இது மார்கழி மாதம்//...
 
Notifications
Clear all

இது மார்கழி மாதம்// பிராப்தம்1971  

  RSS

kothai
(@kothai)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 71
18/01/2021 1:13 am  

எல். ஆர் . ஈஸ்வரி பாடல்கள் என் ரசனையில் ... 25//   1971

கவர்ச்சியான பாடல் களுக்கு இவர் குரலை அதிகம் பயன்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம் எஸ் வி அவர்கள் . திரை இசை வானில் இதனாலேயே ஒரு தனியிடம் இவருக்கு உண்டு . தனியாக பக்திப்பாடல்கள் , குறிப்பாக அம்மன் பாடல்கள் இவருக்கு வெகு நேர்த்தியான சிறப்பும் அளித்துள்ள நிலை இன்னொரு பக்கத்து உண்மை .

கவர்ச்சி என்று சொன்னாலும் எல்லோருக்கும் மேடைக்கு கவர்ச்சி என்றே தோன்றும் . இங்கு ஒரு கிராமிய மணம் என்றே சொல்லலாம் . அவனோ படகோட்டும் தொழில் கொண்டவன் . அவன்மீது அன்பினால், பாசமிகுந்து பாமரத்தனத்துக்கே உள்ள கவர்ச்சிப் பாடல் போன்று இது இருக்கும் . இசையமைப்பும் ஒரு அமைதியோடு ராகம் பாடுவதாக இருக்கும் .

இடையில் அம்மாவின் ஹம்மிங் மென்மையான அழுத்தம் கொண்டு எதோ ஒரு ராகம் கூட்டி வருதல் கேட்க இனிமை .

இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணை மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்...'

"வண்ணக்கிளி, முல்லைக்கொடி,
இன்பக்கனி எண்ணப்படி
சின்னம்மா இதை சொன்னாள்
சொந்தக்கிளி சொன்னப்புறம்
உள்ளத்தினில்
இன்பத்துடன் சின்னைய்யா இதைக் கேட்டான்

"இந்த ஊரெங்கும் பள்ளியறை
ஏதேதோ பாடுதைய்யா
வாயா வாயா உள்ளே
நான் உனக்காக காத்திருக்க
நீ மட்டும் ஏன் இங்கே
ஏன் ஏன் ஆசையா இல்லே'

:.... ஹ்ம்ம் ம்ம் ம்ம்

" கட்டிக் கொடுத்தவன் முத்தம் கொடுப்பதை
தட்டி விடுவதும் தள்ளி இருப்பதும்
ஏன் அய்யா ஏன் அய்யா ஏன் அய்யா
சிற்று விளக்குடன் மேதை இருப்பதும்
கொஞ்ச நினைப்பதும் நெஞ்சன் மறந்தது
ஏன் அய்யா ஏன் அய்யா ஏன் அய்யா"

நான் பூச்சூடி பின்னலிட்டேன்
மையிட்டேன் பொட்டும் இட்டேன்
வாயா வாயா உள்ளே
நான் போகாத சொர்க்கத்துக்கு
போவோமா சொல்லைய்யா
ஏன் ஏன் ஆசையா இல்லே

" கொம்பில் பழுத்தது கொட்டி கொடுத்தது
வண்டு கடித்திட என்ன நினைத்தது
சொல்லையா சொல்லையா சொல்லையா
கொட்டு முழக்குடன் பட்டம் முடிஞ்சது
மத்த கதைகளை எப்ப முடிப்பது
சொல்லையா சொல்லையா சொல்லையா"
" நல்ல சந்தனத்த பூச விடு
ஜவ்வாது தீட்ட விடு
வாயா வாயா உள்ளே
இங்கே தாளாத பெண்ணிற்க்கு
மூடாத கண்ணீருக்க
ஏன் ஏன் ஆசையா இல்லே"

.... ஹ்ம்ம் ம்ம் ம்ம்

இது மார்கழி மாதம்
இது முன்பனிக் காலம்
கண்ணா மயக்குது மோகம்
ஏன் நடுங்குது தேகம்..'

கவிஞர் கண்ணதாசன் வரிகள் .. சற்று வசன நடையில் ..பிராப்தம் திரையில்

கோதை தனபாலன்
https://www.youtube.com/watch?v=MMUWIlafrxs


Quote
Share: