MSV&TKR /பருவம் எனத...
 
Notifications
Clear all

MSV&TKR /பருவம் எனது பாடல்../ஆயிரத்தில் ஒருவன்1965  

  RSS

kothai
(@kothai)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 71
18/02/2021 4:23 am  

வாலியும் தமிழும் ... 32.

பொதுவில் எனக்கு வாலியவர்கள் பாடலில் பெண்மையின் அழகை மட்டுமே ரசனையுடன் எழுதக்கூடியவர் என்ற எண்ணம் உண்டு . திரைப் பாடல்கள் என்பதால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம் . ஆனால் அவரிடம் பயின்று வந்த தமிழில் எனக்கு ஒரு ஈர்ப்பு என்றும் உண்டு .
அதன் விளைவே இந்தத்தொடரில் முதல் பாடலாக " மதுரையில் பரந்த மீன் கொடி யை ..' முதலில் வைத்தேன் . அது காதலன் காதலியை நினைத்துப் பார்த்து வர்ணிப்பது .
இன்று இங்கு ஒரு பெண்மையே தனது பெண்ணின் பெருமையாக ஆடிப்பாடிக் களிக்கும் ஒரு பாடலை பதிவிடுகிறேன் .

ஆயிரத்தில் ஒருவன் திரையில் இடம்பெற்ற ,

"பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்"

படிக்கும்போதே இனிக்கும் சுவையுடைய தான தெரிந்தெடுக்கப் பட்ட வார்த்தைகள் , வரிகளின் அமைப்பு ஒன்றேபோல் எதிரொலிப்பதான எதுகை மோனை ராகத்தில் இருக்கும் . பள்ளிப் அறிவதில் இதை நான் ஒரு குழுவினர் பாடலாகத்தான் ரசித்தேன் . பிறகு கேட்க கேட்க பாடலையும் மனதினுள் ரசிக்கலானேன் . இப்படி ஒரு அட்டகாசமான ஏற்கக்கூடிய செருக்காக வரிகள் அமைய,
அதற்குப் பொருத்தமாக ஜெயலலிதா ஆடிப்பாடி நடித்திருப்பார் .
கவியின் திறன் பருவம் என்ற சொல்லை முன்னெடுத்துச் சென்றாலும் கருணை , கலைகள் என்று தொடர்ந்து சேர்த்த விகிதம் பெண்மையின் மதிப்பை ஏற்றிச் சொல்லும் பாதையில் பயணிப்பதாக .அமைகிறது

அடுத்து,
"இதயம் எனது ஊராகும்
இளமை எனது தேராகும்
மான்கள் எனது உறவாகும்
மானம் எனது உயிராகும்..'
உணர்வுகளின் பிறப்பிடம் இதயம் . அதைத் தொட்டு செல்லும் வேகம் பாடும் சுசீலாம்மாவின் குரலில் உச்சகட்ட பாவங்களோடு ஒரு சேர செல்வதைக் கண்டு மனம் அசந்துதான் போகும் . உற்சாகம் விளிம்பின் எல்லையில் கரைபுரண்டு ஓடுவது தெரியும் .
பாடலை ஏந்திச் செல்லும் இசையமைப்பு நம் மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் & ராமமூர்த்தி அவர்களுடையதே .. இந்தத் திரையில் அனைத்துப் பாடல்களும் அற்புதம் .

"தென்றல் என்னைத் தொடலாம்
குளிர் திங்கள் என்னைத் தொடலாம்
மலர்கள் முத்தம் தரலாம்
அதில் மயக்கம் கூட வரலாம்..'
பெண்மையின் ஒரு வித செருக்கை வெளிப்படுத்தும் வரிகள் .

'சின்னஞ்சிறிய கிளி பேசும்
கண்ணங்கரிய குயில் கூவும்
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்..'
பறவையினங்கள் துதி பாடும்
பாவை எனக்கு துணையாகும்'

இங்கு நாயகி தன்னைப் பற்றிய ஒரு அறிமுகத்தைத் தருகிறார் .

'பழகும் விதம் புரியும்
அன்பின் பாதை அங்கு தெரியும்
பயணம் அதில் தொடரும்
புது வாழ்க்கை அங்கு மலரும்''

அவளது துள்ளலான ஆடல் , பாடல் , மனவோட்டங்கள் அனைத்தும் இப்பாடலில் எடுத்துச் சொல்லப் பட்டிருக்கும் .
சரளமாக சுசீலாம்மா இப்பாடலை அழகுறப் பாடியிருப்பார் . கேட்பவர் மனதில் எல்லா வகையிலும் ஒரு புத்துணர்ச்சியை அளிப்பதாக இருக்கும்.

மெல்லிசைமன்னர்கள் ... பாடல் முழுமைக்கும் ஒரே விதத் தாளக் கட்டில் கொண்டு சென்றிருப்பர்.

கோதை தனபாலன் .
https://www.youtube.com/watch?v=obA4xXQxnQc

1965


Quote
Share: