"ஓடம் கடலோடும்/கண்ம...
 
Notifications
Clear all

"ஓடம் கடலோடும்/கண்மணி ராஜா 1974  

  RSS

kothai
(@kothai)
Trusted Member
Joined: 4 months ago
Posts: 54
16/10/2020 5:51 pm  

#எஸ்பிபாலசுப்ரமணியம்நினைவில் ..
சுசீலாம்மா பாடல்கள் ரசனையில் ... 74

எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களிடம் ஒரு தனித்த திறமை நான் காண்பது ... பலவித இரைச்சலோடும் இசையமைப்பார் , அதற்கு நேர்மாறாக மென்மையாக ... பாடும் குரல் பாவங்கள் மட்டுமே தெள்ளது தெளிவாக ஒலிக்கும் வகையில் இசையை மென்மையான இழையில் ஓடவிடுவார் .

அன்றைக்கு பாவ மன்னிப்பில் ..."அத்தான் என் அத்தான் ... "பாடல் தொட்டு கணிசமான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று . 1974. ல் வெளியான கண்மணி ராஜா திரையில் .

காட்சி ஒரு இக்கட்டான ரசனை . தாய் சொல்லை மீறாத பையன் , திருமணமாகியும் மனைவியோடு சுதந்திரமாக இல்லாத நிலை ... அவனுக்கோ புரியாத ஒன்று . இது எப்படி சாத்தியமாகிறது என்றுதான் கதை இருக்க வேண்டும் . ஒரு கட்டத்தில் அவர்கள் தனியாக உலா வரும்போது ..அவர்களது மன உணர்வுகளே ..பாடலாக ..வெளிப்படும் விதம் ... கவியரசரின் நாசூக்கான வரிகள் .. இதற்கு மேலும் ஒருவர் எழுத முடியாது .
பாடும் குரல்களில் ..எஸ்பிபி பாவங்கள் ...தாபத்தையும் மென்மையாக காண்பிக்கும் . சுசீலாம்மா ஏக்கத்தை இதமாக .. சற்று மெலிதான நையாண்டித்தனத்தோடும் ..இறுதியில். . இதற்கு இசைக்களம் ...எம்.எஸ்.வி அவர்கள் .
திரைப் படம் குறிப்பிட்ட வெற்றி அடையாவிட்டால் இந்தப் பாடல் மெதுவாக இசை ரசிகர்களின் உள்ளத்தில் இடம் பிடித்துள்ளதை யாரும் மறுக்க இயலாது .
நடிப்பவர் சிவகுமார் , லட்சுமி ..அவர்கள் .
பெண் மென்மையாக எழுப்பும் கேள்விகளுக்கு நயமான பதிலாக ...பாடல் செல்லும் .
"ஓடம் கடலோடும் அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரையேறும் அது தேடும் சுவை என்ன ..."
"ஏதோ அது எதோ அதை நானும் நினைக்கின்றேன்
ஏனோ அது ஏனோ அதை நானும் ரசிக்கின்றேன்.."
' மேகங்கள் மோதுவதால் மின்னல் வருவது எதனாலே ..
எதனாலே...?
தேக்கங்கள் கூடுவதால் இன்பம் வருமே அது போலே ..
நாடிகளில் புதுவெள்ளம் ஓடுவதுபோல தெரிகிறது
நல்லதுதான் தெரியட்டும் .. உலகம் மெதுவாய் புரிகிறது ..
" பகலிலே வருவதில்லை இரவினில் எதோ வருகின்றதே
இரவு எனும் நேரம் எல்லாம் இவருக்கென்றே வருகிறதே ..
ஓடம் ...
நாமும் இந்த இசை ரசனை யை சுவைக்கலாம்

கோதை தனபாலன்
https://www.youtube.com/watch?v=GngQfJA4Oss


Quote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 115
17/10/2020 5:17 pm  

பெரிய தொழிலதிபரான எம்.என்.ராஜத்தின் (விதவை) ஒரே மகன் சிவகுமார் - கல்லூரி மாணவர். எம்.என்.ராஜம் மிகவும் கண்டிப்பானவர், மகனை கோழி தன் குஞ்சினை பொத்தி பொத்தி பாதுகாப்பது போல் வளர்க்கிறார். எல்லாமே அட்டவணைப்படி தான் நடக்கவேண்டும். மகனுக்கு எல்லாமே தன் கையால் தான் செய்யவேண்டும் என்று நினைப்பவர். சிவகுமார் அதனால் உலகம் என்னவென்று தெரியாத கிணற்று தவளையாக, சரியான அம்மா பிள்ளையாக வளர்கிறார். லக்ஷ்மி நடுத்தரவர்க்கத்துக்குடும்பத்தை சேர்ந்தவர். குடும்பத்தை காப்பாத்துவதற்காக ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸில் சேல்ஸ் கேர்ள் ஆக பணிபுரிபவர். She is well groomed, restrained and உலகம் என்னென்று புரிந்தவர். ஒருநாள் நண்பனுடன் அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸுக்கு போகநேரிடும் சிவகுமார் அங்கு லக்ஷ்மியை சந்திக்கிறார். கண்ட மாத்திரத்திலேயே மனதை பறிகொடுக்கிறார். வேண்டுமென்றே அடிக்கடி அந்த ஸ்டோர்ஸுக்கு போகிறார். லக்ஷ்மிக்கும் காதல் வியாதி தொத்திக்கொள்கிறது. அப்போது வரும் பாடல் தான் இது. படம் ஆரம்பித்து அரைமணி நேரத்தில் இடம் பெறும் பாடல்.

(பாடலில் எம்.என்.ராஜம் தோன்றும் காட்சியின் விளக்கம் : எங்கு செல்வதானாலும் அம்மாவிடம் சொல்லிவிட்டு போகும் அனுசரணையான மகன். காதல் மயக்கத்தில் சிக்கியதால் அன்று வழக்கம் போல் கல்லூரிக்கு செல்லும் அவன் அன்று காதலியை சந்தித்து, இருவரும் இரவு முழுவதும் கடற்கரையிலே இருந்து விடுகின்றனர். அங்கு அவனது தாய் அவனுக்காக வெகுநேரம் காத்திருக்கிறாள். இரவு வெகு நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் தவித்துப்போகும் தாய் அவனை அவன் வழக்கமாக போகும் நண்பர்கள் வீட்டில் தேடுகிறாள். எங்கும் அவனை காணாமல் கலக்கத்துடன் வீடு திரும்புகிறாள்)

இது ஒரு கனவுப்பாடல் தான். ஆனால் பாடல் காட்சியை மட்டும் பார்த்தால் அது புரியாது. படத்தை பார்த்தால் தான் அது புரியும். ஏனென்றால் பாடல் முடிந்து அடுத்த ஷாட்டில் இருவரும் கடற்கரையில் அமர்ந்திருப்பது போலவும், அய்யய்யோ வெடிஞ்சு போச்சு போலிருக்குதே, ராத்திரி முழுதும் இங்கேயே உட்க்கார்ந்திருந்திட்டோமே என்றும் பேசுகிறார்கள். Visual-லை base செய்து நீங்கள் சொல்லிவிட்டீர்கள் அல்லவா. இப்போது மன்னர் சிம்போலிக் ஆக சொன்னதை பார்ப்போமா. அதை இரண்டு விதமாக சொல்லலாம்.

முதலாவது : பாடல் இடம்பெறும் இடம் கடற்கரை. கடலில் இரண்டுமுறை அன்றாடம் நடக்கும் சம்பவம் – high tide and low tide. High tide நிகழும் போது கடல் ஓர் சில மணிநேரம் கரையை ஆக்கிரமத்துக்கொள்ளும். ஓர் சில மணிநேரத்திற்கு பிறகு மெல்ல மெல்ல உள்வாங்கிக்கொளும். இது ஒவ்வொரு நாளும் மதியம் மற்றும் இரவில் நடைபெறும் நிகழ்ச்சி. பாடல் இடம் பெறும் தருணம் அந்தி சாயும் நேரத்திலிருந்து அதிகாலை வரை. பௌர்ணமி என்பதால் கடலின் சீற்றம் சற்று கூடுதலாக இருக்கும் (please see the shot where the line “மேகங்கள் மோதுவதால்" appears – the moon is covered by moving clouds). பாடலுக்கான bgms (பல்லவி மற்றும் சரணங்களுக்கு பிறகு வரும் இசை) மன்னர் இதை நினைவில் வைத்துக்கொண்டு வடிவமைத்திருக்க வேண்டும். பல்லவி முடிந்து வரும் முதல் bgm – the sea is encroaching the shore slowly and silently. முதல் சரணத்துக்கு பிறகு வரும் இரண்டாவது bgm – the intensity of the waves are slowly increasing. Finally the third bgm – we will divide this into two parts, ஏனென்றால் ஒரு பாதி வேகமாகவும் மறுபாதி சாந்தமாகவும் வடிவமைக்கப்பெற்றுள்ளது என்பதால். First part shows that the sea has become wild and the waves are lashing the shore. Second part shows that the sea has cooled down and is slowly moving away from the shore.

இரண்டாவது : MSV is symbolically telling their journey of love. கண்டதும் காதல். முதலில் மெதுவாக நகர்ந்து, பிறகு மெதுவாக சூடு பிடித்து கடைசியில் திருமணத்தில் முடிகிறது. Yes, immediately after this song they get married. All the bgms shows this graph. As both are well groomed and restrained their romance does not cross the limit.

(பல்லவி முடிந்து வரும் அந்த first bgm : street light எரிவதை காண்பிக்கிறார்கள். இங்கு கவனித்தீர்களானால் "கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்ற ஒரு ஒலி சேர்த்திருப்பது புரியும். அந்த காலத்தில் பார்த்தீர்களானால் அந்தி நேரத்தில் தெரு விளக்கு போட்டவுடன் அந்த tubelights சட்டென்று எரியாது, மறித்து சற்று தாமதமாக தான் எரியும் (அதநால் தானே சிலரை "tubelight" என்று குறிப்பிடுவது வழக்கத்தில் வந்தது). மேலும் அது எரியும் போது "கர்ர்ர்ர்ர்ர்ர்" என்ற ஒரு ஒலி இருந்துகொண்டே இருக்கும். இதை நினைவில் வைத்துக்கொண்டு MSV அந்த ஒலியை சமயோசிதமாக இந்த பாடலில் சேர்த்துள்ளார். மற்ற இரண்டும் bgms : தாயின் பதற்றத்தையும், பரிதவிப்பையும், காதலர்களின் நெருக்கத்தையும், சாலையின் போக்குவரத்து பரபரப்பையும் படம்பிடித்து காண்பிக்கிறது).

பாடப்பட்டிருக்கும் விதம் இவர்களது individuality-யை குறிப்பிடுகிறது. சிவகுமார் உலகம் அறியாப்பிள்ளை என்பதால் மாணவன் போல் கேள்வி கேட்பது போலவும், லக்ஷ்மி self made person என்பதால் ஆசிரியை போல் அவன் கேள்விகளுக்கு நிதானமாக பதில் அளிப்பது போலவும் வடிவமைத்துள்ளார். Interestingly, the pallavi starts like the teacher asking the student a question and the student though not able to answer it enjoys the process described by her. Later all the charanams are devised like the student is asking questions and the teacher is answering him politely.

இதே படத்தில் வரும் "காதல் விளையாட கட்டிலிடு கண்ணா" பாடல் இளமை துடிப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, where both the singers freak out like anything and the music is oozing sensuality at its best. Because. By the time Sivakumar attains all the qualities of a grown up man and they are parents of a child too. Moreover there is no boundary for their love.

Thanks and regards,

RAMANAN K.T.


ReplyQuote
kothai
(@kothai)
Trusted Member
Joined: 4 months ago
Posts: 54
18/10/2020 5:06 am  

@k-t-ramanan 

மிகவும் நன்றி . நான் இந்தத் திரைப் பட ம் முழுதும் பார்த்ததில்லை . வானொலியில் கேட்டே இப்பாடல் இசையமைப்பு என்னைக் கவர்ந்தது .கதை கேட்டு காணொளியில் . பாடல் காட்சி பலமுறை கண்டுள்ளேன் . தங்களது காட்சி அமைப்பு வர்ணனையும் ,அதோடு இயைந்த இசை பற்றிய தகவலும் .. இந்தப் பாடல் பதிவிற்குப் பெருமையே . மகிழ்வுடன் நன்றி . இசையமைப்பின் முக்கியத்துவம் .. இசையமைப்பாளரின் ஞானம் ..இவற்றை நேசிக்கிறேன் .

 


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 115
18/10/2020 4:31 pm  

Thank you mam.


ReplyQuote
Share: