1971 - Avalukkendru...
 
Notifications

1971 - Avalukkendru Orr Manam - Manamelaam Un Kovil  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 54
26/09/2019 6:25 pm  

பாடல் : மனமெலாம் உன் கோவில்

படம் : அவளுக்கென்று ஓர் மனம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியவர் : எஸ். ஜானகி

வருடம் : 1971

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்து பாடல்களுக்காகவே மிக பெரிய  வெற்றிபெற்ற ஒரு படத்திலிருந்து மிகவும் அற்புதமான ஒரு பாடல். 

இந்த படத்தை பற்றி சொல்லப்போனால், நம்பமுடியாத ஒரு கதையை வெற்றிபெற செய்ய  மிகவும் உதவியது மன்னரின் அபாரமான இசை என்று சொன்னால் அது மிகையாகாது (இந்த படம் ஹிந்தியில் எடுக்கப்பட்ட போது படம் படு தோல்வியை தழுவியதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது சுவையில்லாமல் போன பாடல்களே).  படத்தின் மற்ற பாடல்கள் வெற்றி பெற்ற அளவு இந்த பாடல் வெற்றி பெறாமல் போயிருக்கலாம்.  ஆனால் மற்ற பாடல்களைவிட இந்த பாடலுக்காக இயக்குனரும் மன்னரும் மூளையை கசக்கி பிழிந்திருப்பார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.  ஏனென்றால் அவ்வளவு விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன இந்த பாடலில் - நேரடியாக சொல்லாமல் பல விஷயங்களை மன்னர் சொல்லியிருப்பது போல் எனக்கு தோன்றுகிறது.  அது என்னென்னவென்று பார்ப்போமா?

இரு கதாநாயகிகள் - பாரதி / காஞ்சனா.  இருவரும் ஆருயிர் தோழிகள். இருவருக்கும் அவ்வளவு நெருக்கம், அவ்வளவு அன்னியோன்யம்.  காஞ்சனாவின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக தன் வாழ்க்கையை அழித்துக்கொள்கிறார் பாரதி.  தன் கண் முன்னே தோழியின் வாழ்க்கை சீர்குலைவதைக்கண்டு அவளுக்காக பூஜை ஒன்றை ஏற்பாடு செய்கிறார் காஞ்சனா.  அவளை அதில் கலந்துகொள்ள விடாமல் தடுத்து தான் நடத்தும் பார்ட்டி ஒன்றில் கலந்துக்க வரப்புத்துகிறார்  முத்துராமன் - தன்னை எதிர்த்து பூஜையில் கலந்து கொண்டால் காஞ்சனாவின் வாழ்க்கையை சீர்குலைத்துவிடுவேன் என்று அச்சுறுத்தி.  வேறு வழியின்றி பாரதி பார்ட்டியில் கலந்து கொள்கிறார்.  அங்கு இவளின்றி இவளுக்காக பூஜை செய்கிறார் காஞ்சனா.  இது காட்சி. 

பெரும்பாலான இயக்குனர்கள் என்ன செய்திருப்பார்கள், காஞ்சனாவை traditional முறைப்படி பக்திப்பாடல் பாடவிட்டு - அதற்குரிய தாளமேளத்துடன், பாரதியை மேற்கத்திய இசைக்கேற்றபடி பாடி ஆடவிட்டிருப்பார்கள் - அதாவது பாரதியை திருந்தி வாழவைக்குமாறு மண்டியிட்டு / வேண்டுகோளிட்டு காஞ்சனாவும், தன் கதி இப்படியாயிற்றே என்று நொந்து கொண்டோ அல்லது கயவனிடம் மன்றாடும் படியோ பாடுவது போல் பாரதியும் பாடியிருப்பார்கள்.  இங்கு தான் இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளர் மாறுபட்டு சிந்தித்திருக்கிறார்கள்.  இயக்குனரின் பங்கைவிட மன்னரின் பங்கு பன்மடங்கு இருப்பதாக எனக்கு படுகிறது.  இயக்குனர் சொல்லாத பல விஷயங்களை மன்னர் தன் இசையால் உணர்த்தியுள்ளார் என்று தான் எனக்கு தோன்றுகிறது.  அதை இயக்குனர் உணர்ந்திருப்பாரா?  அல்லது மன்னர் தான் இதை விளக்கியிருப்பாரா?

இருவரின் இரு வேறுவிதமான  மனநிலையை எடுத்துக்காட்டும் பாடல்.  உடல் ஓரிடத்தில் இருந்தாலும் இருவரின் மனமும் மற்றவர் இருக்கும் இடத்தில் உள்ளது.  மனம் என்பது மிகவும் மென்மையானது.  மேலும் அது ஓரிடத்தில் இல்லாமல் மற்றோரிடத்தில் உள்ளது.  மனதை/எண்ணங்களை மிதக்க செய்வது எது (கற்பனையில் தான்)?  காற்று.  அதனால் தானோ என்னவோ மன்னர் இந்த இரண்டையும் சுட்டிக்காட்டுவது போல் வீணை, கிட்டார், வயலின்  (மென்மையான இசைக்கருவிகள் - மனம் என்பது மிகவும் மென்மையானது - மனதை இசைக்கருவிகளோடு ஒப்பிடும் போது String Instruments-களோடு தானே ஒப்பிடுவார்கள் - viz., மனமெனும் தந்தி தன்னை மீட்டுகிறாய், etc.), அக்கார்டியன், ட்ரம்பெட், Saxophone, புல்லாங்குழல் (wind instruments) போன்ற இசைக்கருவிகளை கூடுதலாக பயன்படுத்தியுள்ளார்.  காஞ்சனாவை உணர்ச்சி பொங்க இசைக்கருவிகளுடன் பாடவிடாமல் ஸ்லோகம் சொல்வது போல் அல்லது மனக்குறைகளை சொல்லி வேண்டுகோள் விடுப்பது போல் / மன்றாடுவது போல் - தொகையறா பாணியில்,  செய்திருப்பதற்காகவும் மன்னரை வானுயர புகழலாம்.  ஒருவர் மிகவும் வருத்தத்தில் இருக்கும் போது, அல்லது மனக்குமுறலில் இருக்கும் போது எப்படி பாட முடியும்?  அதனால் மிகவும் சாமர்த்தியமாக மன்னர் இந்த முறையை கையாண்டிருக்கிறார்.  இதனை உணர்ச்சியோடு பாட எஸ்.ஜானகியை தேர்ந்தெடுத்ததிலும் மன்னரின் சாதுர்யம்  தென்படுகிறது (Should be remembered that the same SJ has sung another romantic song for Bharati in the same movie!!!!!).  அதே நேரத்தில் பாரதிக்கு பாடல் கொடுக்காமல் தவிர்த்தத்திலும் மன்னரின் / இயக்குனரின்  சாமர்த்தியம் தென்படுகிறது.  முத்துராமனிடம் கெஞ்சியும் பயனில்லை, தன் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று புலம்புவதிலும் பயனில்லை.  அதனால் அவனது சொல் கேட்டு மனம் ஒப்பாமல் ஒரு ஜடம் போல் அவனுடன் ஆடுகிறாள், மதுவருந்துகிறாள்.  முதல் BGM -ம்முக்கு தாளத்துக்கு ட்ரம்ஸில் மெல்லிசாக வருடியும், கிடாரில் chords -ஸும் வாசித்துள்ளார்.  ஆனால் அதற்க்கு பிறகு வரும் BGM -ஸில் மெல்லிதாக பாங்கோஸ் வாசித்துள்ளார், ஏனென்றால் அப்போது பாரதி மதுவின் போதையில் லேசாக தள்ளாடுகிறார் அந்த தள்ளாட்டத்தை சுட்டிக்காட்டுவதற்காக பாங்கோஸ் தாளத்தை பயன்படுத்தியுள்ளார்.  The flute pieces in between the trumpet is just pinching the heart. 

MSV has to be applauded for choosing the instruments very carefully and thoughtfully.  He has chosen the wind instruments n string instruments and avoiding singing for Bharati and heavy percussion instruments. இரு கதாநாயகிகளுக்கும்  அவ்வளவு நெருக்கம் மற்றும்  அன்னியோன்யம் என்று சொல்லியிருந்தேன் அல்லவா. காஞ்சனா பாடுவது பக்தி ரசத்தில். பாரதி பாடவேண்டும் என்றால் அது மேற்கத்திப்பாணியில் அமைய வேண்டும்.  அதற்க்கு heavy percussion மற்றும் வேறு இசைக்கருவிகள் பயன்படுத்த வேண்டும்.  அப்படி heavy percussion  பயன்படுத்தினால் ஒரு பாணியிலிருந்து மற்றொரு பாணிக்கு சட்டென்று மாறுவது கடினம்.  அப்போது இரு பாணிக்கும் நடுவே ஒரு இடைவெளி (pause / cut) கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.  அப்படி pause கொடுத்தால் மன்னரின் கணிப்பு படி இரு கதாநாயகிகளுக்கும் இருக்கும் நெருக்கம்  / அன்யோன்யம் இசையில் காண்பிக்க முடியாமல் போய்விடும்.  அதனால் தான் பாரதி பாடுவதையும், heavy percussion-னையும் சாமர்த்தியமாக தவிர்த்திருக்கிறார்.  இப்படி சிந்தித்து வடிவமைத்த பாடலில் பாருங்கள் எத்தனை லாகவமாக ஒரு பாணியிலிருந்து மற்றொரு பாணிக்கு தாவுகிறார் மன்னர், without breaking the flow.

The song begins with a beautiful piece in Veenai - பக்தி ரசத்தை அப்படியே கண்முன் கொண்டுவந்து விடுகிறது.  அதை தழுவி Piano-வில் 7th Chord ஒலிக்க அதோடு சேர்ந்து Trumpet -டும் ஒலிக்கிறது. அதை தழுவிக்கொண்டு violins  சஸ்பென்ஸை குறிக்கும் பாணியில் sustained ஆக ஒலிக்கிறது - இது எதோ நடக்கக்கூடாது ஒன்று / விரும்பப்படாத ஒன்று நடப்பதை சுட்டிக்காட்டுகிறது.  அதிலிருந்து Violins அப்படியே திசை திரும்பி சாந்த நிலையில் ஒலிக்க பல்லவி ஆரம்பமாகிறது.  As I said above, whole singing portion is done in “தொகையறா" style without any rhythm.  There is no interludes for Pallavi and First Charanam.  பாடும் போது அதற்க்கு ஸ்ருதிக்காக பியானோவில் (அல்லது ஹார்மோனியமாக கூட இருக்கலாம்) Chords கூடவே பயணிக்கிறது.  அதற்க்கு அவ்வப்போது Accoustic Guitar-றில் Broken ஸ்டைல் (Arpeggio) chords சேர்த்து மெருகூட்டியுள்ளார்.

First BGM – now the scene shifts from Kanchana to Bharathi, who is in a dance floor at a hotel – this BGM begins with a swirl in Accordion, which conveys intoxicated state of the place.  அதை தழுவி பியானோ மற்றும் Trumpet / Trombone-னில் ஓர் பீஸ் ஒலிக்கிறது - அதற்க்கு பக்கபலமாக Guitar Chords , Double Bass மற்றும் Brush Style Drums ஒலிக்கிறது.  The same piece repeats once again.  அதை தழுவி Trumpet –டில் (I would like to be corrected if it is “Saxophone”) ஓர் lengthy piece ஒலிக்கிறது. I think Trombone is played alongside in contrast.  ரொமான்ஸ் மூடை create செய்வது போயிருந்தாலும் அதில் ஜீவன் இல்லாதது போல் ஒலிக்க செய்துள்ளார் - காரணம் பாரதிக்கு அங்கு இப்படியோர் ஆட்டம் ஆட சற்றும் விருப்பமில்லை என்பதை சுட்டிக்காட்ட.  இதை தழுவி Metal Flute -டில் ஓர் பீஸ் ஒலிக்கிறது. This again conveys her disturbed status. அதை தழுவி பியானோ மற்றும் Guitar -றில் Chords ஒலிக்க அதையொட்டி Trombone bits வாசிக்கப்பட்டுள்ளது.  The whole piece is played in Ball Room Dance style.  The whole piece is excellently supported by Guitar Chords and Double Bass.  Brush Style Drums has been used for rhythm.  இங்கு rhythm நிறுத்தப்பட்டு அப்படியே Violin piece -ஸுக்கு தாவுகிறது.  இதற்க்கு பலம் சேர்க்க Cello மற்றும் Double Bass வாசிக்கப்பட்டுள்ளது.  இந்த பீஸ் முடிவது சன்னமான ஓர் Guitar Chord strumming -ங்கோடு.  Here starts the first Charanam.  It travels with various emotions. 

Second BGM – this BGM starts with a Saxophone (if I am not wrong) piece, oozing out intoxication and romance.  It has interludes in Trombone.  Here the rhythm joins in a slightly faster mode, compared to the first BGM.  Mannar introduces Bongos also here alongwith Brush Style Drums – மது போதையில் இருக்கும் பாரதியின் தள்ளாட்டத்தை சுட்டிக்காட்ட.  அதை தழுவி Combo Organ -னில் ஓர் சிறிய piece .  இது தள்ளாட்டத்தையும் குறிக்கிறது அது போல் அவர்கள் சுழன்று ஆடுவதையும் குறிக்கிறது.  அதை தழுவி Flute-டில் சிறு pieces ஒலிக்கிறது, அதற்க்கு Combo Organ-னில் சிறு notes வாயிலாக interludes.  இது மீண்டும் அவளது perplexed mood -டை சுட்டிக்காட்டுகிறது.  அங்கிருந்து தாவி மீண்டும் Violin Runs - அதாவது தவழ்ந்து அப்படியே காஞ்சனா இருக்குமிடத்திற்கு தாவுவதை எடுத்துக்காட்ட.  This piece is again backed up by Cello / Double Bass.  Then begins the second Charanam.  Here MSV introduces interludes – to show the intensity of the scene.  First four lines are recited without interludes.  From 5th line onwards interludes are infused by way of Bells, Guitar Chords and Violin Runs.  The singing portion is concluded by a run in Violins.  Then begins the postlude.

Postlude – This again set in Western style.  Here the style jumps to “Cha Cha Cha” style.  It begins with a beat on Drums. First session is played in Muted Guitar, Trumpet, Piano and Bass Guitar.  It has interludes by way of Chorus shouting “Hoi Hoi”.  Percussions used is Brush Style Drums and Bongos.  It is taken over by a lengthy piece in Accordion.  At the end strumming on Guitar Chord is played and again a small piece in Accordion is played. Then again a small piece in Muted Guitar + Trumpet + Piano + Bass Guitar. It has interludes by way of Chorus. And the postlude ends with a roll on Brush Drums – in a vibrating manner and a bang on the Cymbal. 

Altogether, a totally different effort.  Its not designed as Pallavi, Anupallavi and Pallavi + Charanam and Pallavi + Charanam and Pallavi – which is the usual format.  Here the Pallavi is not repeated anywhere. 

Its a classic example of transforming from one style to another with much ease without disturbing the flow. 

So much care and efforts has been taken by the great Mannar very silently.  அவர் சொல்லவில்லை என்பதை விட இத்தனை காலம் இதை யாரும் உணரவில்லை என்பது தான் மிகவும் வருத்தத்துக்குரியது - அதாவது இந்த கோணத்தில் இப்பாடலை இதுவரை யாரும் பார்த்ததாக தெரியவில்லை.  அது மட்டுமல்ல, இந்த பாடலை பெரும்பாலான MSV ரசிகர்களே கேட்டிருக்க மாட்டார்கள், அல்லது கேட்டு மறந்திருக்கக்கூடும்.

அடுத்த பாடலுடன் மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் விடைபெறுவது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே. டி.

 

https://www.youtube.com/watch?v=e_5pjnQ2rUU


Quote
Share: