கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள்..27
தூது விடுதல் பண்பு...
தமிழ் இலக்கியங்களில் ஒரு சுவையான பகுதி.
அன்பு மிகுதி.. அன்பின் உரிமை..இந்த நிலையில் மனம் தளர்ந்தவரது நிலைமையை உற்றவர் க்கு எடுத்துரைக்க... ஒரு நல்ல தூதுவரை அல்லது தூதாக இயற்கையின் அங்கங்களில் ஒன்றைச் சொல்லிப் பாடுவது தமிழில் ஒரு அம்சம். அப்படி ஒரு தூதினை அனுப்ப முடியாத அளவிற்குத் தன் தோழி ..காதல் வயப்பட்ட வள்... மாட்டிக் கொண்டு தவிக்கிறாளோ என நினைத்து..செல்லமாகச் சீண்டிப் பார்க்கிறாள் இவள்... கவியரசர் துணைக்கு... காப்பியங்களில் ஒன்றின் வரிகளைச் சற்று உருவேற்றிக் கொண்டு தர...
சுசீலாம்மாவும் ..ஈஸ்வரி அம்மாவும்... ரசிப்பு உணர்ந்து பாட ...
மெல்லிசை மன்னர்கள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்&ராமமூர்த்தி ....இசையமைப்பு...
நளினமான உல்லாசம் தருவதாய்....பச்சை விளக்கு திரையில் ... விஜயகுமாரியும் , புஷ்பலதாவும்.
உண்மையில் இருவரது நடிப்பில் முகபாவங்களும் ,மென்மையான ஆட்டங்களும் நம் மனத்தைக் கவர்வன. வெகு இயல்பாக அந்தப் பாடற்காட்சி அமைக்கப் பட்டிருக்கும் . .
' தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கண்டாயோ தலைவி...
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட ..
சுகம் கண்டாயோ தலைவி...
சுற்றுலா வந்த இடத்தில் இந்த இனிமையான சீண்டுதல்.
இந்த இடத்தில் இசையானது சற்று மெல்லிய துள்ளலில் இருவரின் சீண்டுதலுக்கேற்ப அமைந்திருக்கும் . நளினமான ஒன்று ரசனையுணர்வோடு .
காதலன் நினைவு வர...தூது செல்ல ஆள் வேண்டுமே...என்று துயர் நீ அடைந்தாயோ தலைவி...
ஆனால் வீசும் தென்றல் நான் இருக்கிறேன் என்று சொல்லுதல் போல் உன் சேலை தொட்டு வர சுகம் சேர்ந்ததா...?..சுசீலாம்மா தலைவியை விசாரிக்கும் தோழியாகக் குரல் கொடுக்கிறார்...பாவம் சிறிதும் பிறழாமல்..
ஈஸ்வரி அம்மா..அந்தத் தலைவிக்கு..
'அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி..
தென்றல் தொட்டதடி..
திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி"
காதலனை க் காணாது...தென்றலும் சுகமில்லை...நிலவிலும் குளுமை இல்லை...கண்களில் கண்ணீர்தான் மிச்சம்...என...தனது மனம் ஏங்கித் தவிக்கும் பாட்டை விளக்குகிறார்.
"பன்னீர் நதியில் குளித்து வந்தாலும்
தூக்கம் வருமோ தலைவி..
வெந்நீர் நதியும் பன்னீர் நதியாகுமோ.. தோழி..."
நதியை அதன் தன்மையை , வேகத்தை ஒப்பிட்டு வரக்கூடிய சரணங்களில் , இசையின் ஆரம்பத் துள்ளல் சற்று வேகமெடுத்துச் செல்லும் . ராகத்தோடு அந்த இசை சரிவிகிதத்தில் பயணித்து வரும் அழகு இசையின் பெருமை .
பன்னீர் நதியில் குளித்தால் ஏக்கம் தெளிந்திடும் என்றவள் சொல்ல..
பன்னீர் நதியும் தன் ஏக்கத்தினால் வெந்நீராகிடும் என்றுரைக்கிறாள்.
இடையணி மேகலை வீழ்ந்திடும் வண்ணம்
ஏங்கலாகுமோ தலைவி.."
இடையில் அணிந்த ஒட்டியானம் தளரும் வண்ணம் இளைத்துவிட்டாய்...அந்த அளவிற்கு ஏக்கம் வரலாமா...? ..தலைவி.
முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் .
மோன த்தில் ஆழ்ந்தாள் தலைவி..
ஒளி வீசும் முத்தும் மணியும்...காதல் நினைவில் சிக்கியவள் முகம் கண்டு பொறாமை கொள்ளும்... என்று தலைவியின் ..மோன நிலையை அங்கீகரிக்கிறாள்.
முத்ததை மறந்தவள் சித்தத்தில் இருப்பதை ..
மனத்தில் அறிந்தாயோ தோழி..
ஒத்துக் கொள்கிறாள்..கலகலப்பாய்..முத்து முத்தாய் பேசுவதை விட்டு ..எனது மனத்தில் உண்மை அறிந்தாயோ ..தோழி
கடையை விரிக்க பொருள் கொள்வார் இல்லையே தோழி..
நான் காணத்துடிக்கும் நேரத்தில் அவன் இல்லையே... தோழி
"காவிரிக் கரையின் ஓரத்தில் இவ்விதம் காத்திருந்தாள் அந்தத் தலைவி..."
காவிய நாயகன் காதலன் மனைவி..
கோவலன் என்பான் மனைவி..
காவிரிக்கரை ஓரம் அன்று இப்படித்தான் காத்திருந்தாள் ஒரு தலைவி...
எடுத்துக் கொடுக்கிறாள்...இலக்கியத்தில் ..அவள் நிலை யாரைப்போல் உள்ளது என..
இவளும் சரியான பதில்...கவியரசர் எங்கிருந்து அவ்வரிகளை ரசனையுடன் உருவினாரென்று...
காவிய நாயகன் தான் அந்தக் காதலன்...காத்திருந்தவள்...கோவலன் என்ற பெயருடைய நாயகனது மனைவி..
நமக்குப் புரிந்தது... கண்ணகியின் மனவாட்டத்தை உரைக்கும் இளங்கோவடிகள்...வர்ணனை என்று.
கோதைதனபாலன்.
https://youtu.be/e4tzyPPX6Vs