1966 - Ramu - Nilav...
 
Notifications
Clear all

1966 - Ramu - Nilave Ennidam Nerungaathe  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 66
27/07/2020 5:44 pm  

பாடல் : நிலவே என்னிடம் நெருங்காதே
படம் : ராமு
பாடியவர்கள் : பி.சுசீலா, P.B.ஸ்ரீனிவாஸ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1966

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய தினம் நாம் ஆராய இருப்பது காலத்தால் அழிக்க முடியாத ஓர் immortal song. அன்று முதல் இன்றுவை எல்லோராலும் விரும்பி கேட்கப்படும் பாடல். One of the masterpieces of MSV-TKR and P.B.Sreenivas. Bagesree/Ragesree ராகத்தில் அமைந்த மிகச்சிறந்த பாடல் - இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆம், "ராமு" திரைப்படத்தில் இடம்பெற்ற "நிலவே என்னிடம் நெருங்காதே" என்ற பாடல் தான் அது.

அனைவருக்குமே தெரிந்த விஷயம் - pathos-ஸில் கடைந்தெடுத்த பாடல். ஆனால் இம்மியளவு கூட over emotional ஆகாமல் மிகவும் restrained ஆக வடிவமைத்த பாடல். சோகமானாலும் மயிலிறகால் வருடுவதைப்போல் சுகமாக அமைந்த பாடல். இதை தவிர மறைமுகமாக இந்த பாடலில் அப்படி என்ன அடங்கியுள்ளது என்று பலரும் நினைக்கக்கூடும். உள்ளதே, அதனால் தானே நான் இந்த பாடலை தேர்வு செய்ததன் காரணமே. உங்கள் அனைவருக்குமே தெரியும், நான் வழங்கும் பாடல்கள் என் விருப்ப பாடல்கள் என்றோ, என் அபிமான நடிகர்கள் / இயக்குனர்களின் பாடல்கள் என்றோ, அனைவராலும் விரும்பும் பாடல்கள் என்றோ "tag" செய்து வழங்கப்படும் பாடல்கள் அல்ல. மறித்து, அவைகள் எல்லாமே ஏதாவது விஷயங்கள் ஒளிந்திருக்கக்கூடிய பாடல்கள் - அதாவது அந்த பாடல்களில் மன்னர் ஏதாவது புதுமைகள் செய்து காட்டியிருப்பார், கதையை/சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களை/சூழ்நிநிலையை/பாடல் அமைந்த இடத்தை என இப்படி பலவற்றை அடிப்படையாக வைத்து பின்னப்பட்டு அதில் இசையால் பூடகமாக சில / பல விஷயங்களை சொல்லாமல் சொல்லியிருப்பார். அதை கண்டறிந்து ஆராய்ந்து வழங்குவதைத்தான் வழக்கமாக கொண்டுள்ளேன். அதை தெரிந்து கொள்ள வழக்கம் போல் கதை, கதாபாத்திரங்கள், சூழ்நிலை இத்தியாதிகளை தெரிந்துகொள்ளவேண்டியுள்ளது.

கதை மிக சுருக்கமாக : நாயகன் ஜெமினியின் மனைவி புஷ்பலதா ஓர் தீ விபத்தில் இறந்து போகிறார். அதை பார்க்கும் அவரது சிறு வயது மகன் அதிர்ச்சியில் பேசும் திறமையை இழக்கிறான். பட்டாளத்திலிருந்து ஊர் திரும்பும் ஜெமினிக்கு இந்த அதிர்ச்சி காத்திருக்கிறது. பேச்சிழந்த மகனை குணப்படுத்துவதற்காக ஜெமினி அந்த ஊரைவிட்டு போகிறார். போகும் வழியில் சிலருடன் மோதல் ஏற்பட்டு அடிபட்டு விழும் அவரை காப்பாற்றி அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார் கே.ஆர்.விஜயா. பிறகு மெதுவாக அவரை காதலிக்கவும் தொடங்குகிறார். அப்போது பாடப்படும் பாடல் தான் இந்த பாடல்.

காதல் மயக்கத்தில் அவள் பூடகமாக முணுமுணுப்பதை கண்டு அவருக்கு இந்த பாடல் வாயிலாக பதில் கொடுக்கிறார் ஜெமினி - நீ ஆசைப்படுவது தவறு, சும்மா ஆசையை வளர்த்துக்காதே, உனக்கும் எனக்கும் இருக்கும் வயது வித்தியாசம் என்ன, என்று வழக்கமாக பலரும் கூறும் அறிவுரை தான். ஆத்திரப்படாமல், அவசரப்படாமல், நின்று நிதானமாக தான் அவளுக்கு பதிலளிக்கிறார். கொந்தளிக்கவில்லை, முடியவே முடியாது என்று cut and right ஆக முறியடித்து சொல்லவில்லை.

பாடலில் overall சோக முலாம் பூசப்பட்டிருந்தாலும், நன்கு கூர்ந்து கவனித்தால் ஓர் விஷயம் புலப்படும் - இரண்டு BGM-ம்மிலும் "மங்களகரமாக" ஒலிக்கும் Shehnai வாத்தியம் (மேலோட்டமாக பார்த்தால் சோகமாக இருப்பது போல் தான் தோன்றும்). ஏன் இந்த வேறுபாடு? அங்கு தான் பாடலின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது - அல்லது மன்னரின் அதீத திறமை வெளிப்படுகிறது. வாய் வார்த்தையாக நீ ஆசைப்படாதே, இது தவறு என்று அவன் சொல்கிறானே தவிர ஆழ்மனதில் அவனும் அவளை விரும்புகிறான், ஆனால் விரும்பாதவன் போல் வேஷம் போடுகிறான் - படத்தின் கிளைமாக்ஸில் அவள் கரம் பற்றவும் செய்கிறான். மேலும், அவன் மறுத்தாலும், அவள் நம்பிக்கையை விடுவதாயில்லை. தன் பாசத்தால் அவன் மனதை மாற்றமுடியும், அவன் தன்னை ஏற்றுக்கொள்வான் என்று அவள் திடமாக நம்புகிறாள். அவன் ஆழ்மனதில் காதலிப்பதையும், அவளது நம்பிக்கை வீண்போகாமல் கிளைமாக்ஸில் அவளது கரம்பிடிக்கப்போகிறான் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது இந்த Shehnai pieces. Shehnai வாத்தியத்திற்கு இருக்கும் ஓர் பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் மங்களகரமாகவும் இருக்கும், அதே நேரத்தில் சற்றே சோக முலாம் பூசியது போலவும் இருக்கும். இதை நன்கு அறிந்தவர் தானே மன்னர். அதனால் தான் இந்த வாத்தியத்தை பயன்படுத்தியுள்ளார். It serves both the purposes - சோகத்துக்கு சோகமாகவும் தொனிக்கிறது, அதே நேரத்தில் வட மாநிலங்களில் திருமணத்திற்கு இந்த வாத்தியத்தை தான் பயன்படுத்துவார்கள் என்று அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் இது மங்களகரமானது என்று - அதாவது இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது என்று. கவனித்து பார்த்தால் (கேட்டால்) புரியும் பாடலின் BGM-ம்மில் வரும் Shehnai pieces வட மாநிலங்களில் திருமணத்தின் போது வாசிக்கப்படும் அதே பாணியில் வாசிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்க்கு பக்கபலமாக வாசிக்கப்படும் Nagada (Nagara) என்ற percussion கருவியைத்தான் தாளத்துக்கு பயன்படுத்தியுள்ளார் என்றும்.

பி.சுசீலாவின் குரலில் தொகையறா பாணியில் பாடல் ஆரம்பிக்கிறது (which is actually an old private song sung by N.C.Vasanthakokilam). இதற்க்கு வாத்தியக்கருவி ஏதும் சேர்க்கப்படவில்லை. Then the prelude begins. The main instruments used in prelude are Sitar, Flute, Tabla and Swarmandal. புல்லாங்குழலுக்கு பிறகு கேட்க்கும் ஒலி Swarmandal-லினுடையது. Pallavi is backed up with Tabla and embellished with Flute interludes.

First BGM – main instruments used are – Shehnai, Triangle, Nagada (Nagara) and Guitar Chords.

Second BGM – Swarmandal, Sitar, Flute and Nagada (Nagara).

Third BGM - Shehnai, Triangle, Nagada (Nagara) and Guitar Chords.

மேலே கூறிய சிறப்புகள் தவிர பாடலில் எடுத்துக்கூறவேண்டிய மற்ற சிறப்புகள் :

Singing portions அத்தனைக்கும் தாளத்துக்கு "தபலா" பயன்படுத்தப்பட்டுள்ளது (except the first interlude viz., அதாவது சுசீலா பாடி முடித்து PBS பல்லவி ஆரம்பிக்கும் முன் வரும் சிறு இசை - அது பல்லவி தொடங்குவதற்கான continuity-க்காக வாசிக்கப்பட்டது).

மூன்று BGM-களுக்கும் தபலாவை தவிர்த்து Nagada (Nagara) மட்டுமே வாசிக்கப்பட்டுள்ளது.

பாடல் முழுக்க முழுக்க ஹிந்துஸ்தானி பாணியில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹிந்துஸ்தானி பாடல்களுக்கு என்னென்ன வாத்தியங்கள் பயன்படுத்துவார்களோ அந்த வாத்தியக்கருவிகள் மட்டும் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது – அதாவது Swarmandal, Sitar, Shehnai, Flute, Tabla and Nagada. Triangle பயன்படுத்தப்பட்டுள்ளது embellish பண்ணுவதற்காக மட்டுமே. Even Swarmandal is used / played exactly the way it is being used in Hindustani concerts. அதாவது வழக்கமாக அவர்கள் பல்லவி துடங்குவதற்கு தோதாக Swarmandal-லில் chord வாசித்து பல்லவி ஆரம்பிப்பார்கள். அதுபோல் சரணம் பாடி முடித்து மீண்டும் பல்லவி ஆரம்பிப்பதற்கு முன் filler போல் Swarmandal chord வாசித்து பல்லவி பாடுவார்கள். அது போல் பாடல் முடிந்ததும் அதை நிறைவு செய்வது போல் கடைசியில் Swarmandal chord வாசித்து முடிப்பார்கள். அந்த முறையை தான் இந்த பாடலில் மன்னர் கடைபிடித்துள்ளார். கவனித்து கேளுங்கள் பல்லவி ஆரம்பிக்கும் முன்னரும், ஒவ்வொரு சரணம் முடிந்து மீண்டும் பல்லவி ஆரம்பிப்பதற்கு முன்னமும், பாடலின் கடைசியிலும் Swarmandal வாசிக்கப்பட்டுள்ளதை கேட்கலாம்.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://youtu.be/F0xW0-EfOrQ


Quote
K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 133
28/07/2020 2:28 am  

Dear Mr. Ramanan 

                                 Your choice from "Ramu' has been a truly outstanding piece by MSV [ no TKR ]. Other pieces of information relating to this number are as under.

MSV rapidly churned out as many as 15 different patterns  of singing [or tune variants ] for this song. A  bewildered Srinivas  asked MSV AS TO WHICH FORM OF THE TUNE TO BE SUNG. An unruffled MSV said "Choose whatever is comfortable for you" . Obviously what we know is the tune chosen by PBS.  Another interesting episode involving this song pertains to Shri SPB WHO SOUGHT AN OPPORTUNITY AS A SINGER under MSV's setting. When asked to sing , SPB  used 'nilave ennidam' to present his voice and grasp of the nuances.  Such has been the dominance of composition. To date this song is an acid test for aspirant singers in competitions. 

Thanks for the opportunity.   Regards              Prof. K.Raman     Madurai


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 66
28/07/2020 2:35 pm  

Thank you so much sir. Yes, music is by MSV alone, which I have stated in the credits, but erroneously mentioned as MSV-TKR in the text matter.

Edit option is not available for me. Hope "Admin" would delete "TKR" from the text which appears in the second line (viz., MSV-TKR).

Have heard about the incidence narrated by you through PBS's interview.


ReplyQuote
K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 133
29/07/2020 2:03 am  

Dear Mr. Ramanan,

No harm if you associae TKR's name with that of MSV; but factually not perfect. Ours is a forum of admirers ;what we try to add are mere additional input to strengthen the information on the then scenario. Please do not take them as corrections. They are mere reinforcements of opinion. Thank you  Warm Regards. K.Raman   Madurai.       


ReplyQuote
K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 133
29/07/2020 2:04 am  

Dear Mr. Ramanan,

No harm if you associae TKR's name with that of MSV; but factually not perfect. Ours is a forum of admirers ;what we try to add are mere additional input to strengthen the information on the then scenario. Please do not take them as corrections. They are mere reinforcements of opinion. Thank you  Warm Regards. K.Raman   Madurai.       


ReplyQuote
Share: