1966 - Chandrodayam...
 
Notifications

1966 - Chandrodayam - Engiruntho Aasaigal  

  RSS

K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 54
17/09/2019 3:08 pm  

பாடல் : எங்கிருந்தோ ஆசைகள்

படம் : சந்திரோதயம்

பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா

பாடலாசிரியர் : வாலி

இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

வருடம் : 1966

 

அனைவருக்கும் வணக்கம்.

இன்று நாம் அலச இருப்பது இன்றுவரை எல்லோராலும் விரும்பப்படுகிற மிகவும் பிரபலமான ஒரு பாடல்.  "சந்திரோதயம்" படத்திலிருந்து "எங்கிருந்தோ ஆசைகள்" என்ற பாடல் தான் அது.  மன்னர் இந்த பாடலை எப்படி வடிவமைத்திருக்கிறார் என்று பார்ப்போமா. அதற்க்கு முன் இந்த பாடல் இடம்பெறும் வரையிலான படத்தின் கதையை பார்ப்போமே.  இந்த பாடல் ஏறத்தாழ முக்கால்வாசி படம் ஓடிய பிறகு தோன்றுகிற பாடல்.

அசோகன் பெரும் செல்வந்தர்.  அவருடைய ஒரே மகள் ஜெயலலிதா. தாயில்லாத  அவர் ஒரு கூண்டுக்கிளி போல் வளர்க்கப்படுகிறார்.  அவரை சொந்த மகள் போல் ஆயாவான பண்டரிபாய் கவனித்துக்கொள்கிறார்.  ஜெயலலிதா வெளியுலகம் காணாத கிணற்றுத்தவளை.  படிப்பு சொல்லிக்கொடுப்பதிலிருந்து எல்லாமே வீட்டில் தான்.  சிறு வயதிலிருந்தே ஆண்களை வெறுப்பவர்.  திருமணத்தையும் வெறுப்பவர். 

பத்திரிகை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் எம்.ஆர்.ராதாவால் ஏமாற்றப்பட்டவர் பண்டரிபாய்.  இவர்களுக்கு பிறந்தவர் பாரதி.  ஆனால் சூழ்நிலையால் மூவரும் பிரிந்து வாழ்கின்றனர்.   எம்.என். நம்பியார் பெரிய ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். அவர் ஒரு பெண் பித்தர்.  பாரதியை அவர் கெடுத்துவிடுகிறார்.  சாகப்போகும் அவரை எம்.ஜி.ஆர். காப்பாற்றுகிறார்.  சூழிநிலை பாரதியை பண்டரிபாயிடம் கொண்டு சேர்க்கிறது.  அவரை அசோகனின் வீட்டில் ஜெயலலிதாவிற்கு பணிப்பெண்ணாக சேர்த்துவிடுகிறார் பண்டரிபாய்.  எம்.ஜி.ஆர்., எம்.ஆர். ராதா நடத்திவரும் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிபவர். 

ஜெயலலிதாவுக்கு திருமணம் செய்துவிக்க தீருமானிக்கிறார் அசோகன்.  அவர் பார்த்து வைத்த மாப்பிள்ளையோ பெண் பித்தரான எம்.என்.நம்பியார். திருமணம் செய்து கொள்ள  விருப்பமில்லாத ஜெயலலிதா அன்றிரவு வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.  வெளியுலகம் பார்த்திராத அவர் எங்கு போவதென்றறியாது திகைத்து நிற்பதை காணும் நம்பியார் அவரை அடைய நினைக்க அங்கு எம்.ஜி.ஆர். தோன்றி அவரை காப்பாற்றுகிறார். அன்று இரவு அவருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கவும் செய்கிறார்.

“நீ செய்தது தவறு, திருமணம் வேண்டாமென்றால் உன் தந்தையிடம் பேசி அதை நிறுத்திவிடலாம் வா” என்று சொல்லி அவரை அவரது வீட்டிக்கு அழைத்துப்போகிறார் எம்.ஜி.ஆர்.  ஆனால் அங்கு பாரதியை இவள் தான் என் மகள் என்று சொல்லி பெண் பார்க்கும் படலம் நடக்கிறது.  ஜெயலலிதாவை அசோகன் ஏற்றுக்கொள்ளாமல் துரத்தி விடுகிறார்.  ஒன்றுமறியா பச்சைப்பிள்ளை போல் இருக்கும் ஜெயலலிதாவை தனியே விட்டு வர மனமில்லாமல் அவரை தன்னுடன் அழைத்து வருகிறார்.  இனி மேல் இது போல் குட்டையான உடைகள் அணியக்கூடாது, பெண்ணா லட்சணமா புடவை தான் கட்டிக்கொள்ளவேண்டும் என்று சொல்லி அவருக்கு சேலை வாங்கி தருகிறார் எம்.ஜி.ஆர்.  புடவை எப்படி கட்டிக்கொள்வதென்று தெரியாது என்று அவர் சொல்ல, அவருக்கு புடவை எப்படி கட்டிக்கொள்வதென்று சொல்லிக்கொடுக்கிறார்.  அவர் காட்டும் அன்பும், அரவணைப்பும், அவரின் பண்பும் அவளுக்குள் ஒரு சலனம் ஏற்படுத்துகிறது.  அவரை அவள் விரும்ப ஆரம்பிக்கிறாள்.  தன்னை பிடிக்கவில்லையா என்று அவள் கேட்க எனக்கும் உன்னை பிடித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.  புடவையை எடுத்துக்கொண்டு அவள் செய்வதறியாது எப்படியெல்லாமோ சுத்திக்கொண்டு வர, எம்.ஜி.ஆர். அவளுக்கு புடவை கட்டி விடுகிறார். அவர் கை அவள் மேல் பட்டதும் அவளுக்குள் ஓர் சிலிர்ப்பு, ஓர் இனம் புரியாத சுகம். அப்போது தோன்றும் பாடல் தான் இது.

மன்னர் இதை visualize செய்திருப்பது இது போல தான் என்று என் சிறிய அறிவுக்கு தோன்றுகிறது -  அதாவது ஒரு மனிதனுக்குள் எழும் சில உணர்ச்சிகள் (upsurge), சிலிர்ப்பு, ecstasy இதை சுற்றித்தான் இந்த பாடலுக்கு அவர் வடிவம் தந்துள்ளார்.  அறியா பருவத்தில் ஒரு பெண்ணை - அதுவும் உலகம் அறியாமல் வளர்ந்த ஒருவள் மற்றும் ஆண்கள் / திருமணத்தை வெறுக்கும் ஒருவள் -  ஒருவன் அவனது அன்பாலும், பண்பாலும் கவர்ந்து விடுகிறான்.  அவளுக்கு அவன் பால் காதல் அரும்புகிறது. அத்தருணத்தில் அவன் கைகள் அறியாமல் அவளை தீண்டிவிட, அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு.  அத்தோடு காதலும் அரும்புவதால் அவளது இன்பம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  விரும்பும் ஒருவன் அருகில் இருக்கும் போது அவனை அடைய நினைக்கும் ஒரு upsurge, அதில் கிடைக்கப்போகும் ஒரு ecstasy.  அதாவது இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமானால் - அடிவயிற்றிலிருந்து இனம் தெரியாத ஒரு உருண்டை மெல்ல மெல்ல மேலேறி தொண்டைக்குள் வந்து சிக்கிக்கொண்டு நமக்குள் ஒரு திக்குமுட்டாடலை உண்டு பண்ணுகிறது அல்லவா அந்த உணர்ச்சி தான்.  அது ஓர் சில வினாடிகளில் தணிந்து மீண்டும் மெதுவாக கீழிறங்கி அடிவயிற்றுக்கே சென்று விடுகிறது போது சாந்தமாகிவிடுகிறோம்.  இந்த process -ஸை தான் அவர் இந்த பாடலில் கையாண்டுள்ளார். அத்தோடு "ஆசைகள்" என்பதை குறிப்பிடும் போது அதை "சிறகடித்து பறக்கிறது" என்று சொல்வதுண்டல்லவா.  இதையும் மனதில் கொண்டு அவர் பாடலுக்கு தாளம் பறவைகள் (இங்கு ஆசைகள்) சிறகடித்து பறப்பது போன்று போட்டுள்ளார்.   இந்த பாடலுக்கு  western பாணியை கையாண்டதற்குரிய காரணம், as per my knowledge, western பாணியில் progressive / relative chords என்று ஒரு பாணியுண்டு.  உணர்ச்சிகள் மெல்ல மெல்ல அதிகரிக்கிறது என்பதால் அந்த பாணி இதற்க்கு மிகவும் சரியாக இருக்கும் என்று அவரையும் அறியாமல் பயன்படுத்தியிருப்பார்.  Apart from this he has embellished with பெண்ணின் நாணம், நளினம், ஆணின் மிடுக்கு, etc.  The song is enriched with an amazing Counter Melody.

The prelude begins with violin runs in progressive manner, supported by guitar chords, double bass and probably Cello.  Then a small piece in Accordion is introduced – this violin runs indicates the gradual increase of upsurge in her and its subsequent cooling down.  Then a relay of Flute (fluttering style) and Accordion is placed – the Accordion pieces indicates upsurge and/or the feelings of the hero and the Flute flutters indicates பெண்ணின் நாணம் & நளினம்.  Here I feel this portion is ably backed up by violins, Xylophone chords apart from guitar chords.  When the relay of Flute & Accordion ends, a chord in Xylophone is placed and thereafter finished by a small piece in Sitar to enable the female singer to start the pallavi.  PS sings the pallavi once in sheer joy, naanam and nalinam.  Then comes the lengthy interlude – Xylophone, Flute, Violins and Santoor எல்லாம் அழகாக கோர்வையாக.  அதே தாளத்துடன் - பல்லவி ஆரம்பிக்கும் போது கிட்டார் chords -ஸோடு சேர்ந்து brush பாணியில் டிரம்ஸ், embellishing- ங்குக்காக Agogo -வும் சேர்க்கப்பட்டுள்ளது.  இந்த interlude அவளுக்குள் நிகழும் ரசாயன மாற்றைத்தை உணர்த்துகிறது.  Listen to the beauticul chord changes.  Then she repeats the pallavi in full again.

Then comes the first bgm – it’s a relay of Santoor and Violin and finished with a small piece in Accordion.  This is an expression of her joy and shyness - சந்தோஷக்களிப்பில் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் தவிப்பை உணர்த்துகிறது இந்த piece.  Then the first charanam starts in the voice of TMS.  This is divided into two portions – first portion he is very restrained and அவளுக்கு எடுத்துரைப்பது போலவும், சற்றே நக்கல் செய்வது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.  "ஆடவன் பார்வையில் ஆயிரும் இருக்கும்" என்ற பகுதி வரும் பொழுது அவனுக்குள்ளும் ஆசைகள் உருள துவங்குகின்றன.  And then regains normalcy and concludes the first charanam.  It is filled with a short and sweet piece in Santoor and a follow-on in Violin.  This indicates the "சலசலப்பு" in her as he called her by her name. Then he repeats the Pallavi once where he proclaims that it is he who changed her like this. 

The second charanam is slightly different from first charanam.

Second bgm – if the first bgm was a relay of Santoor and Violin, which depicted the quality of the female, this bgm is a relay of Saxophone and Violin.  This one is for the man – the sax indicates the manliness or oozes the seduction element.  For this bgm apart from the brushing drum, Bongos too is used to embellish the rhythm – an indication of triggering the passion.  Then PS starts the second charanam.  Again this portion is divided into two portions – first part filled with a “மயக்கம்" and from "பூவிதழ் மேலொரு பனித்துளி இருக்க" till the end of the charanam it is treated as “upsurge/ecstasy”.  இதுவரை restrained இருந்த அவனையும் இப்போது "ஆசை"/"upsurge" தொற்றிக்கொண்டு இன்பத்தின் எல்லையை (ecstasy) அவனும் அடைகிறான் – the portion sung by him “சந்தித்ததோ பார்வைகள்" conveys that.  இதுவரை தனித்தனியாக பாடிக்கொண்டிருந்த அவர்கள் இரண்டாவது சரணம் முடிந்ததும் பல்லவியை இருவருமாக சேர்ந்து பாடி முடிக்கிறார்கள் - அதுவும் எப்படி வார்த்தைகளில் பாடாமல் ஹம்மிங் ஆக பாடி முடிக்கிறார்கள்.  இரு மனம் இணையும் போது வார்த்தைகள் வெளிவராது அல்லவா, அதனால் தான் ஹம்மிங்கோடு வித்தியாசமாக முடித்துள்ளார் பாடலை. 

ரொம்பவே subtle ஆக, but at the same time powerful ஆக வடிவமைத்துள்ளார் இந்த emotion based பாடலை. 

One of the best romantic songs in TFM.  52 ஆண்டுகள் தாண்டிய பிறகும் இன்னமும் ருசி சற்றும் குறையாமல் இருக்கிறதென்றால் சும்மாவா.

மீண்டும் உங்களை சந்திக்கும் வரும் உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கும் கூறி விடைபெறுவது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://youtu.be/pF7jMNsrI1c


Quote
Share: