Notifications
Clear all

1969 - Deiva Magan - Koottathile Yaar Thaan  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 115
24/09/2019 5:42 pm  

பாடல் : கூட்டத்திலே யார் தான்

படம் : தெய்வமகன்

பாடியவர்கள் : பி.சுசீலா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1969

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைக்கு நான் எடுத்துக்கொண்டுள்ள பாடல், சற்று வித்தியாசமாக அமைந்த நடனக்காட்சிக்காக அமைந்த ஓர் பாடல். அந்த காலகட்டத்தில் பார்த்தீர்களானால், பல படங்களிலும் கதாநாயகியை மைய்யமாக வைத்து பல விதமான situations-ஸுக்கு ஆடுவது போல் பல பாடல்களை அமைத்திருந்தார்கள்.  அதாவது கதாநாயகனை வெறுப்பேற்ற அல்லது உசுப்பேற்ற தனது கௌரவமான நிலைமையை மறந்து "தறைமட்டத்துக்கு" இறங்கி "குத்தாட்டம்" அல்லது "காபரே" type நடனம் ஆடுவது போல் அமைந்த பாடல்.  அல்லது இக்கட்டான நிலையில் காதலன் / கணவனின் உயிர் காக்க, விருப்பமில்லாவிடிலும்  வேறு வழியின்றி பணம் புரட்டுவதற்காக "காபரே" ஆடுவது போல்.  அல்லது வில்லன் கோஷ்டியினரின் மிரட்டலுக்கு பயந்து / வில்லன் கோஷ்டியினரை கண்டுபிடிப்பதற்காக நாயகனுக்கு உதவும் வண்ணம் ஹோட்டலில் "காபரே" ஆடுவது போல், இப்படி பல.  இத்தகைய பாடல்களுக்கு சாதாரணமாக அமைக்கப்படும் இசைக்கோப்பிலிருந்து சற்று மாறுபட்ட விதமாக இசை அமைக்கவேண்டும்.  பல போதும் பலவிதமான பாவங்களை காட்டக்கூடிய விதமாக இருக்கவேண்டும் - பாடப்படும் விதமும், இசையும்.  இசை அமைப்பாளர்களுக்கு அது பல போதும் சவாலாகவே இருக்கும் – it has to be different in all aspects from the routine “item number” – it has to bear its own stamp – it should not be too sleazy – the heroine’s dignity too has to be projected.  ஆனால் மன்னர் எத்தகைய சவாலையும் தைரியமாக எதிர்கொள்பவராயிற்றே. 

இத்தகைய category-யில் நாம் அலச இருப்பது "தெய்வமகன்" படத்திலிருந்து "கூட்டத்திலே யார் தான்" என்ற பாடல்.  இந்த பாடல் எப்படி மாறுபட்டதாக விளங்குகிறது, இதன் சிறப்புகள் என்னென்ன என்பதை ஆராய்வதற்கு முன்பு படத்தின் கதை ஓர் சில வரிகளில் - பெரும்பாலும் எல்லோருக்கும் கதை தெரிந்தது தான் என்றாலும்.

சிவாஜி அவர்கள் அப்பா மற்றும் இரண்டு மகன்கள் என மூன்று வேடங்களில் அசத்திய படம் என்று எல்லோருக்கும் தெரிந்தது தான்.  பெரும் செல்வந்தரான அப்பா சிவாஜி பிறக்கும் போதே விரூபமான முக தோற்றத்துடன் பிறந்தவர்.  அம்மா பண்டரிபாய் அழகு தேவதை.  இவர்களது தலைச்சன் பிள்ளையான அண்ணன் சிவாஜியும் அப்பாவை போல் விரூப தோற்றத்துடன் பிறக்க தாய்க்கு தெரியாமல் அந்த பிள்ளையை கொன்றுவிட டாக்டரிடம் சொல்கிறான் அப்பா சிவாஜி.  ஆனால் டாக்டர் அப்படி செய்யாமல் அந்த குழந்தையை ஓர் ஆசிரமவாசியிடம் ஒப்படைக்கிறார்.  அதற்க்கு பிறகு அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்கிறது.  அது அம்மாவை போல் மிகவும் அழகான தோற்றத்துடன் பிறக்கிறது.  அதை தாய் மிகவும் செல்லம் கொடுத்து வளர்க்கிறாள்.  அவன் தம்பி சிவாஜி. அளவு கடந்த செல்லம் கொடுத்து வளர்த்ததால் அவன் ஊதாரியாக, பிளேபாய் போல் திரிகிறான்.  அவனும் டாக்டரின் மகளும் (ஜெயலலிதா) சந்திக்கின்றனர்.  ஆரம்பத்தில் இருவரும் மோதிக்கொள்கின்றனர்.  பிறகு இருவருக்கும் காதல் அரும்புகிறது, ஆனால் அதை சொல்லாமல் மறைத்து ஒருவருக்கொருவர் சீண்டிக்கொள்கின்றனர்.  ஓர் கட்டத்தில் நண்பனின் சூழ்ச்சியில் விழுந்து ஊதாரி சிவாஜி ஓர் ஹோட்டலை விலைக்கு வாங்குகிறார்.  இருவரது ஊடலும் தொடர்கிறது.  ஓர் நாள் ஜெயலலிதாவை வெறுப்பேற்றி / உசுப்பேற்றி தன் ஹோட்டலுக்கு வரவழைக்கிறார்.  அவர் வந்ததும் அவர் முன்னாலேயே சில பெண்களுடன் நடனமாடுகிறார்.  இதனால் கடுப்பேறும் ஜெயலலிதா அவரை கலாய்க்க / வெறுப்பேற்ற "குத்தாட்டம்" போடுகிறார். அந்த பாடல் தான் இன்றைய பாடல்.

நாட்டுப்புற மெட்டில் அமைந்த பாடல்.  டப்பாங்குத்து பாணி மேலோங்கி நிற்க்கிறது. அதோடு இரண்டு மூன்று விதமான பாணிகளை குழைத்து ஒரு புதிய பாணியில் அமையப்பெற்றுள்ளது பாடல்.  பல்லவி மற்றும் சரணங்களில்  தாளத்துக்காக டோலக்  மட்டும் பயன் படுத்தியுள்ளார்.  அதன் தாளக்கட்டும் மிகவும் வித்தியாசமாக வாசிக்கப்பட்டுள்ளது.  பாடுவதற்கு மிகவும் கடினம் கூட.  சுசீலாவின் குரலும் வழக்கமாக ஒலிப்பதிலிருந்து சற்றே மாறுபட்டு ஒலிக்கிறது.  மிகவும் high pitch -சில் அமைந்துள்ளது பாடல். 

பாடலில் எனக்கு மிகவும் வித்தியாசமாக பட்டது இன்னொரு விஷயவும்  கூட.  அதாவது பல்லவி மற்றும் சரணங்களுக்கு இடையில் வரும் BGM மிகவும் வித்தியாசமாக அமைத்துள்ளார் மன்னர்.  குறிப்பாக சொன்னால்  - வட இந்தியாவில் புழங்கி வரும் "nautanki" என்ற தெருவோர  நாட்டிய நாடக கலையில் பயன்படுத்தும் இசை பாணியில் அமைத்துள்ளார்.  ஏன் அப்படி அமைத்தார் என்பது ஒரு புதிரே. 

My wild guess on using that format -  வட இந்தியாவில் பழக்கத்திலுள்ள ஒரு சொல் / வார்த்தை உண்டு - அதாவது நாலு பேர் கூடியிருக்கும் ஓரிடத்தில் / சபையில் யாராவது ஒருவர் பந்தா அடித்துக்கொண்டு ரொம்பவே ஆட்டம் போட்டார் என்றால் அவரை பார்த்து மற்றவர்கள் சொல்லிக்கொள்வார்கள் - "saala nautanki" (though “saala” has a different meaning when it is used at different places / phrases, here it has no particular meaning) என்று - நம்மூர் வழக்கப்படி "ரொம்பதான் ஸீன் போடறான்ப்பா" அல்லது "என்னமா நாடகம் போடறான்" என்று பொருள்.  மன்னருக்கு இது எப்படியாவது தெரிய வந்திருக்குமோ?  இதை மனதில் வைத்துக்கொண்டு தான் BGM -ம்முக்கு அப்படி இசை அமைத்தாரோ?  ஏறத்தாழ பாடல் கூட "nautanki" ரகம் தான்.  ஏனென்றால் தன்னெதிரில் தன் காதலன் தன்னை வெறுப்பேற்ற வேண்டுமென்று பிற பெண்களுடன் நடனம் ஆடுவதை கண்டு "saala nautanki அடங்குடா" என்று சொல்வது போல் JJ வெகுண்டெழுந்து அவருக்கு பதிலடி கொடுப்பது போல் ஆட்டம் போடுகிறார்.

இப்போது பாடலை ஆராய்வோம்.  படத்தில் பாடலுக்கு முன் 1 .17 minutes நீளமான ஒரு prelude உள்ளது - மேற்கத்திப்பாணியில்.  ஆனால் ரெகார்ட் வெர்சனில் அது கிடையாது.

The song begins with a long prelude in western style – waltz.  Beautifully orchestrated portion.  At the 49th second the scale of the music changes (brilliant work by MSV) to a serious note / suspense note, which happens when NT dance around JJ’s table with two girl/s in hand.  MSV hints the audience that something unexpected is going to happen within a few seconds.  When NT takes the third round he is surprised to note that JJ has vanished from the seat.  When he notices this with surprise the music ends with a grand note on the trumpet, followed by Flute and he finds JJ standing in the dais – a style which one can see in Western Classical concerts.  This whole piece displays the magic on Violins/Cellos + Bass Instrument + Trumpet/Sax/Trombone + Flute + Triangle + Brush style Drums – it showcases MSV’s prowess in Western Classical too.    Then comes a pause.  And the desi portion of the song starts with a whistle – which is quite common in Nautanki – which will either come from the performing artists itself or from the audience.  Before and after the whistle one can prominently hear the sound of guitar chords. 

After the whistle PS starts the pallavi in high pitch in Thogaiyara style.  The pallavi is quite lengthy, which has too many modulations and “bhaavams”.  She sings the four lines of the pallavi without the accompaniment of very subtle Guitar Chords.  After each two lines Guitar chord is played in Arpeggio style very mildly.  Then she shrieks “ஹைய்யா......." and the end of the shriek Guitar chord is played.  Following that immediately PS starts the pallavi again – this time with the accompaniment of orchestra.  She sings the first four lines and does a humming “இஸ்தா, இஸ்தா இஸ்தா......" and sings again the same four lines and then sings the next two lines, which again is repeated.  When the second line ends, the rhythm too is stopped.  But her singing continues without the rhythm.  She repeats the last line slowly, which is filled with “sringaaram”.  When this line ends, she pulls the line by stretching the last word “ஓ ......" and sings the last line of the pallavi – this line is filled with “போதை".  This line too has no rhythm.  When this line ends, MSV places the “theka” on Dholak to kick start / repeat the first four lines of the pallavi with rhythm.  The whole song is embellished with “Chimta” (an instrument which is widely used by “Jogis” – Tambourine இனத்தை சேர்ந்தது). 

Its time for BGM.  The song takes a “U” turn here – the rhythm becomes faster.  This portion, as I mentioned above, is played in typical “Nautanki” style.  The fast tune is played for two bars.  In Nautanki normally Harmonium, Tabla and Dholak plays an integral part.  But, here MSV has avoided both Harmonium and Tabla.  Instead he has used Clarinet and Band (the one widely used for “Jaanavaasam”).  He has played Clarinet and Flute combined and played Band for rhythm.  Chimta has been used for embellishment.  This tempo stops here and the normal tempo begins for the next portion of the BGM.  Here, for two bars he plays “Santoor” and “Bongos” is being used for rhythm, which is a typical “MSV innovation”.  Then he again jumps to “Nautanki” style for the next two bars – here for the first bar he plays Violin runs and for the next one bar plays Flute and ends the portion with two notes on Violin.  And then begins the first charanam.  She sings first four lines of the charanam and an interlude is played by way of humming.  PS hums “அல்லல்லல், அல்லல்லல், ....." for two bars.  This portion emotes “titillation”.  Then she sings the next three lines and repeats it.  Then she jumps to the next set of four lines and when the fourth line ends she pulls the line by singing the last word  “ஓ ......" and repeats the last two lines.  Here again the bhaavam and tempo changes.  The changes are smooth and are never jarring.  Then she repeats the four lines of the pallavi and the charanam is finished.

Then begins the second BGM – here MSV has made slight changes.  This BGM is only for two bars.  The fast paced portion of first BGM is repeated and the Santoor / Flute / Violin portion is avoided.  The second charanam starts immediately after the fast paced BGM.  This charanam is also exactly the same like first charanam.  This charanam is filled with “titillation” and “inviting/teasing”.  Then immediately she sings the first four lines of the pallavi and hums “இஸ்தா, இஸ்தா இஸ்தா......" and repeats the same.  The song ends with a prelude, which is the reproduction of the fast paced portion of the BGM.   

Though the song may sound like our desi dappankuthu style, he has remotely blended “Nautanki” style too.  MSV’s speciality is that one cannot term MSV’s tunes to one particular style.  He blends many form of music and creates a new style of his own, which is very unique.  The singing style too is almost similar to “Nautanki” style.  All in all a foot tapping number.

Now a brief description about “Nautanki” – It’s basically a dance-drama format. Few years back stories from epic and history were the main format for this type of art.  Slowly contemporary social issues also took place.  Like Broadway Drama, this form too has mixture of drama, dance and other comical reliefs.  On several occasions they present only dances.  It’s like a touring talkies.  The songs’ lyrics and dance movements would contain fair amount of explicit words and titillating movements.  “Nautanki” style of songs has been used in many of the old hindi movies.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://www.youtube.com/watch?v=R-ZJQqCjTdM


Quote
Share: