M S V & T K R / கண்...
 
Notifications
Clear all

M S V & T K R / கண்கள் எங்கே .../ கர்ணன் / 1964


kothai
(@kothai)
Trusted Member
Joined: 12 months ago
Posts: 73
Topic starter  

#கவியரசர்கண்ணதாசன்பாடல்கள் ரசனைகள் 46
அகநானூற்ற்றில் வைக்கப்பட வேண்டிய ஒரு இலக்கியச் செறிவுமிக்க பாடல்.
கண்ணோடு மனம் ஒத்துச் சென்ற நிலையில்.. அவனை மறக்க முடியாத
நினைவில் ,
அவனைச் சித்திரத்தில் எழுதி,
தன் மனம் அவனை எண்ணி ஏங்கும் விதத்தை ,
அந்த உணர்வை உள்ளபடி உரைக்கும் கவிஞரின் சொல்லாற்றலோடு ....
அவை தரும் மறைபொருள்....
அவள் உள்ளத்தின் தவிப்பு..
செம்மையாக தங்கள் இசைக்கோர்வையில் இரட்டையர் மெல்லிசை மன்னர்கள்...
சுசீலாம்மாவின் குரலில் கொஞ்சும் , கெஞ்சும் பாவங்களில் இழையோட விட்டிருக்கும் அழகை.. இன்னும் எப்படித்தான் சொல்ல....!
காவியப்பாடலானது... பொருட்சுவை கலப்பினாலேயே..
கட்டுக்கடங்காமல் எகிறிச் செல்லும் தனது தேரை விரட்டி மடக்கி நிறுத்திய வீரன் ,   "கர்ணன்..."  திரையில் 
அவன் தீரம்..வீரம் ..தோற்றம் .. கம்பீர நடை மனதில் ஆழமாய் பதிய ... அந்தத் தாக்கம் ..அவை பாடலில் விழும் நேர்த்தி இங்கே.
'கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே
கண்டபோதே சென்றன அங்கே..
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவல் இன்றி வந்தன இங்கே...
முதலிரண்டு அடிகளிலேயே தான் தன் வசம் இல்லை என்கிறாள் . கண்கள் அவனைப்பார்தத நிமிடமே அவன் பின்னால் செல்ல..இவள் நெஞ்சமும் உடன் அங்கேயே சென்றுள்ளது.
அடுத்து கால்களும் ..உடலும் மட்டுமே காவல் இல்லாமல் இருக்கும் இடத்தை அடைந்துள்ளது.
இனி அவள் மனம் படும் அல்லல்..
"மணிகொண்ட சரமொன்று
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இன்று
பனிக்கொண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றி
தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு
ஏனிந்த மயக்கம்....!"
கழுத்தில் அணிந்த மணமாலை யில் ..அவள் நெஞ்சில் அவன் நினைவு தந்த தாக்கத்தில் ஏற்படும் வெப்பத்தில் வெடிக்குமாம் .. நினைவின் அழுத்தம் இங்கே சொல்லப்படுகிறது.
இதழ்களில் வெளுப்பேறி நிற்பதை பனியில் தவித்து துடிப்பது போல்..
இவை பசலை நோய் ..காதல் கொண்ட நோயின் அடையாளங்கள்..
இவற்றை மறைத்து தூங்காமல் விழித்திருக்கும் ... இவளது பெண்மைக்கு ... இந்த மயக்கம் ஏன் எப்படி வந்தது....?
இத்தனை உணர்வுகளும் ராகபாவங்களில் அழகாக வெளிபபட்டிருக்கும்.
இத்தனைக்கும் காரணமான அவன் யார்..?
அதற்கொரு குழப்பம்..
'இனமென்ன குலமென்ன
குணமென்ன அறியேன்
ஈடெங்கும் கேளாமல்
என்னையெங்கு கொடுத்தேன் !
கொடை கொண்டு மதயானை
உயிர் கொண்டு நடந்தது
குறை கொண்ட உடலோடு
நான் இங்கு மெலிந்தேன்....
வந்தவன் யார் ? குலம் என்ன? அவன் குணங்கள் தான் என்ன.. ?
இணையாக ஏதும் பெற்றுக் கொள்ளாமல் என் மனம் எங்கே சென்றது ?
அவனிடமா.. அவன் கொடை தான் இந்த தவிப்பா .. .. ?மதம் கொண்ட ஒரு யானை நடந்து வருவது போல் வந்தானே!
நானோ... குறை ..மனக்குறை ..அது காதல் தந்த விநோதம்.. உடல் மெலிந்து இங்கு நிற்கிறேனே..... ஆஆ..ஆஆ..
இவ்வாறெல்லாம் அழகுற தன் தோழியர்களிடம் இலைமறை காயாக ,
வேதனையை உள் மறைத்த பாடலைப் பாடுகிறாள்...
நளின மான உணர்வுகள்...நயமாக வெளிப்பட்டுள்ளன.
Kothaidhanabalan
.
https://youtu.be/67Xvl_2dZwQ

https://youtu.be/qjS-HB8Qqs8

This topic was modified 3 months ago by M.R.Vijayakrishnan

Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 160
 

வணக்கம் சகோதரி

அப்பொழுது கோனார் வெற்றி நோட்ஸ்
இப்பொழுது கோதை நோட்ஸ்

அருமையாக வர்ணித்துள்ளீர்கள்.
நீங்கள் சொன்னாற்போல் பாடலும் காவியம் படமுமே ஒரு காவியம் தான்
கவியரசுவின் வரிகள்
மெல்லிசை மன்னர்களின் நல்லிசை
இசைக்குயிலின் குரலில் பாடலின் தன்மையை அழகுற விவரித்துள்ளீர்கள்
அதுபோலவே இசைக்கருவைகளின் பயன்பாடும் சேர்ந்திசையின் இனிமையும் ஒப்பிலாதவை
மெல்லிசைமன்னர்கள் பாடலின் களம் வடக்கில் நடைபெறுவதால் அதற்குரிய இசைக் கருவிகளையும்
இசையினையும் உபயோகித்து நம்மை பரவசப்படுத்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள்
படத்தின் ஒருபாடலும் கேட்கும் படியாக இல்லை என்ற அன்று எழுதிய விமர்சகர் இன்றும் அதற்க்கு வெட்கி தலைகுனியுமாறு ஒவ்வொரு பாடலும் இன்றும் ரசிகர் மனத்தில் குடிகொண்டு இருப்பது வெற்றிக்கு சாட்சி

best Regards
vk


ReplyQuote
K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 212
 

அன்பர்  விஜய் கிருஷ்ணன் அவர்களே

என்ன எம் எஸ் வி உங்களை அழைப்பது போல ஒலிக்கிறதோ? இவ்வாறு துவங்கிய பின்னர் தான் எனக்கே உறைத்தது . " கண்கள் எங்கே" பாடலை பன் மடங்கு மிளிர வைத்த மன்னர்கள் அன்றைய திரைத்துறையினரை மிரளவும் வைத்தனர் என்பது இங்கே நிறுவப்பட வேண்டிய ஒன்று.. அப்போதைய சில விமரிசகர்கள்  தங்களை அதீத அறிவாளிகளாகக்கருதிக்கொண்டு 'பாடல்' சரியில்லை ஒளிப்பதிவு சரியில்லை என்று எந்த படத்திற்கும் பிதற்றி வந்தனர். இதற்கு அவர்கள் எதை துணையாகக்கொண்டனர்?

 அன்றைய படக்குழுவினர் இவர்களை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. எனவே எந்த விமரிசனத்தையும் அவர்கள் மதித்து பதில் சொன்னதே இல்லை, எனவே இவர்கள் UNBRIDLED HORSES என வலம் வந்தனர். . சரி 'கர்ணன்' படத்திற்கு வருவோம். விமரிசகர்களின் கற்பனையை அவர்கள்/ விமரிசகர்களே ஒருபோதும் ஆய்வுக்கு உட்படுத்தியதில்லை.

எம் எஸ் வி- டி கே ஆர் மிகச்சிறந்த இசைநுணுக்கங்களை பாரதம் கொண்டிருந்த பாரம்பரிய இசை வடிவங்களுடன் இணைத்து தமது ஆக்கங்களை வெளிப்படுத்தி வந்தனர்.  இதை சரியாக கணிக்க/ கவனிக்க  தெரியாத மனிதர்கள் பத்திரிகைகளில் எதையாவது எழுதி வந்தனர். 1962-64 காலத்திய வி -ரா இசையில் மேற்கத்திய இசையை தமிழில் நிலைநாட்டி வெற்றி ஈட்டி வந்தனர். இதை மட்டுமே அறிந்த விமரிசகன் எம் எஸ் வி க்கு கர்நாடக இசை தெரியாது என்று ஒரு  அபாண்டத்தை கற்பனை செய்து வைத்திருந்தனன் . அன்று இந்த நிலையை தகர்க்க திரை உலகம் எந்த புரிதலையும் விளக்கவில்லை.  இந்தமாதிரி ஆட்கள் கர்ணன் பாடல்களை எவ்வாறு புரிந்து கொள்வர் ?

படத்தின் ஒருபாடலும் கேட்கும் படியாக இல்லை என்ற அன்று எழுதிய விமர்சகர் இன்றும் அதற்க்கு வெட்கி தலைகுனியுமாறு ஒவ்வொரு பாடலும் இன்றும் ரசிகர் மனத்தில் குடிகொண்டு இருப்பது வெற்றிக்கு சாட்சி VK

என்ற தங்களின் கருத்து வரவேற்புக்குரியது . காலம் கடந்த பின் இப்போது மன்னர்களின் பாடல்களை கேட்டற்கும் வாய்ப்பினை பெற்ற இளைய தலைமுறை "இப்படியெல்லாம் இசை அமைத்துள்ளனரா என்று மூக்கின் மேல் விரல் வைக்காத குறையாக நெகிழ்வதைப்பார்க்கும் போது , எவருக்காவது விமரிசகன் என்பவனை மரியாதைக்குரிய நபராக பார்க்கத்தோன்றுமா? அதே காலகட்டத்தில் வாழ்ந்த திரு சுப்புடு அவர்களுக்கு சமுதாயம் வழங்கிய அளப்பரிய அங்கீகாரம் வேறு எவர்க்கும்ஏன்கிடைக்கவில்லை?                              விஷயத்தையும் , விஷத்தையும் பாமரன் தெளிவாகப்புரிந்து கொண்டான்.சமுதாயம் இவர்களை மிகத்  தெளிவாகவே எடை போட்டு வந்திருக்கிறது, இது போன்ற நிலை, பல நிகழ்வுகள் ஊடங்களிலும் தொடர்வதை ப்பார்க்கிறோம்  இதுபோன்ற  நெறி தவறிய செயல்கள் நரித்தனம் என்றே கருதப்படுகிறது. உண்மையை  ஒளித்துவைக்கலாம் ஒழித்து விட முடியாது.

இந்த சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் இவர்கள் குறித்து எழுதக்கூட தோன்றாது. எனவே சற்று விரிவான எழுத்து தேவைப்பட்டது . அன்பர்கள் மன்னிக்கவும்,

அன்பன் ராமன்  மதுரை

 


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 160
 

டியர் PROF

சந்தர்ப்பத்துக்காக காத்திராமல் மன வேதனையை உடனே பதிவு செய்வது நலன் என்று கருதிதான் அந்த பகுதியை கொண்டு வந்தேன் .
இதோ அந்த விமர்சனத்தை இணைத்துள்ளேன் .இப்பொழுது அதுFACEBOOK இல் பதிவு செய்திருந்தபொழுது ரசிகர்களின் மனக்குமுறலை உணரமுடிந்தது .
எனது பதிவுகள் அது சம்பந்தமாக
QUOTE
மெல்லிசைமன்னர் என்றுமே ரசிகர்களின் ஆதரவில் வளர்ந்தவர் என்றுமே பத்திரிகைகள் அவரை புகழ்ந்து சொன்னதில்லை ஆனால் அவை பாடலின் தரத்தையோ வெற்றியையோ தீர்மானித்ததில்லை
அதற்க்கு இதுவும் ஒரு உதாரணம் . நிறையப் படங்களை சொல்லாம் . அந்தக் காலத்திலிருந்து மீடியா ஆதரவு இல்லாததால் இன்றைய டீவியிலும் youtube உளறல்கள் கேட்கிறோம் .
கூச்சமே இல்லாமல் மெல்லிசையை MSV கொண்டுவந்தார் ஆனால் டைட்டில் பாடல் ,கோரஸ் ,வெஸ்டர்ன் tunes ,வடக்கத்திய இன்ஸ்ட்ருமென்ட்ஸ் பிறகு தான் வெஸ்டர்ன் வந்தது ஜெயா டிவி பிதற்றல்
இப்பொழுது social மீடியா வில் வரும் பொய்களை தோலுரிக்க ஒரு தனி டீம் வேண்டும் போல
• My Father in Law who was with INDIAN EMBASSY Cambodia was so curious to see people from a building wiping tears so he went close to the place and found karnan poster ,HE understood from the locals that the film was dubbed but for songs ,People cry as they were moved by the last song .You know what song is that .Of course my FIL is not film song listener. he knew ofcourse NT .i was stunned to hear this
During a conversation with MM WHEN HE SAID THE WORDS ARE IMPORTANT ,i narrated this incident to him ,As usual he showed his hands upwards and continued only the words determine the tune .
Similarly ENGAL KALYANAM has been a reference material for two foreign universities Harvard and Toronto ,Which magazine has high lighted .We came to know because a foreigner mentioned that in that link .I wrote to KUMUDAM But they never published, Inspite of all these he has been winning another great quality of Mellisaimannar

UN QUOTE

best Regards
vk


ReplyQuote
Share: