1971 - Kumarikkotta...
 
Notifications

1971 - Kumarikkottam - Naam Oruvarai Oruvar Santhippom Ena  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 54
30/09/2019 4:55 pm  

பாடல் : நாம் ஒருவரை ஒருவர் சிந்திப்போம்

படம் : குமரிக்கோட்டம்

பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி

பாடலாசிரியர் : வாலி

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1971

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் பார்க்கவிருப்பது bold / blatant / வெறித்தனம் / கர்வம் / மென்மை கலர்ந்த “sensuous” பாடல்.  அதென்ன ”bold / blatant / வெறித்தனம் / கர்வம் / மென்மை” என்கிறீர்கள்  தானே?  அதாவது படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரம் பணக்கார திமிர் / கர்வம் கொண்டது.  யாருக்கும் வளைந்து கொடுக்காதவர்.  ஆசைப்பட்டதை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி கொண்டவர்.  ஓர் கட்டத்தில் MGR மேல் காதல் பிறக்க அவரை அடைந்தே தீரவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது.  Her expressing of love is bold / blatant.  காதல் மயக்கத்திலுள்ளார் என்றாலும் அதிலும் "திமிர்" வெளிப்படுகிறது. She is proud of her beauty too. நேசித்தவனை அடைந்தே தீரவேண்டும் என்ற "வெறி"யும் தொனிக்கிறது.  Whereas, MGR’s approach is very gentle (மென்மை) as he just pretends he too is in love with her.  JJ காதல் போதையில் உள்ளார் என்பதால் "sensuous”-ness too oozes out. 

Now a quick peep to the storyline :  Muthaiah and V.K.Ramasamy are poor neighbours in a village.  Both are widowers (VKR’s wife was from a rich family).  Muthaiah helps VKR whenever he is in need of money.  இந்த அன்பில் மகிழ்ந்த வீகேஆர் தன் மகளை முத்தையாவின் மகனுக்கே திருமணம் செய்து வைப்பதாக வாக்களிக்கிறார்.  பட்டணத்தில் மரணப்படுக்கையில் இருக்கும் வீகேஆரின் மாமனார் தன் தவறை உணர்ந்து வீகேஆரை தன் மருமகனாக ஏற்றுக்கொள்கிறார். அதனால் வீகேஆர் மகளுடன் பட்டணத்திற்கு செல்கிறார். சென்றவர் முத்தைய்யாவை அடியோடு மறக்கிறார்.

காலம் உருண்டோடுகின்றன.  பிள்ளைகள் வளர்ந்து பருவ வயதை அடைகின்றனர்.  முத்தையாவின் மகன் MGR.  வீகேஆரின் மகள் JJ.  இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர்.  இருவரும் எலியும் பூனையும் போல் மோதிக்கொள்கின்றனர். தன் படிப்பிற்குரிய சிலவுக்கு  MGR boot polish செய்து சம்பாதிக்கிறார்.   ஒரு முறை தன் நண்பனிடம் உதவி கேட்டு போகும் முத்தைய்யாவை வீகேஆர் அவமானப்படுத்தி அனுப்புகிறார்.  இதை அறிந்து கொள்ளும் MGR வீகேஆரை பழிவாங்குவது தான் இனி தன் லட்சியம் என்று முடிவெடுக்கிறார்.  அவருக்கு பெரும் செல்வந்தரான அசோகனுடன் யதேச்சையாக நடப்பு ஏற்படுகிறது.  அவரின் உதவியால் MGR பெரும் செல்வந்தர்போல் நடித்து JJ வை தன் வலையில் சிக்கவைக்கிறார்.  அப்படி அவர் சிக்கி காதலில் தவிக்கும் போது வருவது தான் இந்த பாடல்.

காதலில் சிக்கிய JJ அதை MGR -ரிடம் நேரடியாக சொல்ல தயங்குகிறார்.  அதனால் சொல்லவேண்டியதை Spool (tape recorder )-லில் ரெகார்ட் செய்து MGR -ரிடம் அனுப்புகிறார்.  அதை கேட்டு MGR பதிலுக்கு அவரும் தானும் அவரை காதலிப்பதாகவும், வீட்டில் சுதந்திரமாக காதலிக்க முடியாது, பூங்காவிற்கு  வா என்று பதிவு செய்து அனுப்புகிறார்.  அதன் படி JJ MGR-யை தேடி பூங்காவிற்கு வருகிறார்.  பிறகென்ன பாட்டு ஆரம்பமாகிறது. 

எல்.ஆர்.ஈஸ்வரியின் பகுதிக்கு "sensuousness" கூடுதலாகவும், டி.எம்.எஸ். அவர்கள் பகுதிக்கு "sensuousness" subtle ஆகவும் கொடுத்ததற்கான காரணம் – JJ is head-over-heels in love with MT, whereas MT is just pretending as if he is in love with her - அவரது குறிக்கோள் அவர் விரித்த வலையில் அவள் விழ வேண்டும் அவ்வளவே தவிற அவளை அவர் மனசார காதலிக்கவில்லை.  Hence, that difference.

The song starts with a short but sweet prelude - அந்த prelude-டே மனதை அள்ளிக்கொண்டுவிடுகிறது.  Chord and Notes are played in Xylophone / Bells.  A counter melody is added through Violin.  The prelude ends with a chord in Harp.  Normally, Harp is used to convey (1) the scene is taking us to flashback (2) the song is a dream sequence (3) a kind of illusion.  This one is neither a flashback nor a dream sequence.  Then one may wonder why Harp is used here. In fact not only here, but the same has been used in the song at many places. My wild guess – (1) JJ is in an almost illusionary state - அதாவது காதல் போதையில் திளைக்கிறார் (2) MGR doesn’t love her, he is just pretending - அதாவது போலி – we can take this too as illusion.  Then the pallavi begins in slow pace.  LRE starts the pallavi with two lines – with few words stretched.  After each line an interlude is placed in Harp + Bells + Violin.  When the second line ends TMS also joins by humming alongwith the Harp + Bells + Violin.  Then LRE begins the pallavi again in off-beat.  From here the rhythm starts.  She sings the first two lines of the pallavi twice.  After each line Violin runs are placed as interlude.  This indicates that she is shedding the shyness and slowly opens up.  Then for the next four lines the rhythm changes.  Here Brush style Drums is introduced and the Tabla beats stops.   She sings each line in a husky voice.  After each line a small and sweet interlude is infused through Accordion and Bells.  The last line is sung in high pitch.  She finishes this portion by humming.  Before the humming starts a small roll on Tabla is infused.  After the humming two guitar chords are played and LRE repeats the first two lines of the pallavi.  முதல் வரிக்கு பிறகு வயலினில் ஒரு run interlude ஆக வருகிறது.

Now time for first BGM - இப்போது வெட்கம், அச்சம் எல்லாம் பறந்து போய் துணிச்சல் பிறந்து விட்டது.  அதாவது காதல் சூடுபிடித்துவிட்டது – the Violin runs combined with Trombone / Sax / Trumpet conveys this. Here MSV introduces Bongos for the beats.  அதற்க்கு பிறகு இரண்டு முறை பாங்கோஸில் பீட்ஸ் வருகிறது, பக்கபலமாக கிட்டார் chords சேர்க்கப்பட்டுள்ளது.  இந்த பாங்கோஸ் பீட்ஸ் அவளது தள்ளாட்டத்தை குறிப்பிடுகிறது - அதாவது காதல் தள்ளாட்டம்.  இதற்க்கு பிறகு for 2 bars flute + clarinet சேர்ந்து ஒலிக்கிறது.  Please note the Bongos beats for this portion.  இந்த போர்ஷனை கிட்டார் chord மற்றும் வயலின் சேர்ந்து முடித்துவைக்கிறது.  Then begins the first charanam.  She sings the first line and repeats it again.  Then she sings the next two lines.  She ends the third line with a lengthy humming.  The small but sweet and effective interlude in Accordion is not to be missed.  In fact for this whole portion I strongly believe Accordion follows the singer.  At the end of the humming a roll on the Tabla is placed.  Then she continues the charanam with the fourth line, which she repeats.  Here in between the repetition there is no interlude.  Then she sings the next two lines.  This portion is closed with an interlude in Harp.  Then then rhythm changes.  This portion is same like the ending four lines of the pallavi – but here the lyrics are different.  This portion ends with a humming.  Now again an interlude in Harp and Guitar Chords.  The charanam is finished by singing only the first line of the pallavi.

All these while LRE express sensuousness boldly, blatantly, passionately and proudly. 

Then begins the second BGM.  Now is the time for the hero to reciprocate.  His approach is very gentle, which reflects from the BGM.  Pipe Organ combined with Clarinet (I suppose) plays for two bars.  Contrast track runs through in Violin.  Then for one bar Mandolin is played.  Contrast track runs in guitar chord strumming and violins.  Then for the next one bar Flute is played.  Its backed up with Guitar Chords and Violins.  Please take a note on the change in rhythm pattern in all these 3 segments.  Then TMS starts the second charanam.  This charanam too is exactly the same like first charanam – but the approach of the singer is different – sensuousness is conveyed gently here. 

TMS பல்லவியின் முதல் இரண்டு வரியை பாட அதற்க்கு LRE  ஹம்மிங்கில் பதில் கொடுக்க, பிறகு TMS பல்லவியின் மற்ற இரண்டு வரிகளை பாடி அதை மீண்டும் repeat செய்து முடியும் போது Harp ஒலிக்கப்பெற்று பாடல் முடிவடைகிறது.

The humming adds special charm and the required sensuousness to the song.  Persian Tune-னையும் Western Tune-னையும் mix பண்ணி ஓர் புது விதமான பாணியை உருவாக்கி பிரமிப்பூட்டியுள்ளார் மன்னர்.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=ExjQwITy0mc


Quote
MMFA
 MMFA
(@mmfa)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 42
02/10/2019 5:29 am  

அன்பு ரமணன்
உங்களின் மெல்லிசை மன்னர் பாடல்களைப் பற்றிய வர்ணனை ,மெல்லிசை மன்னரின் பாடல்களின் பரிமாணத்தைக் காட்டுவதாக உள்ளது .
என்னை போன்றோர் மெல்லிசை மன்னரின் பாடல்களை மேலெழுந்த வாரியாக இது நாள் வரை ரசித்து வந்திருந்தாலும் ,உங்களின் வர்ணனையைக் கொண்டு ,மெல்லிசை மன்னரின் பாடல்களை மேலும் ரசிக்க கற்றுள்ளோம் என்பதை தாண்டி ,மெல்லிசை மன்னரின் இசை அமைக்கும் திறனின் விஸ்தாரம் பிரமிக்க வைக்க கூடியதாய் உள்ளது .
உங்களை போற்றும் அதே வேளையில் மெல்லிசை மன்னரை வணங்குகிறோம்

ஒன்றுமே தெரியாது ஒன்றுமே தெரியாது என்று சொல்லி சொல்லி அவரின் இசை பரிமாணங்களை இது காறும் வெளிவராமலே போய் விட்டதே


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 54
02/10/2019 7:20 am  

Dear Admin,

Thank you so much for your response. பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவர் "மெல்லிசை மன்னர்" ஒருவரே.

"ஒன்றுமே தெரியாது" என்று சொல்வது அவரது பணிவை, தன்னடக்கத்தை காண்பிக்கிறது.  "எனக்கு எல்லாம் தெரியும்" என்று கர்வத்துடன் மார்தட்டிக்கொண்டு சொல்ல அவருக்கு தெரியாது, அவர் அப்படி சொல்ல விருப்பப்படவும் இல்லை.  ஆனால், "ஒன்றுமே தெரியாது" என்று செல்பவருக்கு "எல்லாமே தெரியும்" என்ற உண்மையை அன்று (அவர் உயிருடன் இருக்கும் வரை) யாரும் புரிந்துகொண்டதாக தெரியவில்லை.  புரிந்துகொள்ளும் முயற்சியில் யாரும் இறங்கவுமில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. நிறைகுடம் தளும்பாது என்பது  போல் அவர் ஓர் நிறைகுடம்.  அவரை சரிவர யாருமே புரிந்துகொள்ளவில்லை.

As I said in my intro, தமிழ் எழுத தெரியாத என்னை அவர் ஓர் கருவியாக்கி, அவர் நிகழ்த்திய புதுமைகளை, சாதனைகளை உலகத்துக்கு தெரிவிக்க உபயோகித்துக்கொள்கிறார் என்று தான் நினைக்கிறேன்.  அந்த சாதனைகளை இனியாவது உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.  அப்படி புரிந்துகொண்டால் அதற்க்கு நானும் ஓர் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளேன் என்னும் போது அதைவிட பாக்கியம் வேறெதுவாக இருக்க முடியும்.

Through this site / Forum you have opened a platform to glorify the magnificent work / contribution of MSV not only to the Tamil Film Music, but to the whole world.  Wish this site / Forum reaches new heights in achieving its goal (tw).

(A humble request, please go through my other topics too to understand the magical work of our great Mannar).

இப்படிக்கு, அனைவரது அன்பையும், ஆதரவையும் நாடும்,

ரமணன் கே.டி.


ReplyQuote
Share: