1962 policekaranmak...
 
Notifications

1962 policekaranmakal / all songs  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 3 months ago
Posts: 42
25/03/2020 5:07 pm  

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் & ராமமூர்த்தி பாடல்கள் ...

சொல்லப்போனால் அந்த அறுபதுகளில் குறிப்பாக இவர்கள் இசையமைத்த பாடல்கள் .. இன்னும் கவியரசர் , கைதேர்ந்த இயக்குனர்கள் , அன்றைய பாடகர்களால் எல்லாமும் திரைக்குத் திரை புகழ்பெற்ற பாடல்களாக அமைந்துவிட்டன என்று சொன்னால் மிகையாகாது . அந்த வரிசையில் , ஒரு திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து , அதில் நான் ரசித்த அத்தனை பாடல்களையும் ( நினைவில் நின்றது ) எழுதத் தலைப்பட்டுள்ளேன் .
போலீஸ்காரன் மகள் ... இது இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் கைவண்ணத்தில் உருவான திரைக் காவியம் . அன்னான் தனக்குள்ள ஒரு பாசப்பிணைப்பை .. மையமாக வைத்து பின்னப்பட்ட கதை . இதில் அன்று திரைஇசை உலகில் ஆளுமையாக இருந்த சுசீலாம்மா பாடல் இல்லாமல் ..ஜானகியம்மாவை வைத்தே பிரதான பாடல்கள் இருக்கட்டும் என்று ஸ்ரீதர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இசையமைக்கப் பட்டவை .

ஆரோக்கியமான போட்டிதான் .. அத்தனையும் இன்றும் இசை ரசிகர்கள் முணு முணுக்கும் பாடல்தான் .

முதலில் யாருக்கும் ஞாபகத்தில் வந்து நிற்பது .." இந்த மன்றத்தில் ஓடி வரும் , இளந்தென்றலைக் கேட்கின்றேன் .." பி.பி. ஸ்ரீனிவாஸ் , ஜானகி அவர்கள் பாடிய பாடல் . தங்கை விஜயகுமாரி ..தனது முதன்முறையாக காதல் வயப்பட்டு பாடும் பாடலாக ...இது வரும் . வீட்டின் பின் வாழைக் கொல்லை யில் பாடுவதுபோல் படப்பிடிப்பு , தனது தவிக்கும் மனதை காதலனுக்கு தூதாகச் சொல்வதுபோல் தென்றலை விளி த்து பாடும் பாடல் .. " நடு இரவினில் விழிக்கின்றாள் , தன உறவினை நினைக்கின்றாள் , விடிந்தபின் துயில்கின்றாள் , எனும் ஒரு மொழி கூறாயோ .." என்று உற்சாக மிகுதியில் பாட ...தொடர்ந்து ஒரு மெலிதான புல்லாங்குழலிசை அதை அழகாக எடுத்துச்செல்ல ... , அண்ணன் முத்துராமன் தொடர்ந்து பாடுவார் . சீண்டும் விதமாக ... " தன் கண்ணனைத் தேடுகிறாள் , தன் காதலைக் கூறுகிறாள் , இந்த அண்ணனை மறந்து விட்டாள் , என்றொரு கவலையைக் கூறாயோ ..?" ...உண்மையில் காட்சி , இசைநுணுக்கம் , குரலினிமை எல்லாம் சேர காவிய பாடலாகின .
அடுத்து காதலனுடன் ...
" பொன் என்பேன் சிறு பூ என்பேன் , காணும் கண் என்பேன் , வேறு என்னென்பேன் ..."
அருமையான தமிழ் நடையில் கவியரசர் வரிகளை என்திக் கொண்டு .. அருமையான ராகத்தில் பலவிதமான சாதகங்கள் கண்டா ஒரு இனிய இசையமைப்பில் நம்மிடம் ...நல்லதொரு ரசனையை பாடுபவர் உருவாக்கித் தருவார் .

ஜனரஞ்சகமாக , " ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் ..." பாடலில் இசையமைப்பு மென்மையாக நீண்டு வரும் . கேட்க புதுமையாக இருந்தது . சோகம் ஒன்று வேண்டுமே . நெஞ்சைப் பிழிய வைக்கணும் ..சீர்காழியார் குரலோடு , ஜானகியம்மா குரல் ... இரண்டும் வெவ் வேறு தன்மையில் ..ஆனால் ..பாடல் ..அது சுமந்த வரிகள் ...

" கண்ணிலே நீரேதற்கு ? காலமெல்லாம் அழுவதற்கு ...நெஞ்சிலே நினைவதெதற்கு , ? வஞ்சகரை ...' உருக்கமான இசை .

இந்த வஞ்சகரானவனும் எவ்வளவு இனிமையாகப் பாடு வான் .. அதற்கும் ஒரு பாடல் .. பி.பி. ஸ்ரீனிவாஸ் தனியாக ...

" நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ? நெருப்பாய் எரிகிறது /" இது பாலாஜி , புஷ்பலதாவைப் பார்த்து பாடுவது . கதைப்படி அதை மகளை மணந்தால்தான் சொத்துரிமை என தகப்பன் சொல்ல காதலை மறந்து துறந்து .. அதை மக்களை வசியம் பண்ண .. இந்தப்பாடல் . இது இன்றும் அனைவராலும் ...நல்லதொரு காதல் பாடலாகத்தான் பார்க்கப்படுகிறது . நல்ல இனிமையான குரல் வளத்தில் .. வரிகள் தரும் சுகத்தில் இசையில் மனம் தொலைந்து விடும் .

நகைச்சுவைக்கு வேண்டுமே ..சந்திரபாபு , ஈஸ்வரி அவர்கள் ... " பொறந்தாலும் , பொம்பளையா பொறக்கக் கூடாது ..." அவர்களுக்கே உரிய தனிப்பாணியில் .
ஆக அன்று இவர்களது இசையமைப்பில் பாடல்கள் என்றால் அந்தத்திரையில் அவை அமர்க்களமாக இருக்கும் .

கோதை

(கோதை தனபாலன் )


Quote
Share: