கவியரசர் கண்ணதாசன் பாடல்கள். .ரசனைகள் 10
கவிஞர்களுக்கு பொய்யும் அழகு. .மெய்யும் அழகு. இந்தக் கவிஞனின் மெய்யழகில் மனிதரின் பண்பு நலன்கள் அனைத்தும் நாம் பலவித ரச பாவங்களில் அறிந்துவிடலாம். இங்கு மகளைப் பிரிந்த சோகத்தை சொல்லி வருகையிலேயே தாம்பத்யத்தின் மேன்மையை நயமோடு இழையோடச் செய்துள்ள நேர்த்தியை நம் மனம் தவறாது உணர்ந்து விடும்.
இவை ,
சிவாஜி ..சௌகார்..நடிப்பில். .
மெல்லிசை மன்னர்கள் இசை. .
டி.எம். ஸ். குரலில். .. அற்புதம் எனச் சொல்லவும் வேண்டுமோ!
' பார் மகளே பார். .பார் மகளே பார்
நீ இல்லாத மாளிகையை பார மகளே பார்
உன் நிழலில்லாமல் வாடுவதை
பார் மகளே பார்’
மகள் பிரிந்து விட்டாள் திருமணம் ஆகுமுன்னே. .தனது மனைவி யுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் நிலைமை. .பெற்ற , வளர்த்த பாசம். .மனதில் மட்டுமல்ல. .அவள் வளர்ந்த இல்லத்தில் காணும் இடங்களில் எல்லாம் அவள நிழல்களே துரத்துகின்றன. .சோகம். .சுவற்றில்
அப்பிய பல்லி போன்று அடுத்த வரிகளில் இன்னும். ..
' உண்பதென்று உணவை வைத்தால்
உன் முகத்தைக் காட்டுகிறாய்
உறக்கம் என்று படுக்கை போட்டால்
ஓடி வந்து எழுப்புகிறாய்
கண்மணியில் ஆடுகிறாய் புன்னகையில் வாட்டுகிறாய்
கண்ணிழந்த தந்தைதனையே
என்ன செய்ய எண்ணுகிறாய்..?
பசியோடு உணவு கொள்ள நினைக்கையிலே மகளின் உருவமே. .எடுக்கும் கவளத்தில் தெரிந்தால் அது உட்செல்லுமோ..?
உறக்கம் அதுவும் வாழ்வில் ஒரு இயக்கம். .அப்பொழுதும்..அவள் நினைவுகள்
தட்டி எழுப்பினால். .வாழ்வு முறையே கெட்டுவிட்டது. .கண்ணில் நிழலாடும் பிம்பமாய்.. அவள் புன்னகை மனதை வாடச்செய்தால். .
என்ன செய்வதென்று அறியாது செயலற்ற தன்மைக்கு தள்ளப்படுகிறார்.
காரணம் அறிய முற்படுகிறது பேதலிக்கும் மனம். .
' தந்தை வாழ்வு முடிந்து போனால்
தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்து போனால்
தந்தைக்கென்று யாருமில்லை
ஒருவராக வாழ்ந்து விட்டோம்
பிரிவதற்கோ இதயமில்லை
யாருமில்லை உனக்கே என்று
ஓடி விட்டாய் என் மகளே. .!
தங்களது தாம்பத்ய வாழ்க்கையை பின்னோக்கி அசைபோட. .
மன உணர்வுகள் உறைக்கின்றன ..
தனது மறைவின் பின்னர் மனைவியின் நிலை எனன? ..
மஞ்சள் நிலைப்பதில்லை என்பதால் சந்தோஷம் மட்டுமே தொலைகிறது. அவள் மறைந்து விட்டால். .இவன் நிலைமை எனன?
இவனுக்கென்றே வாழும் ஜீவன் யாரும் இல்லாத நிலைமை.
இதை உணர்ந்து தானே...நாம் பிரிவதற்கு இதயமில்லாமல்...ஒருவராக வாழூகிறோம். .என மனைவி யிடம் சோகத்தை பகிர்ந்து. .மகளிடம் விரக்தியின் விளிம்பிற்கே சென்று. .
“யாருமில்லை உனக்கே என்று ஓடி விட்டாய். .என் மகளே. .!”
இங்கு ஒரு சூட்சுமம். .
இரண்டு மகள்களில் யார் சொந்த மகள். .என அறியாத நிலையில் ,
தனது செல்ல மகளே வளர்ப்பு மகள்..என்றறியாமலே. .
பாசத்தின் அளவுகோலை வரையறுக்க முடியுமா என்ன. .?
பார மகளே பார். ....திரையில்
கோதைதனபாலன்
http://youtu.be/GAQFU7dU8LM
1963
Dear madam
This link works
https://youtu.be/Ri0q-G3v4MY
The best in respective fields join together to execute this song ,How else it would be -epic of a song
best Regards
vk