1967ராஜ ராஜ ஸ்ரீ ரா...
 
Notifications
Clear all

1967ராஜ ராஜ ஸ்ரீ ராணி//ஊட்டிவரை உறவு


kothai
(@kothai)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 73
Topic starter  

எல். ஆர் . ஈஸ்வரி பாடல்கள் என் ரசனையில் ... 16 ,

பெரும்பாலான படங்களில் துணை கதாநாயகிக்கு ஈஸ்வரி அம்மாவின் குரலே பிரதானமாக இருக்கும் . கதாநாயகியின் பாடல் இசையினின்று இவர்களுக்கு வேறு விதத்தில் இசை அமைந்திருக்கும் . இதை எம் எஸ் வி ஐயா அவர்கள் இசையில் நன்கு கவனிக்கலாம் .
பிரிந்து தனியாக இவர் இசையமைக்க அதில் பலவித புதுமைகள் செலுத்தியிருப்பார் . அதற்கு வசதியாக கதைக்கு , கதாபாத்திரங்களுக்கு முக்கியம் கொடுக்கும் இயக்குனர்கள் குறைந்துவிட்டனர். கதையும் சரி , பாடல்களும் ஜனரஞ்சக மாக இருக்கட்டும் என்ற அமைப்பில் இயக்குனர் பார்வை இருந்தது .
இந்த கட்டத்தில் எம் எஸ் வி அவர்கள் இசையும் படம் காணும் வெற்றியில் ஒரு தனித்த பங்கை பெறலாயிற்று . அந்த வரிசையில் வந்ததுதான் ஊட்டிவரை உறவு திரைப்படம் . வெளியீடான அன்று பிரத்யேகமாக இதில் இடம்பெற்ற பாடல்களில் , ஸ்ரீனிவாசும் , ஈஸ்வரி அம்மாவும் பாடிய , "
"ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்..
ராஜ போகம் தர வந்தாள்…"
எனும் பாடல் . முத்துராமன் , எல். விஜயலக்ஷ்மி நடிப்பில் ஒரு துள்ளல் இசை .ஆரம்பமே மென்மையான இசைக்கருவியிலும் ஒரு தாளக் கட்டு கொண்டு ஒலித்து வர , நடிக்கையில் துள்ளல் நடனம் ...அபிநயங்களோடு அரங்கேறும் .
"கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த..
கன்னமிரண்டும்
இன்னொரு ரகசியம் சொல்ல..
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்...
ராஜ போகம் தர வந்தான்....' ஆண்குரல் மிதமாகப் பாடல் பெண்குரல் .. வேகவேகமாக சொற்களை உதிர்த்துக் கொண்டே பாடும் திறன் அழகு ஈஸ்வரி அம்மாவிற்கு கை வந்த கலை .
"தேடிச்சென்ற பூங்கொடி காலில் பட்டது>
சிந்தும் முத்தத்தால்
என்னை பின்னிக்கொண்டது .... ' கவியரசர் வரிகள் ...அழகு மாறாத தமிழ் நடை ...
அந்தாதி பாடுவதுபோல் ஆணின் கடைசி வார்த்தையையே தொட்டு ...
'பின்னிக்கொண்ட பூங்கொடி தேனை தந்ததது
தேனைத் தந்ததால் இந்த ஞானம் வந்தது..''
காதல் கொண்ட மனங்கள் பேசும் அழகு இசையோடு பின்னி வர ...
"ஞானம் ஒன்றல்ல பிறந்த
கானம் ஒன்றல்ல' கூறும் அணைத்த தொடர்ந்து , பெண் குரலும்
"எழுந்த ராகம் ஒன்றல்ல
விழுந்த தாளம் ஒன்றல்ல"என , இருவரும் அடுத்து
"ஊடல் கொண்டு>
கூடல் கொண்ட தாளம் ஒன்றல்ல>'
இப்படி அவர்கள் பாடியதை இசையமைத்தவருக்கும் ஒரு பங்கு அளிக்கலாம் .
"கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த....
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல '.....
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்…
ராஜ போகம் தர வந்தாள்..''...அனுபல்லவியை தொடர்ந்து பல்லவியைப் பாடவிட்டது ஒரு இசை நுட்பமே .
இதைப்போன்ற வரிசையிலேயே அடுத்து வரும் சரணங்களும் ...
"மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது.."
கன்னிப்பெண்ணில் மேனியில்
மின்னல் வந்தது>
காதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது..
பெண்ணும் பெண்ணல்ல
இணைந்த கண்ணும் கண்ணல்ல/
மலர்ந்த பூவும் பூவல்ல
அமர்ந்த வண்டும் வண்டல்ல...
ஊடல் கொண்டு
கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல..'
இனி புதியதொரு பாவனைகள் பெண் குரலில் வர
'நடை ஒரு வேதனை கொள்ள...
இதழ் ஒரு பாவமும்..
முகம் ஒரு பாவமும் சொல்ல..."
ஆண்குரலில்
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்...
ராஜ போகம் தர வந்தான்.....' என ஒரு அழகான பாடல் , புதுமை நடைபோட்டு இசையில் பவனி வந்தது .

1967 கண்ணதாசன் இசை எம் எஸ் வி .

கோதை தனபாலன்

https://www.youtube.com/watch?v=RYuu3YC4Hvo


Quote
Share: