Notifications
Clear all

1969 - Thirudan - En Aasai Ennodu


K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

பாடல் : என் ஆசை என்னோடு

படம் : திருடன்

பாடியவர்கள் : பி.சுசீலா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1969

 

அனைவருக்கும் வணக்கம்.

அந்த காலத்து திரைப்படங்களை பார்த்தீர்களானால், அடக்க ஒடுக்கமாக, குடும்ப பாங்காக வாழும் சில கதாநாயகி பாத்திரங்கள் சூழ்நிலை நிமித்தம் "Item Numbers" என சொல்லப்படும் "கவர்ச்சி" நடனம் ஆடுவது போல் படமாக்கியிருப்பார்கள்.  அதாவது வில்லனின் வற்புறுத்தலுக்காக / கதாநாயகனை காப்பாத்துவதற்க்காக வில்லனின் கும்பலுக்கு முன்னால் / கதாநாயகனுக்கு உதவுவதற்காக வில்லனின் பாழடைந்த பங்களாவில் / ஹோட்டலில் - இப்படி பல.  இன்று நாம் அலச இருப்பது அத்தகைய ஓர் பாடல் தான் - அதிகமாக ஒலிக்கப்பெறாத ஓர் அரிய பாடல்.  நான்கு பாடல்கள் கொண்ட இந்த படத்தின் இரண்டு பாடல்கள் ஓரளவு வெற்றி பெற்றபோது மற்ற இரண்டு பாடல்கள் போதிய வரவேற்பு பெறாமல் போய்விட்டது.  அந்த இரண்டு பாடல்களில் இதுவும் ஒன்று.  பாடலுக்கான situation - நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கும் கணவனின் உயிர் காப்பதற்க்காக பத்தினிப்பெண் ஒருவள் ஹோட்டலில் நடனம் ஆடி அவன் உயிரையும் குடும்பத்தையும் காப்பாற்றவேண்டிய கட்டாயம்.  அப்படி அவள் ஆடும் காட்சி தான் இந்த பாடல். 

சிவாஜி-கே.ஆர்.விஜயா ஜோடியாக நடித்த "திருடன்" படத்தில் இடம்பெற்ற பாடல் தான் இன்றைய பாடல்.  பாடல் ஏறத்தாழ படத்தின் முக்கால்வாசிக்கு பின் இடம்பெறுகிறது.  கிளைமாக்ஸுக்கு முன் இடம் பெறும் இரண்டு பாடல்களில் முதலாவதாக வரும் பாடல். 

படத்தின் கதை ரத்தினச்சுருக்கமாக.  சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்த சிவாஜியை எடுத்துவளர்க்கும் ஒருவர் அவரை அந்த வயதிலிருந்தே திருட கற்றுக்கொடுக்கிறார்.  பிற்காலத்தில் அவர் ஓர் கொள்ளைக்கூட்டத்தில் பெரும்புள்ளியாக வலம்வருகிறார்.  ஓர் சமயம் அவர் கைது செய்யப்பட்டு சிலவருடம் சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார். விடுதலையாகும் அவர் திருந்தி வாழ நினைக்கிறார்.  அதனால் அந்த கொள்ளைக்கூட்டத்திலிருந்து விலகி லாரி ஓட்டுநராக வேலை செய்கிறார்.  ஓர் நாள் இவரைப்போல் பெற்றோர்களை பறிகொடுத்து மாமன் பராமரிப்பிலிருந்து அவர் கொடுமை தாளாமல் வீட்டைவிட்டு ஓடிவரும் கே.ஆர்.விஜயாவை சந்திக்கிறார்.  இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொள்கிறார்கள்.  பிறகு சிவாஜி சொந்தமாக ஓர் லாரி வாங்குகிறார் - கடன் வசதி முறையில்.  கொள்ளைக்கூட்டத்தின் தலைவனான பாலாஜி சிவாஜியை அடிக்கடி சந்தித்து கூட்டத்திற்கு திரும்பிவருமாறு வற்புறுத்துகிறார்.  அவரை சிவாஜி துரத்திவிடுகிறார்.  இதனால் கடுப்பேறும் பாலாஜி அவரது லாரிக்கு தீ வைத்துவிடுகிறார்.  அதன் பிறகு சிவாஜி ஓர் செல்வந்தர் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார்.  ஆனால் வீண் பழி விழுந்து அந்த வேலையும் பறிபோகிறது.  இந்நேரம் அவர் நோய்வாய்ப்பட்டு படுத்துவிடுகிறார்.  குடும்பத்தையும், கணவரையும் காப்பாற்றும் பொறுப்பு விஜயாவின் தலையில் விழ, அவர் வேறு வழி காணாமல் ஓர் ஹோட்டலில் நடனம் ஆடி சம்பாதிக்க முடிவெடுக்கிறார்.  அப்படி அவர் ஆடும் நடனம் தான் இந்த பாடல்.

The song may resemble to few of his own creations viz., “ஆடலுடன் பாடலை கேட்டு", "ஆடுவது உடலுக்கு விளையாட்டு", etc.  That may be because few common notes which touches all these songs – as these songs have one common factor : viz., the “Punjabi” flavour.  As otherwise, he has given a total different shade to this song – be it the singing or the orchestration.  The song bears the heavy Punjabi Folk touch. ஜாலியான பாடல் என்றாலும், பாடலில் சோகமும் undercurrent ஆக இழையோடுவதை உணரமுடியும் - புன்னகை என்ற முகத்திரை போட்டிருந்தாலும் அவளது இயலாமை, தவிப்பு, ஏக்கம், பரிதாப நிலை எல்லாம் பாடலில் மறைமுகமாக இருப்பதை மிக அழகாக மன்னர் பாடலிலும், இசையிலும் புகுத்தியுள்ளார். 

The song begins with a cute prelude.  Ektara plays for one bar.  It’s backed up with Guitar chords in rhythm and Tabla.  It’s also supported by a “tok tok tok” beat / stroke on the body of the Dholak with a piece of wood block – which is the usual practice while playing a “Tappa” Geet (“Tappa” Geet என்னவென்பதை "மதிப்பு கெட்ட மாமா" என்ற பாடல் வழங்கிய போது விரிவாக விளக்கியிருந்தேன்).  This “tok tok tok” beat continues throughout the song!!!!!  For the next one bar Flute plays.  It is supported by Tabla with a different rhythm.  It’s followed by a display on Violins for one bar, which is supported by Tabla again with a different rhythm pattern.  The prelude is ended with three strokes on Guitar chords combined with Santoor and a note on Santoor.  This gives clue to the singer to star the pallavi.  PS sings the full pallavi once.  After finishing the pallavi she does a humming “ஆஹாஹாஹா…” and repeats the last line of the pallavi and again does a humming “ஓஹோஹோஹோ..."  Then a roll on Tabla is placed.  It’s continued with three beats again on Tabla, which is supported by Guitar Chords.  And then PS again hums “ஆஹா ஆஹா ஆஹா ஆ....., ஆஹா ஆஹா ஆஆ......."  and she sings again the full pallavi, which is ended with a roll on Tabla. 

சொல்லப்போனா பாடல் முழுக்க தபாலாவின் விளையாட்டம் தான் - எத்தனை விதமான thaalangal.  அத்தோடு சேர்ந்து சுசீலாவும் சக்கை போடு போடுகிறார்.  எத்தனை "bhaavangal", எத்தனை சங்கதிகள்.

It’s time for first BGM – see how his (MSV’s) brain has worked – For two bars he has played notes on Mandolin combined with Guitar and Accordion.  It is supported with Guitar chords and beats on Bongos.  Till then she somehow manages to match steps with the music.  After this she is confused as to how to perform – she doesn’t know ABC about dancing, neither she doesn’t know how to dress for this ambience, she doesn’t know which are the areas she can dance and which to be avoided, she has to be cautious in the crowd – these all reflects in the next part of the BGM and the charanam. Then for the next two bars Flute combined with Santoor is played.  Here Tabla replaces Bongos.  This piece is finished with a roll on Mandolin.  Then for the next two bars Violin run plays – here the mood changes, it becomes slightly serious and bears a sad tone.  After each half bar a fill in Accordion is played and is finished with a fluttering piece and at the end a bang on Guitar chord.  Then the first charanam starts.   It has two types of rhythm pattern, which we all know is MSV’s stamp.  She sings two lines of the charanam.  After the second line MSV places a small interlude by way of roll on Tabla.  Then she sings the next two lines.  Here after each line MSV infuses a cute interlude in Flute, which conveys her peril.  Then she sings the next two lines, which she repeats without any gap or interlude – the rhythm and “bhaavam” changes here.  Once she completes the repeated lines the rhythm stops and PS continues with one word “கேட்டா......ல்" and a guitar chord is played as a filler as well as a chord / mood change(r) - ஆஹா என்ன அழகு அந்த இடம்.  Then PS continues to sing the anupallavi, viz., “உலகமே ஆடும் பெண்ணோடு, மயக்கம் தான், ஹா மயக்கம் தான், ஓ ... மயக்கம் தான்".  After this Tabla roll plays as an interlude.  Then PS sings the full pallavi and this portion ends with a roll on Tabla.

Time for second BGM – Santoor combined with Xylophone plays for half bar and for the next half bar Violin runs play.  The same is repeated again.  For this portion Bongos is played for rhythm.  Then for one bar Flute plays – here the rhythm too changes and the percussion used here is Tabla.  At the end of the BGM a note in Violin is played to enable the singer to start the charanam.  Again this charanam too is devised in two styles with changes in singing and rhythm.  PS sings the first two lines in different style – these lines bears a kind of pathos – wherein she says she is not that cheap – the rhythm pattern conveys the intoxicated state of the crowd. She finishes this portion by repeating the last word “நானல்ல" and jumps to next lines.  Here the pattern changes.  MSV has devised this portion exactly like the first charanam.  This charanam is finished exactly like first charanam. 

The song ends with a fast paced postlude – This too bears heavy Punjabi Folk style.  For one bar Ektara plays and Tabla plays in fast rhythm.  And for the next one bar Flute plays briskly which is ably supported by Tabla and the postlude ends with a roll on Tabla. 

Whenever she sings the Pallavi, it has been supported by “Duggi Tarang” too.

All in all a nice song superbly sung by PS with various shades of emotions and nice work on Tabla.  சுசீலாவோடு தபலா போட்டி போடுகிறதா அல்லது தபாலாவோடு சுசீலா போட்டி போடுகிறாரா என்று தெரியவில்லை, அப்படி ஜாலம் புரிந்துள்ளார்கள். But the song went unnoticed as the movie could not create ripples in the box office.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான / அதிரவைக்கும் பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=Dn5pz-nGQB4


Quote
Share: