மலரென்ற முகம் ஒன்று...
 
Notifications
Clear all

மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்/காதலிக்க நேரமில்லை1964  

  RSS

kothai
(@kothai)
Eminent Member
Joined: 3 months ago
Posts: 45
06/10/2020 6:01 pm  

எல். ஆர் . ஈஸ்வரி பாடல்கள் என் ரசனையில் ... 

"மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்
உலகத்தை ஒரு முறை மறக்கட்டும்".....

இந்தப்பாடல் பிரபலமாகும் வேளையில் .. இதன் இசையமைப்பு , துள்ளும் குரலில் பாடி வரும் அழகாக்கு ... குமார் சச்சு அவர்கள் நடனம் , நாகேஷின் பங்களிப்பு அனைவரையும் கவர்ந்ததோடு, பள்ளிகளிலும் கலை விழாவில் தவறாது இடம் பெறும் நடனக் காட்சியாயிற்று.

"ஆடிடும் சின்ன உடல்,
பாடிடும் வண்ண இதழ்
அஞ்சிடும் வஞ்சி இடை
கெஞ்சிடும் பிஞ்சு நடை
அஞ்சிடும் வஞ்சி இடை
கெஞ்சிடும் பிஞ்சு நடை

அல்லித் தண்டு வெள்ளித் தண்டை
முத்துச் செண்டு கன்னங்கள்...
மின்னல் என்று மின்னக் கண்டு
துள்ளிச் செல்லும் எண்ணங்கள்...."

கவியரசரின் வரிகளும் ஈஸ்வரி அம்மாவின் குரல் பாவத்தில் சீராக துள்ளிவரும் அழகு , ரசித்துதான் ஆகணும் .
இடையிடையே ... ...
ஒவ்..லீலீ...லீலீலீ ... , டு.டு. டூடூ போன்ற சங்கதிகள் மேல்நாட்டு பாணியில் எம்.எஸ். ராஜு அவர்கள் கவனத்தைக் கவரும் ..நாகேஷின் நடனக் கலையின் லீலைகள் என்றேயும் சொல்லலாம் ...

காதலிக்க நேரமில்லை திரையில் ... நாகேஷ் தனது சினிமா தயாரிப்புக்கான ஆடல்பாடற் காட்சியாக முத்துராமன் , ரவிச்சந்திரன் முன்னே நடித்துக் காண்பிப்பார் . மெல்லிசை மன்னர்கள் ...மேற்கத்திய இசை நுணுக்கத்தோடு . நம் ரசனை சங்கதிகளையும் புதுமையாகப் புகுத்தி பாடலை வழங்கியிருப்பர் .

"பொன்மகள் காதல் அன்னம்
பூமகள் கண்கள் மின்னும்
நெஞ்சமே துள்ளும் வண்ணம்
கொஞ்சுவாள் தங்கக் கிண்ணம்
எள்ளுப் பூவும் முல்லைப் பூவும்
சேர்ந்து வந்த கன்னிப் பூ
கொள்ளை கொள்ள இங்கு வந்தாள்
கோலம் கொள்ளும் தாழம்பூ...."...

இந்த வரிகள் பாடும்போது ஈஸ்வரியம்மாவின் குரல் சற்று ஏறி , இனிமை கூடி , பிசிறில்லாமல் ... சொற்களும் நல்ல உச்சரிப்பில் இருக்கும் .

நினைவில் என்றும் நிலைத்திருக்கும் சுவையான பாடல் .

கோதைதனபாலன்
https://www.youtube.com/watch?v=nUI0w2QXkEg


Quote
Share: