1972 - Kasethan Kad...
 
Notifications
Clear all

1972 - Kasethan Kadavulada - Aval Enna Ninaithaal  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 66
27/07/2020 5:29 pm  

பாடல் : அவள் என்ன நினைத்தாள்
படம் : காசேதான் கடவுளடா
பாடியவர்கள் : பி.சுசீலா
பாடலாசிரியர் : வாலி
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1972

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் பார்க்க இருப்பது கிண்டல், கேலி, கும்மாளம் மற்றும் காதல் மயக்கம் நிறைந்த ஓர் அமர்க்களமான பாடல். "காசேதான் கடவுளடா" என்ற படத்தில் இடம்பெற்ற "அவளென்ன நினைத்தாள்" என்ற பாடல் தான் அது. இந்த பாடல் படத்தின் opening song - படத்தின் title credits போடப்படுவதும் இந்த பாடலின் நடுவே தான். கதாநாயகி லக்ஷ்மியின் intro scene-னும் இது தான்.

சாதாரணமாக படத்தின் டைட்டில் credits போடப்படும் போது அதற்க்கென்று தனி Title Music அமைப்பது தான் வழக்கம். அந்த Title Music-ஸிக்கிலேயே படத்தின் கதையை இசை வாயிலாக ஆடியன்ஸுக்கு புரியவைக்கும் யுத்தியை புகுத்திய பெருமை MSV அவர்களுக்கே உரியது. சில படங்களுக்கு Title Credits போடும் போது Title Music-ஸிக்கிற்கு பதிலாக Title Song ஆக அமைவதும் உண்டு - அதாவது அந்த படத்தின் பெயரை தாங்கிய பாடல் / படத்தின் பெயரை justify செய்யும் பாடல். இந்த படம் இந்த இரண்டிற்கும் விதிவிலக்கு. அதாவது Title Music-க்கும் கிடையாது, Title Song இருந்தும் அதை Title Credits ஓடும் போது பயன்படுத்தாமல் மற்றுமொரு தருணத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

Title Music இல்லாததாலும், Title Song-ங்கை Title Credits-ஸுக்கு பயன்படுத்தாததாலும் மன்னருக்கு பன்மடங்கு வேலையாகி விட்டது. படம் எப்படிப்பட்டது என்பதை இந்த பாடல் வாயிலாக சொல்லியாக வேண்டும், கூடவே ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் கிண்டல், கேலி, கும்மாளம், காதல் மயக்கம் இத்தியாதிகளும் அதில் வெளிப்படுத்தியாக வேண்டும் - காரணம் அந்த பாடல் அப்படிப்பட்டது. மன்னர் இதை எப்படி கையாண்டுள்ளார்? கிண்டல், கேலி, கும்மாளம், காதல் மயக்கம் இவற்றை பாடுபவரின் குரலில் புகுத்தி இசைக்கோர்வையில் - அதாவது BGM-ம்மில் - கதையின் அமைப்பை கோடிட்டு காட்டுகிறார். எத்தனை சாமர்த்தியசாலி அவர் அல்லவா? இந்த பாடலில் மேலும் ஒரு விஷயம் கூட உள்ளது - அதாவது பாடலின் வரிகள். காட்சியில் என்னமோ கதாநாயகி கடற்கரையில் ரகசியமாக காதலிக்கும் ஓர் ஜோடியை, குறிப்பாக அந்த பெண்ணை, கிண்டலடிப்பது போல் தோன்றினாலும் மறைமுகமாக அவள் பாடுவது அவளைப்பற்றி தான் / அவளை அவளே கேள்வி கேட்டுக்கொள்கிறாள் (atleast to me). விளக்குகிறேன். ஒரு வேலை கிடைப்பதற்காக அவள் குடும்ப நண்பரான மனோதத்துவ மருத்துவரிடமிருந்து நத்தாட்சி கடிதம் (நன்னடத்தை சான்றிதழ் / Conduct Certificate) ஒன்று பெற்றுக்கொண்டு ஓர் செல்வந்தர் வீட்டில் வேலைக்கு சேர்கிறாள். அனால் தவறுதலாக அவள் பெற்றுக்கொண்டதோ அதே பேரில் டாக்டரிடம் மனநோய்க்காக சிகித்சை பெற்றுக்கொண்ட ஒரு பெண்ணின் சான்றிதழ். அதனால் வேலைக்கு சேர்ந்த இடத்தில் அவளை ஒரு மனநோயாளியாகவே பார்க்கின்றனர். அந்த வீட்டு எஜமானரின் மூத்த தாரத்து மகனை அவள் காதலிக்கிறாள். அவனும் அவளை விரும்புகிறான். Connecting this to the lyrics : First two lines - அவள் என்ன நினைத்தாள், அடிக்கடி சிரித்தாள் - அந்த வீட்டாரை பொறுத்தவரை அவளை பைத்தியமாக தானே பார்க்கிறார்கள். பைத்தியத்தின் குணமென்ன - அடிக்கடி சிரிக்கும் தானே? Next Line : அவள் எதோ ஒரு மயக்கம் கொண்டாள் - அவள் கதாநாயகன் மீது காதல் மயக்கம் கொள்கிறாள். Next lines : அவன் ஏன் துடித்தான் ............., etc - அவளை அடைய நினைக்கும் கதாநாயகனின் துடிப்பு. Explanation for two charanams : First charanam - வேலைபார்க்க வந்த பெண் எஜமானரின் மகனையே விரும்பினால் ஊரார் என்ன நினைப்பார்கள் / சொல்லுவார்கள், பைத்தியம் வேறு, ஒண்டவந்த வீட்டையே சொந்த வீடாக மாற்றிக்கொண்டால் - ஊரார் சிரிக்கமாட்டார்கள்? Second charanam - அவனை காதலித்த பிறகு அவளுக்கு ஏற்படும் மாற்றங்கள்.

படத்தின் கதை ஏறத்தாழ எல்லோருக்குமே தெரிந்திருக்கக்கூடும் - முழுநீள நகைச்சுவை படம். அதில் கொஞ்சம் விறுவிறுப்பு, கொஞ்சம் சஸ்பென்ஸ், ஒருவரை மற்றொருவர் chase செய்தல், கொஞ்சம் காதல் என இன்னபிற கலவைகள். இதை தான் மன்னர் Prelude-டிலும், இரண்டு BGM-ம்மிலும் சுட்டிக்காட்டுகிறார். இவையெல்லாம் கச்சிதமாக இந்த பாடல் காட்சிக்கும் பொருந்துகிறது என்பது தான் சிறப்பு. பாடல் காட்சியில் கடல் தென்படுகிறதே, தண்ணீர் சம்பந்தப்பட்ட காட்சியிருந்தால் மன்னர் Xylophone பயன்படுத்தாமல் இருக்கமாட்டார், இந்த பாடலில் மருந்துக்கும் கூட அது தென்படவில்லையே என வியக்கக்கூடும். உண்மைதான். ஆனால் கடல் இருப்பதை அவர் பாடலின் மெட்டு வாயிலாக சுட்டிக்காட்டுகிறார் - அலைகள் தொலை தூரத்தில் தோன்றி எப்படி கரையை நோக்கி நகர்ந்து வருமோ, அப்படி நகர்ந்து வந்து கரையை அடைந்து எப்படி மாய்ந்து போகுமோ அதை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் மெட்டு அமைந்துள்ளது – viz., in a swinging fashion – with highs, lows and curves. அதாவது - கரையை அடைவதற்கு முன் அலைகள் சில வினாடிகள் ஊஞ்சல் ஆடுவது போல் அசையும், அது போல் அமைந்துள்ளது பல்லவி. அதன் பின் அந்த அலைகள் கரையை நோக்கி வேகமாக நகருமே அது போல் அமைந்துள்ளது பல்லவியின் முடிவில் வரும் அந்த ஹம்மிங். சரணங்கள் அமையப்பெற்றுள்ளது : தொலை தூரத்தில் அலைகள் உருவாகி மெதுவாக மேலோங்கி எழுந்து பிறகு தாழுமே அது போல் முதல் இரண்டு வரிகளும், பிறகு அந்த அலைகள் மெதுவாக கரையை நோக்கி நகரும் அல்லவா அது போல் அமைத்துள்ளது அடுத்த இரண்டு வரிகள், அதன் பிறகு அந்த அலைகள் கரையை தொடுவதற்கு முன் ஊஞ்சலாடும் என்று சொன்னேனே அது போல் அமைந்துள்ளது அடுத்த இரண்டு வரிகள், கடைசியில் வரும் ஹம்மிங் அலைகள் வேகமாக கரையை தழுவுவது போல் அமைந்துள்ளது.

Prelude-டில் பயன்படுத்தப்பட்டுள்ள இசைக்கருவிகள் – Piano, Bells, Triangle, Violins, Flute, Beaded Maracas, Lead Guitar, Guitar Chords and Congos. பல்லவியில் off-beat-டில் “Hi-Hat” play செய்துள்ளார்.

Instruments used in First BGM – Piano, Violins, Guitar Chords, Triangle and Accordion.

Instruments used in Second BGM – Accordion, Bells, Combo Organ, Mandolin, Beaded Maracas, Flute and Congos.

பாடலில் இருக்கும் குறும்பு, உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

Though the song is highly melodious it could not attain the popularity which other songs from the same movie attained.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://youtu.be/fQjC_syMcIU


Quote
Share: