மாதமோ ஆவணி மங்கையோ ...
 
Notifications
Clear all

மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி/உத்தரவின்றி உள்ளே வா 1970  

  RSS

kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 30
14/10/2020 3:22 pm  

சுசீலாம்மா பாடல்கள் என் ரசனையில் ...72

எத்தனையோ விதம் விதமாக அம்மாவின் பாடல் பதிவுகளை நான் பதிவிட்டு வந்துள்ளேன் . ஆரம்ப காலத்தில் தொடர் பதிவு அவரது தனித் திரையிசைப் பாடல்கள் 50. பதிந்தேன் . பின்பு பிரத்யேக குரல்களோடு , வேடிக்கை ரசனை என மேற்கொண்டு இருபது , எனப் பதிவிட்டுள்ளேன் . அதை நூறாக்கும் எண்ணத்தில் , அவரோடு இணைந்து பல வெற்றி பாடகர்கள் பங்கேற்ற பாடல்களைத் தர மனம் விழைகிறது . அவர் பாடல்கள் ஞாபகத்தில் என்றென்றைக்கும் நிழலாடுபவை .இதில் ஒரு ஆத்ம நிறைவு எனக்கு கிடைக்கிறது என்றால் அது மிகை இல்லை . எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் அறிமுகமான காலத்திலேயே சுசீலாம்மாவுடன்தான் அடுத்தடுத்து பாடினார் , அவரைத் தொடர்ந்தே நிலையம் கண்டார். அவரது நினைவிற்கு இங்கு, சுசீலாம்மாவுடன் பாடிய சில பாடல்களை தெரிவு செய்துள்ளேன் . அதில் இன்று ,

"மாதமோ ஆவணி
மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள்
நாயகன் வேற நாள் ..'.... எனும் பாடல் எஸ் பி பி . அவர் ஆரம்பிக்க ,. இதில் வேடிக்கை என்ன வெனில் இவருக்கோ கல்லூரிப் பருவம் . அம்மாவோ திரையுலகில் கொடிபிடித்த காலம் . ஆனால் பாடல் எந்த ஒரு விகற்பமோ , வித்தியாசமோ இல்லாமல் நல்ல ஜோடிக் குரலாகவே கேட்பவர் மனத்தில் ஒலித்தது .

" நாலிலே ஒன்றுதான்
நாணமும் இன்றுதான்
நாயகன் பொன்மணி ,..
நாயகி பைங்கிளி ..." என்று நாயகி தொடர .. பாடல் என்னவோ கவியரசர்தான் . ஆனால் எம்.எஸ் வி. அவர்களின் தனிப்பட்ட பிரயாசையில் பிறந்த இசைக்குத் தக்கபடி ...வார்த்தைகள் எடுத்துத் தந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் . இசை கேக்க சுவையே ...உத்தரவின்றி உள்ளே வா திரையில் , ரவிச்சந்திரனும் , காஞ்சனாவும் நடித்துள்ளனர் .

" என்றோ ஒருநாள்
எண்ணிய எண்ணம் ...... ஒருவர் தொடர...மற்றவர் .
இலை விட்டதென்ன ...? என முந்தி,
கனி விட்டதென்ன
பிடிபட்டதென்ன..' என்று அதை முத்தாய்ப்பாக முடிக்கும் வகையில் பாடுவதாகத் தொடரும் . தந்தன தந்தன ... என்று ராகம் இழையோடு செல்லும் அழகு ஒரு சிறப்பு

இதழ் தொட்ட போதும்
இடை தொட்ட போதும்
இதழ் தொட்ட போதும்
இடை தொட்ட போதும்

ஏக்கம் தீர்ந்ததென்ன.........
ஏக்கம் தீர்ந்ததென்ன'.....
மென்மையான இசையில் செல்லும் பாடல் ..

"மஞ்சள் நிறம்தான்
மங்கையின் கன்னம்
சிவந்தது என்ன ..?
பிறந்தது என்ன....?
நடந்தது என்ன...? கேள்வியோ வியப்போ அதற்கு பதிலும் அதே வகையில் பாடலில் அரங்கேறும்

'கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல
கொடை தந்த வள்ளல்
குறி வைத்து மெல்ல

லாலலா..."லாலலா ' அதே மெட்டில் கரைவது . 1970. ல் வெளிவந்தது . இன்றைக்கும் அதே இனிமை தரும் சிறப்பு ..

கோதை தனபாலன்
https://www.youtube.com/watch?v=j2e4OaRFRWY


Quote
Share: