1968 - என் தம்பி - ...
 
Notifications

1968 - என் தம்பி - தட்டட்டும் கை தழுவட்டும்  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
10/03/2020 3:13 am  

171. 09.03.2020

பாடல் – தட்டட்டும் கை தழுவட்டும்
படம் – என் தம்பி (1968)
இசை – மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் – கவியரசர் கண்ணதாசன்
குரல் – இசையரசி பி.சுசீலா

அந்நியோன்யமான அறுபதுகளின் தொடரில் மெல்லிசை மன்னர் தனித்து இசையமைத்த பாடல்களின் வரிசையில் இன்று, 1968ம் ஆண்டு வெளியான என் தம்பி படத்திலிருந்து தட்டட்டும் கை தழுவட்டும் என்ற பாடல் இடம் பெறுகிறது.

இந்தப் பாடலைப் பற்றி என்ன சொல்வது எப்படி சொல்வது – சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு Music Marvel என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு பாடலில் இசையால் பரபரப்பை உண்டு பண்ண வேண்டுமென்றால் அதற்கு இலக்கணமாக அமைவதெல்லாம் பெரும்பாலும் மன்னர் படங்களே. அதிலும் குறிப்பாக, அந்த காலத்தில் திரைப்படங்களில் சாட்டையால் அடித்து பாட வைக்கும் பாடல்கள் நிறைய உண்டு. இதில் Masterpiece ஆக விளங்குவது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் ஆடாமல் ஆடுகிறேன் பாடலும் சிவந்த மண் திரைப்படத்தில் இடம் பெற்ற பட்டத்து ராணி பாடலும் ஆகும்.

இன்றைய பாடலும் சாட்டையால் அடித்து பாடும் பாடல். ஆனால் முற்றிலும் வித்தியாசமான காட்சியமைப்பு. இதை சுருக்கமாக சொல்ல முடியாது. கதையோடு சொன்னால் தான் இந்தக் காட்சியமைப்பின் சிறப்பு தெரியும்.

சுந்தர பூபதி ஏராளமான சொத்துக்களுக்கு அதிபதியான மிராஸுதார். அவருடைய முதல் மனைவிக்கு (கண்ணாம்பா) பிறந்த குழந்தை கண்ணன் (நடிகர் திலகம்). முதல் மனைவி இறந்த பின் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார் பூபதி. அவருடைய இரண்டாவது மனைவி அலங்காரம் (சுந்தரிபாய்) மூலம் அவருக்குப் பிறந்த குழந்தை விஸ்வம் (கே. பாலாஜி). இரு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். சுந்தரபூபதியின் சொத்துக்களின் பொறுப்பு சகோதரி மீனாட்சியிடம் (பண்டரிபாய்) இருக்கிறது.

கண்ணன் பொறுப்புள்ள, நற்குணங்கள் நிறைந்தவனாய் வளர்கிறான். விஸ்வம் மது மாது என அனைத்து தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிறான். விஸ்வத்தின் போக்கு தந்தைக்கு மிகுந்த மனக்கவலையைத் தருகிறது. எவ்வளவோ அறிவுறுத்தியும் தந்தை சொல்லை விஸ்வம் கேட்பதில்லை. விஸ்வத்தைப் பற்றிய கவலையிலேயே சுந்தரபூபதியின் உடல் நலம் குன்றுகிறது. அவர் காலம் முடியும் தறுவாய் நெருங்குகிறது. மரணப்படுக்கையில் கூட விஸ்வத்தை அழைத்து நல்லபடியாக வாழுமாறு வேண்டுகிறார். விஸ்வம் அசைந்து கொடுப்பதாய் இல்லை. வேறு வழியில்லாமல் சொத்துக்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பை கண்ணனிடம் ஒப்படைக்கிறார் பூபதி. விஸ்வத்தை நல்வழிப்படுத்தி அவன் திருந்தி வாழத்தொடங்கியபின் விஸ்வத்துடைய சொத்துக்களை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்ணனிடம் கூறுகிறார். அது மட்டுமில்லாமல் இறக்கும் தருவாயில் கண்ணனை தனியாக அழைத்து ஒரு ரகசியத்தை கூறுகிறார். சமயம் வரும் போது அந்த ரகசியத்தைய் பயன் படுத்திக்கொள் மிகவும் உதவியாய் இருக்கும் என கண்ணனிடம் சொல்லி விட்டு உயிர் துறக்கிறார்.

மீனாட்சியின் மகளும் கண்ணன் விஸ்வம் இருவரின் முறைப்பெண்ணுமான ராதா (சரோஜா தேவி), கண்ணனை விரும்புகிறாள். விஸ்வத்திற்கென ஒரு காதலி இருக்கிறாள். ஆனால் அவளை அவன் நம்ப வைத்து ஏமாற்றப் பார்க்கிறான். இதை அறியும் கண்ணன் அந்தப் பெண்ணை ஏமாற்றக் கூடாது என கண்டிக்கிறான்.

கண்ணனின் தங்கை உமா (ரோஜா ரமணி), அவன் மேல் மிகவும் பாசமாக இருக்கிறாள். அவளுக்கு உடல் ஊனம் என்றாலும் அந்தக் குறைதெரியாத அளவிற்கு கண்ணன் அவளிடம் அன்புடனும் பரிவுடனும் வளர்க்கிறான்.

பூபதியின் மறைவிற்குப் பிறகு சொத்துக்களின் நிர்வாகம் கண்ணனிடம் சென்று விடுவதால் விஸ்வம் மிகவும் கோபம் கொள்கிறான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் கெஞ்ச வேண்டுமா என்ற ஆத்திரம் பீறிடுகிறது. அதற்கு ஒரே வழி கண்ணனைத் தீர்த்து விட்டு தான் நல்லவன் போல் நடிப்பது தான் என தீர்மானிக்கிறான்.

கண்ணன், சாட்டை வீசுவது, வாள் சண்டை போடுவது என பல வித்தைகளில் வல்லவனாயிருந்தாலும் நீச்சல் தெரியாது. இதை விஸ்வம் அறிவான். எனவே கண்ணனை தந்திரமாய் கொன்று விட்டு அதை இயற்கையான மரணமாய் சித்தரித்து, அதை வைத்து சொத்துக்களைத் தான் அடைவது தான் சிறந்த வழி என தீர்மானிக்கிறான்.

அதற்கேற்ப திட்டம் வகுத்து கண்ணனிடம் அன்பாக பழகி நல்லவன் போல் நடித்து, படகில் சுற்றுப்பயணம் செல்ல அழைத்துச் செல்கிறான். கண்ணனுக்கு நீச்சல் தெரியாத விஷயத்தை தனக்கு சாதகமாக்கி, சாமர்த்தியமாக கண்ணனை நீரில் தள்ளி விடுகிறான். பிறகு வீட்டிற்கு வந்து கண்ணன் இறந்து விட்டதாக கூறி அழுது ஆர்ப்பாட்டம் செய்து நல்லவனாக நடிக்கிறான்.

பூபதியின் வீட்டு கார் டிரைவர் சபாபதி. கண்ணனின் மறைவிக்குப் பிறகு அனைவரும் துக்கமாக இருக்கும் போது ஒரு சமயம் சபாபதியின் நண்பன் ஒருவன், அந்த ஊரில் தெருக்கூத்து நடத்தும் சின்னையா என்பவன் கண்ணனைப் போலவே இருப்பதாக சொல்ல, சபாபதி நாடகத்திற்கு செல்கிறான். சின்னையா கண்ணனைப் போலவே இருப்பதைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. கண்ணன் இல்லாத சமயத்தில் விஸ்வம் எப்படியும் சொத்துக்களை அபகரித்து அழித்து விடுவான் இதைத் தடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில், சின்னையாவை கண்ணன் வேடத்தில் நடிக்க வைத்து விஸ்வம் திருந்தும் வரையில் இருக்கச் செய்து அதற்குப் பிறகு நடப்பதைப் பார்த்துக் கொள்ளலாம் என தீர்மானித்து சின்னையாவிடம் அந்த யோசனையைக் கூறுகிறான். ஆனால் சின்னையாவோ பிடிவாதமாக மறுக்கிறான். மேலும் சின்னையாவின் நடை உடை பாவனை யாவையுமே கண்ணனுடன் ஒத்துப் போகவில்லை. இருந்தாலும் சொல்லிக் கொடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையில் சபாபதி மீண்டும் வலியுறுத்துகிறான். அதற்கேற்ப சின்னையாவை வீட்டிற்கு மறைவாக அழைத்து வந்து காட்டுகிறான். குழந்தை உமாவின் அழுகை சின்னையாவின் மனதை கரைக்கிறது. அதற்காக ஒத்துக் கொள்கிறான். சபாபதி கண்ணனைப் பற்றி தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து சின்னையாவை கண்ணனாக மாற்றி வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

எல்லோரும் வீட்டில் கண்ணனுக்கு அஞ்சலி செலுத்தும் போது அங்கே கண்ணன் திடீரென வந்து நிற்பது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கிறது. முதலில் நம்ப மறுத்தாலும் கண்ணன் வீட்டைப் பற்றி சொல்லச் சொல்ல நம்பிக்கை வருகிறது. ஆனாலும் விஸ்வம் மட்டும் ஒப்புக்கொள்ளத் தயங்குகிறான். மீண்டும் கண்ணன் வந்ததால் தன் சுதந்திரம் போய் விட்டதே என இன்னும் அதிகம் குமுறுகிறான்.

கண்ணன் இறந்து விட்டது உண்மையாயிற்றே இவன் உயிரோடு திரும்பி வருவதாக சொல்கிறானே என்று பிடிவாதமாக நம்பும் விஸ்வம், எப்படியாவது இவன் கண்ணன் அல்ல என மற்றோரை நம்ப வைக்க வேண்டும் என தீர்மானிக்கிறான். கண்ணன் நன்றாக கத்தி சண்டை போடுவான் ஆகையால் அதை வைத்து இவனை கண்ணன் இல்லை என நிரூபிக்கமுடியும் என தீர்மானித்து கண்ணனுடன் கத்தி சண்டை போடுகிறான். ஆனால் கண்ணனோ மிகவும் பிரமாதமாக சண்டை போட்டு விஸ்வத்தை தோற்கடிக்கிறான்.

எப்படி திட்டம் போட்டாலும் சமாளிக்கிறானே என நினைக்கும் விஸ்வம், சாட்டையடியில் கண்ணன் வல்லவன் என தெரியும் என்பதால் அதை வைத்து இவன் கண்ணன் அல்ல என நிரூபிக்க முடியும் என திட்டம் போட்டு, ராதாவையும் கண்ணனையும் பூங்காவிற்கு அழைத்து வந்து ராதாவின் தலையில் இருக்கும் பூக்களை ஒவ்வொரு பூவாக சாட்டையடியின் மூலம் விழ வைக்க வேண்டும் என உத்தரவிடுகிறான். கண்ணனோ திகைக்கிறான். இதைப் பற்றி சபாபதி அவனிடம் சொல்லவில்லை. ஆனாலும் தன்னுடைய சாட்டையடியின் மூலம் ராதாவின் தலையிலிருந்து ஒவ்வொரு பூவாக விழவைத்து விஸ்வத்தின் திட்டத்தை தவிடுபொடியாக்குகிறான்.

இதற்கிடையில் நாகேஷின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்பதன் மூலம் வீட்டிலுள்ளோருக்கு, உயிருடன் திரும்பி வந்ததாக தாங்கள் நம்பியிருப்பது கண்ணன் அல்ல என தெரியவருகிறது. கோபம் கொள்ளும் மீனாட்சி மற்றும் பூபதியின் மனைவி மற்றும் வீட்டிலுள்ளோர் யாவரும் கண்ணனை வீட்டை விட்டுத் துரத்துகிறார்கள். இது கண்ணனுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக அமைகிறது. தன்னுடைய நல்ல முயற்சிகளெல்லாம் இப்படி திடீரென வீணாகப் போகும் வாய்ப்பை எதிர்பார்க்கவில்லை. எனவே கண்ணன் உண்மையை சொல்லுகிறான்.

உண்மையிலேயே தான் கண்ணன் தான் எனவும், படகிலிருந்து நீரில் மூழ்க இருந்தபோது வேறொரு படகில் வந்த ஒரு நாடக கம்பெனியினர் காப்பாற்றி விட்டதாகவும் அதன் மூலம் தான் உயிர் பிழைத்ததாகவும் சொல்கிறான். இறந்து போன கண்ணன் திரும்பி வந்தால், விஸ்வத்தின் மீது கொலைப்பழி விழும் என்பதால், அதைத் தவிர்க்க விரும்பி இது போன்று திட்டமிட்டதாகவும் அதற்கேற்ப தானே சபாபதியிடம் இன்னொருவர் மூலம் சின்னையாவைப் பற்றி சொல்ல வைத்ததாகவும் தன்னை நம்புமாறும் வீட்டிலுள்ளோரிடம் முறையிடுகிறான். ஆனால் யாருமே அவன் பேச்சைக் கேட்கவில்லை. குழந்தை உமா மட்டும் அவன் கண்ணன் தான் என தீர்மானமாய் நம்புகிறது.

கண்ணன் மேல் வீட்டில் உள்ளோருக்கு ஏற்பட்ட கோபம், விஸ்வத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது. இதை பயன்படுத்தி, கண்ணனை வீட்டை விட்டு அடித்து விரட்டுகிறான்.

இந்த நேரத்தில் தான் பூபதி சொன்ன ரகசியம் கண்ணனுக்கு நினைவுக்கு வருகிறது. அதைப்பற்றி சொன்னால் மீனாட்சியம்மாளும் மற்றவர்களும் நம்புவர் என தீர்மானித்து அந்த ரகசியத்தைப் பற்றி சொல்கிறான்.

அந்த ரகசியம் கண்ணனை காப்பாற்றியதா
கண்ணன் உண்மையிலேயே கண்ணன் தான் என்பதை வீட்டிலுள்ளோர் நம்பினார்களா
அந்த ரகசியத்தில் என்ன புதைந்திருக்கிறது
கண்ணன் ராதா காதல் என்ன ஆயிற்று
விஸ்வம் திருந்தினானா

இவை எல்லாவற்றையும் படத்தின் க்ளைமாக்ஸ் கூறும்.

ராதாவின் தலையில் ஒவ்வொரு பூவாய் சாட்டையில் அடித்து கீழே விழ வைக்கும் காட்சியைத் தான் பாடலாக உருவகம் செய்திருக்கிறார்கள்.

அந்தப் பாடலே இன்றைய தேர்வாய் அமைந்துள்ளது.

தன்னுடைய இசையில் ஒவ்வொரு இசைக்கோர்வையிலும் இந்தப்பாட்டின் த்ரில்லை தக்க வைத்திருக்கிறார் மன்னர். மிகவும் அருமையாக படமாக்கப்பட்ட காட்சி. ஒளிப்பதிவாளர் தம்பு மற்றும் படத்தொகுப்பாளர் கந்தசாமி இருவரின் பங்களிப்பு, பாடல் சிறப்பாய் அமைய பெரிதும் உதவியிருக்கிறது.

ஸ்டைலுக்கும் நடிப்பிற்கும் இலக்கணமாய் திகழும் நடிகர் திலகம் தன்னுடைய கண் பார்வை, முக பாவம், சாட்டையைப் பிடிக்கும் லாவகம், அதை வீசும் நேர்த்தி, சரோஜாதேவியின் தலையில் படாதவாறு அற்புதமாய் சாட்டையை வீசும் ஜாக்கிரதை உணர்வு, எல்லாவற்றையும் விட பாடல் முடியும் போது திடீரென பாலாஜியின் பக்கம் திரும்பி அவர் கையிலுள்ள பூவை விழவைப்பது என அதகளம் பண்ணுகிறார். பாடல் முழுதும் அவருடைய ஸ்டைலின் உச்சம்...

சரோஜாதேவி இந்தப் பாடல் காட்சியில் தன் நடிப்பின் மூலம் அந்த பாத்திரத்திற்கு Justice செய்திருக்கிறார். குறிப்பாக கவனிக்க வேண்டியது, நடிகர் திலகத்தின் கையில் சுருட்டி வைத்திருக்கும் சாட்டையின் நுனியை மிக அழகாக பிடித்து அந்த சாட்டையை விரிவு படுத்தும் இடம் அமர்க்களமாக இருக்கும்.

பாலாஜி தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து மக்களிடம் வெறுப்புணர்வை சம்பாதிக்கிறார்.

ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களின் ரசனைப் பசிக்கு தீனி போட்டிருக்கிறார் நடிகர் திலகம்.

மன்னரின் conceptல் இப்பாடல் காலத்தால் மறக்கவொண்ணா உன்னதமாய் அமைந்திருக்கிறது. சாட்டையால் அடிக்கும் காட்சி ஆனால் அதை நாயகியே வலுவில் நாயகனை செய்ய வைக்கும் விதமான காட்சியமைப்பு. வித்தியாசமான அதே சமயம் விறுவிறுப்பும் திகிலும் உருவாக்கும் சூழ்நிலை.. மன்னருக்கு சரியான சவால், சும்மா புகுந்து விளையாடி விட்டார்.

பாடல் காட்சிக்கேற்ப கதையையும் கொண்டு வந்து நாயகனுக்கு தைரியம் கொடுத்து நாயகி பாடுவதாக அமைந்த பாடல் சூழ்நிலையை கவியரசர் மிக பிரமாதமாக தன் வரிகளில் கொண்டு வந்திருக்கிறார்.

சிகரம் வைத்தாற்போல் அமைந்தது தான் இசையரசியின் பங்களிப்பு. Oh what a singing! What a powerful voice madam has! அவருடைய குரல்களில் தான் எவ்வளவு அற்புதமாக அத்தனை உணர்வுகளும் வந்து விழுகின்றன.

An all-time delight today’s song!

இன்னொரு அற்புதமான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்!


Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
10/03/2020 3:14 am  

மெல்லிசை மன்னரின் ரசிகர்களுக்கான வாட்ஸப் குழுவில் மீண்டும் பல்லவி என்ற தொடரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 78
10/03/2020 4:06 am  

அன்பு VR

அருமை. இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்புத்  தான் என்றாலும் இது ஒரு கடினமானது. சிரிப்பு சாட்டை பாடல் அனைத்தும் ஒருங்கிணைப்பது அந்தக் காலத்தில் கடினமே. அதனை திறம்பட செய் த ஒலிப்பதிவாளருக்கு தனி சபாஷ். 

இசை அரசியின் குரல் 60 களில் தனியாக சொல்லவும் வேண்டுமோ தேனில் விழுந்த பலா. 

மெல்லிசை மன்னர் அவருடைய இசை ராஜாங்கத்தை விரிவுபடுத்திய நேரம் அது. துவம்சம் பண்ணிய நேரம்.ஆனால் பாடல்களை துவம்சம் பண்ணாத நேரம் ரசிகர்களை  இனிமை உலகிலேயே இருக்க வைத்த காலம. வேறென்ன சொல்ல 

சூழ நிலைப் பாடல் கவியரசு மெல்லிசை மன்னர் காலமெல்லாம் நிலைக்கும் பாடல் இதுவும் அதில் ஒன்று நன்றி 

 

best Regards
vk


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 65
11/03/2020 1:34 pm  

மிகவும் வித்தியாசமான பாடல். இந்த பாடலை சில மாதங்களுக்கு முன்பு ஆராய்ந்து ஓர் வாட்ஸ்ஆப் குழுவில் வழங்கியிருந்தேன். அந்த கட்டுரையை கீழே தனியாக பதிவிடுகிறேன்.

ரமணன் கே.டி.


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 65
11/03/2020 1:43 pm  

இன்று நாம் அலசவிருப்பது அந்த காலத்தில் பிரபலமாயிருந்து பிறகு மறக்கப்பட்ட ஒரு வித்தியாசமான பாடல் - "என் தம்பி" படத்திலிருந்து "தட்டட்டும் கை தழுவட்டுமே" என்ற பாடல் தான் அது.

கே. பாலாஜி தயாரித்து, ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி, பாலாஜி, சரோஜாதேவி, ராஜசுலோச்சனா, பண்டரிபாய், சுந்தரிபாய், நாகேஷ், மேஜர், வி.கே.ராமசாமி, வி.நாகையா, பேபி ரோஜாரமணி, மாதவி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் "என் தம்பி".

இந்த பாடல் கிட்டத்தட்ட முக்கால் வாசி படம் ஓடிய பிறகு வருகின்ற ஒன்று. அது வரையிலான கதை சுருக்கமாக உங்களுக்காக. ஜமீன்தாரான மேஜரின் மூத்த தாரத்தின் மகன் சிவாஜி. சிவாஜி பண்பு, அன்பு, தன்னடக்கம் நிறைந்தவர். தாயற்ற பிள்ளை என்பதால் மேஜர் அவர்மேல் அளவுகடந்த பாசம் வைத்துள்ளார். இரண்டாம் தாரமான சுந்தரிபாயின் குழந்தைகள் பாலாஜி மற்றும் ரோஜாரமணி. சிறுவயதிலிருந்தே பாலாஜிக்கு சிவாஜி மேல் பொறாமை, ஆத்திரம். குழந்தை ரோஜாரமணி சிவாஜிமேல் மிகுந்த பாசம் கொண்டவள். சித்தி சுந்தரிபாய் பாலாஜியைப்போல் சிவாஜியை வெறுப்பவர்.

மேஜரின் விதவை சகோதரி பண்டரிபாய். அவரது பிள்ளைகள் நாகேஷ் மற்றும் சரோஜாதேவி. சரோஜாதேவி மற்றும் சிவாஜி காதலர்கள். எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று எதிர்பார்த்திருப்பவர்கள். இத்தருணத்தில் பாலாஜியின் தவறான செய்கையால் நொந்து போய் மேஜர் இதய நோயால் பாதிக்கப்படுகிறார். அதனால் அவர் இன்னாருக்கு இன்ன சொத்து என்று உயில் எழுதி உயிர் விடுகிறார். இறப்பதற்கு முன் மேஜர் சரோஜாதேவியை தன் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளவேண்டும் அதற்க்கு நீ சத்தியம் செய்து தரவேண்டும் என்றும் சொல்லி பண்டரிபாயிடம் சத்தியம் செய்து வாங்குகிறார். உயில் படி பாலாஜிக்கு சொத்துக்களை நேரடியாக அனுபவிக்க முடியாது. அவரது சொத்துக்களுக்கு கார்டியனாக சிவாஜி மற்றும் பண்டரிபாய் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலாஜிக்கு எது தேவை என்றாலும் சிவாஜி அல்லது பண்டரிபாயிடம் கையேந்தவேண்டும். இதனால் சினமுற்ற பாலாஜி, திருந்தியவர் போல் நடிக்கிறார். மறைந்த தன் தந்தைக்கு கோயில் கட்ட ஆசைப்படுவதாகவும், அதற்காக தனக்கு ஒரு தொகை தேவைப்படுகிறது என்றும், கோயில் கட்டுவதற்க்கான இடத்தை காண்பிக்கிறேன் என்று கூறி சிவாஜியை விசை படகு ஒன்றில் ஏற்றி ஒரு தீவுக்கு அழைத்து செல்கிறார் பாலாஜி. பாதி வழியில் படகின் வேகத்தை அதிகரித்து விட்டு சொத்தை அனுபவிக்க விடாமல் குறுக்கே நிற்கும் உன்னை ஒழித்துக்கட்ட இது தான் வழி என்று சொல்லி கடலில் குதித்து பாலாஜி தப்பித்துக்கொள்கிறார். படகு ஒரு பாறையில் மோதி வெடித்து சிதறுகிறது. எல்லோரும் சிவாஜி இறந்து விட்டார் என்றே நினைக்கின்றனர்.

சுந்தரிபாயும், பாலாஜியும் சதி செய்து சரோஜாதேவியை பாலாஜிக்கு மணம்முடித்து வைக்க திட்டமிடுகின்றனர். செய்வதறியாது தவிக்கிறார் பண்டரிபாய். நாகேஷ் அதை எதிர்க்கிறார். அப்போது தற்செயலாக தெருக்கூத்து ஒன்றில் சிவாஜியைப்போல் தோற்றமுள்ள ஒருவரை நாகேஷ் பார்க்கிறார். அவரை சந்தித்து பேசி மசியவைத்து இறந்த சிவாஜி போல் நடிக்குமாறு ட்ரைனிங் கொடுத்து அழைத்துவருகிறார். பண்டரிபாய் மற்றும் சரோஜாதேவி அது இறந்து விட்டார் என்று கருதிய சிவாஜி தான் என்று நம்பினாலும் பாலாஜி & கோ அவரை நம்ப தயாராக இல்லை. அவரை பலவிதமாக பரீட்சிக்கிறார்கள், சிவாஜியும் சாமர்த்தியமாக அதில் வெற்றி பெறுகிறார். ஒரு நாள் தோட்டத்தில் சிவாஜியும், சரோஜாதேவியும் அமர்ந்திருக்க பூக்களை பறித்து சிவாஜி சரோஜாதேவியின் கூந்தலில் சொருக அங்கு பாலாஜி சாட்டையுடன் வருகிறார். உன்னுடைய பழக்கம் இதல்ல சரோஜாதேவியின் கூந்தலில் இருக்கும் பூக்களை குறி தவறாமல் சாட்டையால் அடித்து பறிப்பது தான் சிறு வயதிலிருந்தே உன் பழக்கம், அதனால் இந்த சாட்டையை பிடி, அவள் கூந்தலில் இருக்கும் பூக்களை ஒன்றொன்றாக நான் 1, 2, 3 சொன்னதும் சாட்டையால் அடித்து பறி என்று கட்டளை இடுகிறார். சிவாஜி தயங்க, உங்களுக்கென்ன பயம், தயக்கம், தைரியமாக சாட்டையால் பூக்களை பறியுங்க அத்தான் என்று சரோஜாதேவி தைரியம் கூற, சிவாஜி ஆயத்தமாகிறார். அப்போது வருவது தான் இந்த பாடல்.

"சாட்டையடி" பாடல்கள் கூடுதலாக செய்தவர் மன்னராகத்தான் இருக்கக்கூடும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அவர் தான் இதை ஆரம்பித்தாரா, அல்லது அவருக்கு முன்னால் யாராவது சாட்டையடி பாடல் / பாடல்கள் செய்துள்ளாரா? For MSV I think it all started with “எதிரிக்கு எதிரி சாட்டையடி" from “பெற்ற மகனை விற்ற அன்னை" – which was more like mocking and praising, continued with “ஆடாமல் ஆடுகிறேன்" from “ஆயிரத்தில் ஒருவன்" – which is a pathos, again continued with “தட்டட்டும் கை தழுவட்டும்” i.e., today’s song – which is a mixture of encouraging, romance, confidence, pinch of mocking and sadness, and ultimately taking a new avatar with “பட்டது ராணி பார்க்கும் பார்வை" – which is filled with proud,vengeance, thrill and suspense.

As I said this song is a mixture of few emotions - encouraging, romance, confidence, pinch of mocking and sadness. It’s somewhat easy to create a tune for the other situations viz., “எதிரிக்கு எதிரி சாட்டையடி", “ஆடாமல் ஆடுகிறேன்" and “பட்டது ராணி பார்க்கும் பார்வை" as they don’t have more than 2 emotions. But this song is different which has too many shades, hence it would have been a tough job for MSV to create a tune for this situation. But, we must say that he has come out with flying colours.

The prelude starts with Violin, Trumpet, Flute combined together backed with Bongos for rhythm. This gives a mixed feeling of fear and thrill. This is followed by a piece in Flute, which gives the feel of romance, which is followed by fast run in Violin and then by Accordion, which gives the feeling of boosting - என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், துணிந்து செயல்படு. And then the pallavi starts. PS sings the pallavi twice. When she finishes the pallavi once, it is filled with a brisk interlude in Accordion. Pallavi conveys the feelings of boosting, romance, mocking and slight sadness.

The first bgm – starts with a brisk piece in Accordion and is followed by Cello, I suppose, and Violin alternatively. And then the first charanam starts – She sings the four lines of charanam. The first line is embellished with a small interlude in Accordion and the second is embellished with a small interlude in Flute, I suppose. The pallavi is finished with a follow on by Accordion and the pallavi is repeated once. This portion is filled with romance and confidence/boosting. The charanam and the repeat of pallavi starts in off-beat. In fact in the whole song the rhythm is slightly complicated. Bongos is used for charanam too.

The second bgm – this starts in the voice of Balaji counting 1,2 and not finishing it by 3 instead with a laugh – indication of fooling. It is taken over by fast runs in violins and then a small piece in Flute, which is followed by Trumpet and violin. Then the second charanam starts. This charanam is slightly modified both in singing as well as Thaalam. Here for the charanam portion he introduces Tabla. Here after the second line of the charanam, it has been embellished with a brisk interlude in Accordion. This portion is filled with romance and concern. The pallavi is repeated once with its original rhythm in Bongos with a follow on by Accordion.

The third bgm – this starts with a long piece in Flute with counter melody in violin/Cello. It is followed by 5 times banging of a chord probably in Piano or guitar and immediately the count down by Balaji starts viz., 1,2,3 backed with a thrilling effect in violin followed by the sound of whip. It is followed by thrilling effect in violin and banging of chords probably in guitar or Accordion. And the third charanam starts. Again, this charanam too is modified. The interlude is embellished in the same fashion like second charanam. This portion is filled with confidence, concern and pathos. Here instead of singing the pallavi, she repeats the first charanam in quick succession to third charanam and then sings the pallavi once with a small interlude in Accordion before that.

Then the concluding part – it starts with the follow on by Accordion. Which is taken over by thrilling music by Trumpet, violin, Accordion backed up with brisk work in Bongos and the count down by Balaji follows. Lashing of whip follows 4-5 times and ends with the lashing sound of whip.

As I said in the beginning, this one is quite different from all other “whip songs” filled with lots of emotions and complicated rhythm.

The audio quality of the video is very poor, thereby its quite difficult to find out the exact instruments at times.

ரமணன் கே.டி.


ReplyQuote
Share: