1971. ரிக் ஷாக்காரன...
 
Notifications

1971. ரிக் ஷாக்காரன் / பொன்னழகுப் பெண்மை சிந்தும்  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 33
18/03/2020 11:38 am  

 ரிக் ஷாக்காரன் / பொன்னழகுப் பெண்மை சிந்தும் ..  1971.

சுசீலாம்மா அவர்கள் எத்தனையோ பாடல்கள் ஈஸ்வரி அம்மா அவர்களுடன் பாடியிருக்கிறார்கள் . அத்தனையும் அருமையாக இருக்கும் . இப்பாடலில் ஒரு வித்தியாச ரசனை . சுசீலாம்மாவிற்கு , கர்வத்துடன் நடனமாடும் மாதுவிற்கான குரல் பாவம் . எம் எஸ் வி அவர்களின் ஒரு அற்புத இசையில் , ஈஸ்வரி அவர்களுக்கோ ஒரு மென்மையான குரல் பாவம் . எனக்கு இந்தப் பாட்டில் ஒரு அதீத ரசனை .

ரிக் ஷாகாரன் திரைப்படத்தில் இடம்பெற்ற ...ஒரு நாடகப் பாடல் . அதில் ஒரு பெண் "தான் அழகு " என்ற போதையில் எவ்விதம் அழிகிறாள் என்று காட்டும் விதமாக பெண்களே நடிப்பது போல் நடனப் பாடல் .

இதற்கு பாடல் புனைந்தவர் கவிஞர் வாலி .

அழகின் கர்வம் இப்படி பாடி நடனமாடுகிறது ...

"பொன்னழகுப் பெண்மை சிந்தும்
புன்னகை என்ன
ஒரு மந்திரமோ இல்லை தந்திரமோ
இந்த உலகம் எங்கள் அழகுப்
பெண்கள் கைவசமோ ..!" ...சுசீலாம்மாவிண் இனிமையும் பொருந்தவே செய்கிறது .

"நைல் நாட்டு எழில் ராணி விழி ஜாடையில்
நாடாளும் முடிவேந்தன் தடுமாறினான்
பால்போன்ற பனிப்பார்வை பார்த்தேங்கினான்
கால் மீது தலை வைத்து களைப்பாறினான் ...// " சுசீலாம்மா பாடும் வரிகளில் தான் ... இது ஜூலியஸ் சீசர் , கிளியோபாத்ரா கதை என்றுணர முடிகிறது . திரையில் அதற்கான ஒப்பனை இல்லை .. காட்சியில் காலால் தள்ளி விடும் அபிநயம் ..?? சாதுர்யமாக பாடலுக்கேற்றாற்போல் சேர்க்கப்பட்டிருக்கும் . நடிகை மஞ்சுளா நடிக்கும் காட்சி.
ஈஸ்வரியம்மா ... அந்த வேந்தனின் குரலாக .. நெசமான பாவத்தில்
"எழிலே உன் நிழல் கூட எனைச் சேர்ந்தது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது...." ... எனப் பாட
"பொன்வேந்தர் பூமேனி என் மேனிதான்
என் மேனி எந்நாளும் உன் மேனிதான் // சுசீலாம்மா பாட தொடரும் .
அடுத்து விதி விளையாட அழகு சூறையாடப் படும் காட்சி கழுகுகள் சுற்றி வருவதுபோல் ... இசையும் பின்னணியில் அற்புதம் . அந்தக் காமுகர்களுக்கான வரிகளாக

"மலையில் தென்றல் பிறந்தது ஒருவருக்காகவா ...
இங்கே வா ..அன்பே இங்கே வா ... கோரஸ் ஒ த்தூத
"வானம் நிலவைச் சுமந்தது .... ஒருவருக்காகவா ."
இங்கே வா ..அன்பே இங்கே வா ... கோரஸ் ஒ த்தூத
"மேகம் மழையைப் பொழிந்தது ...ஒருவருக்காகவா ...
இங்கே வா ..அன்பே இங்கே வா ... கோரஸ் ஒ த்தூத
இறைவன் அழகைப் படைத்தது ...ஒருவருக்காகவா ...
இங்கே வா ..அன்பே இங்கே வா ... கோரஸ் ஒத்தூத ..'
அழகு அடிபட்டு போவதாக ஒரு காட்சி .
பின்னணியில் ஆண்குரலில்
"வடித்தெழுந்த சிலைபோலே
வடிவுடைய பாவை
துடித்தெழுந்த இளமையுடன்
தோன்றுகின்ற அழகை
நடுசபையில் கடை விரித்து
நடமாடும் போது
அடுத்தவரை அழிப்பதுடன்
தானுமது அழியும் .."
என்ற நியாயம் இயம்புவதான பாவனையில் பாடல் ,
மறுபடியும் மஞ்சுளா எழுந்து முடிவுரையாக ...
தாழ்ந்த ..ஆனால் அழுத்தமான குரலில் சுசீலாம்மா
"பெண்ணுலகம் பெருமை கொள்ளும் பொன்மகளே வா
உன் அழகினிலே ஒரு குறையில்லையே
என்றும் அச்சம் நாணம் கொஞ்சும்
பெண்மை வாழியவே !"

இசையமைப்போடு நான் ரசித்த கணிசமான பாடல்களில் இதுவும் ஒன்று .

கோதை
( கோதைதனபாலன் )

https://www.youtube.com/watch?v=IK5eEoBN3jQ

 


Quote
Share: