மெல்லிசை மன்னர்கள்இ...
 
Notifications
Clear all

மெல்லிசை மன்னர்கள்இசை// பூஜைக்கு வந்த மலர் 1965


kothai
(@kothai)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 73
Topic starter  

#சுசீலாம்மாபாடல்ரசனையில் .. 80
இசைமெல்லிசை மன்னர்கள்  msv & tkr …1965

பூஜைக்கு வந்த மலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ,

"மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட, நான் ஆடுவேன்..' பாடல் எனது என்பதாவது தெரிவாக .வருகிறது . பாடல் நம்மை .இழுக்கிறது .. பயின்று வரும் வரிகளில் ஏற்படும் ஈர்ப்பு அது தரும் கவி நயம் , பொருள் ஆழம் நம்முள் அப்பாடலை என்றும் .அசைபோடவைக்கிறது . ஸ்ரீனிவாஸ் அவர்களுடன் பல வெற்றிப் பாடல்களை சுசீலாம்மா தந்துள்ளார் . சுசீலாம்மாவின் குரல் இனிமை என்னளவில் இதுபோன்ற பாடல்களுக்கு ஒரு மகுடமாகவேத் .தெரியும் . மெல்லிசைமன்னர்கள் இசையில் இது இனிமையான ஒரு ஓட்டத்தின் மெயில் கற்களில் ஒன்று என்றே .சொல்லலாம்

"மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட, நான் ஆடுவேன்..' நடிகையர் திலகம் சாவித்திரி அவர்கள் நாயகியாகத் துவங்கி ...தொடர
"குழல் தந்த இசையாக, இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக, நான் பாடுவேன்..'
கண் மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட, நான் ஆடுவேன்....'
ஆஹ ஹா ஹ ஹா ...ஹம்மிங் வெகு அழகாகச் செல்லும்

ஜெமினி அவர்கள் ஸ்ரீனிவாஸ் அவர்கள் குரலில் .தொடர்வார் என் ரசனையில் ஸ்ரீநிவாஸ் அவர்கள் குரல் எதோ ஒரு வகையில் ஜெமினி க்கே மிகவும் பொருத்தமாக .இருக்கும்

"உறவென்னும் விளக்காக, உயிரென்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக, நான் வாழுவேன்...'......

விரல் கொஞ்சும் யாழாக, யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக, நான் மாறுவேன்...' இந்த இடத்தில எனது கவனம் பாடல்வரிகளுக்குள் சென்றுவிட்டது . கவிஞர் கண்ணதாசன் என்றே ...நினைத்தேன் ...ஆனால் வாலி அவர்கள் எழுதியது என்று பின்பு .அறிந்துகொண்டேன் . அதுசமயம் சில பாடல்கள் கவியரசை ஒற்றியே .எழுதினார் ர் கவியரசே தான் எழுதியதொ என்று சந்தேகிக்கும் அளவிற்கு . அது போன்ற ஒரு பாடல் இது . " கட்டோடு ..குழலாட ஆட ...' எனும் பாடல் இன்னும் சில ஞாபகத்தில் வர ... இப்பாடல் வேறுபட்டு சொற்கோவையில் இன்னும் அருமையாகத் தெரிந்தது . காதல் உணர்வுகளை ஏந்திச் செல்லும் வகையில் வாலி அவர்களின் கவி நயம் சிறப்பே .

"கை விரல் கொஞ்சும் யாழாக, யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக, நான் மாறுவேன்... என்று ஸ்ரீவினிவாஸ் அவர்கள் பிடித்த கண்ணி விடாது தொடர் மாலை பின்னுவதுபோல் பாடியிருப்பார் .

இணையாக , இனிமை தவறாது சுசீலாம்ம்ம ...

"இளங்காதல் வயதாலே தனியாகினேன்
அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்..' காதல் வயப்பட்டு என்ஜினிற்கும் நிலை பாட ...

"இமை மூடி தூங்காமல் போராடினேன்
உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராடினேன்'... ஸ்ரீவாஸ் அவர்கள் பாட ...தமிழின் சுவை உறவாடும் .

"கொடி போன்ற இடையாட களைப்பாகினேன்
உன் மடி மீதும் தலை சாய்த்து இளைப்பாறினேன்
அழகென்ற விரல் கொண்டு பரிமாறினேன்
அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்
ஆஹஹ ஹா ஹாஹா...
ஆஹஹ ஹா ஹாஹா....

ஓஹோஹோ ஹோ ஹோஹோ

'கண் மையேந்தும் விழியாட, மலரேந்தும் குழலாட...'

அருமையான ஒரு பாடல் தென்றலில் மிதந்துவந்து நம்மைத் தீண்டிய சுகமாய் செவியில் பாய்ந்த , பாயும் ரசனை மறக்கவில்லை ...அது மாறவும் இல்லை .

கோதை தனபாலன்
https://www.youtube.com/watch?v=yGH32PNDo-Q

 


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 160
 

அன்பு சகோதரிக்கு
என்ன ஒரு பாடல்
மெல்லிசை மன்னர்களின் இசையில் இசைஅரசியும் வெண்ணைக்குரலோனும் சேரும்பொழுது அது தேனும் பாலும் தான்
இந்தப் பாடலைக் கேட்கும் போது எனக்கு வரும் உணர்வு பாடல் மெல்லிசை மன்னரையும் இசையரசி குறித்து பாடியதாகவே தோன்றும் .
குழல் தந்த இசையாக, இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக, நான் பாடுவேன்..' இது இசைஅரசி தன்னைப்பற்றி பாடியதாகவே தோன்றும்
கை விரல் கொஞ்சும் யாழாக, யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக, நான் மாறுவேன்..-இதை யாழுக்கு பதில் பெட்டியை (ஹார்மோனியம் ) நினைத்து ஒரு கணம் பாருங்கள் அது மெல்லிசை மன்னருக்கு வாலி எழுதிய பாமாலையாகவே தோன்றும் .
எண்ணம் அதீதம் என்றாலும் எண்ணம் மாறுவதில்லை .

அதுபோலவே நடிகையர்திலகம் வீணை வாசிக்கும் அழகிற்காக இந்தப் பாடலைப் பார்க்காமல் விடுவதில்லை
நடிகையர் திலகத்தின் விரல் அசைவு அவரின் வீணை வாசிப்பு திறனை அழகுற எடுத்துரைக்கும் ,கோமாதா மற்றுமொரு உதாரணம் ,
முக்தா படப் பாடல்களே பிரபலம் ,அருமை இதுவும் விதிவிலக்கல்ல
பதிவுக்கு மிக்க நன்றி

best Regards
vk


ReplyQuote
kothai
(@kothai)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 73
Topic starter  

@v-k உண்மை ... மனதில் என்றென்றைக்கும் பதிந்துள்ள முத்தான பாடல் . இதுபோல் அமைவது அரிது ...அதுவும் நம் மன்னர்களிடம் அடிக்கடி கிடைத்தது . மகிழ்வுடன் நன்றி . 


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
 

மிகவும் இனிமையான பாடல். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையானவைகளே.

There is an interesting incident during the picturization of this song. ஆரம்ப காலத்தில் மிகவும் ஒல்லியாக இருந்த சாவித்திரி அவர்கள், பிறகு மிகவும் பருமனாகி விட்டார். இந்த படம் அவர் பருமனான பின் வந்த படம். மேலும் இந்த படத்தில் நடிக்கும் பொழுது அவர் கர்ப்பமாக வேறு இருந்தார். காட்சியில் அவர் giant size குத்து விளக்கு ஒன்றின் மீது அமர்ந்து கொண்டு பாடவேண்டியிருந்தது. மிகவும் சிரமப்பட்டு எப்படியோ அதன் மீது அமர்த்திவிட்டார்கள். ஆனால் அந்த விளக்கு தெர்மாகோல் / plaster of paris என்பதால் செய்யப்பட்டது என்பதால் அவரது எடையை தாங்க முடியாமல் அசைய ஆரம்பித்து விட்டது. அதனால், அவருக்கு fast movements -சை தவிர்த்து மிகவும் எளிதான movement கொடுத்து வேக வேகமாக படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், அவரை கீழே இயக்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதை பார்த்த ஜெமினி அவர்கள் மிகவும் கோபமடைந்தார். கடைசியில் ஜெமினி அவர்களின் உதவியோடு சாவித்திரி அவர்களை கீழே இறக்குவதற்குள் எல்லோருக்கும் போதும் போதுமென்றாகிவிட்டது.


ReplyQuote
Share: