Notifications
Clear all

1970 - Oru Mutharathil Muppathu Muthu - Sorgam  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 88
17/10/2020 5:22 pm  

பாடல் : ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
படம் : சொர்க்கம்
பாடியவர் : பி.சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1970

அனைவருக்கும் வணக்கம்.

இந்த பாடலுக்கு என் இதயத்தில் ஓர் தனி இடம் உண்டு. அதன் காரணம் என்னவென்பதை விளக்குகிறேன்.

எல்லோரையும் போல் சிறு வயதிலிருந்தே சினிமா / திரைப்பாடல்கள் என்னையும் ஈர்த்தன. பலரது இசை அமைந்த பாடல்கள் கேட்டு மகிழ்ந்த காலம் அது. பாடல்களை சும்மா கேட்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பாடலையும் எப்படி ரசிக்கவேண்டும் - பாடிய விதம், இசைக்கோர்வை, இத்தியாதி மட்டும் தான் - என்று கற்றுக்கொடுத்தவர் பக்கத்துக்கு வீட்டு அக்கா ஒருவர் (அவரை வாழ்நாளில் என் நினைவு உள்ள வரை மறக்க மாட்டேன், மறக்கவும் கூடாது). பருவ வயதை எட்டியதும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது இசை அமைப்பாளர்களை இனம் கண்டுகொள்ள ஆரம்பித்தேன். அவருள் என்னை பெரும்பாலும் ஈற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். அப்போதெல்லாம் தெரியாது மற்றவர்களின் பாடல்களிலிருந்து இவர் பாடல்கள் மட்டும் ஏன் எனக்கு தனித்து தெரிகிறது, ஏன் கூடுதலாக ஈர்க்கிறது, மனதில் ஒரு தாக்குதலை, பாதிப்பை ஏன் ஏற்படுத்துகிறது என்று. அதற்க்கு ஒரு பதில் / விளக்கம் கிடைக்காமல் சில வருடங்கள் ஓடின. யாரிடம் கேட்பது என்ற குழப்பம். எனக்கு பரிச்சயம் உள்ள சிலரிடம் கேட்கவும் செய்தேன். ஒன்று அவர்களுக்கும் அது புதிராகவே இருந்தது அல்லது அவர்கள் அளித்த விளக்கம் சரியாக இருக்கவில்லை.

அப்படியிருக்க, சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் எதோ ஒரு சானலில் "சொர்க்கம்" படம் பார்க்க நேரிட்டது. அப்போது தான் அந்த படத்தை முதல் முதலாக பார்க்கிறேன். படத்திலுள்ள மற்ற பாடல்களை விட "ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து" பாடல் என்னை மிகவும் ஈர்த்தது (சிறு வயதிலிருந்தே அந்த பாடல் மிகவும் பிடிக்கும்). மனது சிந்திக்க ஆரம்பித்தது, ஏன் இந்த பாடல் மட்டும் இப்படி மனதை ஈர்க்கிறது, மனதை பிசைகிறது என்று. உடனடியாக பதில் ஏதும் கிடைக்கவில்லை. பாடலின் ஒலிநாடா கையில் இருந்ததால் பாடலை சில முறை கேட்டேன். பாடலின் அர்த்தம் ஆங்காங்கே விளங்கினாலும் முழுவதுமாக விளங்கவில்லை. மனம் கிடந்தது தவித்தது - விடை கிடைத்தாகவேண்டுமே என்று துடித்தது. அப்போது உள்மனம் சொல்கிறது - பாடல் படத்தின் கதையுடன் மிகவும் ஒட்டியுள்ளது, கதாபாத்திரங்கங்களை தழுவியுள்ளது, பாடலில் நடக்கும் நிகழ்வுகளை சுமந்துள்ளது - என்று. அதை புரிந்து கொண்டால் உன் கேள்விகளுக்கு விளக்கம் கிடைத்து விடும். இதை புரிந்து கொள்ளவேண்டும் என்றால் படத்தை மீண்டும் பார்த்தாகவேண்டும். சானலில் மீண்டும் ஒளிபரப்பும் வரை காத்திருக்க மனம் இடம் கொடுக்கவில்லை. ஓடினேன் விசிடி விற்க்கும் கடைக்கு. எனது பாக்கியம் படத்தின் விசிடி கிடைத்தது (அப்போது நான் வசித்து வந்தது பம்பாயில் - அங்கு தமிழ் பாடல்கள் / படங்கள் கிடைப்பது, குறிப்பாக பழைய படங்கள், அவ்வளவு எளிதல்ல). படத்தை போட்டு பார்த்தேன். படத்தின் ஒவ்வொரு காட்சியையும், கதாபாத்திரங்களையும், வசனங்களையும் கூர்ந்து கவனித்தேன். விளக்கம் கிடைக்கவேண்டிய பாடல் காட்சியும் வந்தது. விளக்கங்கள் மனதில் ஏறத்தாழ மின்னலடித்தது என்றாலும், மீண்டும் ஒரு முறை கூட படத்தை பார்த்தேன். இப்போது குழப்பங்கள் நீங்கி விட்டது, விளக்கமும் பளிச்சிட்டது.

மன்னரின் பெரும்பாலான பாடல்கள் நம் மனதில் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்புகளின் காரணங்கள் புரிய வந்தன. அப்படியே பிரமித்துப்போய் விட்டேன். அதே நேரத்தில், இந்நாள் வரையில் இந்த காரணங்களை / விளக்கங்களை யாரும் புரிந்துகொள்ளவில்லையே என்று வேதனையும் அடைந்தேன். அவற்றையெல்லாம் எங்காவது விளக்கி சொல்ல வாய்ப்பு கிடைக்குமானால் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்று உறுதி கொள்ளவும் செய்தேன்.

அவர் பாடல்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணங்கள் - படத்தின் கதையை நன்கு அறிந்து கொண்டு அதற்க்கு ஏற்றாற்போன்ற மெட்டுக்கள் அமைப்பதனால் / கதாபாத்திரங்கள், அவர்கள் குணாதிசயங்கள், சந்தர்பங்கள், இவற்றை உள்வாங்கிக்கொண்டு அதற்க்கு ஏற்றாற்போன்ற மெட்டுக்கள் அமைப்பதனால் / பாடல் எங்கு படமாக்கப்படவுள்ளதோ அந்த சூழ்நிலையை பிரதிபலிக்கும் வண்ணம் இசை அமைப்பதனால் / படத்தில் நிகழவிருக்கும் "சுப" அல்லது "சோக" நிகழ்வுகளை முன்கூட்டியே பாடல் வாயிலாக பார்வையாளர்களுக்கு/கேட்பவர்களுக்கு கோடிட்டு காட்டுவதால் / வரிகளுக்கு, வார்த்தைகளுக்கு, bhaavangalukku, பாடல் இடம்பெறும் இடங்களுக்கு ஏற்றாற்போன்று மெட்டு, தாளங்கள் மற்றும் இசைக்கருவிகள் மாறுபடுத்திக்காட்டுவதால் / வார்த்தைகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம்/bhaavangal இவைகளால், இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் தவிர மற்றுமொரு முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் - அவர் நிகழ்த்தியிருக்கும் ஜாலங்கள், experiments, சூட்சுமங்கள் (அதாவது இசைக்கோர்வை வாயிலாக அவர் பூடகமாக சொல்லியிருக்கும் விஷயங்கள் - அவற்றையெல்லாம் அவர் ஒரு போதும் வெளிப்படையாக சொன்னதேயில்லை - நாமாகத்தான் புரிந்துகொள்ளவேண்டும்) இவற்றையெல்லாம் நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நாம் அந்த படத்தின் கதை, கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், பாடல் எங்கு-எப்போது இடம்பெறுகிறது என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அப்போது தான் பெரும்பாலான அவரது பாடல்களை நாம் பூரணமாக புரிந்துகொள்ள முடியும். அதை புரிந்துகொள்ளும் போது நமக்குள் ஏற்படும் பிரமிப்பு இருக்கே, அப்பப்பா அதை சொல்லி மாளாது.

இத்தனை விஷயங்களை நான் புரிந்து கொள்ள வழிவகுத்த பாடல் "ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து" என்ற பாடல் என்பதால் தான் இந்த பாடலுக்கு என் இதயத்தில் எப்போதும் ஓர் தனி இடம் உண்டு என்று கூறினேன். அதற்க்கு பிறகு ஒவ்வொரு பாடலாக ஆராய ஆரம்பித்தேன்.

அப்படி நான் புரிந்து கொண்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள உகுந்த இடமாக இந்த தளம் வாய்த்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

சரி, இப்போது இந்த பாடலில் மன்னர் நிகழ்த்தியுள்ள ஜாலங்களை பார்ப்போமா.

ஒவ்வொரு படத்திற்கும் அதாதுக்கென்று ஒரு tonal quality உண்டு. அது அந்த படத்தின் கதை, கதை நடக்கும் தளம், நடிகை நடிகையர், அவர்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்கள் என்று பலவற்றை சான்றது. மன்னர் இதையெல்லாம் நன்கு அறிந்து, உள்வாங்கி ஒவ்வொரு படத்திற்கும் அதாதுக்குண்டான tonal quality யோடு இசை அமைத்து பல சாதனைகள், புதுமைகள், புரட்சிகள் செய்துள்ளார். அதையெல்லாம் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆழத்தில் இறங்கி சென்று ஆராட்சி செய்தால் தான் அது புலப்படும். அவர் செய்த புதுமையை, அவர் செய்த புரட்சியை, அவரது புகழை உலகறிய செய்ய வேண்டும். அது ஒரு மாபெரும் முயற்சி ஆகும். So far no one has come forward to do this mammoth task. யார் அந்த முயற்சியில் இறங்குவார் என்று தெரியவில்லை. சிறிய அளவு தான் என்றாலும், என்னால் முடிந்த வரை இந்த குழுமம் வாயிலாக அந்த முயற்சியில் இறங்குகிறேன்.

சில பாடல்கள் கேட்ட உடனேயே நம் மனதை கவர்ந்து விடும், சிலது கேட்க கேட்க தான் மனதில் இடம் பிடிக்கும். சில பாடல்கள் மனதை கவர்வது மட்டுமல்லாமல் மனதை உலுக்கியும் விடும். இன்றைக்கு நான் எடுத்துக்கொண்ட இந்த பாடல் என் மனதை கவர்ந்த பாடல் ஆகும். இந்த பாடல் இடம் பெற்ற படம் வெளி வரும் போது நான் சிறு பிள்ளை தான். படத்தை அப்போது பார்த்ததுமில்லை, பாடலை மட்டும் தான் கேட்டிருந்தேன். அப்போது பாடலின் அர்த்தம் புரிகின்ற வயதல்லவே, இருந்தாலும் பாடலின் இனிமை காரணம் மனதில் இடம் பிடித்திருந்தது. வயது இருபதை தொட்டதும் தான் பாடலின் பொருள் புரிந்தது. பொருள் புரிந்தாலும் காட்சி என்னவென்றோ, முழு பொருளும் என்னது என்றோ புலப்படவில்லை, காரணம் அப்போதும் படம் பார்க்காததால். அதனால் ஆழத்தில் இறங்கி சென்று பாடலை ரசிக்கமுடியவில்லை. பல வருடங்கள் கழித்து படம் பார்த்த பிறகுதான் பாடலின் முழு பொருளும் புலப்பட்டது. விளங்காத பலதும் விளங்கியது. முக்கியமாக மன்னரின் பெரும் பங்கு வெளிப்பட்டது. அன்றிலிருந்து மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது இந்த பாட்டு.

பொதுவாகவே அந்த காலத்து படங்களில், அது எந்த ரகமானாலும், பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையாகவும், வெற்றி பெற்றவைகளாகவும் இருக்கும். அதுவும் இசை அமைப்பாளர் மன்னர் என்றால் கேட்கவே வேண்டாம். இருந்தாலும் இந்த பாடல் போல் அன்று வந்த ஜனரஞ்சக படங்களில் அமையப்பெற்றுள்ளதா என்றால் சந்தேகமே.

பாடலுக்குள் புகுவதற்கு முன் படத்தின் கதையை பார்ப்போம், ஏனென்றால் இந்த பாடலுக்கு அது மிகவும் முக்கியம். கல்லூரி படிப்பை முடித்த மூன்று நண்பர்கள் - சிவாஜி, பாலாஜி, நாகேஷ். மிகவும் ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர் சிவாஜி. திறமை வாய்ந்தவர். மனதில் நிறைய ஆசையும் கனவுகளும் கொண்டவர். தான் வைத்திருக்கும் திட்டத்தை வைத்து (உலக தரம் வாய்ந்த சிறந்த ஒரு தொழிற்சாலை இந்தியாவிலேயே எழுப்பும் திட்டம்) இந்தியாவிலேயே எல்லோராலும் வியந்து பார்க்கப்படும் மிக சிறந்த செல்வந்தராகவேண்டும் என்ற ஆசை, கனவை தாங்கி நிற்பவர். மற்றவர் பார்வையில் அது பேராசையாகவும், நிறைவேறாத கனவாகவும் தோன்றக்கூடியது. ஆனால் அவருக்கோ அது ஒன்று தான் லட்சியம். அதை அவர் நேரான பாதையிலும், தன் திறமையாலும், உழைப்பாலும் மட்டுமே அடைய விரும்புபவர். எந்த காரணத்தைக்கொண்டும் தன் இலட்சியத்தை தவறான பாதையில் அடைய மாட்டேன் என்று உறுதி கொண்டவர். நண்பன் பாலாஜியோ நேர் எதிர். செல்வந்தர். ஜாலியாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதற்காக குறுக்கு வழியையும் பின்பற்ற தயாராக உள்ளவர். நாகேஷோ, வாழ்வதற்காக எந்த வேலையும் செய்ய தயங்காதவர். பட்டப்படிப்பு முடிந்து மூன்று பேரும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறார்கள்.

தன் திட்டத்தை பல தொழிலதிபர்களிடம் காண்பித்து வேலை தேடும் சிவாஜிக்கு எல்லா இடத்திலும் ஏமாற்றம் தான். அத்தருணம் அவருக்கு கே.ஆர்.விஜயாவுடன் நடப்பு ஏற்படுகிறது. அவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. அநாதை. உறவினர் ஒருவர் வீட்டில் வசிக்கிறார். அவர்களுக்கு இவர் சம்பளம் தான் குறிக்கோள். சிவாஜியின் திட்டம் வெற்றிபெற்று வாழ்க்கையில் முன்னேற ஊக்குவிக்கிறார். திட்டம் நிற்கவேண்டும் என்றால் முதலில் கிடைத்த வேலையில் சேர்ந்து அதன் பின் திட்டத்தை அமல் படுத்த யத்தனித்தால் நல்லது என்ற விஜயாவின் அறிவுறையின் பேரில் சிவாஜி ஒரு குமாஸ்தா வேலையில் சேருகிறார். இருவருக்கும் காதல் அரும்புகிறது. வாழ்க்கையில் நல்ல ஒரு நிலைக்கு எட்டிய பின்பு தான் திருமணம் என்று சிவாஜி அடம் பிடிக்க, விஜயாவின் உறவினர்களோ வேறு திட்டம் தீட்ட, தங்கை மற்றும் அவரது கணவனின் வற்புறுத்தலின் பேரில் அரை மனதுடன் அவசரமாக இவர்களுடைய திருமணம் நிகழ்கிறது.

சிக்கலில்லாத வாழ்க்கை மெதுவாக நகர்கிறது. அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. சிவாஜி வேலை பார்க்கும் கம்பெனிக்கு சொந்தக்காரர் மனோகர். அவரது தம்பி கடைந்தெடுத்த ஒரு கிரிமினல் (அதுவும் மனோகரே). இந்த தம்பியின் உதவியால் தான் அந்த கம்பெனியின் பாம்பே கிளைக்கு பார்ட்னர் ஆகிறார் பாலாஜி, அவர் சொல்லிக்கொடுக்கும் குறுக்கு வழியில். அவர் ஒரு முறை சிவாஜி வேலை பார்க்கும் கிளைக்கு வருகிறார். பிரிந்த நண்பர்கள் சந்திக்கிறார்கள். பாலாஜியின் வருகையால் சிவாஜி அந்த கிளைக்கு ஜெனரல் மேனேஜர் ஆகிறார். அத்தோடு பங்களா, கார், பணியாளர்கள் என வாழ்க்கை வசதிகள் அதிகரிக்கின்றன. அப்போதும் அவர் நினைத்த கனவை அவர் எட்டவில்லை. இந்நிலையில் சிவாஜிக்கு மனோஹரை சந்தித்து தன் திட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கிறது. அதற்க்கான பொறுப்புகளை மனோகர் சிவாஜியையே ஒப்படைத்து, கூடவே கம்பெனியில் அவரை ஒரு பார்ட்னரும் ஆக்குகிறார். பதவி, வசதி எல்லாம் வந்ததும் புகைப்பழக்கம், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்களும் தொற்றிக்கொள்கின்றன. எப்போதும் வேலை வேலை என்று அலையும் சிவாஜிக்கு குடும்பத்தை கவனிக்க நேரமில்லாமல் போகிறது. அவரது மகனோ அப்பா சிகரெட்டு பிடிப்பது போலவும், குடித்து விட்டு சண்டை போடுவது போலவும் அபிநயிக்கிறான். இதை சுட்டிக்காட்டும் விஜயாவிடம் தன் இலட்சியத்தை எட்டும் வரை இப்படி தான் இருக்கும் என்று சண்டை போடுகிறார். மகனை கண்டித்து வளர்க்க ஒரு பெண்ணை நியமிக்கறார். மேலும் வாழ்க்கையில் அவர்களுக்கு செய்து கொடுத்திருக்கும் வசதிகளே அவர்களை சந்தோஷமாக வைத்திருக்கும் என்று எண்ணுகிறார். மனம் நொந்து போகிறார் விஜயா. மகனுக்காக குடிப்பழக்கத்தை விடுமாறு விஜயா கெஞ்ச முயற்சிக்கிறேன் என்று சிவாஜி சொல்கிறார்.

இத்தருணத்தில் மனோகரின் மகள் ராஜஸ்ரீயின் தொலைபேசி அழைப்பு வருகிறது. விஜயா தான் அவருடன் பேசுகிறார். தனது பிறந்த நாளில் சிவாஜியையும் குடும்பத்தையும் அழைக்க தான் அவர் phone செய்கிறார். சிவாஜியிடம் இந்த விஷயத்தை அவர் இதை சொல்லும் தொனியில் சந்தேகம் இருக்க, அவள் வேறுயாருமல்ல எங்க முதலாளியின் ஒரே மகள் என்னை சொந்த அண்ணனை போல் கருத்துபவள் என்று விளக்குகிறார். விழாவிற்கு விஜயாவும் வரவேண்டும் என்று சிவாஜி கூற, முதலில் விஜயா மறுக்கிறார். பெரிய பார்ட்டி என்பதால் தன்னை எல்லோரும் குடிக்க வற்ப்புறுத்துவார்கள், நீ வந்தால் உன்னை சுட்டிக்காட்டி நான் தப்பித்துக்கொள்ளலாம் என்றதும் விஜயா ஒத்துக்கொள்கிறார் (மேலும் கணவர் அந்த பெண்ணை தங்கை என்று சொல்வது சரிதானா என்ற உண்மையும் புலப்பட்டுவிடுமே, அதையும் அறிந்துகொள்ளலாம் என்ற எண்ணத்துடனும்). அந்த பிறந்த நாள் விழாவில் தான் இந்த பாட்டு பாடப்படுகிறது.

(அதன் பிறகு இருவரும் பிரிய நேரிடுகிறது. கெட்ட மனோகர் செய்யும் சதியால் சிறையில் அடைக்கப்படுகிறார் சிவாஜி. இதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார், நல்ல மனோகரையும் அவரது மகளையும் ஆபத்திலிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பது க்ளைமாக்ஸ்)

இப்போது பாட்டுக்கு வருவோமா. ஒரு பாடலின் வெற்றி தோல்வி என்பதைக்குறித்து மன்னர் எப்போதும் கூறுவதாவது - என்னால் தான், என் இசையால் தான், எனது திறமையால் தான் ஒரு பாட்டு வெற்றி பெற்றது என்று பறை சாற்றிக்கொள்ளமுடியாது. அது ஒரு கூட்டு முயற்சி. பாடலாசிரியர், பாடியவர்கள், வாத்திய கலைஞர்கள், பாடல் காட்சியில் நடித்தவர்கள், பாடல் படமாக்கப்பட்ட விதம் இப்படி பலருடைய வெற்றி அது. என்னுடைய தனிப்பட்ட வெற்றி என்று ஒரு பொழுதும் கருத முடியாது, அப்படி கருதவும் கூடாது. இது அவருடைய தன்னடக்கத்தை குறிக்கிறது (அவர் நிகழ்த்திய சாதனைகள், experiments, புதுமைகள், ஜாலங்கள் இவற்றை மக்கள் புரிந்துகொள்ளாமல் போனதற்கு காரணமே இந்த தன்னடக்கம் தான்). ஆனால் இந்த பாட்டை பொறுத்த வரை மன்னருடைய பங்களிப்பு மற்றவர்களுடைய பங்களிப்பை விட பல மடங்கு தூக்கலாகவே உள்ளது என்பது என் எளிய கணிப்பு. எப்படி என்பதை பார்ப்போம்.
ஒரு சாமானிய ரசிகனின் கண்ணோட்டத்தில் பார்த்தால், அதாவது படத்தை / பாடல் காட்சியை பார்க்காமல் பாடலை மட்டும் கேட்க்கும் பட்சத்தில் - ஒரு குடும்ப தலைவி அவளுக்கு கிடைத்த நல்ல கணவன், அமைதியான வாழ்க்கை குறித்து பாடுகிறாள், ஒரு பார்ட்டியின் சூழலில். அவளுக்கு யார் மீதோ, எது மீதோ சந்தேகம். அந்த சந்தேகம் சந்ததேகத்துக்குரிய நபரை / இடத்துக்கு சென்று பார்த்த பிறகு விலகி விடுகிறது. அதன் பிறகு அங்கு கணவன் ஏதோ தவறு செய்து விடுகிறான், அதனால் தனக்கு வஞ்சகம் நேர்ந்து விட்டதாக பாட்டை முடிக்கிறாள். இதை கடந்து அவன் சிந்தனை செல்லாது. ஆனால் நமக்கு அப்படியல்லவே, அத்துடன் நின்றுவிடுவதில்லையே நம் சிந்தனை. ஆராட்சி நடத்துவது தானே நம் வேலை, குறிப்பாக மன்னரின் பங்களிப்பு என்ன என்று கண்டு பிடிப்பதில் தானே நாம் தீவிரமாக முனைகிறோம். அப்படி சிந்தித்து பார்த்ததில் என் சிந்தனைக்கு எட்டிய சிலவற்றை இங்கு பகிர்கிறேன் (என் சிந்தனைக்கு எட்டாதது இன்னும் சிலது கண்டிப்பாக இருக்கும் - தெரிந்தவர்கள் பகிர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்).

Have to explain in 2-3 ways.

பாடலுக்குண்டான விளக்கம் சற்று விரிவாக - முதல் கோணத்தில் - படத்தின் கதையை மேலே கூறியுள்ளேன் அல்லவா, அதை நினைவு கூறுங்கள். விஜயா சிவாஜியுடன் பார்ட்டிக்கெல்லாம் போய் பழக்கப்படாதவர். ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து வருபவர். சிவாஜியின் வற்புறுத்தலின் பேரில் அன்று அவருடன் அந்த பார்ட்டிக்கு போகிறார் - அதற்க்கு இரண்டு காரணம் - ஒன்று தான் சந்தேகப்படும் அந்த பெண்ணுக்கு கணவனுடன் உள்ள தொடர்ப்பு என்ன என்று தெரிந்து கொள்ள, இரண்டாவது கணவன் மது அருந்த கூடாது என்று. செல்லும் இடமோ பழக்கமில்லாத இடம், மேலும் பழக்கமில்லாத நபர்கள். எல்லோருடைய வற்புறுத்தலின் பேரில் பாடுகிறார். மிக அடக்கத்துடன் ஆரம்பிக்கிறார் - அதில் அச்சம், கூச்சம், பணிவு, நாணம், பயம் எல்லாம் அடங்கியுள்ளது. பல்லவியின் விளக்கம் - (1 ) முத்துப்போன்ற பொக்கிஷமாக கிடைத்த கணவன். அவனை தன் நெஞ்சில் வைத்து இமைகளால் பாதுகாத்து வருகிறேன். (2 ) மனதுக்கு பிடித்த கணவன், வாழ்க்கை அமைந்ததால் நிறைவான / சந்தோஷமான வாழ்க்கை அதனால் எப்போதும் முகத்தில் எப்போதும் புன்னகை தவழ்கிறது - முப்பது முத்து = முப்பது பற்கள், முன்னும் பின்னும் தங்கக்கோடுகள் = உதடுகள். இரண்டையும் இணைத்தால் வருவது "புன்னகை". புன்னகை தவழ்வது நெஞ்சுக்கு மேலே, இமைகளுக்கு கீழே.

பல்லவி முடிந்து வருகின்ற வேகமான இசை பார்ட்டி சூடு பிடிப்பதை சுட்டிக்காட்டுகிறது. Now Vijaya is also feeling comfortable with the atmosphere. Her suspicion on Rajasree is now cleared, once watching her attitude towards Sivaji, which reflects on the first Charanam. என் புன்னகைக்கு சொந்தக்காரர் இன்று சந்தேகம் என்ற ஊஞ்சலில் ஆடுகிறார், குறிப்பாக இன்று மாலை வந்தது தான் அந்த சந்தேகம். என் சந்தேகத்தை தீர்த்து வைக்க பொன்னைப்போல் பளபளக்கும் ஜாகையில் வசிக்கும் இந்த மனிதர்களை பார்க்க அழைத்து வந்துள்ளார். கண்கள் பளபளக்கும் வண்ணம் காட்சி அளிக்கும் இந்த பெண்ணின் அந்தரங்கம் கண்டு கொண்டபின் என் கணவரை சந்தேக்கப்பட்டது தவறு என்று புரிந்து கொண்டேன். அதற்க்கு பிறகு வரும் பின்னணி இசை பார்ட்டி மேலும் சூடு பிடிப்பதை சுட்டிக்காட்டுகிறது - அது மட்டுமல்ல, ஏதோ தவறு நிகழப்போகிறது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இது நேரம் வரைக்கும் விஜயாவின் கண் பார்வையிலேயே இருக்கிறார் சிவாஜி. அவர் ஒரு கணம் தன்னை மறந்து அவருக்கு புறம் திரிந்து சற்று முன்னே செல்லும் தருணம் அவர் பயந்த மற்றறொன்று நிகழ்கிறது - மது அருந்த மாட்டேன் என்று சத்தியம் செய்த கணவர் நண்பரின் வற்புறுத்தலுக்கு வழங்கி மது அருந்தி விடுகிறார் - அந்த Muted Trumpet மற்றும் Saxophone இசை சிவாஜியின் "தள்ளாட்டத்தை" சுட்டிக்காட்டுகிறது. BGM-ம்மின் கடைசியில் வரும் வயலின் bit விஜயாவின் துக்கத்தை/கலக்கத்தை சுட்டிக்காட்டுகிறது. தொடர்ந்து வரும் சரணத்தில் தொனிப்பது விஜயாவின் ஆதங்கம், கவலை, கோபம், வருத்தம். கணவர் ஏமாற்றி விட்டார் இனி அவரை நம்புவதில் பயனில்லை, நாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதியும் தென்படுகிறது. "காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே" - கணவன் மீது வைத்த நம்பிக்கை போய் விட்டது, என் முகத்தின் புன்னகையும் மாய்ந்து விட்டது. "காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான், கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்" - இன்று வரை என் மீது கனிந்த காலம் என்னும் தேவன் இன்று என்னை பார்த்து கேலி செய்கிறான், காரணம் இப்போது கணவர் சொல்வதொன்று செய்வதொன்று. "இன்று மட்டும் நாளை இல்லை என்ற சொல்லில் உண்மை இனி இல்லை" – குடிகாரன் எப்போதும் சொல்வது தானே "இன்று மட்டும், நாளை இல்லை" அதில் உண்மை இருக்காதே. பாடலை முடித்து தட்டு தடுமாறி விழப்போக்கும் கணவனை அரவணைத்து கொண்டு அங்கிருந்து வெளியேறுகிறார் விஜயா.

இனி இந்த பாட்டை வேறு கோணத்தில் பார்ப்போமா. ரொம்பவும் கீழ்மட்டத்தில் இருக்கும் நாயகன், நாயகி. அவர்கள் சந்திக்கொள்கிறார்கள். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஏழ்மையிலும் இனிதே வாழ்க்கை துடங்கி சீராகவே முன்னே செல்கிறது. சட்டென்று வாழ்க்கையில் வசதிகள் பெருகுகின்றன. அதனால் ஒரு வித அச்சம் நாயகியை தொற்றிக்கொள்கின்றன. கூடவே நாயகனின் நடவடிக்கை சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. சந்தேகத்துக்குரிய நபரை சந்தித்ததும் அவரின் சந்தேகம் விலகுகிறது என்றாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு குடும்பத்தில் பல பிரச்சினைகள் வந்து சேர்க்கிறது. This is created through music. சற்று விளக்கமாக பார்ப்போமா.

மன்னரின் பாடல்கள், பின்னணி இசை எல்லாவற்றிலும் International level-லில் subject ஆக வைத்து Phd Project செய்யக்கூடிய அளவு சரக்கு உள்ளவை. ஆனால் அப்படி ஒரு முயற்சியை இதுவரை யாரும் எடுக்காததால் யாரும் புரிந்துகொள்ளாமலேயே புதையுண்டு கிடக்கிறது. ஏன் தான் இப்படி கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளதோ என்று புலப்படவில்லை. இந்த பாடலும் அவ்வண்ணமே. ஒரு மிக பெரிய உயரத்தில் வைத்து கொண்டாட வேண்டிய பாடல். ஆனால் போதிய அளவு கண்டு கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.

இசையால் ஒரு சரித்திரமே படைத்துள்ளார் மன்னர். He has conveyed so many things through music. பாடல் வரிகள், காட்சி, நடிப்பு எல்லாவற்றையும் தாண்டி மன்னர் திளங்கி நிற்கிறார், but sadly no one so far has realized / recognized that. கவிஞருடைய வரிகள் பாட்டுக்கு உயிர் என்றால் (aka the voice of P.Susheela) மன்னர் அதுக்கு உடல், ஆடை ஆபரணங்கள் கொடுத்து நடமாட விட்டுள்ளார்.

We will start with the humming. சாதாரணமாக prelude அல்லது opening music எனப்படும் இசைக்கு பிறகு ஹம்மிங் அல்லது vocal singing ஆரம்பிக்கும் என்றால் அது பாடுபவர்களுக்கு அதனை சிரமாக இருக்காது, because they get time to understand the proceeding of the song and tempo through the music and chord. இதுவே just ஒரு chord கொடுத்து நேராக ஹம்மிங் அல்லது பல்லவி ஆரம்பிக்கவேண்டும் என்றால் நன்றாக பாடக்கூடியவர்களே திணறிவிடுவார்கள், because they have to pick up from the chord within a fraction of seconds and start singing. Music and rhythm joins later. இந்த பாடலும் ஆரம்பிப்பது அவ்வண்ணமே. Why Mannar started the song like this? Just recollect the story – their life starts one fine morning at an unexpected situation. So Mannar put the starting humming as difficult to enlight their start. அதற்க்கு பிறகு வாழ்க்கை சலனங்கள் இல்லாமல் மெதுவாக ஆரம்பிக்கின்றன. Mannar shows this through the restrained singing of Pallavi. அதை தொடர்ந்து வரும் இசை இவர்கள் வாழ்க்கையில் நிகழும் திடீர் வசதியை எடுத்துக்காட்டுகிறது. திடீர் என வந்த வசதியாயினும் வாழ்க்கையில் சலனங்கள் ஏதும் நிகழவில்லை என்பதை சீராக அமைக்கப்பட்ட முதல் சரணம் சுட்டிக்காட்டுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர்கள் வாழ்க்கை என்ற ரயில் தடம்புரண்டு விடுகிறது. The music following the first charanam and the second charanam depicts this peril. வாழ்க்கை தள்ளாடுவதை குழைந்து இசைக்கும் saxaphone வாயிலாக எவ்வளவு நாசூக்காக சொல்கிறார் மன்னர். The second half of the second charanam and the concluding music depicts how they overcome this situation and comes back to normal life - வாழ்க்கை தடம் புரள்வதை தாளம் மாறுவதன் மூலவும், பிறகு சுதாரித்து கொள்வதை மீண்டும் தாளம் மாறுவதன் மூலவும் மிக அழகாக எடுத்துக்காட்டுகிறார் மன்னர். The complete story of the movie is conceived and conveyed in a 4 plus minutes song very cleverly and ably by our great Mannar. Such kind of story telling songs are common in Sridhar’s and KB’s films but are quite rare in a potboiler / complete entertainer film like this.

கே.ஆர்.விஜயாவின் நடிப்பை ரசிப்பவரும், வெறுப்பவரும் உண்டு. பல காட்சிகளில் நரம்பு புடைக்க உணர்ச்சி கொந்தளிக்கும் வசனங்கள் பேசும் போது கொஞ்சம் ஓவர் ஆகி போவது போல் சிலருக்கு தோன்றுவது தான் அந்த வெறுப்புக்கு காரணம். இந்த படத்தை பொறுத்த வரை அவர் மிகவும் அடக்கியே வாசித்துள்ளார். She has performed so restrained throughout the movie, especially in this particular song her expressions are commendable. There are two reasons for that (1) she has played a teacher’s role in this movie and (2) Her character is conceived in that way. She has well understood that and performed accordingly. அடக்கம் என்ன, அச்சப்படுவதென்ன, நாணுவதென்ன, நளினமென்ன, மிரள்வதென்ன, கொதிப்பதென்ன, சுதாரிப்பதென்ன எல்லாமே மிக கச்சிதம். இந்த பாடலில் அவருக்கு ஆட்டம் இல்லை. ஆடுவது ராஜஸ்ரீ. இந்த பாட்டுக்கு என்ன வேண்டுமோ அப்படி ஆடியுள்ளார். அடுத்து சிவாஜி. அவருக்கு lip singing கிடையாது. இது போன்ற காட்சிகளிலும் அவருடைய ஒத்துழைப்பு, பங்களிப்பு பிரமாதமாக இருக்கும். This song is no different. ஹம்மிங் முடித்து விஜயா அவரை மெதுவாக பார்க்கும் போதாகட்டும், "என் கண்கள் அதன் காவல், என் நெஞ்சம் அதன் மஞ்சம்" என்ற வரிகளுக்கு அவர் கொடுக்கும் reaction ஆகட்டும் அவருக்கே உரிய நடிப்பு, mannerisms. The fraction of second expression after the pallavi is simply superb. Though he appears in the first charanam, he is shown through side shots and long shots, where he has little to do – still his contribution is visible through gentle movements. அதன் பிறகு தான் நடிப்பில் highlight. BGM-ம்மின் ஆரம்ப இசையில் காணாமல் போகும் அவர், சில நொடிகளுக்கு பிறகு திரையில் தோன்றும் போது பாலாஜி அவரை தாங்கிப்பிடித்து மதுவை குடிக்க வைத்து அழைத்து வருகிறார் - தள்ளாடி தள்ளாடி. விஜயா கலக்கம் மற்றும் கோபத்துடன் அவரை பார்க்கும் போது குற்ற உணர்வு, இயலாமை, மனைவிக்கு கொடுத்த வாக்கை முறியடித்து விட்டோமே என்ற கலக்கம்/வருத்தம், மது போதை எல்லாம் கலந்து அவர் கொடுக்கும் அந்த expression இருக்கே மில்லியன் டாலர் பெறும். இத்தனையும் கலந்த ஒரு expression வேறு யாரால் கொடுக்க முடியும், அதும் நொடிப்பொழுதில்? அதன் பிறகு சிகரெட்டை உதட்டில் வைத்து தள்ளாடுவதை மறைப்பது போல் நடக்கும் அந்த நடை - அவருக்கே உரியது. இரண்டாவது சரணத்தில் குற்ற உணர்வால் விஜயாவை எதிர் கொள்ளமுடியாமல் தவிக்கும் அந்த expressions - என்ன சொல்ல. பாடல் முடிந்து வரும் இசையில் விஜயா அவரை கரகரவென்று இழுத்து செல்லும் போதும் he puts his stamp. முதல் சரணம் முடிந்து வரும் இசையிலும், பாடல் முடிந்து வரும் இசையிலும் "போதை" வழிந்தோடுகிறது – through saxophone and trumpet. சிவாஜியோடு சேர்ந்து saxophone-ணும், trumpet-ட்டும் அல்லவா தள்ளாடுகிறது. Only Mannar can do this magic.

கட்டுரையின் ஆரம்பத்தில் இந்த பாடலில் ஒளிந்து கிடைக்கும் (if at all there is a hidden meaning) ஒரு விஷயம் என் சிந்தனைக்கு எட்டவில்லை, அதை அறிந்தவர் யாரேனும் விளக்கினால் நல்லது என்று கூறியுள்ளேனல்லவா. அது இது தான் - வழக்கமா பெரும்பாலான பாடல்களில் கண்ணதாசன் புராணம், இலக்கியம், சரித்திரம் இப்படி ஏதாவது ஒன்றிலுள்ள சம்பவத்தை பூடகமாக சுட்டிக்காட்டுவார் அல்லவா. அப்படி இந்த பாட்டின் முதல் சரணத்தில் வரும் "பொன்னரங்கம்", "கண்ணரங்கம்" மற்றும் "அந்தரங்கம்" என்ற வார்த்தை சொற்களால் புராணம், இலக்கியம், சரித்திரம் இப்படி எதிலிருந்தாவது ஒன்றை சொல்லியுள்ளாரா? Can any knowledgeable person throw some light on this please?

மீண்டும் அனைவரையும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://youtu.be/RWVZf6WAnuQ


Quote
Share: