மஞ்சளும் தந்தாள் மல...
 
Notifications
Clear all

மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள் / தேனும் பாலும்1971  

  RSS

kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 30
18/10/2020 4:49 am  

#கவியரசர்கண்ணதாசன் பாடல்கள் என் ரசனையில்… 148

தேனும் பாலும் எழுபதுகளில் வந்த ஒரு திரைப்படம் . கல்லூரி நாட்களில் கதை அமைப்பு சுமார் என்ற ரீதியில் சென்றது . , பத்மினி , சரோஜாதேவி என்று .. அவர்களது இறுதி கட்ட கதாநாயக அந்தஸ்து என்றும் சொல்லலாம் . உடன் சிவாஜி நடித்திருப்பார் . திருமணமானவன் , இன்னொரு பெண்ணிற்கு தவறிழைத்து விடுகிறான் ..மனம் நொந்து வாழ்க்கையை சீரமைக்க முடியாது தடுமாற , பாதிக்கப் பட்ட சரோஜாதேவி கணவனிடம் மாங்கல்யம் கேட்க , சட்டம் அனுமதிக் காது என்ற நிலையில் , யதார்த்தமான முதல் மனைவி பத்மினி சந்தர்ப்பவசத்தால் சரோஜாதேவியை தனது தோழியாக சந்திக்கிறாள் ஆடிப்பெருக்கு விழாவில் .

இருவரும் தங்கள் கணவன் ஒருவரே என்று அறியாத நிலையில் , இந்தப் பாடல் பாடுவதாக அமைகிறது .

வைகை ஆற்றில் தீபம் ஏற்றி , விடல் நிகழ்வானது தொடங்குகிறது . பத்மினி மனம் நிறைந்த வாழ்விற்கு நன்றி சொல்லும் விதமாக ...கவியரசர் அழகான , பக்தி நயமான வரிகளில் ,

  • "மஞ்சளும் தந்தாள் மலர்கள் தந்தாள்
    மங்கள மங்கை மீனாட்சி
    நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள்
    தேவி எங்கள் மீனாட்சி ..'

வைகை பாயும் மதுரையை அரசாள்பவள் மீனாட்சி அம்மன் அன்றோ . அவளையே தனது வாழ்வுக்கு சாட் சியாக வைத்து , மனம் நிறைவாகப் பாடுகிறாள் . பாடுபவர் ஜிக்கியம்மா .

இந்த இடத்தில் இசை அமைப்பாளர் எம்.எஸ் .விஸ்வநாதன் அவர்களது இசையில் ராகத்தின் நுட்பத்தையும் , பாடகரைத் ( ஜிக்கி ,ஜானகி) தேர்ந்தெடுத்து பாடவைத்த முறையும் அன்று வியந்து ரசிக்க வைத்தது என்பதைச் சொல்லியே ஆக வேண்டும் .

"ஆடிப் பெருக்கில் ஆடிக்களிக்கும்
வைகை வெள்ளம் கொண்டாட
தாலிச்சரடு காவல் இருக்க
வாழுகின்றேன் நன்றாக .....'

கவியரசர் ... ஒரு பெண்ணிற்கு எது மனம் நிறைந்த வாழ்க்கை என்றே கூறி வருவார் அவளது மனவோட்டங்களாக .
அடுத்து , சந்திக்கும் சரோஜாதேவி , இந்தப் பாடலைக் கேட்டவண்ணம் தனது பங்கிற்கு தன் மனவோட்டங்களைப் பாடலில் பதிக்கிறார் , ஜானகி அம்மா அவர்கள் குரலில் .

"மங்கலமாலை ஒன்று வேண்டுமென
ஏற்றி வைத்தேன் தீபம்
பொங்கிய வைகை தேவி உன்னருளில்
தோன்ற வேண்டும் காலம் '...

இங்கு கவியரசர் திரைக்கதை செல்லும் பாதையைத் தொட்டு வைக்கிறார் .

மேலும் நாயகியின் ஆதங்கம் என்னவென்பதை இப்படி சொல்லிச் செல்கிறார் . மீனாட்சி அம்மன் மறுபெயர் அங்கயற்கண்ணி ..அவளே அந்த வைகைநதிக்கு தெய்வமாக நின்று அருள் புரியட்டும் .... என்றே பக்தி சிரத்தையோடு வேண்டும் வரமாக ..

" வைகையின் கரைகள் இரண்டு
நல்ல வாழ்வினில் இணையும் இரண்டு
அங்கயற்கண்ணி என் தேவி
உன்னருளில் அடைவேன் பொன்வேலி "

பத்மினிக்கு சிநேகிதி நிலை புரிந்தும் , புரியாத நிலையில் தனது மன நிறைவான தனது இல்லற மகிழ்வை , அதன் பெருமை பேசும் விதமாக ,

"அல்லியைப்போல அந்தி மாலைதனில்
வாழவேண்டும் பெண்மை
மல்லிகை வாசம் வீசும் தென்றலென
காணவேண்டும் மென்மை ..' எனச் சொல்லி ..

தனது வாழ்வு சிவன் பார்வதி க்கு இணையானது ...என்றே சொல்கிறாள் .
இது மதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வை உணர்த்தும் .
அது சமயம் , பெண்கள் புதுத் தாலிச்சரடு மாற்றிக் கொள்ளும் பழக்கம் உண்டு .
கவியரசரின் ரசனை அன்றைய நிலையிலும் அந்த மண்ணின் பண்பு நினைந்து பாடலைப் புனைந்து அனைவரையும் ரசிக்க வைத்தது என்றால் மிகையில்லை .

"சுந்தர மீனாள் மஞ்சம் என
சுகத்தில் மிதந்தது நெஞ்சம்
நாயகன் தந்தது அதிகம் என்றும்
நானே அவனது உதயம் "

அது சரி , மண்ணின் பழக்கம் என்றாலும் தமிழின் மாண்பும் சற்று மதிக்கப் படணுமே .
கவிஞருக்கு எப்போதுமே தமிழ் இலக்கியத்தில் கண்ணகி ,மாதவி இரு பெண்மணிகள் பற்றிய சிந்தை பாடல்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கும் .
பட்டி மன்றங்களில் அவ்வமயம் ..

கண்ணகி கற்பு சிறந்ததா ? மாதவி கற்பு சிறந்ததா ? "என்று பேசப்படும் .
இது வாழ்வியல் யதார்த்தங்கள் . அவரவர் மனதில் கொள்ளும் தார்மீகப் பண்புகள் . சட்டங்கள் இவற்றிடம் செல்லாது . குழப்பங்கள் இருக்கும் இடத்தில தான் சட்டங்களுக்கு வேலை .

சரோஜாதேவி தொடர்கிறார் ,

"கண்ணகி வாழ்வை காதல் மாதவியை
சேர்த்துப் பாடும் தமிழே'

பத்மினியோ , அதை மறுக்க முடியாது தனது நிலைபாட்டுக்குள் மறைந்துகொள்கிறார் ...

"மாதவியைப் போலே எந்தன் தேவனிடம்
யாருமில்லை தமிழே "...

கதை யின் முடிவு எதை நோக்கிச் செல்கிறது என உணர முடியும் .
சரோஜா தேவியின் எண்ணங்கள் இப்படி வர ...இதை எவரும் மறுக்க முடியாதே ..

"ஏற்றிய தீபங்கள் சாட்சி
என் இதயம் ஆடிடும் காட்சி
போற்றிய நாயகன் வாழ்க
அவன் பூஜையில் நானும் வாழ்க "...

ஆக நமக்கு நல்லதொரு பட்டிமன்றச் சுவையோடு மனதை வருடும் பாடல் செவிமடுத்த இன்பம் கிடைக்கும் .

கோதை தனபாலன்

https://www.youtube.com/watch?v=ryL6CXFxhKA
Singers - S.Janaki Jikki

1971 ல் வெளிவந்தது ."


Quote
Share: