Notifications
Clear all

1970 - Nilave Nee Saatchi - Nee Ninaithaal Innerathile  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 88
10/09/2020 4:53 pm  

Unusual Situation Songs

பாடல் : நீ நினைத்தால் இந்நேரத்திலே
படம் : நிலவே நீ சாட்சி
பாடியவர்கள் : எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.ஆர்.ஈஸ்வரி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1970

அனைவருக்கும் வணக்கம்.

திரைப்படங்களில் காதல் பாடல்கள் காட்சி தோன்ற ஆரம்பித்த காலத்திலிருந்தே காதல் பாடல் காட்சி என்றால் அதற்க்கென்று ஒரு எழுதப்படாத template-ட்டை கடைபிடித்து வந்தார்கள். மரங்களை சுற்றி சுற்றி வந்து பாடுவது, நதியோரம் ஆடியோடி பாடுவது, படகில் யாத்திரை செய்துகொண்டு பாடுவது, இரவில் நிலவை சாட்சியாக்கி பாடுவது, கனவுலகில் பாடுவது, குதிரையில் அல்லது குதிரைவண்டியில் சவாரி செய்துகொண்டு பாடுவது இப்படி குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் தான் பெரும்பாலான காதல் பாடல் காட்சிகள் அமைக்கப்பட்டன. அவற்றிலிருந்து சற்று வித்தியாசமாக சிந்தித்து "Lift"-டில் காதல் பாடல் காட்சி ஒன்று அமைக்கப்பட்டது 1970-தில். அந்த பாடல் தான் இப்போது நாம் ஆராய இருக்கும் பாடல்.

பாடல் இடம்பெறுவரையிலான கதை - நாயகன் ஜெய்சங்கரும், நாயகி கே.ஆர்.விஜயாவும் கல்லூரி மாணவர்கள். நாயகன் மேஜர் சுந்தர்ராஜனின் அன்பு தம்பி, சற்று வசதியான குடும்பம். டி.கே.பகவதியின் இரண்டாவது மகள் நாயகி - தாயை இழந்தவள். அவரது மூத்த சகோதரி மணிமாலா மனோதத்துவ டாக்டர் முத்துராமனின் மனைவி. நாயகி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். டி.கே.பகவதி வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர். வசதி சற்று குறைவு தான் என்றால் நாயகியை எப்படியாவது பட்டதாரியாக்கவேண்டும் என்பது அவரது ஆசை. நாயகியின் சகோதரி நிறைமாத கர்ப்பிணி, பிரசவத்திற்காக தாய்வீடு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறாள்.

நாயகன் படிப்பில் கெட்டிக்காரன். நாயகி சரித்திர பாடத்தில் சற்று மக்கு. அதனால் நாயகனின் உதவியை நாடுகிறாள் - அந்த பாடத்தை அவளுக்கு tuition எடுக்குமாறு கேட்டுக்கொண்டு. நாயகனும் அதற்க்கு ஒப்புக்கொள்கிறேன். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு பிறகு அவளது அழகு அவனை ஆட்க்கொள்ள ஆரம்பித்து அவன் அவளை காதலிக்க ஆரம்பிக்கிறான். அதனால் Class-ஸில் அவனது கவனம் குறைந்து எதோ கற்பனை உலகில் மிதக்க ஆரம்பிக்கிறான். இது ஆரம்பித்த நாள் அவளும் வழக்கம் போல் அவனிடம் பாடம் கற்றுக்கொள்ள வர, அவன் அவளிடம் கூறுகிறான் "இன்று என்னால் பாடம் கற்றுத்தர முடியாது, பதிலாக இன்று Class-ஸில் நடந்த பாடத்தை நீ எனக்கு சொல்லித்தரவேண்டும்" என்று. அதன் காரணம் என்னவென்று அவள் வினவ, அவன் ஒரு காகிதத்தில் "என் எண்ணமெல்லாம் கஸ்தூரியின் மேல் இருந்தது" என்று எழுதி அவளிடம் நீட்டுகிறான். அதை படித்து அவள், "இத பாருங்க, பரீட்சை நெருங்குது, அதனால உங்க கவனமெல்லாம் இனிமேல் பாடப்புத்தகத்தில் இருக்க வேண்டும்" என்று சொல்ல, அவன் "பரீட்சையில் நான் நிச்சயம் pass ஆகிவிடுவேன், ஆனால்...." என்று இழுக்க, அவள் "இந்த பரீட்சையிலும் உங்களுக்கு பாஸ் மார்க் தான்" என்று சொல்கிறாள் - அதாவது அவன் காதலை ஏற்றுக்கொண்டேன் என்று மறைமுகமாக சொல்கிறாள்.

இதற்கடுத்து காட்சி காலேஜ் கட்டிடத்திற்கு தாவுகிறது. நாயகன் "Lift"-டில் ஏறி யாராவது உள்ளார்களா என குரல் எழுப்பி யாரும் வராததால் மேலே செல்ல button-னை அழுத்த போகும் போது நாயகி குரல் கொடுத்துக்கொண்டு ஓடிவந்து அவளும் "Lift"-டில் ஏறிக்கொள்கிறாள். இருவரும் Library-க்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். Lift சற்று நகர்ந்து பெரும் ஓசையை எழுப்பி நின்றுவிடுகிறது. அப்போது இருவரும் காதல் பார்வை வீசிக்கொள்ள, அவர்களது "மனது" காதல் பாடல் பாடுகிறது. அந்த பாடல் தான் இது.

(பல வருடங்களுக்கு பிறகு கே.பாலசந்தர் தெலுங்கில் "மரோ சரித்ரா " எடுக்கும் போது இந்த பாடல் காட்சியை காப்பியடித்திருந்தார் - அதற்க்கு "காமெடி" வாடை சேர்த்து - அந்த பாடலுக்கும் இசை மன்னர் தான் என்பது சிறப்பு.)

மேலே குறிப்பிட்டது போல் அவர்களது "மனது" தான் பாடுகிறது, அவர்கள் "lip movement" செய்யவில்லை. மேலும், கனவு பாடல் என்ற முத்திரையும் குத்தப்படவில்லை, அப்படி முத்திரை குத்தியிருந்தால் காட்சி "lift"-டிலிருந்து வேறு location-னுக்கு தாவியிருக்கக்கூடும். அதனால் காட்சி lift-டை சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இசை அமைப்பாளர் மிகவும் யோசித்து செயல்படவேண்டிய நிலை - அவர்களது காதலின் தீவிரத்தை இசையில் கொண்டுவரவேண்டும், ஆனால் அது பொது இடம் என்பதால் சத்தம் போடாமல் காரியம் நடக்கவேண்டும், lift-டின் ambiance கொண்டுவரவேண்டும், lift-டுக்காக காத்திருப்பவர்களின் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டவேண்டும், இப்படி பல. இவை அனைத்தையும் மனதில் வைத்து மிக துல்லியமாக வடிவமைத்துள்ளார் பாடலை.

இந்த காலத்தில் நகரும் சத்தம் கேட்க்காமலே இயங்கும் லிப்ட் வந்துவிட்டன. ஆனால் அந்தக்காலத்தில் அப்படியல்ல, அது நகரும் போது "கிர் ......." என்ற ஒரு சற்று சத்தமாக கேட்க்கும். மேலும், சில சமயங்களில் மக்கர் பண்ணி பாதியிலேயே நின்றுவிடும் போது சற்று பெரிய ஓசையுடன் நிற்கும். அதனால் இந்த இரண்டையும் இசையில் சேர்த்துள்ளார் மன்னர். அடுத்தது அவர்கள் காதல். பொது இடம் என்பதால் மிகவும் "husky"-யான முறையில் பாடலை அமைத்து அதையும் பூர்த்தி செய்துள்ளார். இளம் காதலர், அதுவும் அப்போது தான் காதலிக்க ஆரம்பித்துள்ளார்கள் - அதனால் "eroticism" தூக்கலாகவே இருக்கும். அதை இரண்டாக பிரித்து வழங்கியுள்ளார் - ஒன்று : பாடுபவர்கள் குரலில், இரண்டு : இசையில் Saxophone வாயிலாக. அடுத்தது lift-டுக்காக காத்திருப்பவர்களின் நடவடிக்கை - பலருக்கும் பலவகையான எண்ணங்கள் - என்னப்பா நடக்குது இங்கே, யார் மாட்டிக்கொண்டுள்ளார்கள் lift-டில், lift எப்போது இயங்கி கீழே வரும், இப்படி பலவகையாக. இவற்றை BGM-ம்மில் Combo Organ மற்றும் புல்லாங்குழல் வாயிலாக சுட்டிக்காட்டுகிறார்.

அதே Combo Organ Prelude-டில் நாயகனின் குறும்பு கலர்ந்த காதல் கொப்பளிப்பையும் வெளிக்காட்டுகிறது.

பல்லவி + இரண்டு சரணங்கள். முதல் சரணத்தை எல்.ஆர்.ஈஸ்வரி ஆரம்பித்து MSV தொடர்கிறார். இரண்டாவது சரணத்தில் reverse - MSV ஆரம்பித்து எல்.ஆர்.ஈஸ்வரி தொடர்கிறார்.

அனுசரணத்தின் பகுதி "வேண்டிய தனிமையை, ஆயிரம் புதுமையை, இங்கே பெறுவோமா" (and same portion in second charanam sung by LRE) Progressive Chords பாணியில் அமையப்பெற்றுள்ளது (இதே பாணியில் அமைந்தது தான் James Bond படங்களின் Theme Music-கின் ஆரம்பம் - viz ., "டான்...டடன் ....டடன் ... டடன் ").

MSV- யின் முற்றிலும் மாறுபட்ட குரலை இந்த பாடலில் கேட்கலாம்.

The song was much ahead of its time.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://youtu.be/Hd6tY-vCY50


Quote
Share: