1971 - Punnagai - A...
 
Notifications

1971 - Punnagai - Aanaiyitten Nerungaathe  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 54
11/10/2019 5:48 pm  

பாடல் : ஆணையிட்டேன் நெருங்காதே

படம் : புன்னகை

பாடியவர்கள் : எஸ். ஜானகி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1971

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது மிகவும் விசித்திரமான / விபரீதமான சூழ்நிலையில் அமைந்த ஓர் பாடல் (விஷப்பரீட்சை என்றே சொல்லலாம்).  இக்கட்டான சூழ்நிலையில் பாடல்கள் அமைக்க சொல்லி மன்னருக்கு பெரும் சவால்களை உருவாக்கியவர் என்று பெயர்பெற்றவர் இயக்குனர் கே.பாலச்சந்தர்.  அவரது படத்தில் அமைந்தது தான் இந்த பாடல்.  அவர் இயற்றிய படங்களிலேயே மிகவும் சிறந்தது என்று பலராலும் இன்றளவும் பாராட்டு பெற்றுக்கொண்டிருக்கும் படம் "புன்னகை" (ஹிந்தியில் வெளிவந்து பல விருதுகளை வென்ற  "சத்யகாம்" என்ற படத்தின் தழுவல் தான் என்றாலும்).  அந்த படத்தில் அமைந்த பாடல் தான் இது.  படத்தை மிகவும் பாராட்டினார்கள் என்றாலும் இந்த பாடல் காட்சியை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள் – no doubt the song is very catchy and intriguing.  காரணம் பாடல் இடம் பெறும் காட்சி அப்படி - ஒரு பெண்ணை கயவன் ஒருவன் கற்பழிக்க முயல்கிறான்.  அப்போது அவனிடம் வாதாடுவது / மன்றாடுவது போல் அமைந்த பாடல் தான் அது.  இப்படியொரு இக்கட்டான தருணத்தில் எந்த பெண்ணாவது அவனை பாட்டு பாடி திருத்த முயல்வாளா என்பது தான் விமர்சர்களின் கேள்வி.  நியாயமாக பார்த்தால் அது உண்மையும் தானே.  மன்னர் கூட காட்சியை விளக்கும் போது இந்த விஷப்பரீட்சை தேவையா என்று அவரிடம் கேட்டிருக்கக்கூடும்.  அவரும் துணிந்து இறங்கி தேவை தான், நீங்கள் மெட்டு போடுங்கள் என்று வற்புறுத்தியிருக்க  கூடும்.  மன்னரும் அதற்க்கு இணங்கி மெட்டு போட்டு பாடலை பதிவு செய்திருப்பார்.  ஆனால் ஏனோ தானோ என்று மெட்டு போடவில்லை.  மிகவும் ஆழமாக சிந்தித்து தான் மெட்டு போட்டுள்ளார் என்பதை கீழே விளக்குகிறேன். 

Many people, including film buffs, might be thinking that this must be the first attempt on such a situation.  அது உண்மையல்ல.  சரியாக 11 வருடங்களுக்கு முன்னமேயே இத்தகைய ஓர் பாடல் அமைந்துள்ளது என்றால் வியப்பாக உள்ளது அல்லவா?  அந்த பாடலுக்கும் இசை அமைத்தவர் மன்னர் தான் என்றால் வியப்பு இரட்டிப்பாகுது தானே?  சமூகப்படம் அல்ல, மறித்து ராஜா ராணி கதை படத்தில் அமைந்த பாடல் என்னும் போது வியப்பின் உச்சிக்கே கூட நீங்கள் போகலாம்.  ஆம் நண்பர்களே, "மன்னாதி மன்னன்" படத்தில் இடம் பெற்ற பாடல் தான் அது.  ஆனால் ஒரே ஓர் வித்தியாசம் என்னவென்றால் அது இது போன்று மெல்லிசையில் அமையப்பெற்ற பாடல் அல்ல, கிளாசிக்கல் பாணியில் பரதநாட்டிய பாடலாக அமைந்தது.  ஆனால் இந்த பாடலில் அமைந்தது போல் பாடிய விதத்தில் ஆத்திரம், ஆவேசம், சோகம், இயலாமை, என பல "bhaavangal" பாடியவர் குரலில் புகுத்தப்படவில்லை - இவையெல்லாம் இசையில் புகுத்தப்பட்ட போதிலும்.  In fact, I would say that the choice of the singer for that song was wrong.  எம்.எல்.வசந்தகுமாரி பாடிய "கலையோடு கலந்தது உண்மை" என்ற பாடல் தான் அது.  I don’t say that the song is bad.  No doubt, it has its own class.  அந்த காட்சிக்கு அது பொருந்தவில்லை என்று தான் சொல்கிறேன்.  அது போன்ற காட்சிக்கு மீண்டும் பாடல் அமைக்கும் வாய்ப்பு வந்த போது பாடகியை தேர்ந்தெடுப்பதில் அன்று செய்த தவறை இந்த பாடலில் சரிகட்டிவிட்டார் என்றே  சொல்லலாம்.

இயக்குனரின் வற்புறுத்தலுக்கு வழங்கி மெட்டுப்போட ஒப்புக்கொண்டாச்சு.  இந்த சந்தர்ப்பத்திற்கு எப்படி மெட்டுப்போடலாம், என்னென்ன விஷயங்களை பாடலில் புகுத்த வேண்டும், பாடகியாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று மன்னர் யோசனையில் ஆழ்த்திருப்பார் (அவருக்கு அது சில நொடிகள் தான் தேவைப்பட்டிருக்கும்) - அந்நேரம் அவர் அந்த கதாபாத்திரமாக தன்னை உருமாற்றிக்கொண்டிருப்பார் - அவள் கயவனிடம் கெஞ்சுவாள், மன்றாடுவாள், அறிவுரை சொல்வாள், அழுவாள், கோபம் கொள்வாள், கூக்குரலிடுவாள் (will shriek),  தன்னை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடுவாள், ஓடி ஓடி களைத்து போகும் போது சற்று நின்று மூச்சிரைப்பாள்.  இத்தனை "bhaavangal” பாடகியின் குரலில் கொண்டுவந்தாக வேண்டும்.  இத்தோடு நளினத்தையும் கடைபிடிக்கவேண்டும், மேலும் குரல் சற்று "ஜலதோஷம்" பிடித்தது போலவும் ஒலிக்கவேண்டும் - காரணம் அழும் போது பலருக்கு ஜலதோஷம் பிடித்துக்கொள்வது  வழக்கம்.  இந்த குணங்கள் inbuilt ஆக இருப்பது எஸ்.ஜானகியின் குரலில் தான் என்று அடையாளம் கண்டுகொண்டு அவரை தேர்ந்தெடுத்திருப்பார்.  இப்போது அவர் பாதி கிணறு தாண்டியாயிற்று.  மீதி அவருக்கு தண்ணி பட்ட பாடு - அதாவது மீதி factors  ஆன திகில் / சஸ்பென்ஸ் இத்தியாதிகளை இசையில் புகுத்த அவருக்கென்ன தெரியாதா  என்ன.  வெகு எளிதில் இசையில் அதையும் புகுத்தி மீதி கிணறையும் தாண்டிவிட்ட்டார்.  அதாவது இயக்குனர் கற்பனை செய்ததை விட பல மடங்கு கற்பனை செய்து பாடலில் புகுத்தி இயக்குனரையே வியப்பில் ஆழ்த்தியிருப்பார் என்பது என் கணிப்பு. 

ஒவ்வொரு பாடகர்களின் range என்னென்ன, அவர்கள் குரலுக்கு என்னென்ன வழங்கும், என்னென்ன வழங்காது என்பதை மன்னர் நன்கு தெரிந்து வைத்திருந்தார் - ஆனால் அதை அவர் ஓர் சில தருணங்கள் தவிர்த்து அவ்வளவாக வெளியே சொன்னதேயில்லை.  அதன் படி, எஸ்.ஜானகிக்கு "mimic" செய்து பாடும் திறமை உள்ளது என்பதை அவர் என்றோ கணித்துவிட்டார்.  ஆனால், வழக்கம் போல் அவர் அதை தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை.  மறித்து சந்தர்பம் வரும்போதெல்லாம் அந்த திறமையை திறம்பட பயன்படுத்தி வந்தார் (ஏனோ, அப்போது அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை, அல்லது வேண்டுமென்றே கண்டுகொள்ளாதது போல் நடித்தார்கள்).  "தெய்வாம்சம்" படத்தில் வரும் "அந்தப்புர மந்திரத்தில்" என்ற பாடலில் ஓர் சில வரிகள் வயதான மூதாட்டி பாடுவது போல் அமைத்து அதை எஸ்.ஜானகியை கொண்டு பாடவைத்தார்.  "சித்திர செவ்வானம்" படத்தில் வரும் "எங்கே உன்னை கண்டால் கூட" பாடலில் "முக்கல், முனகல், சிணுங்கல், சிரிப்பு" என பல ஜாலங்கள் புரிய வைத்தார் (எள்ளளவும் விரசம் இல்லாமல் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்). 

இந்த பாடலுக்கு படத்தின் முழு கதையும் தேவை இல்லை என்பதால் அதை தவிர்த்துவிடுகிறேன்.  காட்சியை மட்டும் விளக்குகிறேன்.  ராமதாஸ் பெரும் செல்வந்தர்.  அவர் ஒரு பெண்பித்தர்.  அவரிடம் வேலை செய்பவர் வி.எஸ்.ராகவன்.  அவரது வளர்ப்பு மகள் ஜெயந்தி.  வி.எஸ்.ராகவன் மதுவுக்கு அடிமை, ஆனாலும் வளர்ப்பு மகள் மீது அதீத பாசம் வைத்துள்ளவர்.  அந்த பெண் வளர்ந்து பருவம் அடைகிறாள்.  ஓர் நாள் அவள் ராமதாஸுக்கு சாப்பாடு எடுத்துச்செல்கிறாள்.  அப்போது அங்கு வி.எஸ்.ராகவனும் இருக்கிறார். அவருக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து ராமதாஸ் ஜெயந்தியை அடைய முயற்சிக்கிறார்.  ஆனால் அன்று அவள் தப்பித்துக்கொள்கிறார்.  மறுநாள் ராகவனுக்கு மதுவை கொடுத்து மகளை அழைத்துவர சொல்கிறார்.  வரமறுக்கும் ஜெயந்தியை வலுக்கட்டாயமாக ராமதாஸ் முன் கொண்டு நிறுத்துகிறார்.  அப்போது ராமதாஸ் அவளை அடைய நினைக்கும் போது வரும் பாடல் தான் இது.  Here, KB justifies this scene by adding a dialogue through V.S.Raghavan before the song “அவர் (முதலாளி) பாட சொன்னா பாடணும், ஆட சொன்னா ஆடணும், போட சொன்னா போடணும் (தண்ணி)" (ஏன் பாடல் வைத்தேன் என்பதற்கு விளக்கம் அளிப்பது போல). 

The song begins with a shriek followed by a small prelude – a chord in Guitar / violin run and a run on Swarmandal.  Then the pallavi begins.  She sings the first two lines and then repeats the same.  When she repeats the second line it is sung in a different “bhaavam”.  In quick succession she sings the next two lines.  And repeats the fourth line and jumps to the next two lines, where the pitch slightly increases and repeats the last word “தீண்டாதே" in high pitch, where he has added “echo”.  Tabla is played for rhythm and is embellished by “triangle”. A small silence is infused here, which is followed by an interlude – the same is filled with “திகில்".  This piece consists of Violin runs and rhythm in Guitar chords and Mridangam.  After this, SJ repeats the pallavi in full and finishes the pallavi by repeating the last word “தீண்டாதே" in high pitch where he has added “echo”. 

Then begins the first BGM -  This portion too is filled with “thrill”, her fight with the villain, her escaping from the clutches of the villain.  For the first two bars Violin run plays and in contrast Trombone is played.  I believe “Cello” too must have been used to highlight the “tension”.  Then a small piece in Flute in fluttering manner, where MSV adds Tabla Tarang very subtly and guitar strumming.  Then a run in Violin + Cello follows and ends with notes on Trombone.  அதை தொடர்ந்து மூச்சிரைக்கும் சத்தம்.  தொடர்ந்து synthesizer மற்றும் கிட்டாரில்  seventh chord ஒலிக்கிறது.  தொடர்வது முதல் சரணம்.  She sings two lines first and repeats it and then sings the next two lines and repeats it.  இதுவரை ஒரு நடையில் போகிறது சரணம்.  அதன் பிறகு அதே தாளம் continue ஆகிறது என்றாலும், பாடிய விதம் மாறுபடுகிறது.  இங்கிருந்து பிட்ச் கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறது.  She sings the fifth line in high pitch.  Here a “thrilling” interlude is infused – Violin runs, Trombone are played in high voltage – tabla is avoided here.  She then sings the six line in same pitch.  Here, again same kind of interlude is infused.  She then repeats the fifth and sixth line.  Here MSV stops the rhythm and the singer sings the last two lines without the accompaniment of percussion.  This portion is backed up with guitar chords.  When ends the last line, MSV introduces the rhythm with a “theka” on Tabla, where she repeats the last line.  Here again the rhythm stops.  Then when the singer starts the pallavi without any pause, the rhythm joins again with a “theka”.  She sings the whole pallavi again to finish this charanam and repeats the last word “தீண்டாதே" in high pitch. 

Time for second BGM – this BGM starts with a prolonged silence and followed by thundering sound shirek.  அதை தொடர்ந்து ஒரு சிறு violin run.  Then begins the second charanam.  He has made lots of improvisation in this charanam.  She sings the four lines at a stretch.  Here MSV introduces a long interlude – this interlude is a mixture of Violin Runs, Trombone, Guitar Chords, subtle use of Tabla Tarang – which conveys the thrilling moment.  She then sings the fifth line – here an interlude is placed by way of Violin runs, guitar chords and Trombone combined together.  And the six line is sung.  Here again same kind of interlude is placed.  She then repeats the fifth and sixth line.  When she finishes the six line, music is stopped.  She sings the last two lines only with the accompaniment of guitar chords.  Listen to the modulations at this place.  She finishes the charanam by repeating the words vix., “கற்பு மாறாதது".  Here again the rhythm stops.  And when she sings the pallavi the rhythm starts with a “theka”.  She sings the four lines and repeats the fourth line and jumps to next two lines and repeats the last word “தீண்டாதே" in high pitch.  The rhythm ends there.  But a long postlude continues - சூறைக்காற்றின் ஒலி கேட்க்கிறது for two bars - இங்கு அவள் கயவனிடம் தன்னை விட்டுவிடுமாறு கைகூப்பி நிற்கிறாள்.  அவன் அவளை  போ என்று செய்கை செய்கிறான்.  அவள் அந்த ரூமை விட்டு வெளியேறும் தருணம் “thrilling” இசை ஆரம்பமாகிறது – for one bar – இங்கு violin runs, guitar chords and Trombone சேர்ந்து ஒலிக்கிறது.  After that a small piece in Flute in fluttering manner. At this place Tabla Tarang also plays.  Then again Violin /Cello run continues.  தொடர்வது அவளின் மூச்சிரைக்கும் ஒலி.  And the postlude ends with the 7th Chord (probably in Guitar or Combo Organ) – which conveys the “அதிர்ச்சி" - காரணம் அப்போது அவள் முன் மீண்டும் அந்த கயவன் நிற்கிறான்.

Though the movie is a class apart, today the movie is remembered through this song.  ஒரு வேலை இந்த பாடல் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தால், பிற்க்காலத்தில் இது போன்ற மேலும் சில பாடல்கள் அமைந்திருக்கக்கூடும்.  But, as of now, it stands one of its kinds of a song.

மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://youtu.be/uAqGxGFDv-I

 


Quote
Share: