலா.  மெருகூட்ட "Triangle".  இரண்டு வரிகளுக்கு பிறகு சித்தாரில் அருமையான ஒரு சிறு interlude. அதை தொடர்ந்து முழு பல்லவியும் பாடப்பட்டு, பல்லவியின் முதல் இரண்டு வரிகள் மீண்டும் பாடப்பட்டு பல்லவி முடிகிறது. 

தொடர்வது முதல் BGM - ஸ்வர்மண்டலில் chord.  This time to indicate the tranquilized situation of the heroine.  தொடர்வது சித்தார் மற்றும் வியலின் இசை - relay போல் ஒன்றை தொடர்ந்து மற்றோன்று ஒலிக்கிறது.  It subtly conveys the worrying condition of the lady.  இந்த relay-யை தொடர்ந்து புல்லாங்குழலில் ஒரு சிறிய piece – which conveys the concern of the singer – aka Music Therapist.  Then begins the first charanam.  First two lines of the charanam is sung and a small interlude is placed thru Flute.  Then the same lines are repeated again.  Following that next line is sung.  அந்த வரியை தொடர்வது ஒரு சிறிய ஆலாபனை - இது சற்று கர்னாடிக் பாணியில் அமைந்துள்ளது.  அதை தொடர்ந்து நான்காவது வரி பாடப்பட்டு அதே வரி மீண்டும் பாடப்படுகிறது – with a slight change in “bhaavam”.  Then the last three lines of Pallavi is sung and the last line is repeated and the charanam ends.   That’s the speciality of MSV – many times after the charanam full pallavi is not repeated. 

தொடர்வது இரண்டாவது BGM - சரணத்தை தழுவி ஒலிப்பது Harp-பில் chord – which again indicates her tranquilized status. தொடர்வது a lengthy piece in Sitar.  Which is taken over by Violins and then passed on to Guitar chords – these adds the required thrilling effect.  And ultimately taken over by a cute piece in Flute – which indicates the gentle breeze.  This charanam has lot of improvisation – it doesn’t repeat the pallavi at the end. Unlike first charanam, here two lines of the charanam is sung and a small but cute / prominent flute piece is infused as interlude, as if to console him, then the third line is sung and prolonged with an aalaapanai and an niraval by Tabla takes place and the third line is sung again.  Then the last line is repeated twice and the charanam ends there. 

Then follows the third BGM – here the mood changes – the anxiety of the singer increases- the BGM clearly indicates it – Here violins and guitar chords are played in high voltage for one bar. Then begins the third and last charanam -  இங்கு பாடகர் தீபங்கள் சுடர்விட்டு எரிவதற்க்காக மன்றாடுகிறார் – hence the pitch increases step by step.  ஆறு வரிகள் கொண்ட இந்த சரணத்தை பாடகர் இரண்டு இரண்டு வரிகளாக பிரித்து பாடுகிறார்.  ஒவ்வொரு இரண்டு வரிகளுக்கு நடுவே வயலின் interlude சேர்க்கப்பட்டுள்ளது – indicating the tension.  The charanam ends with repetition of the word "தீபங்களே" for four times with different modulation and pitch.  Then a minute silence is placed to indicate the miracle which is going to take place (நிகழப்போகும் புயலுக்கு முன்னால் நிலவும் அமைதியைப்போல்).  அதை தொடர்ந்து ஒலிப்பது ஓர் இசை கலவை - ஸ்வர்மண்டல், harp, கிட்டார் chord, violins  மற்றும் tabla tarang – which gives the indication to the listeners that the miracle has taken place - தீபங்கள் ஒவ்வொன்றாக சுடர்விட ஆரம்பிக்கின்றன.   தொடர்வது மனதை குளிர செய்யும் சித்தாரின் இசை - நோயாளி குணமாகி எழுந்து விடுகிறாள் என்பதை சொல்கிறது.  Then at the end first two lines of the Pallavi is sung and the song ends with a closing note in Swarmandal. 

The song is composed completely in high pitch.  In the beginning I mentioned that the raaga conveys three emotions viz., Bhakthi, Srungaara and Vaatsalyam.  The song “Mannavan Vanthaanadi Thozhi” was mainly conceived in Srungaara.  Whereas in this song “srungara rasa” is totally avoided and is filled with Bhakthi and Vaatsalyam. 

திரை இசையில் கல்யாணி ராகம் என்று குறிப்பிடும் போது பெருபாலானோர் சுட்டிக்காட்டுவது "சிந்தனை செய் மனமே", "மன்னவன் வந்தானடி", "அம்மா என்றழைக்காத உயிரில்லையே", "ஜனனி ஜனனி", etc போன்ற பாடல்களை தான். ஆனால் மன்னரின் இந்த அருப்புதமான பாடலை இவர்கள் ஏன் ஒரு போதும் குறிப்பிடுவதில்லை? (though few mentions Mannar’s two Malayalam creations “Swarganandini Swapnavihaarini” and “Aa Nimishathinte Nirvruthiyil”). 

இப்போது சொல்லுங்கள் மேலே குறிப்பிட்டுள்ள பாடல்களுக்கு இந்த பாடல்  சளைத்ததா என்ன?  Is it not in par or more superior to those songs?

மீண்டுமொரு அரிய பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடை பெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=sMyZQUk7TYE


Quote
Share: